Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree25Likes

அழகிய அழகு குறிப்புகள் - Beauty Tips


Discussions on "அழகிய அழகு குறிப்புகள் - Beauty Tips" in "Beauty Tips" forum.


  1. #21
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகிய அழகு குறிப்புகள் - Beauty Tips

    சிறிது வெண்ணெய், பாதாம் பருப்பு ஒன்று, சிறிது எலுமிச்சை சாறு காலந்து நன்கு அரைக்கவும். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடம் ஊற விட வேண்டும். பின்னர் பஞ்சை பாலில் நனைத்து அதை முகத்தைச் சுற்றி தடவி, பின்னர் பன்னீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இரத்த ஓட்டம் சீராகும்.
    ---------------------------------------------------------------------------------------------------------------------
    வெள்ளரிக்காயை இடித்து சாறு எடுத்து சிறிது பாலுடன் கலந்து பஞ்சால் நனைத்து முகத்தில் கீழிருந்து மேலாகத் தேய்த்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் போய் முகம் ஒளி பெறும்.
    ------------------------------------------------------------------------------------------------------------------
    கை முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க எலுமிச்சை சாறை தேய்த்து சோப்புப் போட்டுக் குளித்தால் நாளுக்கு நாள் கறுப்பு நிறம் மாறி விடும்.
    -----------------------------------------------------------------------------------------------------------------
    முகம் கழுவும் கிரீமை (பேஸ் வாஸ் கிரீம்-Face wash Cream) முகத்தில் நுரை வரும் அளவிற்கு தேய்த்து பிறகு ஒரு தேக்கரண்டி சர்க்கரையை எடுத்து முகத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள வெண் புள்ளிகள் (வொயிட் ஹெட்ஸ்), கரும் புள்ளிகள் (பிளாக் ஹெட்ஸ்) எல்லாம் நீங்கி விடும். அதோடு முகத்தில் இருக்கும் நுண் துவாரங்களில் அடைத்திருக்கிற அழுக்கும் வெளியேறி முகம் புத்தொளி பெறும்.
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    தலைக்கு ஹென்னா
    நெல்லிக்காய் பொடி, மருதாணி, டீ டிக்காஷன் அனைத்தையும் தண்ணீர் சேர்த்து கலந்து இரும்பு கடாயில் முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும். மறுநாள் இந்த கலவையோடு முட்டையின் வெள்ளைக்கரு, தயிர் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க வேண்டும். தயிர் கலப்பதினால் பொடுகு தொல்லை இல்லாமல் இருக்கும். ஹென்னா போடும் நாள் மட்டும் முடிக்கு ஷாம்பு போடாமல் வெறும் தண்ணீரில் அலசினால் தான் அதன் சாரம் தலையில் தங்கும்.



    Sponsored Links

  2. #22
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகிய அழகு குறிப்புகள் - Beauty Tips

    தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
    ---------------------------------------------------------------------------------------------------------------
    ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
    --------------------------------------------------------------------------------------------------------------
    முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
    --------------------------------------------------------------------------------------------------------------
    பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
    ---------------------------------------------------------------------------------------------------------------
    நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்
    .


  3. #23
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகிய அழகு குறிப்புகள் - Beauty Tips


    தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
    -----------------------------------------------------------------------------------------------------------------
    வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
    -----------------------------------------------------------------------------------------------------------------
    இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
    ------------------------------------------------------------------------------------------------------------------
    கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும். ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
    ----------------------------------------------------------------------------
    முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
    --------------------------------------------------------------------------------------------------------------------
    மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.
    ----------------------------------------------------------------------------------------------------------------
    பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.



  4. #24
    janu23 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    New Delhi
    Posts
    323

    Re: அழகிய அழகு குறிப்புகள் - Beauty Tips

    Thanks for sharing the useful tips.

    chan likes this.

  5. #25
    priyankasubu is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    coimbatore
    Posts
    551

    Re: அழகிய அழகு குறிப்புகள் - Beauty Tips

    useful tips sis......

    chan likes this.

  6. #26
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகிய அழகு குறிப்புகள் - Beauty Tips

    பட்டுபோன்ற மென்மையான முகத்தைப் பெற அழகிய குறிப்பு...



    பட்டுபோன்ற மென்மையான முகத்தைப் பெற அழகிய குறிப்பு...
    சிறிதளவு பாசிப் பருப்பை தேங்காய் பாலில் ஊறவைத்து மைபோல் அரைத்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்தபின் முகத்தைக் கழுவி வந்தால் உங்கள் முகம் பட்டுபோன்று மென்மையாக தோற்றமளிக்கும்.

    · சிலருக்கு அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகள் முகத்தில் இருந்துகொண்டேயிருக்கும். இவர்கள் தினமும் புதினா இலையின் சாற்றை அந்த தழும்புகளின் மீது தடவி வந்தால் தழும்புகள் விரைவில் மாறும்




  7. #27
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகிய அழகு குறிப்புகள் - Beauty Tips

    முகம் பளபளக்க அழகோ... அழகு...
    குளிர்ந்த நீர் - 1/2 டம்ளர்

    பசும் பால் - 50 மி.லி.

    இரண்டையும் ஒன்றாக கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் பூசவும். அரைமணி நேரம் சென்றதும் முகத்தை நன்றாக மென்மையாக கழுவவும். சோப், கிரீம்களை பயன்படுத்தக்கூடாது. பருத்தியினால் ஆன துண்டை வைத்து முகத்தைத் துடைக்க வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளக்கும்.



  8. #28
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகிய அழகு குறிப்புகள் - Beauty Tips

    சருமம் பளபளக்க ...அழகிய குறிப்புகள்...
    பச்சைப் பயறு - 250 கிராம்
    மஞ்சள் - 100 கிராம்
    வசம்பு - 10 கிராம்

    எடுத்து அரைத்து, குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக தேய்த்து குளித்து வந்தால் சருமத்தின் வறட்சி குறைந்து பளபளப்புடன் காட்சியளிக்கும்.



  9. #29
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகிய அழகு குறிப்புகள் - Beauty Tips

    முகத்தில் தோன்றும் கருமை நிறம்நீங்க

    முகத்தில் ஆங்காங்கே கருமை படர்ந்து இருக்கும். இதனை மங்கு என்பார்கள். இந்த கருமை நிறத்தை போக்க

    பசும்பால் - 2 ஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் இவற்றை ஒன்றாகக் கலந்தால் திரிந்துவிடும். அப்போது மேலே மிதக்கும் ஏடுகளை குழைத்து எடுத்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவி வந்தால் முகத்தில் தோன்றும் கருமை நிறம் மாறி முகம்பொலிவுபெறும்


    rsakthi1974 likes this.

  10. #30
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகிய அழகு குறிப்புகள் - Beauty Tips

    ஐம்பது வயதை நெருங்கும்போது, தோல் வறண்டுவிடும். அந்த சமயத்தில், உடம்பை எண்ணெய்ப் பசையுடன் வைத்திருப்பது மிக அவசியம். உங்கள் முகம், மாசு மரு இல்லாத பளிங்கு போல் பிரகாசிக்க இதோ சில சிகிச்சை முறைகள்...

    கசகசா 50 கிராம், வெள்ளரி விதை 100 கிராம் இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள். அரை கிலோ நல்லெண்ணெயில் இந்த விழுதைப் போட்டு அடுப்பை ‘சிம்’மில் வைத்து கொதிக்க விடுங்கள். எண்ணெய் தீயாத அளவுக்கு பார்த்து கிளறி இறக்கி மூடி வையுங்கள். 3 வாரம் கழித்து எண்ணெய் நன்றாக தெளிந்துவிடும். இந்த எண்ணெயை முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்துக் குளித்தால் முகம் பளிச்சென்று ஆகும். தோல் மிருதுவாகி, கண்ணின் கருவளையமும் மறைந்துவிடும்.

    உலர்ந்த பொன் ஆவாரம்பூவை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடர் ஒரு டீஸ்பூனுடன், கடலை மாவு அரை டீஸ்பூன் கலந்து முகத்துக்கு ‘பேக்’ போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். தினமும் இதைச் செய்துவர, 15 நாட்களில் கன்னத்தில் ஏற்பட்ட கருமையும், புள்ளிகளும் மறைந்து முகம் பொலிவுடன் காணப்படும்.

    இரவு தூங்கப் போகும் முன், 1 டீஸ்பூன் முல்தானிமட்டி பவுடரை பாலில் கலந்து, கண்ணாடியினால் ஏற்பட்ட தழும்பு பகுதியில் தடவுங்கள். காலையில் முகத்தை கழுவுங்கள். இரண்டே வாரத்தில் கறுப்புத் தடம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

    மிருதுத்தன்மையை கொடுப்பதில் கீரை ஜூஸ§க்கு ஈடு இணையில்லை. துளசி, வெந்தயகீரை, கற்பூரவல்லி இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து, வாரம் ஒரு முறை 5, 6 இலை களை கைகளால் கசக்கி, அந்த சாறை முகத்தில் தடவுங்கள். முகம் மிருதுவாகி, பிரகாசிக்கும்.'



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter