Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree65Likes

அழகுக் குறிப்புகள் - Beauty Tips!


Discussions on "அழகுக் குறிப்புகள் - Beauty Tips!" in "Beauty Tips" forum.


  1. #81
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்குகள்!!!

    அனைவருக்கும் ஓட்ஸ் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மட்டும் தான் சிறந்தது என்று தெரியும். ஆனால் ஓட்ஸானது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும் மிகவும் சிறந்தது என்று தெரியுமா? ஏனெனில் ஓட்ஸில் சருமத்திற்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

    குறிப்பாக அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு அழற்சி தன்மைகள் போன்றவை நிறைந்துள்ளதால், இவற்றைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள், கிருமிகள் நீங்கி சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

    சரி, ஓட்ஸை எப்படி பயன்படுத்துவது என்று தெரியுமா? இப்போது ஓட்ஸைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போட்டால் என்ன பிரச்சனை நீங்கும் என்று பார்ப்போம்.

    வறட்சியான சருமத்திற்கு... சிலருக்கு சருமம் மிகவும் வறட்சியுடன் காணப்படும். அத்தகையவர்கள் மிக்ஸியில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், சிறிது பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அடித்து, முகம் மற்றும் அதிகம் வறட்சி அடையும் இடங்களில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால் சரும வறட்சி நீங்கும்.

    மென்மையான சருமத்தைப் பெற.... சிலருக்கு சருமமானது மென்மையின்றி காணப்படும். அத்தகையவர்கள் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் வறட்சியினால் மென்மையிழந்த சருமமானது மீண்டும் மென்மையாகும்.
    contd..



    Sponsored Links

  2. #82
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    வெள்ளையான சருமத்தைப் பெற... 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸை சிறிது நீரில் வேக வைத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைத்து, முகத்தில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால், வெள்ளையாக மாறுவதைக் காணலாம்.

    பருக்களைப் போக்க... வெறும் ஓட்ஸை நீர் ஊற்றி வேக வைத்து இறக்கி குளிர வைத்து மசித்து, பின் அதனை சருமத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் பருக்களைப் போக்கலாம்.

    பளிச் முகத்தைப் பெற... சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்கி, பளிச்சென்ற முகத்தைப் பெற, 3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

    முகத் தழும்புகளைப் மறைக்க... 1/2 கப் ஓட்ஸை, 1 கப் பால் சேர்த்து நன்கு 10-15 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைத்து, பின் அதனை லேசாக மசித்து, முகத்தில் தடவி 30 நிமிடம் உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள பருக்களால் வந்த தழும்புகளானது மறைந்துவிடும்.


  3. #83
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கரும்புள்ளி, தோல் சுருக்கத்தை போக்கும் ஸ்டீம் முறை

    35 வயதை தொடும் பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் தோன்ற ஆரம்பிக்கும் அவர்கள் இந்த ஸ்டீம் முறையை பின்பற்றி வந்தால் முகத்தில் உண்டான சுருக்கம் படிப்படியாக மறைவதை காணலாம்.

    வெறும் தண்ணீரில் ஆவி பிடிப்பதை விடவும், சில பொருட்களைப் போட்டு ஆவி பிடிப்பது நல்ல பலனைத் தரும். இங்கே இரண்டு வகை ஸ்டீம் முறைகளைத் தந்திருக்கிறேன். முயற்சித்துப் பாருங்கள்.

    வேப்பிளை ஸ்டீம் : வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் நாலைந்து வேப்பிலையைப் போடுங்கள். இரண்டு நிமிடங்கள் கழித்து வேப்பிலையை எடுத்துவிட்டு ஆவி பிடியுங்கள். பிறகு, முகத்தைத் துடைக்காமல், ஐஸ் கட்டிகளை மெல்லிய துணியில் கட்டி, முகம் முழுக்க லேசாக ஒத்தி விடுங்கள்.

    இதனால் முகம் குளிர்ச்சியாவதுடன், கன்னிப் போன தோல் மிருதுவாகும். அரிப்பு, பருக்களினால் ஏற்படும் பாதிப்பிலிருந்தும் நிரந்தரமாக விடுபடலாம்.


  4. #84
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    எலுமிச்சை ஸ்டீம் : கொதிக்கிற தண்ணீரில், 1 எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஆவி பிடியுங்கள். முடித்ததும் முகத்தைத் துடைக்காமல், `ஐஸ்' கட்டி ஒத்தடம் கொடுங்கள்.

    பிறகு, ஏடு இல்லாத தயிருடன் கடலை மாவை கலந்து `பேக்' போட்டு 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். மாதம் ஒருமுறை இதைச் செய்து வந்தாலே முகத்தில் வந்த சுருக்கம் ஓடிப்போகும். இனி, சுருக்கமும் வராது?. எலுச்சைக்கு, முகத்தின் கருமையையும் கரும்புள்ளிகளையும் விரட்டி விடுகிற சக்தி உண்டு.
    மென்மையான சருமத்தைப் பெற தினமும் தேன் யூஸ் பண்ணுங்க...

    தினமும் தேன் சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்கலாம். அதே சமயம் தேனைக் கொண்டு தினமும் சருமத்தைப் பராமரித்தால், சருமத்தின் பொலிவும், மென்மையும் அதிகரிக்கும் என்பது தெரியுமா? ஆம், தினமும் தேனை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து, சருமத்தின் அழகை அதிகரிக்கும்.

    உங்களுக்கு தேனை எப்படி தினமும் சருமத்திற்கு பயன்படுத்துவது என்று தெரியவில்லையா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் தமிழ் போல்ட் ஸ்கை தேனை தினமும் எப்படி பயன்படுத்துவது என்றும், அப்படி பயன்படுத்தினால் என்ன நன்மை கிடைக்கும் என்றும் கொடுத்துள்ளது.


  5. #85
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    பருக்கள் இருந்தால்...

    பருக்கள் தான் சருமத்தின் அழகையே கெடுப்பது. அத்தகைய பருக்களை தேன் பயன்படுத்துவதன் மூலம் போக்கலாம். அதற்கு இரவில் படுக்கும் போது பருக்கள் உள்ள இடத்தின் மீது தேனைத் தடவிக் கொள்ள வேண்டும்.

    வேண்டுமானால் தேனுடன், சிறிது டீ-ட்ரீ ஆயில் அல்லது லாவெண்டர் ஆயில் சேர்த்து கலந்தும் தடவிக் கொள்ளலாம். இதனால் இன்னும் அதிக பலன் கிடைக்கும்.

    சிறந்த கிளின்சராக...

    தேனில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை தினமும் கழுவி வருவதும் நல்லது. இதனால் முகத்தில் போடப்பட்டுள்ள மேக்கப் முற்றிலும் நீங்குவதோடு, சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சுரைசராகவும் இது செயல்படும்.

    வறட்சியான சருமத்தைப் போக்க...

    வறட்சியான சருமம் உள்ளவர்கள், தேனுடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் வெஜிடேபிள் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், வறட்சியை நீக்கி, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள முடியும்.


  6. #86
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    வறட்சியடைந்து சொரசொரவென்று இருக்கும் உதடுகளை சரிசெய்ய டிப்ஸ்....

    குளிர்காலம் வந்தாலே அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் உதடு வறட்சி. ஏனெனில் இக்காலத்தில் மிகவும் குளிர்ச்சியான காற்று வீசுவதால், உதடுகளில் ஈரப்பசையானது விரைவில் போய்விடும்.

    அதுமட்டுமின்றி சிலர் தண்ணீர் மிகவும் குறைவாக குடிப்பதால், உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்து வறட்சியடைவதுடன், அடிக்கடி உதடுகளில் எச்சில் வைப்பதாலும் உதடுகளானது விரைவில் வறட்சியடைகிறது.

    ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்! இப்படி குளிர்காலத்தில் உதடுகளானது வறட்சியடைந்தால், உதடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டு வலியை அனுபவிக்கக்கூடும். எனவே குளிர்காலத்தில் உதடுகள் வறட்சியடையாமல் இருப்பதற்கு உதடுகளில் எப்போதும் ஈரப்பசை இருக்குமாறு செய்ய வேண்டும்.

    அதற்கு உதடுகளுக்கு ஒருசில பொருட்களைக் கொண்டு பராமரித்து சரியான பாதுகாப்பு அளிக்க வேண்டும். இங்கு உதடுகளில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கும் ஒருசில இயற்கைப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

    எண்ணெய் உதடுகளில் ஈரப்பசையை தக்க வைக்க ஒரு சிறந்த வழி உதடுகளில் எண்ணெயைத் தடவுவது தான். தினமும் உதடுகளுக்கு பலமுறை எண்ணெயைத் தடவி வருவதன் மூலம் உதடுகள் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். அதிலும் தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
    contd..



  7. #87
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கற்றாழை கற்றாழை உதடுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மிகவும் சிறந்தது என்று ஆய்வு ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் இதில் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை இருப்பதால், அவற்றை உதடுகளுக்குப் பயன்படுத்தும் போது, உதடுகளில் ஏற்பட்டுள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தும்.

    மேலும் இதன் ஜெல்லை தினமும் உதடுகளுக்கு தடவி வந்தால், அவை வறட்சியைத் தடுப்பதோடு, உதடுகளை மென்மையடையவும் செய்யும்.

    தேன் தேனில் ஈரப்பசையைத் தக்க வைக்கும் குணம் உள்ளது. எனவே இந்த தேனை கிளிசரினுடன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் போது உதடுகளில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து வர வேண்டும். வேண்டுமானால் பகலில் கூட பயன்படுத்தலாம்.

    சர்க்கரை சர்க்கரையைக் கொண்டு உதடுகளை ஸ்கரப் செய்தால், அவை உதடுகளில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றிவிடுவதோடு, உதடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை விரைவில் குணமாக்க உதவும். அதிலும் சர்க்கரையை தேனுடன் சேர்த்து கலந்து, உதடுகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் ஸ்கரப் செய்தால் இன்னும் சிறந்தது.

    ரோஸ் பெண்களுக்கு உதடுகள் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அத்தகையவர்கள் ரோஜாப்பூ இதழ்களை பாலில் சேர்த்து ஊற வைத்து, பின் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை இரவில் படுக்கும் போது உதடுகளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைக்கலாம் அல்லது பகல் நேரத்தில் லிப் பாம் போன்று பயன்படுத்தலாம்.

    மில்க் க்ரீம் மில்க் க்ரீம்மில் எண்ணெய் பசை அதிகம் இருக்கும். எனவே அதனை உதடுகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவினால், உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், அதன் சாற்றினை உதடுகளுக்கு தடவி வந்தாலோ அல்லது தினமும் அதனை உட்கொண்டு வந்தாலோ, உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.


  8. #88
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    சருமத்தின் ஆரோக்கியம் மற்றும் இயற்கை அழகு
    உலர்ந்த ஆரஞ்சு தோல் மற்றும் தயிர் ஆரஞ்சு தோலை நன்கு வெயிலில் உலர வைத்து, அதனை பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் நீரில் கழுவ வேண்டும்.

    இப்படி செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமைகளானது மறைய ஆரம்பித்து, முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவையும் நீங்கிவிடும்.

    தக்காளி, தயிர் மற்றும் ஓட்ஸ் ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் 1 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

    பால், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு சிறு பௌலில் பால், தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை தலா ஒரு டீஸ்பூன் எடுத்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் நிறம் அதிகரிப்பதுடன், சருமத்தின் மென்மை தன்மையும் அதிகரிக்கும்.

    உருளைக்கிழங்கு ஃபேஷியல் மாஸ்க் உருளைக்கிழங்கை சாறு அல்லது பேஸ்ட் செய்து, கருமையாக உள்ள இடத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம்.

    எலுமிச்சை சாறு ஃபேஷியல் எலுமிச்சை சாற்றில் சிறிது நீர் சேர்த்து கலந்து, அதனை முகம், கை, கால் போன்ற இடங்களில் தடவி 5-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முக்கியமாக இந்த ஃபேஷியல் செய்த பின்னர் வெயிலில் செல்லக்கூடாது. ஒருவேளை அப்படி சென்றால், சருமம் மேலும் கருமையாவதுடன், அரிப்புக்கள் ஏற்படும்
    contd..



  9. #89
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தக்காளி ஜூஸ் ஃபேஷியல் தக்காளி ஜூஸை சருமத்தில் தடவி நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

    மஞ்சள் ஃபேஷியல் மாஸ்க் இந்த ஃபேஷியல் செய்வதற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள், 2 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடி, சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    பின் முகத்தை நீரில் கழுவிவிட்டு, ஈரமான முகத்தில் கலந்து வைத்துள்ள கலவையை தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

    பப்பாளி ஃபேஷியல் பப்பாளியை அரைத்து அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவலாம் அல்லது பப்பாளியை சாறு எடுத்து, அதனை காட்டன் பயன்படுத்தி முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவலாம். இதனால் சருமத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு, சருமத்தின் நிறமும் அதிகரிப்பதைக் காணலாம்.

    எலுமிச்சை தோல் ஃபேஷியல் எலுமிச்சை பழத்தின் தோலை துருவி, நன்கு வெயிலில் உலர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் சிறிது எலுமிச்சை தோல் பொடியை போட்டு, அத்துடன் சிறிது பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

    பின்பு குளிர்ந்த பாலைக் கொண்டு சருமத்தை துடைத்து எடுத்து, பின் குளிர்ந்த நீரில் ஒருமுறை துடைத்து எடுக்க வேண்டும். இப்படி செய்து வந்தாலும், சருமத்தின் நிறமானது அதிகரிக்கும்.


  10. #90
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய டிப்ஸ்!

    சிலர் பார்க்க நல்ல கலராக இருந்தாலும் கை, கால் முட்டிகளில் கருப்பாக இருக்கும். நன்கு தேய்த்துக் குளித்தாலும் அந்த நிறம் மாற மாட்டேனென்கிறது என்று புலம்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எளிய தீர்வு உள்ளது.

    ஒரு கொய்யாப்பழம் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்தால் ‘ஸ்க்ரப்’ போல வரும். அத்துடன் ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறை எடுத்துக் கலந்து கை, கால், மூட்டுகளில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து நன்றாக காய்ந்ததும் கழுவவும்.

    பிறகு அந்த இடத்தில் மாய்ஸ்சரைசர் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 வாரம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பால், தேன், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கலக்கி, கருப்பான இடங்களில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.

    இதுவும் விரைவில் நல்ல பலனைத்தரும். தேவைப்பட்டால் பாதாம் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம். ஆரஞ்சு தோல் பவுடர், பால் இவற்றை சம அளவில் எடுத்து ஒன்றாக குழைத்து முட்டிகளில் பூசி 15 நிமிடத்துக்கு பிறகு கழுவி வந்தாலும் படிப்படியாக கருப்பு நிறம் மாறும். இதனை தினமும் செய்து வர வேண்டும்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter