Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine January! | All Issues

User Tag List

மெஹந்தி அலர்ஜி!


Discussions on "மெஹந்தி அலர்ஜி!" in "Beauty" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,340

    மெஹந்தி அலர்ஜி!

    மெஹந்தி மோகம் அதிகரிப்பு : செயற்கை அலங்காரத்தால் நோய் உண்டாகும் அபாயம்!



    பண்டைய காலம் முதல் பெண்கள் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் தங்களை அலங்கரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம். வீடுகளுக்கு கோலமிட்டு அலங்கரிப்பது போல், தற்போது வரை தங்களது கைகளை மருதாணியிட்டு அலங்கரித்து வருகின்றனர். மருதாணிக்கு இயற்கையாகவே பித்தத்தை குறைக்கும் தன்மை உள்ளது. ஆனால், அறிவியல் உலகின் வளர்ச்சியின் காரணமாக தற்போது மருதாணியின் இடத்தை செயற்கை மெஹந்தி ஆக்கிரமித்துள்ளது. ஆனால், கைகள் சிவப்படைவதற்காக இந்த செயற்கை வண்ண மெஹந்தியில் வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதால் தற்போது கைகளில் அலர்ஜி ஏற்படுகிறது.

    இதுகுறித்து அழகுக்கலை நிபுணர்கள் கூறுகையில், ‘தற்போது இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள் அதிகம் விரும்புவது மெஹந்தியைத்தான். மெஹந்தியில் பல வகைகள் உள்ளன. இதில் அரபிக் மற்றும் ராஜஸ்தான் வகை அதிக பிரசித்தி பெற்றவை. பாகிஸ்தானி மெஹந்தி, கிளிட்டர் மெஹந்தி போன்றவையும் இன்றைய இளைய தலைமுறையிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மெல்லிய கோடுகளில், பல்வேறு டிசைன்களில் போடப்படுகிறது. வட மாநிலங்களில் மட்டுமே பிரசித்தி பெற்றதாக விளங்கி வந்த இந்த மெஹந்தி கலாச்சாரம், தற்போது தமிழகத்தில் பெருநகரங்களில் மட்டுமல்லாது, கிராமங்களில் உள்ள இளம்பெண்களையும் கவர்ந்து இழுத்து விட்டது.
    இதுகுறித்து அரசு சித்த மருத்துவர் கூறுகையில், ‘இயற்கையில் கிடைக்கும் மருதாணி மருத்துவ குணம் கொண்டது. உடல் சூட்டை குறைக்கிறது. கண் எரிச்சலை குறைக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல், முடி உதிர்தல் பிரச்னையை போக்கும். ஆனால், செயற்கையாக தயாரிக்கப்படும் மெஹந்தியில் இத்தகைய நலன்கள் கிடைக்காது. மாறாக சில தரம் குறைந்த மெஹந்தியை பயன்படுத்தினால் தோல்நோய் மற்றும் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது’என்றார்.


    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails மெஹந்தி அலர்ஜி!-16-mehndi-designs-2013.preview.jpg  
    Last edited by ahilanlaks; 12th Sep 2016 at 10:36 PM.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter