வெயில் காலத்தில் அணியாமல் வைத்த பட்டுப்புடவை போன்ற அத்தனை துணி வகைகளையும் உயரம், குள்ளம், பருமன், ஒல்லி, கருப்பு, சிவப்பு போன்றவற்றைப் பார்த்து பொருத்தமாக தேர்வு செய்து அணியுங்கள். ஆடை, அணிகலன்கள் நமது தோற்றத்தை அழகாகக் காட்டுவதில் பெரும் பங்கு வகித்தாலும் கூட அதற்கு மேலும் ஒரு விஷயம் இருக்கிறது.
அது - ஆரோக்கியமான மனநிலை! எந்த அலங்காரத்தையும் விட அதுதான் நம்மை பளிச்செனக் காட்டுவது.
மனதை ஒருநிலைப்படுத்தி, கோபத்தை கட்டுப்படுத்தி, எப்போதும் உற்சாகமாக தோற்றமளிக்கப் பழகிக் கொள்ளுங்கள். மனம் லேசாகி விடும். மனம் மற்றும் உடல் தொடர்பாக நீங்கள் காட்டும் ஒட்டுமொத்த அக்கறைதான் உங்களின் அழகுக்கு மெருகூட்ட முடியும்.


உடலின் நிறம், வளைவு, நெளிவு, மிருதுத்தன்மை, பளபளப்பு, இவை அழகுக்கு முக்கிய காரணமாக அமைந்தாலும், அடிப்படை காரணம் என்று பார்த்தால் சுத்தம்தான். ஆரோக்கியமான உடலே அழகிய தோற்றத்தை தரும். அசுத்தமான உடல் அவலட்சணமாக தோன்றுவதுடன் அருகில் இருப்பவர்கள் நம்மை அருவருப்பாக பார்க்கவும் வழி செய்யும். ஆகவே சுத்தத்தை பேணுவது மிக முக்கியம்.


அழகான கைகளும், நகங்களும் பார்ப்பவர்களை கவரக்கூடியவை. பொதுவாக பெண்கள் முகத்துக்கு காட்டும் அக்கறையை கைகளுக்கு காட்டுவதில்லை. முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் வயதை காட்டினாலும் கைகளில் ஏற்படும் சுருக்கங்கள் அதை அதிகப்படுத்திக் காட்டுவதுடன் பெர்சனாலிட்டியையும் குறைத்துக் காட்டும். பாத்திரம் தேய்க்கும் போதும், துணி துவைக்கும் போதும் தண்ணீர், சோப்பால் கைகள் சொரசொரப்பாக மாறிவிடும். கைகளுக்கு அடிக்கடி ஒயிட் பெட்ரோலியம் ஜெல்லியை தடவிக் கொள்ளுங்கள். கைகள் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


ஆரோக்கியத்தின் கண்ணாடியாக இதுதானே முதலில் தெரிகிறது. குழந்தைக்கு தோல் பஞ்சு போல் இருக்கும். வயது ஏற ஏற இளமைக் காலத்தில் சற்று மென்மையுடன் கூடிய கடினமாக மாறிவிடும். வயதான பிறகு, மிகவும் கடினமாகி எண்ணைய் பசை இல்லாத வறண்ட தோலாக மாறி மிருதுத் தன்மையை இழந்துவிடுகிறது. இறந்த செல்கள் உடம்பில் ஒட்டிக் கொண்டிருந்தால் தோல் நோய் ஏற்படக்கூடும். தினமும் உடலை சுத்தப்படுத்தும் போது, மேல் தோலின் துவாரங்களில் அடைப்பை நீக்குவது அவசியம். தினமும் இரு முறை முகத்தை அலம்புங்கள். பாதங்களில் உள்ள அழுக்குகளை அகற்ற, இதற்காகவே விற்கப்படும் கல்லை பயன்படுத்துங்கள். வெயிலில் அலைவதை தவிருங்கள்.
குளிர்காலத்தில் தோல் வறண்டு சுருக்கம் ஏற்படும். வைட்டமின்-சி அதிகமுள்ள காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தாராளமாக தண்ணீர் குடிப்பது அவசியம். தாடையின் கீழ் சிலருக்கு சதை அதிகமாக இருக்கும். தலையை மேலும் கீழுமாக ஆட்டி (தாடை மார்பை தொடுமாறு) தினமும் 10 முறை பயிற்சி செய்யுங்கள். கழுத்து குண்டாக இருந்தால் இடது, வலது புறமாக திருப்பி தினமும் பத்து முறை செய்யுங்கள். கச்சிதமாகிவிடும்.
அந்தக் காலத்தில் இருந்தே பெண்களின் நடையழகு பற்றி அபாரமான வர்ணனைகள் வந்து கொண்டிருக்கின்றன. நடக்கின்ற அசைவிலேயே ஒருவரைப் பற்றிய நல்ல அல்லது தவறான கருத்து கணிக்கப்படுகிறது! மற்றவர்களின் கவனத்தை கவராத வண்ணம் நளினமாக ஆனால் கம்பீரம் ததும்ப நடந்து தான் பழகுங்களேன்

Similar Threads: