Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree65Likes

அழகுக் குறிப்புகள் - Beauty Tips!


Discussions on "அழகுக் குறிப்புகள் - Beauty Tips!" in "Beauty Tips" forum.


  1. #71
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    குளிர்காலத்தில் சோப்புக்கு குட்பை

    முதல் வேலையாக குளிர்காலம் முடியும் வரை சோப்புக்கு நீங்கள் குட்பை சொல்லுங்கள். கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, ஆரஞ்சு பழத்தோல் மூன்றையும் சம அளவு எடுத்துக் காய வைத்து மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.

    அதற்கெல்லாம் நேரமில்லாதவர்கள், கடலை மாவு, பயத்தமாவுடன், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிற ரெடிமேட் ஆரஞ்சு பழத்தோல் பொடியை வாங்கிக் கலந்து கொள்ளலாம். குளிக்கும் போதும், முகம் கழுவும் போதும் சோப்புக்கு பதில் இந்தப் பொடியை மட்டுமே உபயோகிக்கவும்.

    தலைக்குக் குளிக்க செம்பருத்தி இலை, சீயக்காய், வேப்பிலையை உலர வைத்து அரைத்த பொடியை உபயோகிக்கவும். குளிர் காலத்தில் பொடுகும் அதிகமாகும். முடி வறண்டு போகும். வேர்க்கால்கள் அடைபடும். இவற்றைத் தவிர்க்க வாரம் இருமுறை தலை குளியல் அவசியம்.

    நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் - சம அளவு எடுத்து வெந்நீர் உள்ள பாத்திரத்தினுள் வைத்து டபுள் பாயிலிங் முறையில் வெதுவெதுப்பாக சூடாக்கி, தலை முதல் கால் வரை தடவி மசாஜ் செய்யவும். எண்ணெய் முழுக்க சருமத்தினுள் இறங்கும் அளவுக்குத் தேய்த்து, 15 நிமிடங்கள் ஊறவிடவும்.

    மேலே சொன்ன கடலைமாவு, பயத்தமாவு, ஆரஞ்சு தோல் கலவைப் பொடியை சிறிது தண்ணீர்விட்டுக் குழைத்து பேஸ்ட் போலச் செய்து, தேய்த்துக் குளிக்கவும். தலைக்கு தனியே அரைத்து வைத்துள்ள பொடியை சாதம் வடித்த கஞ்சியில் குழைத்து, மறுபடி அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி, வெதுவெதுப்பான சூட்டுடனேயே தேய்த்து அலசவும். ஷாம்புவை தவிர்க்கவும்.

    குளிப்பதற்கு எப்போதும் இளம் சூடான தண்ணீரையே பயன்படுத்தவும். குளிர்ந்த தண்ணீரும் வேண்டாம். அதிக சூடான தண்ணீரையும் தவிர்க்கவும். தலைக்குக் குளித்ததும், கூந்தலைக் காய வைக்கிறேன் என்கிற பெயரில் டவலால் முடியை அடிப்பார்கள் பலர். இப்படிச் செய்தால், ஏற்கனவே பனிக்காலத்தில் பலவீனமாக இருக்கும் கூந்தலானது உடைந்து, வேரோடு உதிரும்.


    Sponsored Links
    jv_66 likes this.

  2. #72
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கல்யாணப் பெண்களுக்கு அழகு தரும் பீட்ரூட்

    மண மேடையில் ஜொலிக்க வைக்க, இதோ இருக்கிறது பீட்ரூட்! கீழே உள்ள 2 சிகிச்சைகளையும் தொடர்ந்து செய்யுங்கள். `எப்படி வந்தது இந்தப் புது மெருகு' என்று ஊரே விசாரிக்கும்.

    1. கமலா ஆரஞ்சு தோல் அரைத்த விழுது - 1 டேபிள் ஸ்பூன்,

    எலுமிச்சை தோல் அரைத்த விழுது - டேபிள் ஸ்பூன்,

    பீட்ரூட் சாறு - 1 டேபிள் ஸ்பூன்,

    பாதாம் அரைத்த விழுது - 2 டேபிள்ஸ்பூன்,

    உப்பு - ஒரு சிட்டிகை...

    இவற்றுடன் 5 துளிகள் ஜாஸ்மின் (அ) பாதாம் எண்ணையை சேர்த்து பேஸ்ட் ஆக்குங்கள்.

    இந்த பேஸ்ட்டை முகத்திலும் உடம்பு முழுவதும் நன்றாகப் பூசி, குளித்தால்... முரடு தட்டிப்போன முகம் மிருதுவாகும். உடம்பும் நறுமணத்துடன் பளபளக்கும்.

    2. தலையில் ஒன்றிரண்டு வெள்ளி முடிகள் மின்னுகின்றவா? அதற்கும் பீட்ரூட் வசம் தீர்வு இருக்கிறது. ஒரு பிடி அவுரி இலையை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) பீட்ரூட் சாறில் ஊற வைத்து அரையுங்கள்.

    இதை தலைக்கு `பேக்' ஆகப் போட்டு, அரை மணி நேரம் கழித்து அலசுங்கள். நரைமுடி கருநீலமாக மாறும். முடியும் பளபளப்பாகும். இந்த 3 சிகிச்சைகளையும் திருமணத்துக்கு 10 நாட்களுக்கு முன்பே செய்ய ஆரம்பித்து விடுங்கள்.

    jv_66 likes this.

  3. #73
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    ஆரஞ்சு போன்ற கன்னங்களைப் பெற ஆரஞ்சு பழ ஃபேஸ் பேக் போடுங்க...

    தற்போது ஆரஞ்சு பழத்தின் சீசன் என்பதால் அந்த பழமானது விலை குறைவில் கிடைக்கும். ஆகவே தவறாமல் இந்த பழத்தை அன்றாடம் வாங்கி சாப்பிடுங்கள். இதனால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, சருமமும் பொலிவோடு ஆரோக்கியமாக இருக்கும்.

    அதற்கு இந்த பழத்தை சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல், அதனைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தாலும் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

    அதுமட்டுமின்றி, ஆரஞ்சு பழமானது சருமத்தின் நிறத்தை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

    மேலும் சருமத்தின் இளமையைப் பாதுகாப்பதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, இறந்த செல்களை வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு பளிச்சென்று வெளிக்காட்டும். சரி, இப்போது அந்த ஆரஞ்சு பழத்தைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போமா!!!

    ஆரஞ்சு மற்றும் தயிர்

    ஆரஞ்சு பழச்சாற்றினை சிறிது எடுத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமமானது பொலிவோடு இருக்கும்.

    ஆரஞ்சு ஜூஸ் மற்றும் மைதா

    மைதாவில் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமம் மென்மையாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

    ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் தேன்

    2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாற்றில், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் பருக்கள் மட்டுமின்றி, பருக்களால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.

    ஆரஞ்சு, முல்தானி மெட்டி மற்றும் பால் பவுடர்

    1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டீஸ்பூன் பால் பவுடர் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

    ஆரஞ்சு தோல் பவுடர் மாஸ்க்

    ஆரஞ்சு தோலை நன்கு உலர வைத்து பொடி செய்து, பின் அதில் ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது சந்தன பொடி சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் பருக்கள் இருந்தாலும் போய்விடும்.

    jv_66 likes this.

  4. #74
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    வறட்சியடைந்து சொரசொரவென்று இருக்கும் உதடுகளை சரிசெய்ய டிப்ஸ்..

    குளிர்காலம் வந்தாலே அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் உதடு வறட்சி. ஏனெனில் இக்காலத்தில் மிகவும் குளிர்ச்சியான காற்று வீசுவதால், உதடுகளில் ஈரப்பசையானது விரைவில் போய்விடும்.

    அதுமட்டுமின்றி சிலர் தண்ணீர் மிகவும் குறைவாக குடிப்பதால், உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்து வறட்சியடைவதுடன், அடிக்கடி உதடுகளில் எச்சில் வைப்பதாலும் உதடுகளானது விரைவில் வறட்சியடைகிறது.

    ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்! இப்படி குளிர்காலத்தில் உதடுகளானது வறட்சியடைந்தால், உதடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டு வலியை அனுபவிக்கக்கூடும். எனவே குளிர்காலத்தில் உதடுகள் வறட்சியடையாமல் இருப்பதற்கு உதடுகளில் எப்போதும் ஈரப்பசை இருக்குமாறு செய்ய வேண்டும்.

    அதற்கு உதடுகளுக்கு ஒருசில பொருட்களைக் கொண்டு பராமரித்து சரியான பாதுகாப்பு அளிக்க வேண்டும். இங்கு உதடுகளில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கும் ஒருசில இயற்கைப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

    எண்ணெய் உதடுகளில் ஈரப்பசையை தக்க வைக்க ஒரு சிறந்த வழி உதடுகளில் எண்ணெயைத் தடவுவது தான். தினமும் உதடுகளுக்கு பலமுறை எண்ணெயைத் தடவி வருவதன் மூலம் உதடுகள் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். அதிலும் தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.

    கற்றாழை கற்றாழை உதடுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மிகவும் சிறந்தது என்று ஆய்வு ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் இதில் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை இருப்பதால், அவற்றை உதடுகளுக்குப் பயன்படுத்தும் போது, உதடுகளில் ஏற்பட்டுள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தும்.
    contd..


    jv_66 likes this.

  5. #75
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    மேலும் இதன் ஜெல்லை தினமும் உதடுகளுக்கு தடவி வந்தால், அவை வறட்சியைத் தடுப்பதோடு, உதடுகளை மென்மையடையவும் செய்யும்.

    தேன் தேனில் ஈரப்பசையைத் தக்க வைக்கும் குணம் உள்ளது. எனவே இந்த தேனை கிளிசரினுடன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் போது உதடுகளில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து வர வேண்டும். வேண்டுமானால் பகலில் கூட பயன்படுத்தலாம்.

    சர்க்கரை சர்க்கரையைக் கொண்டு உதடுகளை ஸ்கரப் செய்தால், அவை உதடுகளில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றிவிடுவதோடு, உதடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை விரைவில் குணமாக்க உதவும். அதிலும் சர்க்கரையை தேனுடன் சேர்த்து கலந்து, உதடுகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் ஸ்கரப் செய்தால் இன்னும் சிறந்தது.

    ரோஸ் பெண்களுக்கு உதடுகள் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அத்தகையவர்கள் ரோஜாப்பூ இதழ்களை பாலில் சேர்த்து ஊற வைத்து, பின் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை இரவில் படுக்கும் போது உதடுகளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைக்கலாம் அல்லது பகல் நேரத்தில் லிப் பாம் போன்று பயன்படுத்தலாம்.

    மில்க் க்ரீம் மில்க் க்ரீம்மில் எண்ணெய் பசை அதிகம் இருக்கும். எனவே அதனை உதடுகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவினால், உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், அதன் சாற்றினை உதடுகளுக்கு தடவி வந்தாலோ அல்லது தினமும் அதனை உட்கொண்டு வந்தாலோ, உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    jv_66 likes this.

  6. #76
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    வீட்டில் தயாரிக்கக்கூடிய ரோஜா ஃபேஸ் பேக்

    ரோஜா இதழ்களை சூடு தண்ணீரில் போட்டு 30 நிமிடம் வைக்கவும். பின்னர் ரோஜா இதழ்களை பிழிந்து தண்ணீரை தனியாக எடுக்கவும்.

    முகத்தை நன்றாக கழுவி விட்டு அரைத்த ஓட்சுடன் ரோஜா தண்ணீரை சேர்த்து நன்றாக கலந்து முகம், கழுத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும்.

    • ரோஜா இதழ்களை நன்றாக அரைத்து கொள்ளவும். அதில் கடலை மாவு, தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகத்தில் போட்டு நன்றாக காய விடவும். காய்ந்ததும் பால் அல்லது தண்ணீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.

    • ரோஜா இதழ்களை நீரில் 1 மணி நேரம் ஊறவைத்து நன்றாக அரைத்து கொள்ளவும். இதில் தயிர், எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து முகம், கழுத்தில் போட்டு 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். இந்த பேஸ் பேக் ஆயில் மற்றும் வறண்ட சருமத்தில் சிறந்தது.

    jv_66 likes this.

  7. #77
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    மென்மையான சருமத்தைப் பெற தினமும் தேன் யூஸ் பண்ணுங்க...

    தினமும் தேன் சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்கலாம். அதே சமயம் தேனைக் கொண்டு தினமும் சருமத்தைப் பராமரித்தால், சருமத்தின் பொலிவும், மென்மையும் அதிகரிக்கும் என்பது தெரியுமா? ஆம், தினமும் தேனை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து, சருமத்தின் அழகை அதிகரிக்கும்.

    உங்களுக்கு தேனை எப்படி தினமும் சருமத்திற்கு பயன்படுத்துவது என்று தெரியவில்லையா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் தமிழ் போல்ட் ஸ்கை தேனை தினமும் எப்படி பயன்படுத்துவது என்றும், அப்படி பயன்படுத்தினால் என்ன நன்மை கிடைக்கும் என்றும் கொடுத்துள்ளது.

    பருக்கள் இருந்தால்...

    பருக்கள் தான் சருமத்தின் அழகையே கெடுப்பது. அத்தகைய பருக்களை தேன் பயன்படுத்துவதன் மூலம் போக்கலாம். அதற்கு இரவில் படுக்கும் போது பருக்கள் உள்ள இடத்தின் மீது தேனைத் தடவிக் கொள்ள வேண்டும்.

    வேண்டுமானால் தேனுடன், சிறிது டீ-ட்ரீ ஆயில் அல்லது லாவெண்டர் ஆயில் சேர்த்து கலந்தும் தடவிக் கொள்ளலாம். இதனால் இன்னும் அதிக பலன் கிடைக்கும்.

    சிறந்த கிளின்சராக...

    தேனில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை தினமும் கழுவி வருவதும் நல்லது. இதனால் முகத்தில் போடப்பட்டுள்ள மேக்கப் முற்றிலும் நீங்குவதோடு, சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சுரைசராகவும் இது செயல்படும்.

    வறட்சியான சருமத்தைப் போக்க...

    வறட்சியான சருமம் உள்ளவர்கள், தேனுடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் வெஜிடேபிள் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், வறட்சியை நீக்கி, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள முடியும்.

    jv_66 likes this.

  8. #78
    shrija's Avatar
    shrija is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2013
    Location
    Boston
    Posts
    364

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    WOW!!..amazing tips..thanks


  9. #79
    jeyajenifa's Avatar
    jeyajenifa is offline Citizen's of Penmai
    Real Name
    JP
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    chennai
    Posts
    610

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    super tips chan

    “Every time you smile at someone, it is an action of love, a gift to that person, a beautiful thing.” » Mother Teresa

  10. #80
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    wow..super tips..Thanks for sharing....


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter