Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree65Likes

அழகுக் குறிப்புகள் - Beauty Tips!


Discussions on "அழகுக் குறிப்புகள் - Beauty Tips!" in "Beauty Tips" forum.


  1. #61
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    பொடுகுவர காரணங்கள்:

    *பொடுகுவர முக்கிய காரனம் ஹார்மோன் கோளாறுகள், கூந்தலில் சரியில்லாத பராமறிப்பு, தவறான உணவு பழக்கம், டென்ஷன்,பரம்பரைத்தன்மை தான் இதற்க்கு காரணங்கள்.

    பொடுகு வந்தவர்கள் கவணிக்கவும்:

    *வாரம் இரண்டு முறை தலைக்கு நல்ல ஷம்ப்பு அலது சியக்காய் போட்டு குளிக்கவும்.பொடுகு வந்த பின்பு தலையில் மிகுந்த அரிப்புகள் இருக்கும் அதனை விரல் நகம் வைத்து அதிகமாக சுரண்டக் கூடாது.

    *கண்டகண்ட க்ரீம்களை தலைக்கு தேய்க்கக் கூடாது.அதிகமாக தண்ணீர் குடிக்கவும். எண்ணெய் அதிகம் உள்ள உணவு பண்டங்களை தவிர்க்கவும்.
    முக்கியமாக டென்ஷன் இல்லாமல் இருக்கனும்.தலையணை உறைகள் மற்றும் தலையணையினை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.

    *சீப்பு, தலை துடைக்கும் டவல், ஹேர் ஹிளிப் தலைக்கு பயன்படுத்தும் அனைத்துமே தனியாக பயன்படுத்தவும்.சீப்பை 3 நாளுக்கு ஒரு முறை சூடு தண்ணீரில் போட்டு அலசிய பின்பு பயன்படுத்தவும்.

    இதனை தடுக்க சில வழிகள்:

    *குளிக்கும் முன்பு நன்றாக தலையில் சிறிது வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயினை தலையின் வேரில் பஞ்சினை வைத்து தேய்து நன்றாக ஊறிய பின்பு குளிக்கவும்.வாரம் ஒரு முறை ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கவும்..
    எலூமிச்சை சாறு, அல்லது முட்டையின் வெள்ளை கரு அல்லது வெள்ளை முள்ளங்கி சாறு தலையில் தேய்த்துக் குளிக்கலாம்


    Sponsored Links

  2. #62
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கூந்தல் பவுடர்:

    *4ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 4 ஸ்பூன் நல்ல தரமான சியக்காய் பவுடர், 2 கப் மருதாணி பவுடர், 1 எலுமிச்சை பழ தோல், 1 ஆரஞ்ப்பழத்தோல், 2ஸ்பூன் வேப்பிலை பொடி அனைத்தையும் ஒன்றாக கலந்து 1கப் தயிருடன் கலந்து தலைக்கு வாரம் ஒரு முறை தேய்த்துக் குளித்தால் பொடுகு போய்விடும்.


  3. #63
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    வெயில் காலங்களில் சிலருக்கு வெயிலில் அதிகம் அலைவதால், கழுத்து பாகம் கறுத்துப் போய்விடும். அப்படி இருப்பவர்கள் கோதுமை, பாசிப்பயறு, ஓட்ஸ் ஆகிய மூன்றின் மாவையும் பாலுடன் கலந்து கொள்ளுங்கள். இதை கழுத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் கழுத்தின் கருமை நிறம் குறையும்.

    *முட்டைக் கோஸின் வெளிப்புற இலைகளை நறுக்கி மிக்சியில் இட்டு. அதன் சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஈஸ்ட், ஒரு ஸ்பூன் தேன் கலந்து கழுத்தில் தடவி வர சூரிய ஒளியினால் பாதிக்கப்பட்ட கறுமை நிறம் ஓரிரண்டு நாட்களில் மறைந்து போய்விடும்.

    *ஒரு டீஸ்பூன் வெங்காயச் சாறு, சிறிது ரோஸ் வாட்டர், இரண்டு சொட்டு ஆலிவ் எண்ணெய், ஒரு ஸ்பூன் பயத்தம்மாவு இந்த நான்கையும் கலந்து கழுத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினாலும் நாளடைவில் கழுத்தின் கறுப்பு நீங்கிவிடும்.

    *இளநீரில் சிறிது சந்தனம் சேர்த்து கழுத்தில் தடவி வந்தால் வேர்க்குரு நீங்கும். நல்ல இதமாகவும் இருக்கும்.தர்பூசணிப் பழச்சாறுடன் பயத்தமாவைக் குழைத்து குளிர் சாதனப் பெட்டியில் வைக்கவும் அரை மணி நேரம் கழித்து, அந்த விழுதை எடுத்து கழுத்தில் தடவி வர, வெயிலில் வறண்ட சருமத்துக்கு புதுப்பொழிவு கிடைக்கும்.

    *பெரிய "திக்"கான செயின் அணிவதாலும் ஃபேன்ஸி நகைகள் அணிவதாலும், சிலருக்கு கழுத்தின் பின் பகுதி அதிகமாகக் கறுத்துப் போயிருக்கும். அவர்கள் பாலில் 1 ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கருமை உள்ள பகுதிகளில் தடவி, 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும் சில வாரங்களிலேயே அந்தக் கருமை நீங்க இயல்பான நிறம் கிடைத்துவிடும்.

    *நீங்களும் உங்க கழுத்தை அழகு படுத்துங்க.நீங்களும் கழுத்தழகி ஆகுங்க!


  4. #64
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    சிலருக்கு முகத்தில் காது, கால், கைகளில் நிறைய முடிகள் இருக்கும். அவர்கள் வேப்பங்கொழுந்து, குப்பை மேனி இலை, விரலி மஞ்சள் அரைத்துப் பூசி பத்து நிமிடம் உலரவிட்டு பின் கழுவினால் முடி உதிர்ந்து விடும்.

    *முகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் சம அளவு எடுத்து அதை நறுக்கி, பின் நல்லெண்ணெயில் போட்டுக் நன்கு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

    *உடம்பில் தழும்புகள் இருந்தால் அந்த இடத்தில அவரை இலையின் சாற்றை பூசி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறைய ஆரம்பிக்கும்..

    *தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.ţ

    *என்ன பெண்களே உங்க முகமும் இனி பளபளப்பில் ஜொலிக்க தானே செய்யும்


  5. #65
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் விழுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்குக் காரணம் “பாஸ்ட் புட்’ உணவு வகைகளை இவர்கள் அதிகம் உண்பதுதான் எனக் கூறப்படுகின்றது. இதோ சில குறிப்புகள் உங்களுக்கு:-

    * காய்கறி பழ வகைகளைத் தவறாமல் சாப்பிடுங்கள். இயற்கையான காய்கறி, பழ வகைகளில் உள்ள விட்டமின் மற்றும் சத்துக்கள் தோலில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கக் கூடியவை.

    * வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பளபளப்படையும்.

    * துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு தரும். வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

    * வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். சுருக்கம் எட்டியும் பார்க்காது.

    * நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.

    * கறிவேப்பிலையிலுள்ள விட்டமின் ஏ இளமையான சருமத்தைத் தக்க வைத்துக் கொள்ள பெரிதும் உதவும். அடிக்கடி துவையல் செய்து சாப்பிடலாமே.

    முகத்தில் சுருக்கம் என்ற கவலை இனியுமேன்?

    saidevi likes this.

  6. #66
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    Very Useful....


  7. #67
    radhepriyan is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    Chennai
    Posts
    55

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    Useful informations


  8. #68
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    முகப்பருக்களை கட்டுப்படுத்துவது எப்படி?
    ஹார்மோன் சுரப்பு, எண்ணெய் பசை அதிகரிப்பு, கிருமி தொற்று போன்றவை முகப்பருக்கள் ஏற்பட காரணமாகின்றன. முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் முகத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.

    இந்த சுரப்பிகள் தூசு, அழுக்கு போன்றவற்றால் அடைபடும் போது கிருமி தொற்று ஏற்பட்டு முகப்பருக்கள் ஏற்படுகின்றன.

    இந்த பருக்களில் சீழ்போன்ற திரவம் நிறைந்து கரும்புள்ளிகளையும் உருவாக்கும். இந்த சீழில் உள்ள கிருமிகள் பரவி மேலும் முகப்பருக்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

    எனவே முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதிக எண்ணெய் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் அவ்வப்போது முகத்தை சோப்பு மற்றும் நீரால் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    முகப்பருக்களை அடிக்கடி கையால் தொட்டுப் பார்க்க கூடாது. நகத்தால் கிள்ளவும் கூடாது. இதனால் கிருமித்தொற்று பரவி அடுத்தடுத்து புதிய முகப்பருக்கள் ஏற்படும். வேப்பிலை சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.

    நிறைய குடிக்கவேண்டும். பச்சை காய்கறிகள், பழங்கள் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். மலச்சிக்கலை கட்டுப்படுத்த வேண்டும்.

    தலையணை உறை, சோப்பு, டவல் போன்றவற்றை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வைத்து பயன்படுத்தவும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் வியர்வை மூலம் தோலின் நுண்துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சருமம் சுத்தமாகும்.

    பவுடர், அழகுசாதன பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இவற்றால் எண்ணெய் சுரப்பிகள் அடைபடும் நிலை ஏற்படும்.

    umasaravanan likes this.

  9. #69
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    சரும பிரச்சனைகளைப் போக்கும் முட்டை ஃபேஷியல்!

    உங்களுக்கு திருமணம் நடைபெறப் போகிறதா? வாழ்நாளில் மறக்க முடியாத அந்த நாளின் போது அழகாக ஜொலிக்க வேண்டுமா? அப்படியானால் அழகு நிலையங்களுக்குச் சென்று பணம் செலவழித்து தங்களின் அழகைப் பராமரிப்பதை விட, வீட்டிலேயே இருக்கும் ஒருசில பொருட்களைக் கொண்டு அழகைப் பராமரித்தால், சருமத்தின் அழகு அதிகரிப்பதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

    அதிலும் அழகுப் பராமரிப்பில் அதிகம் பயன்படும் முட்டையைப் பயன்படுத்தி சருமத்தைப் பராமரித்தால், சருமத்தின் பொலிவு மற்றும் மென்மைத் தன்மை அதிகரிக்கும். முக்கியமாக முட்டையானது அனைத்து வகையானது சருமத்தினருக்கும் ஏற்ற ஒரு அழகுப் பராமரிப்பு பொருள் என்பதால் பயப்படாமல் பயன்படுத்தலாம்.

    மேலும் முட்டையைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளானது உடனடியாக நீங்கும்.

    இப்போது முட்டையைக் கொண்டு முகத்தை எப்படியெல்லாம் ஃபேஷியல் செய்யலாம் என்பதைப் பார்ப்போம். குறிப்பு: கீழே கொடுக்கப்பட்டுள்ள முட்டை ஃபேஷியல்களானது பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் பொருந்தும்.

    முகப்பரு மற்றும் எண்ணெய் பசை சருமத்தினருக்கு... ஒரு பௌலில் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அடித்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு உலர வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, பருக்கள் வருவது குறைந்து, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.

    வறட்சியான சருமத்தினருக்கு... அதிகமாக சருமம் வறட்சி அடைந்தால், ஒரு பௌலில் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் பாதாம் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சரும வறட்சி நீங்குவதுடன், சருமமும் பொலிவோடு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
    contd..



  10. #70
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    சரும கருமையைப் போக்க... ஒரு முட்டையின் வெள்ளைக்கருவுடன், 1 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கெட்டியாக கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக ஸ்கரப் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் கருமையை உண்டாக்கும் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பளிச்சென்று இருக்கும்.

    ஆரோக்கியமான சருமத்தைப் பெற... ஒரு முட்டையின் வெள்ளை அல்லது மஞ்சள் கருவுடன், 1/4 அவகேடோ பழத்தையும், 1 டீஸ்பூன் தயிரையும் சேர்த்து நன்கு கலந்து, அதனை முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரால் முகத்தை தேய்த்து கழுவ வேண்டும். இதனால் சருமத்திற்கு வேண்டிய ஈரப்பசை கிடைத்து, பொலிவிழந்து காணப்பட்ட முகமானது பொலிவோடும் ஆரோக்கியமாகவும் காணப்படும்.

    மென்மையான சருமத்தைப் பெற.... இந்த ஃபேஷியலானது வறட்சியான சருமத்தினருக்கு ஏற்றது. இந்த ஃபேஷியலை செய்தால் சருமத்தின் மென்மையானது அதிகரிக்கும். அதற்கு பௌலில் 1 முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து, அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

    புத்துணர்ச்சியான சருமத்தைப் பெற... இந்த ஃபேஸ் பேக் மூலம் சருமத்தில் தங்கியுள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகளானது முற்றிலும் வெளிவந்துவிடும். இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு 1 முட்டையின் வெள்ளைக் கருவுடன், 7-8 ஸ்ட்ராபெர்ரி, 1 டீஸ்பூன் தயிர் மற்றும் சிறு துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவை தேவை.

    பின் ஒரு பௌலில் ஸ்ட்ராபெர்ரியை நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு பௌலில் முட்டை, தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து அடித்துக் கொள்ள வேண்டும். பின் இரண்டையும் ஒன்று சேர்த்து முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    பொலிவான மற்றும் பளிச்சென்ற சருமத்தைப் பெற... திருமண நாள் நெருங்கினாலே தூக்கம் வராது. இதனால் முகமானது பொலிவிழந்து சோர்வாக காணப்படும். இத்தகைய சோர்வை போக்க, கீழே குறிப்பிட்ட ஃபேஸ் பேக் போடலாம். அதற்கு ஒரு பௌலில் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து, அதில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    பின் முகத்தை பால் கொண்டு ஒரு முறை துடைத்து எடுத்தப் பிறகு கலந்து வைத்துள்ள முட்டை கலவை முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் 2-3 முறை செய்து வந்தால், முகம் பளிச்சென்று ஜொலிப்பதைக் காணலாம்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter