Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree65Likes

அழகுக் குறிப்புகள் - Beauty Tips!


Discussions on "அழகுக் குறிப்புகள் - Beauty Tips!" in "Beauty Tips" forum.


  1. #41
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கழுத்து கருமை நிறம் மறைய

    சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.

    அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது. கழுத்து கருமை நிறம் மறைய சில எளிய வழிமுறைகள் இதோ..

    * கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.

    * பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.

    * முட்டைக்கோசை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

    * பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் படிப்படியாக மறையும்.

    * சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்.


    Sponsored Links

  2. #42
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    சோர்வை போக்கும் அழகு குறிப்புகள்.....

    கண்ணாடியில் பார்க்கும்போது முகத்தின் ஜொலிப்பு மங்கி, கண்களுக்கு அடியில் கறுப்பு படிந்து, சோர்ந்து போய் இருப்பது போல் தோன்றுகிறதா? கவலையை விடுங்கள். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, சோர்வை போக்கி, முகத்தை பளிச்சென்று மாற்றிவிடலாம்.

    * வெளியே போய்விட்டோ, பயணம் போய்விட்டோ வீடு திரும்பும்போது ஒரு தேக்கரண்டி கோதுமை மாவோ அல்லது கடலை மாவோ எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தக்காளி கூழ் சேர்த்து குழைத்து முகத்தில் பூசுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்.

    * முட்டை வெள்ளைக் கரு இரண்டு தேக்கரண்டி, அரை தேக்கரண்டி தேன், கால் தேக்கரண்டி எலுமிச்சை சாறு போன்றவைகளை கலந்தும் முகத்தில் பூசி, பத்து நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவி நீக்குங்கள். இவ்வாறு செய்தால் முகத்தில் தென்படும் சோர்வு நீங்கிவிடும்.

    * ஒரு வைட்டமின் மாத்திரை, இரண்டு தேக்கரண்டி தயிர், ஒரு தேக்கரண்டி ஓட்ஸ் ஆகியவைகளை கலந்து முகத்தில் தேய்த்தாலும் நல்ல பலன் கிடைக்கும். பயணம் முடிந்து சோர்ந்து வரும்போது உருளைக்கிழங்கு சாறு, பால், தயிர் போன்ற ஏதாவது ஒன்றை முகத்தில் பூசி, ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்வது நல்லது.

    * ஒரு தேக்கரண்டி கோதுமையை வறுத்து அரைத்து, அதில் அரை தேக்கரண்டி சர்க்கரை, சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசுவதும் முகத்தை பளிச்சென்று மாற்றும்.

    * வெள்ளரிக்காயை கொத்தி நறுக்கி சிறிது நேரம் பிரிஜ்ஜில் வையுங்கள். குளிர்ந்த பின்பு கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் வையுங்கள்.

    * பால், மினரல் வாட்டர், சிறிய ஐஸ் துண்டுகள் போன்றவைகளை பயன்படுத்தி இமைகளில் மென்மையாக மசாஜ் செய்யலாம். பன்னீரில் பஞ்சை முக்கி, கண்களை மூடிக்கொண்டு கண்களின் மீது வைத்தாலும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

    * எலுமிச்சை இலைகளை இடித்து தண்ணீரில் போட்டு சூடாக்கியும் குளிக்கலாம். நல்லெண்ணெயை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் வைத்திருந்து, பின்பு தலைக்கு குளித்தாலும் உற்சாகம் கிடைக்கும்.

    * ஆமணக்கு எண்ணெயை தலையில் இரவில் தேய்த்து, காலையில் பயறு தூள் பயன்படுத்தி தலையை கழுவி குளிப்பதும் நல்லது. தேங்காய் பாலை தலையில் தேய்த்து, பத்து நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு குளித்தாலும் உடலுக்கு உற்சாகம் கிடைக்கும்.


  3. #43
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    வால்நட் ஆயில் அழகு குறிப்புகள்

    நட்ஸில் ஒன்றான வால்நட்டை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன. வால்நட்டை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை வைத்து சருமத்தை பராமரித்தால், சருமம் நன்கு பொலிவோடு அழகாக பட்டுப் போன்று இருக்கும்.

    இத்தகைய எண்ணெயில் வைட்டமின், புரோட்டீன் போன்றவை அதிகம் இருப்பதால், அது சருமத்தில் ஒரு பெரிய அதிசயத்தை உண்டாக்கும். மேலும் இதில் நார்ச்சத்து, ஒமேகா-3 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், இந்த எண்ணெயிலிருந்து ஒரு நல்ல பலனை நிச்சயம் பெறலாம்.

    • வால்நட் எண்ணெயை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், அவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை முற்றிலும் நீக்கி, இளமையான தோற்றத்தைத் தரும்.

    • சருமத்தில் தடிப்புகளுடன், சிவப்பு நிறத்தில் அழற்சி போன்று இருந்தால், அவற்றை சரிசெய்ய வால்நட் எண்ணெயைப் பயன்படுத்தலாம். அதிலும் இந்த எண்ணெயை குளிக்கும் நீரில் சிறிது சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் ஏற்படும் அழற்சியை சரிசெய்துவிடலாம்.

    • வால்நட் எண்ணெயில் ஒரு நல்ல பொருளான ஒமேகா-3 உள்ளது. இந்த ஒமேகா-3 சத்தானது, நிறைய உடல் நல நன்மைகளை உள்ளடக்கியது. அதிலும் குறிப்பாக இதய நோய், சில வகையான புற்றுநோய்கள் மற்றும் அழற்சி குறைபாடுகளான சொறி, படை, சிரங்கு போன்றவற்றை குணமாக்க வல்லது.


  4. #44
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    பிளாக் ஹெட்ஸ் போக வேண்டுமா?

    முகத்தில் ஏதேனும் ஒரு குறை இருந்தால் முகத்தை அசிங்கபடுத்திவிடும்.

    பெரும்பாலானவர்களுக்கு மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை பிளாக் ஹெட்ஸ்தான்.

    சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும். இது இரண்டுக்குமே முறையான கவனிப்பு அவசியம்.

    * கடைகளில் விறகும் பிளாக் ஹெட்ஸ் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ் அதிக நாட்களாக இருக்கும் பிளாக் ஹெட்ஸை முழுதுமாக நீக்காது.

    ஏனென்றால் நாள்பட்ட பிளாக் ஹெட்ஸ் மிகவும் அழுத்தமாக இருக்கும். எளிதாக ஸ்ட்ரைப்ஸ் மூலம் நீக்க முடியாது.

    * நாள்பட்ட பிளாக் ஹெட்ஸுக்கு மிகவும் சரியான ட்ரீட்மெண்ட், ஆவி பிடித்தல்தான்.

    மூக்கிற்கு நல்ல மஜாஜ் செய்தாலே எல்லாம் சரியாகிவிடும். மூக்கிற்கும் நல்ல மஜாஜ் இருக்குது.

    ஒரு பாத்திரத்தில் நன்கு கொதிக்கும் நீரை எடுத்து ஆவி பிடித்து பின்னர் கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும்.

    கிடைக்காவிட்டால் ஸ்டெரிலைஸ் செய்த டீஸ்பூனின் முனை கொண்டு நீக்கலாம்) மெதுவாக அழுத்த வேண்டும். வெளியே வேரோடு வரும் பிளாக் ஹெட்ஸை டிஷ்யூவால் துடைத்து எடுத்துவிடுங்கள்.

    * இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுதுமாக நீக்கி விடலாம். இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும்.

    இந்த ட்ரீட்மெண்ட் செய்யும் முன்பு முகத்திற்கு ஸ்க்ரப் போடுவதென்றாலும் போடலாம். ஆனால் ட்ரீட்மெண்ட் செய்த பிறகு ஸ்க்ரப்பிங் கூடாது.

    * ரெகுலராக வாரம் ஒரு முறை முகத்தினை ஸ்க்ரப் செய்யும்போது மூக்கு பகுதியில், பக்கவாட்டில் மசாஜ் செய்தாலே ஒயிட் ஹெட்ஸ் வராது.

    * அதிக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும், எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்களுக்கும் பிளாக் ஹெட்ஸ் அதிகம் காணப்படும்.

    நார்மல், ட்ரை ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சணை குறைவு. பின்பு உங்கள் அழகை நீங்களே பராமரிக்க ஆரம்பிச்சிடுவீங்க.


  5. #45
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    எண்ணெய் பசை சருமத்திற்கு மேக்-அப் டிப்ஸ்

    சிலருக்கு மேக்-அப் போட்ட பின்னரும், முகத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பது போல் இருக்கும். மேக்-அப்பில் ஆயில் மேக்-அப் என்று ஒன்று உள்ளது. ஆனால் சிலருக்கு ஆயில் மேக்-அப் போடாமல், சாதாரண மேக்-அப் போட்டாலே எண்ணெய் வழியும்.

    இவ்வாறு அதிக எண்ணெய் பசையுடன் தெரிவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் மேக்-அப் போடும் முன் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களை செய்யாமல் போடுவது மற்றும் அதிக எண்ணெய் பசை சருமம் இருப்பதும் சில காரணங்கள் ஆகும். மேக்-அப் போடுவதற்கு முன்பு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

    • மேக்-அப் போடும் முன் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு கழுவும் போது முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெயானது நீங்கிவிடும். பின் மேக்-அப் போட்டால், எண்ணெய் வழியாமல் இருக்கும்.

    • எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், மேக்-அப் போடும் முன், முகத்திற்கு உப்பு அல்லது சர்க்கரையை வைத்து ஒரு சிறு ஸ்கரப் செய்து, பின் மேக்-அப் போட்டால், சருமத் துளைகளில் உள்ள எண்ணெயானது வெளியேறிவிடும்.

    • மேக்-அப் செய்த பின் எண்ணெய் வழியாமல் இருப்பதற்கு, ஐஸ் கட்டிகளை வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் மேக்-அப் போட்டால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.

    • மேக்-அப் முடியும் போது, ஃபௌண்டேஷன் பவுடரையோ அல்லது கோல்டன் டஸ்ட்டையோ பயன்படுத்தினால், அந்த பவுடரானது முகத்தில் இருக்கும் எண்ணெயை உறிஞ்சிவிடும்.

    • எப்போதும் டிஸ்யூ பேப்பரை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அதனை வைத்து அவ்வப்போது முகத்தை துடைத்தால், முகத்திலிருந்து வெளிவரும் எண்ணெய் மேக்-அப்பை கலைக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்


  6. #46
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் எண்ணெய்களுள் கடுகு எண்ணெயும் ஒன்று. இத்தகைய எண்ணெய் உடலுக்கு மட்டுமின்றி, கூந்தல் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நல்லது.

    எப்படியெனில் உடலில் உள்ள தேவையில்லாத இடங்களில் வளரும் முடியை நீக்க கடுகு எண்ணெயை தினமும் தடவி வந்தால், நீக்கலாம்.

    குறிப்பாக, கடுகு எண்ணெயில் கூந்தலில் ஏற்படும் பிரச்சனையைப் போக்குவதற்கான பொருள் அதிகம் உள்ளது.

    ஏனெனில் இதில் பீட்டா கரோட்டின் இருப்பதால், இதனை கூந்தலில் பயன்படுத்தும் போது, அவை வைட்டமின் ஏ ஆக மாற்றமடைந்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

    மேலும் இது பொடுகுத் தொல்லையையும் நீக்கும்.

    • கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, கூந்தலில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், தலையில் இரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

    • பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு, இந்த முறை சரியாக இருக்கும்.

    அதற்கு கடுகு எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்தால், தலையில் உள்ள பொடுகானது நீங்கிவிடும்.

    • கூந்தல் நன்கு பட்டுப் போன்றும், பொலிவோடும் இருப்பதற்கு, கடுகு எண்ணெயை தயிருடன் கலந்து, தலையில் தடவி, ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் பொலிவோடு இருப்பது மட்டுமின்றி, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.


  7. #47
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    பெரும்பாலானோர் சிறு வயதிலிருந்தே நரை முடி பிரச்சனைக்கு ஆளாகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரையின் காரணமாக நரை முடி வந்தால் ஒன்றும் செய்வதற்கு இல்லை. ஆனால் சிலருக்கு மயிர்கால்களில் உள்ள முடிக்கு நிறமளிக்கும் மெலனினை உற்பத்தி செய்யும் மெலனோசைட்டுகள் போதிய மெலனினை உற்பத்தி செய்யாமல் இருக்கும்.

    இவ்வாறு மெலனின் அளவு குறைந்தால், கூந்தலும் நரைக்க ஆரம்பிக்கும். பொதுவாக இத்தகைய நரைமுடியானது 30 வயதிற்கு மேல் தான் ஏற்படும். ஆனால் தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், சிறு வயதிலேயே முடி நரைக்க தொடங்கிவிடுகிறது. இருப்பினும் இத்தகைய நரைமுடிக்கு நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன.

    உடனே எந்த கடையில் கிடைக்கும் என்று யோசிக்க வேண்டாம். அவை அனைத்துமே வீட்டிலேயே எளிதில் கிடைக்கக்கூடியவை தான். மேலும் இந்த வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவதால், முடிக்கு எந்த ஒரு பக்கவிளைவும் வராமல் இருப்பதோடு, முடி நன்கு அடர்த்தியாக, நீளமாக மற்றும் ஆரோக்கியமாக வளரும்.

    இப்போது நரைமுடியை தடுக்கக்கூடிய இயற்கை சிகிச்சை முறைகள் என்னவென்று கொடுத்துள்ளோம். குறிப்பாக இத்தகைய சிகிச்சைகள் ஆண், பெண் என இருபாலாருக்கும் பொதுவானவையே. சரி, அதைப் பார்ப்போமா!!!

    ஹென்னா ஹேர் பேக் ஹென்னா மற்றும் நெல்லிக்காய் ஹேர் பேக்கை முடிக்கு போட்டால், நரைமுடி பிரச்சனையை நிச்சயம் தவிர்க்க முடியும்.

    அதற்கு ஹென்னா பொடியில், 3 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து பேஸ்ட் செய்து, கூந்தல் முழுவதும் தடவி ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளித்தால் முடியின் நிறம் மாறுதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

    ப்ளாக் டீ நரைமுடியைப் போக்குவதற்கு ப்ளாக் டீ பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, 2 டீஸ்பூன் டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் அதனை குளிர வைத்து, முடியில் தடவி ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்காமல், முடியை நீரில் அலச வேண்டும்.

    கறிவேப்பிலை அனைவருக்குமே கறிவேப்பிலை நரைமுடியைப் போக்கவல்லது என்பது நன்கு தெரியும். இருப்பினும் சிலர் நம்பிக்கையின்றி, அதனை சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். எனவே நரைமுடி போகவேண்டுமெனில், கறிவேப்பிலையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

    தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்க விட்டு, குளிர வைத்து, அதனை தினமும் கூந்தலுக்கு தடவி வந்தால், முடியானது கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

    முளைக்கீரை சாறு (Amaranth Juice) கருமையை இழந்த முடிக்கு, மீண்டும் கருமையை கொடுப்பதற்கு முளைக்கீரை சாற்றினை முடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து, நீரில் அலச வேண்டும். இதனால் முடி நன்கு வளர்வதோடு, கருமையோடும், பட்டுப் போன்றும், மென்மையாகவும் வளரும்.

    நெல்லிக்காய் நெல்லிக்காய் முடியை கருமையாக்குவதில் மிகவும் சிறந்த ஒரு பொருள். எனவே நெல்லிக்காய் சாற்றில், சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து முடிக்கு தடவி ஊற வைத்து குளித்து வந்தால், கூந்தலானது இழந்த கருமையை மீண்டும் பெறும்.


  8. #48
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    முக அழகை வெளிப்படுத்த பெண்கள் அதிக அக்கறை எடுப்பார்கள். கண் இமைகளை அலங்கரிப்பதிலும், உதடுகளை அலங்கரிக்கவும் ஆர்வம் இருக்கும். உதடுகளை சரியாக பராமரிக்காவிட்டால் தோல் உரிந்தும் வறண்டும் காணப்படும். இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் உதடுகளை பராமரிக்க பெண்களுக்கு பல வழிகள் உள்ளன.

    வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பாக மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் மென்மையாக மாறும். உதடுகளை கடிக்கும் பழக்கம் கொண்ட சிலருக்கு இருக்கும். அவ்வாறு உதட்டை கடிப்பதால் உதடு வறண்டு நிறம் மாறி காணப்படும். எனவே உதட்டை கடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

    லிப்ஸ்டிக் போடும் போது மிக கவனம் தேவை. சக தோழிகள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்கை பகிர்ந்து போடக்கூடாது. அவ்வாறு உபயோகித்தால் மற்ற பெண்களிடம் இருந்து ஏதாவது தொற்று கிருமிகள் பரவும். தரமான லிப்ஸ்டிக்கை பயன்படுத்த வேண்டும். தரமில்லாத லிப்ஸ்டிக்கை பயன் படுத்தினால் உதடுகள் கருப்பாக மாறும்.

    லிப்ஸ்டிக் போட பயன்படுத்தும் பிரஸ்ஷை உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால் தொற்று கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது. இரவு தூங்க செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டும். லிப்ஸ்டிக்கை நீக்க தேங்காய் எண்ணெயை உபயோகிக்கலாம்.

    லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அவ்வாறு செய்தால் உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஸால் மட்டுமே லிப்ஸ்டிக் போடவேண்டும். லிப்ஸ்டிக் போடும் முன்பு உதட்டில் ஐஸ் கட்டியை ஒற்றி எடுத்தால் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும். முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து அத்துடன் தேன் கலந்து உதட்டில் தடவி வந்தால் அழகு பெறும்.

    தினமும் நெய் அல்லது வெண்ணெயை தடவி வந்தால் வெடிப்புகள் நீங்கி உதடுகள் வழவழப்பாக மாறும். முட்டை கருவின் வெள்ளை கருவுடன் அரை கரண்டி பாதாம் பவுடர் சிறிது பாலாடை சேர்த்து உதட்டில் தடவி வந்தால் வறண்ட உதடுகள் குணமாகும். இரண்டு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் இரண்டு கிராம் தேன் மெழுகும் பன்னீரும் கலந்து உதட்டில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும் மென்மையாகவும் மாறும்.

    கொத்தமல்லி சாற்றை உதட்டில் தினமும் தடவி வந்தால் லிப்ஸ்டிக் போட்டது போலவே இயற்கையிலே சிவப்பு நிறமாக இருக்கும். லிப்ஸ்டிக் உபயோகித்து பழக்கம் இல்லாதவர்கள் லிப் சால்வ் பயன்படுத்தலாம். அதே போல பல வண்ண நிறங்களில் உள்ள வாசலினையும் உபயோகிக்கலாம். லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் கிளாஸ் தடவும் பழக்கம் பல பெண்களுக்கு உள்ளது. இதை தவிர்க்க வேண்டும். லிப்ஸ்டிக் மேல் தான் லிப் கிளாஸ் தடவ வேண்டும். வைட்டமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதட்டின் ஒரத்தில் புண்கள் வரும். அதற்கு மருதுவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொண்டால் உதடு சரியாகிவிடும்


  9. #49
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    மழைக்காலம் ஆரம்பிச்சிருச்சு. பொதுவா லேடீசுக்கு குளிர் காலங்கள்ல முகம் ட்ரை ஆகிவிடும். சிலருக்கு தோல் உரிதல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை உங்களுக்கும் இருக்கா? கவலைப் படாதீங்க லேடீஸ்... மழைக்காலங்களில் தோலை பாதுகாத்து கொள்ள மருத்துவர்கள் தரும் சில டிப்ஸ் உங்களுக்காக:

    மழை காலத்தில் அடிக்கடி முகத்தை கழுவ வேண்டாம். அவ்வாறு செய்தால் முகத்தில் வழவழப்பு குறைந்து விடும். முகம், கை, கால் இடுக்கு ஆகியவற்றை ஒரு தடவை சுத்தம் செய்தால் போதுமானது.

    மழைக்காலத்தில் வெந்நீர் மற்றும் சோப்புகளை அதிகமாக பயன்படுத்த வேண்டாம். மிதமான சூட்டில் உள்ள நீரில் குளிக்கலாம்.

    தூசுகள் படாதபடி முகத்தை பாதுகாக்க வேண்டும். சிலருக்கு உதடுகளில் வெடிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படாமல் இருக்க பிரத்யேக சொல்யூஷனை அப்ளை பண்ணலாம்.

    பப்பாளி பழத்தை சிறிதாக வெட்டி அரைத்து முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு பின் கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முகத்தில் பசை தன்மை நீண்ட நேரம் இருக்கும். தோல் ட்ரை ஆகாது.

    அதிகமான குளிர்காற்று உடம்பில் படாமல் பார்த்து கொள்ளவும். குளிர் காற்றினால் தோல் பாதிக்கப்படலாம். தோலில் திடீரென வலி, எரிச்சல் ஏற்பட்டு நிற மாறுபாடு உண்டானால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
    Contd..


  10. #50
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தயிருடன் மஞ்சள் தூளை சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு பின் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
    வைட்டமின் ‘டி‘ சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.

    பெண்களுக்கு முதன்மையான அழகு கண்கள் தான். கண்களை மட்டும் நன்றாக அலங்கரித்து விட்டால் பாதி அழகு வந்துவிடும். அந்த கண்களின் அழகை பிரதிபலிக்க உதவுவது புருவங்கள். அழகிய புருவம் கொண்ட பெண்கள் முகம் எப்போதும் பளிச் சென்று எடுப்பாக தெரியும். புருவங்களை பராமரிக்க எளிமையான டிப்ஸ் இதோ.

    புருவங்களின் முடி வளர்ச்சிக்கு விளக் கெண்ணெய் மிகவும் முக்கியம். அதனுடன் சமஅளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் எண்ணெய் அல்லது அரோமா எண்ணெய் கலந்து மசாஜ் செய்யலாம். இது புருவங்களில் உள்ள ரோம வளர்ச்சிக்கு உதவுவதுடன் அப்பகுதியில் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

    எண்ணெய் தடவி மசாஜ் செய்வதற்கு முன்பாக இரண்டு, மூன்று முறை கிள்ளி விடுவது போல் அழுத்தம் கொடுக்கவேண்டும். மசாஜ் செய்வதால் முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர உதவிசெய்கிறது.

    தினசரி குளிக்க செல்லும் முன்பு புருவங்கள் மேல் எண்ணெய் தடவி ஊறிய பின்பு குளிக்கலாம். இது புருவங்களை அழகு படுத்துகிறது. புருவங்களை எப்போதும் திரெடிங் முறையில் அகற்றுவதே நல்லது. சில பெண்கள் வாக்சிங் முறையில் புருவங்களில் உள்ள முடிகளை அகற்றுகின்றனர் இது தவறானது. இவ்வாறு செய்வதால் தசைகள் சுருங்கி தொய்ந்து போகிறது.

    பிளேடு பயன்படுத்தி சிலர் புருவ முடிகளை சேப் செய்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது. அவ்வாறு அகற்றுபவர்களுக்கு புருவங்களில் முடி விரைவாக வளரும். அதுதவிர வளரும் முடிகள் மிகவும் திக்காகவும், தாறுமாறாகவும் முறையற்றும் வளரும்.

    புருவங்களில் நரைமுடி இருப்பின் மஸ்காரா பயன்படுத்தி கருமையாக்கலாம். மஸ்காரா பிரஷ்சை காயவைத்து லேசாக நரைமுடிகளில் தடவலாம். ஐ ப்ரோ பென்சில் பயன்படுத்துவதை காட்டிலும் இதுபோன்று செய்வது அழகாவும், இயற்கையாகவும் இருக்கும்.

    contd..


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter