Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree65Likes

அழகுக் குறிப்புகள் - Beauty Tips!


Discussions on "அழகுக் குறிப்புகள் - Beauty Tips!" in "Beauty Tips" forum.


  1. #51
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கண்களுக்கு அடிக்கடி ஐ பேட் உபயோகிக்கலாம் இதன் மூலம் கண்கள் குளிர்ச்சி அடைவதுடன் புருவங்களும் நன்கு வளரும்.

    வெள்ளை நிற பெண்கள் ஆரஞ்ச், சிவப்பு, பிரவுன் உள்ளிட்ட நிறத்தில் லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம். மாநிறமாக இருக்கும் பெண்கள் லைட் பிரவுன்,

    லைட் செர்ரி நிற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம்.

    பகல் நேரத்தில் இளநிறத்திலும், மாலை நேரத்தில் அடர் நிறத்திலும் பூசுங்கள். அதிக குளிரும் சரி, அதிக வெயிலும் சரி இரண்டுமே லிப்ஸ்டிக்குக்கு

    எதிரிகள் காரணம் உதடுகள் எளிதில் வறண்டு விடும். பொதுவாக லிப்ஸ்டிப் போடுவதற்கு முன் தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவி 10

    நிமிடம் கழித்து வெது, வெதுப்பான வெந்நீரில் ஒரு துணியை நனைத்து, உதடுகளை துடைத்த பின்பு லிப்ஸ்டிக் போடுவது நல்லது.

    ஒரு லிப்ஸ்டிக்கை ஆறு மாதத்திற்கு மேல் பயன்படுத்தக் கூடாது. இது உதடுகளின் தன்மையை பாதித்து விடும். லிப்ஸ்டிக் பூசிய பிறகு உதட்டால்

    ஈரப்படுத்துவதையும், பானங்கள் குடிப்பதையும் தவிர்க்கவேண்டும்.



    லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு லிப் பென்சிலால் லிப்ஸ்டிக் போட வேண்டிய பகுதியில் அவுட்லைன் போடவேண்டும். மெலிதான உதடுகள்

    கொண்டவர்கள் உதடுகளின் வெளிப்பகுதியில் அவுட் லைன் வரையவேண்டும், பருமனான உதடுகள் உள்ள பெண்கள் உதடுகளின் உள் பகுதியிலேயே

    அவுட் லைன் போடவேண்டும்.

    இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு உதடுகளில் வாசலைன் தடவிக் கொள்ளலாம். லிப்ஸ்டிக் தடவுவதற்கு முன்பு வாசலைன் உபயோகித்தாலும்

    உதடுகள் பளபளக்கும்.

    அதிகமாக லிப்ஸ்டிக் போட்டுவிட்டால் டிஸ்யூ பேப்பரால் ஒத்தி எடுத்து அகற்றுங்கள். துணிகளாலும், கைகளை பயன்படுத்தி அகற்றுவதை

    தவிர்க்கவேண்டும்.

    அழகுநிலையத்திற்கு செலவு செய்து போதும் போது மென்றாகிவிட்டதா? செலவு குறைவாகவும் அதே சமயத்தில் தங்கள் அழகை பராமரிக்கவும் ஆலோசனைகளை வழங்குகிறார். பீளமேடு அஞ்சலி அழகு நிலையத்தின் அழகுகலை நிபுணர் அஞ்சலி. அதாவது அன்றாடும் நாம் சமையலறையில் பயன்படுத்தும் பொருட்களே அழகு சாதன பொருட்களாக திகழ்கின்றன என்பது ஆச்சரியமான உண்மை.


    Sponsored Links

  2. #52
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    அழகான உதடுகளுக்கு இயற்கை முறை ஆலோசனை

    முக அழகின் முழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு.உடலிலுள்ள சருமம் 28 நாட்களுக்கொரு முறை வெளித்தோலை உதிர்க்கிறது. அதுவே உதடுகளில் உள்ள சருமம் உதிர மாதக் கணக்கில் ஆகும். சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள் தோலுரிந்தும், வறண்டும் காணப்படுகின்றன. உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்...

    பொதுவான ஆலோசனைகள் :

    தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும்.

    வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.

    உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்படவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.

    மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

    இப்போது மேட் பினிஷ் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். எனவே அவற்றை எப்போதாவதுதான் உபயோகிக்க வேண்டும்.

    தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பார்த்து உபயோகிக்க வேண்டும்.

    லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம்.

    லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும்.

    முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும்.

    தினமும் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.

    முட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர, வறண்ட உதடுகள் குணமாகும்.

    இரண்டு டீஸ்பூன் ஆலிவ் என்ணெயுடன் இரண்டு கிராம் தேன் மெழுகும், பன்னீரும் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும்.

    கொத்தமல்லிச் சாற்றை உதடுகளில் தினமும் தடவி வந்தால் அவை இயற்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பெறும்.

    உதடுகளில் தடவிய லிப்ஸ்டிக்கை நீக்க பேஸ் வாஷ் அல்லது தேங்காய் என்ணெயை உபயோகிக்கலாம்.

    லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

    உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் பொலிவிழந்து காணப்படும். உதாரணத்திற்கு வைட்டமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதடுகளின் ஓரங்களில் புண்கள் மாதிரி காணப்படும். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலே உதடுகள் சரியாகிவிடும்.

    உதடுகளுக்கு மேக்அப் போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் : முதலில் பவுண்டேஷன் தடவிவிட்டுப் பிறகு லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.

    லிப்ஸ்டிக் உபயோகித்துப் பழக்கமில்லாதவர்கள் லிப் சால்வ் உபயோகிக்கலாம். அதே மாதிரி பல வண்ண நிறங்களில் இப்போது வாசலின் வந்துள்ளது. அதையும் உபயோகிக்கலாம்.

    லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் கிளாஸ் தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின் மேல்தான் லிப் கிளாஸ் தடவப்பட வேண்டும்.

    லிப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் தடவினாலும் லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.


  3. #53
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தேமல்

    அகத்தின்அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகம் அழகாய் இருந்தும் முகம் அழகாய் இல்லையேஎன வருந்துபவரா நீங்கள்?

    முகப்பொலிவு பெற, கரும் புள்ளிகள் மறைய, முகப்பருநீங்க, கண்ணில்கருவளையம் நீங்க, தேமல் , தோல்வியாதிகள் குணமாக, உடல் பொன்னிறமாக, பற்கள் வெண்ணிறமாக என இதோ உங்களுக்கு உதவும் அழகுக்குறிப்புகள் அனைத்தும் இங்கே!

    மேனி மினுமினுப்பாக தினமும் இரவில் படுக்கப் போகும்முன் தேன், குங்குமப் பூ மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்துசாப்பிட்டு வரலாம்.

    தோலில் சொறி, சிரங்கு, புண்இவற்றால் கரும்புள்ளிகள் உள்ளதா?

    கரும்புள்ளிகள் நீங்க குப்பை மேனிக் கீரையை எடுத்துஅதனோடு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து மை போல அரைத்து தேகத்தின் மீது தேய்த்துசிறிது நேரம் கழித்து குளித்து வர வேண்டும். ஒரு மாதத்திற்கு இப்படி செய்துவந்தால் கரும்புள்ளிகள் மறையும். அழகு கூடும். குப்பைமேனிஇருந்தால்மேனியின் கரும்புள்ளிகளுக்கு நீங்கள் சொல்லலாம் குட்பை”.

    பொன்னாங்கண்ணிக் கீரை நமது உடம்பை பொன்னாகமாற்றும்சக்தி இதற்கு உண்டு. பொன்னாங்கண்ணிக் கீரையை நெய் விட்டு வதக்கி, மிளகும், உப்பும்சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வர உடல் அழகு பெறும்.

    தேகம் பொன்னிறமாக ஆவாரம் பூ தொடர்ந்து சாப்பிட்டுவரலாம்

    உங்கள் முகத்தின் வசீகரம் கூட வெள்ளரி பிஞ்சு கொண்டு தினமும்மசாஜ் செய்யுங்கள். இது கண்களின் கீழ் உள்ள கருவளையத்தையும் நீக்க வல்லது.





  4. #54
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    அழகுகுறிப்புகள்


    மேனி பளபளப்பு பெற்று சிவப்பாக மாற வைட்டமின் சிசத்து நிறைந்த ஆரஞ்சு பழம் மற்றும் பெரிய நெல்லிக்காய் சாப்பிடலாம்.

    முகம் பிரகாசமடைய கானா வாழை மாவிலை சம அளவு எடுத்துகாய்ச்சி வடிகட்டி அதை முகத்தில் தடவி காயவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவவும்.

    உடல் சிவப்பாக மாறி, அழகுகூட வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர சிவப்பாக மாறும்.

    தோல் வழவழப்பாக மருதாணி இலையை அரைத்து தேய்த்து வந்தால்வழவழப்பு அதிகரிக்கும்.

    முகச் சுறுக்கம் மறைய முட்டைக் கோஸ் சாறை தடவிவரலாம்.

    படர் தாமரை வந்தவர்கள் சிறிது மிளகை நெய் விட்டுஅரைத்து தடவினால் படர்தாமரை குணமாகும்.

    முகப்பரு இருக்கிறதா? கவலைவிடுங்கள். சுக்கை அரைத்து விழுதை முகப் பருக்களின் மீது அடிக்கடி தடவி வர சிலநாட்களில் முகப் பரு நீங்கி குணம் காணலாம்.



  5. #55
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    முகப்பரு

    பாசிப்பயறு மாவுடன் கொஞ்சம் எலுமிச்சைச்சாறுசேர்த்துத் தடவினால் முகப்பரு நீங்கும்.

    100
    மில்லிநல்லெண்ணெயோடு 15 கிராம் மிளகுப்பொடி சேர்த்து சூடாக்கி முகப்பருக்கள்மீது பூசினால் முகப்பரு குறையும்.

    தேமல் மறைய சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்துமையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறைந்து, சருமம்இயல்பு நிலை அடையும்.

    உதடு வெடிப்பு நீங்க: பனிக்காலங்களில் ஏற்படும் உதடுவெடிப்பு நீங்க கரும்புச் சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி அதனுடன் வெண்ணெய்கலந்து உதட்டில் தடவி வர உதடு வெடிப்பு குணமாகும்.

    வெயில் காலங்களில் ஏற்படும் வேர்க்குரு மறைய சாதம்வடித்த கஞ்சியை தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் போதும்.

    கை, மார்பு, தொடைப்பகுதிகளில் ஆங்காங்கே தேமல் இருக்கிறதா? மணத்தக்காளிக்கீரையின் சாற்றை எடுத்து உடம்பில் தடவி, அரைமணி நேரம் ஊற வைத்து வெது வெதுப்பான நீரில் குளித்து வர உடலின் நிறம் மாறும். அழகுமேம்படும்.

    முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், தழும்புகள்மற்றும் முகப்பருக்கள் நீங்க அவரை இலை சாறு தினமும் முகத்தில் பூசி காயவிட்டுகுளித்து வந்தால் முகம் பளபளக்கும்.





  6. #56
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    அழகுக்குறிப்புகள்

    முகம் பளபளக்க நன்றாக பழுத்த நாட்டு வாழைப் பழத்தைஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணிநேரம் கழித்து முகம் கழுவி வரலாம்.

    சந்தனம் முகத்தில் அடிக்கடி பூசி காயவிட்டு முகம்கழுவ சூட்டினால் முகத்தில் வரும் சிறு சிறு கட்டிகள் வரவே வராது


  7. #57
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    பற்களில் மஞ்சள் நிறமா? கரிசலாங்கண்ணியின் வேரைக் கொண்டு பல் துலக்குங்கள். பல் துலக்கிய பின், கீரையை ஒரு பிடி எடுத்து மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி வரவும். நாளடைவில் பற்களில் உள்ள மஞ்சள் கறை மறைந்து பற்களின் அழகு அதிகரிக்கும்.

    பல்

    பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்குவதில் வல்லாரை கீரையும் உதவுகிறது. வல்லாரைக் கீரையை பற்களின் மேல் வைத்து தேய்த்து வந்தால் மஞ்சள் கறை நீங்குவதோடு பற்கள் வெண்மையாக பளீரிடும்.

    தீப்புண்ணால் முகத்தில் ஏற்பட்ட தழும்புகள் குறைய பெரு நெல்லிக் கனியை தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வாருங்கள். தழும்புகள் மறைந்து அழகு கூடும். இரத்த்த்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவையும் இது உயர்த்தும் ஆற்றல் கொண்டது.


  8. #58
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி...!!!

    மஞ்சளை அரைத்துப்பூசினால் தான் அழகு கிடைக்கும் என்றில்லை.

    மஞ்சள் கலந்த நீராவி கூட அழகைக் கூட்டும், தெரியுமா!!!

    மூன்று கப் தண்ணீரை கொதிக்க வையுங்கள். பசும் மஞ்சள் கிழங்கு (அல்லது கஸ்தூரி மஞ்சள்) ஒன்றை அரைத்து அதன் சாறை எடுத்து, கொதி நீரோடு கலந்து ஆவி பிடியுங்கள்.

    அடுத்து ஒரு கைப்பிடி அளவு துளசியைப் போட்டு ஆவி பிடிக்க வேண்டும்.

    பிறகு 3 எலுமிச்சை இலை அல்லது அரை மூடி எலுமிச்சை சாறு சேர்த்து ஆவி பிடியுங்கள்.

    இத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாக செய்து முடித்ததும், கடைசியில் ஐஸ் கட்டியை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தேயுங்கள். (சருமத் துவாரங்கள் விரிவடையாமல் இருக்க ஐஸ் ஒத்தடம் அவசியம்) பின்னர், ஏதேனும் ஒரு ஃபேஸ் பேக்கை பூசி முகத்தை அலசுங்கள்.

    அப்புறம் பாருங்கள்... `நானே நானா... மாறினேனா..!' என்று உங்கள் விழிகள் விரியும்.

    அந்தளவுக்கு துடைத்து வைத்த குத்து விளக்காக உங்கள் முகம் ஜொலிக்கும்.

    சீசனில் தான் பசும் மஞ்சள் கிடைக்கும். இதனை காய வைத்தால், அது கஸ்தூரி மஞ்சள், பசும் மஞ்சள் கிடைக்காத சீசனில், மாற்றாக கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்தலாம்.

    கஸ்தூரி மஞ்சள் வகை மஞ்சள் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

    துளசி நாள்பட்ட சொறி , படை சிரங்குகள் கூட மறைந்துவிடும்.

    முகப்பரு,கரும்புள்ளி நீங்க,சிவப்பு அழகு பெற :

    தேவையான பொருட்கள்:-செய்முறை :

    1 - முல்தானி மட்டி பொடி - 200,கிராம்
    2 - கஸ்தூரி மஞ்சள் பொடி - 50, கிராம்
    3 - பூலாங்கிழங்கு பொடி - 50, கிராம்
    4 -கோரைக் கிழங்கு பொடி - 50, கிராம்
    5 -நன்னாரி வேர் பொடி -50, கிராம்,

    இவைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்
    கின்றன வாங்கி ஒன்றாகக் கலந்து வைத்துக்
    கொள்ளவும்.இதனை இரண்டு டீஸ்பூன் அளவு
    எடுத்து பால் சிறிது விட்டுக் குழப்பி முகத்தை
    நீரில் கழுவித் துடைத்து விட்டு முகத்திலும்
    கழுத்துப் பகுதிகளிலும் பூசி விட்டு அமர்ந்து
    அரை மணிநேரம் கழித்து குளிர்ந்தநீரில் கழுவி
    விடவும் .

    இதே போல் வாரம் இரண்டு முறை செய்து வர
    முகப்பரு ,கரும்புள்ளி, இவைகள் நீங்கும் மேலும்
    முகத்தின் தோல் பகுதியில் உள்ள இறந்த செல்
    களை அகற்றும்,முகம் மென்மையாகும்,சிவப்பு
    அழகு கிடைக்கும்.
    இது அனுபவ முறையில் கைகண்ட முறையாகும்.


  9. #59
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    முகத்தில் அம்மை வடு ,தழும்பு நீங்க :

    1 -- கருவேப்பிலை - ஒரு கை பிடி
    2 - கசகசா - ஒரு டீ ஸ்பூன்
    3 - கஸ்தூரி மஞ்சள் - சிறிய துண்டு
    இதனை அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம்
    கழித்து குளித்து வர அம்மை தழும்பு மறைந்துவிடும்


  10. #60
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    அடர்த்தியான கூந்தல்

    *தலைக்கு நன்கு எண்ணெய் தேய்த்து நன்றாக மஜாஜ் செய்யுங்கள்.ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஷேம்ப் அல்லது சீகக்காய் போட்டு நன்கு தேய்த்து குளியுங்கள்

    முடி உதிர்விற்கு

    *வெந்தயத்தை பொடி செய்து அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

    முடி வளர

    *கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால் காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.
    இன்று முக்கால் வாசி ஆண்களும் பெண்களும் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனை பொடுகுத் தொல்லைதான்.கூந்தலின் மீது அதிக கவணம் எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சனையிலை ஆரம்பத்திலே தடுத்துவிடலாம்.கவனிக்காமல் விட்டால் கூந்தலில் ஒருவித வாடை வரும், அரிப்பு, புண், எரிச்சல், கூந்தல் உதிர்வுகள் ஏற்படும்.

    *பொடுகின் ஆரம்ப நிலையில் இருந்து பார்ப்போம்.பொடுகினை இரண்டு வகையாக பிரிக்கலாம் அதில் ஒன்று கூந்தல் வறண்டு செதில் செதிலாக வெள்ளையாக இருப்பதது.இன்னென்று எண்ணெய் பசையுடன் இருப்பது.

    *முதல் வகையினை கவனிக்காமல் விட்டால் அது சோரியாஸிஸ் போன்ற சரும நேய்கள் வரக்கூடும். இதன் மூலம் நெற்றியில் சின்ன சின்ன பருக்கள் வந்து உங்கள் முக அழகையும் கொடுக்கும்.

    *இரண்டாம் வகையின் மூலம் உங்கள் கூந்தல் அதிகமாக உதிர்வு ஏற்படும். தலையில் ஒரு வித துர்நாற்றம் வரும். இதன் மூலம் முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக தெரிந்து அழகை கெடுக்கும்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter