Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By raji rajagopal

: Beauty Tips


Discussions on ": Beauty Tips" in "Beauty Tips" forum.


  1. #1
    raji rajagopal is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    chennai
    Posts
    272

    : Beauty Tips

    மூக்கின் பராமரிப்பைப் பற்றியும், மேக்கப் பற்றியும் பார்ப்போம்.
    கிளி, குடை மிளகாய், சப்பை, கோணல், கூர்மை இப்படி பல வார்த்தைகளோடு சேர்த்து மூக்கின் தோற்றத்தினையும், அளவினையும் குறிப்பிடுகிறோம். ஆனால் எப்படிப்பட்ட ஷேப் உள்ள மூக்கினையும் ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப் செய்து கொண்டால் ஷேப்பைப் பற்றிய கவலை தேவையில்லை. மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது. ரெகுலரான பேஷியல் கூட போதும். அதுவும் முடியாவிட்டால் வீட்டில் செய்து கொள்ளும் சின்ன ட்ரீட்மெண்ட்டே போதும். மிக எளிதான மூக்குக்கான அழகுக் குறிப்பினை பார்ப்போம்.
    மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும். இது இரண்டுக்குமே முறையான கவனிப்பு அவசியம். பிளாக் ஹெட்ஸுடன் இருக்கும் மூக்கு, அருகில் வந்து பார்ப்பவருக்கு நிச்சயம் ஒரு வித அசூசையை ஏற்படுத்தும். கடைகளில் விறகும் பிளாக் ஹெட்ஸ் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ் அதிக நாட்களாக இருக்கும் பிளாக் ஹெட்ஸை முழுதுமாக நீக்காது. ஏனென்றால் நாள்பட்ட பிளாக் ஹெட்ஸ் மிகவும் அழுத்தமாக இருக்கும். எளிதாக ஸ்ட்ரைப்ஸ் மூலம் நீக்க முடியாது. எனவே ஸ்ட்ரைப்ஸை (ஒரு முறை பிளாக் ஹெட்ஸை முழுதும் நீக்கிவிட்டு) ரெகுலர் பராமரிப்புக்கு மாதம் ஒரு முறை என்று உபயோகிக்கலாம்.
    நாள்பட்ட பிளாக் ஹெட்ஸுக்கு மிகவும் சரியான ட்ரீட்மெண்ட், ஆவி பிடித்தல்தான். வீட்டிலேயே பேஷியலுக்கு செய்வதுபோல் எண்ணெய்ப்பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும். மூக்கின் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்க வாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும்வரை ஆவி பிடிக்க வேண்டும். இப்போது வெளிச்சமான இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும்.
    கிடைக்காவிட்டால் ஸ்டெரிலைஸ் செய்த டீஸ்பூனின் முனை கொண்டு நீக்கலாம்) மெதுவாக அழுத்த வேண்டும். வெளியே வேரோடு வரும் பிளாக் ஹெட்ஸை டிஷ்யூவால் துடைத்து எடுத்துவிடுங்கள். இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுதுமாக நீக்கி விடலாம். இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும். இந்த ட்ரீட்மெண்ட் செய்யும் முன்பு முகத்திற்கு ஸ்க்ரப் போடுவதென்றாலும் போடலாம். ஆனால் ட்ரீட்மெண்ட் செய்த பிறகு ஸ்க்ரப்பிங் கூடாது.
    Noseரெகுலராக வாரம் ஒரு முறை முகத்தினை ஸ்க்ரப் செய்யும்போது மூக்கு பகுதியில், பக்கவாட்டில் மசாஜ் செய்தாலே ஒயிட் ஹெட்ஸ் வராது. மூக்கின் உள்ளே ஒரு சிலருக்கு அதிகமாக முடிகள் இருந்து, வெளியில் லேசாக எட்டிப் பார்க்கும். இதுவும் அழகை கெடுக்கிற விஷயம்தான். சின்னதாக புருவத்தை ட்ரிம் செய்ய உதவும் கத்தரிக்கோலை கொண்டு லேசாக ட்ரிம் செய்துவிடலாம். இதற்கென்று பிரத்யேகமான கத்தரிக்கோலும் கடைகளில் கிடைக்கும். இந்த தொல்லைகள் பொதுவாக 40 வயதை தாண்டியவர்களுக்கு அதிகம் இருக்கும். அதிக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும், எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்களுக்கும் பிளாக் ஹெட்ஸ் அதிகம் காணப்படும். நார்மல், ட்ரை ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சணை குறைவு.
    மூக்கு குத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலிலேயே எந்த இடத்தில், எந்த பக்கத்தில் மூக்கை குத்த வேண்டும் என்று சரியாக மார்க் செய்து கொண்டு செயல்படுவது முக்கியம். காது போல அல்லாமல், தவறான இடத்தில் துளை போட்டுவிட்டால் முகத்தின் அழகை பாதிக்கும். துளையை மறைப்பதும் மிகவும் கடினம். மூக்கு குத்தப் பிடிக்காதவர்கள் கல்யாணத்துக்கு என்று ட்ரெடிஷனல் மேக்கப் செய்யும்போது மூக்கில் கல் ஸ்டிக்கர் கூட ஒட்டிக் கொள்ளலாம். மூக்கு குத்தாமல் செய்யப்படும் ட்ரெடிஷனல் அலங்காரங்கள் ஒரு வித முழுமையடையாததுபோல இருக்கும்.
    அதனால் கல்யாணத்துக்கு மேக்கப் செய்பவர்கள் மிகவும் (மூக்குத்தி போடப் பிடிக்காதவர்கள்) ட்ரெடிஷனலான மேக்கப்பைத் தவிர்த்து, கொஞ்சம் மாடர்ன் லுக்கில் மேக்கப் செய்தால் அந்த குறை தெரியாது. அதே போல் கல்யாணங்களில் புல்லாக்கு (நரசிம்மா படத்தில் " ரா ரா நந்தலாலா" பாட்டு ஆரம்பத்தில் ரம்யா கிருஷ்ணன் போட்டிருப்பதுதான் புல்லாக்கு. அந்த அளவாவது மூக்கிற்கும் உதட்டிற்கும் இடைவெளி தேவை) போடும்போது நமக்கு அதற்கேற்ற முக அமைப்பு இருக்கிறதா என்று பார்த்து உபயோகிக்க வேண்டும். சரியான முக அமைப்பு (மூக்கிற்கும் வாய்க்கும் இடையே உள்ள தூரம்) இல்லாவிட்டால் மூக்கு ஒழுகுவது போல தோற்றம் ஏற்பட்டுவிடும்.
    மூக்கிற்கு மேக்கப் போடும்போது நமது மூக்கு ஷேப்பை கவனித்து அதற்கு தகுந்தாற்போல் மேக்கப் செய்ய வேண்டும். சில டெக்னிக்குகளை பொதுவாக இங்கே சொல்கிறேன். சப்பையான மூக்கு உள்ளவர்கள் முகத்திற்கு பவுண்டேஷன் மற்றும் பவுடர் அப்ளை செய்த பிறகு, முக நிறத்தைவிட கொஞ்சம் ஒரு ஷேடு குறைவான டார்க் நிறத்தில் உள்ள ரூஜை மூக்கின் இரு ஓரங்களிலும், அதாவது இரு புருவத்தின் ஆரம்பங்களிலிருந்தும் மூக்கு அடிவரை, நேராக கோடு போடுவது தடவ வேண்டும். இப்போது நடுபக்கம் மட்டும் லைட்டாகவும் ஓரங்கள் பளிச்சென்று தெரியாதது போலவும் இருக்கும். சப்பை மூக்கு என்று பார்த்தால் தெரியாது. இதே போல் ஒரு பக்கம் சிறிது அகலமாகவும், ஒரு பக்கம் சரியாகவும் உள்ள மூக்கு தோற்றமுள்ளவர்கள் ஒரு பக்கம் மட்டும் இதே போல் டார்க் கலரை அப்ளை செய்தால் நன்றாக இருக்கும். பொதுவாக இந்த வகை அப்ளிகேஷனை நார்மலான மூக்கு ஷேப் உள்ளவர்களும் செய்து கொள்ளலாம். மூக்கு அழகாக தெரியும்.
    இப்படி டார்க் ஷேட் ரூஜைக் கொண்டே மூக்கின் ஷேப்பினை அழகாக்கிவிட முடியும். ஆனால் இந்த வித மேக்கப் போடும்போது அடிக்கடி செய்து பார்த்து பழகிக் கொள்வது அவசியம். புதிதாக எங்கேயாவது செல்லும்போது திடீரென்று ட்ரை செய்து பார்ப்பது பல சமயங்களில் காலை வாரிவிடும். மேக்கப் செய்து பார்த்து, போட்டோ எடுத்துப் பார்த்தால் நமது மேக்கப்பின் குறைகளை நாமே கண்டுபிடித்துவிடலாம். ரூஜ் பளபளப்பில்லாத மேட் லுக் ரூஜாக இருப்பது அவசியம். ஜெல் டைப் இதற்கு சரி வராது.









    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    raji rajagopal is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    chennai
    Posts
    272

    Re: : Beauty Tips

    டூ-வீலரில் செல்லும் பெண்களின் கருமையை போக்கும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
    எப்போதும் டூ-வீலரில் பறக்கும் அவசரப் பறவையா நீங்கள் இந்த வெயில், உங்களின் மென்மையான முகம், கை, பாதம் போன்ற பகுதிகளை பதம் பார்த்துவிடுமே... என்ன செய்யப் போகிறீர்கள்? இதோ, உங்கள் சருமப் பாதுகாப்புக்கு ஒரு விசேஷ குளியல் பவுடர்.
    எலுமிச்சை தோல்-50 கிராம்,
    கஸ்தூரி மஞ்சள்-100 கிராம்,
    கசகசா- 50 கிராம்,
    பயத்தம் பருப்பு- கால் கிலோ...
    இவற்றை மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை தினமும் தேய்த்துக் குளித்து வாருங்கள். `வெயில் அடிச்சா எனக்கென்ன' என்று உங்கள் சருமம் கொக்கரிக்கும். கூடவே, புதிய பொலிவோடு மினுமினுக்கும்.
    டூ வீலரில் போனால் மட்டுமா? ரோட்டில் நடந்தாலே தூசு படிந்து தோல் மங்கலாகிவிடுகிறது. `எவ்வளவு அழகா இருந்த நான் இப்படி அழுக்கா ஆயிட்டேன்' என்று கண்ணாடியை பார்த்து மனம் வெம்புபவர்களுக்கு, எலுமிச்சை தரும் பளிச் `பேக்' இது...
    கடலை மாவு- 6 டீஸ்பூன்,
    முல்தானி மட்டி- அரை டீஸ்பூன்,
    எலுமிச்சைச் சாறு- 4 டீஸ்பூன்...
    இவற்றை நன்றாகக் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். பிறகு, முகம் முதல் பாதம் வரை பூசி பத்து நிமிடங்கள் கழித்து குளியுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த `பேக்'கை போட்டுப் பாருங்கள். சருமத்தை சுத்தமாக்குவதுடன், இழந்த பொலிவை விரைவிலேயே மீட்டுத் தரும்.










    rsakthi1974 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter