Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 3 Post By jayakalaiselvi
  • 3 Post By sumitra

The hair dye allergy you should know about - ஹேர் டை : ஆபத்தாகும் அழகுப் பொருள்


Discussions on "The hair dye allergy you should know about - ஹேர் டை : ஆபத்தாகும் அழகுப் பொருள்" in "Beauty" forum.


  1. #1
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    The hair dye allergy you should know about - ஹேர் டை : ஆபத்தாகும் அழகுப் பொருள்


    15 வயதான கர்லா ஹேரிஸ் க்கு நடனப் போட்டியில் கலந்து கொள்ளும் நாள் நெருங்கிக் கொண்டே இருக்கிறது. இரண்டொரு நாளில் நடனப் போட்டி. போட்டியில் அழகாய் தெரிய வேண்டும் எனும் உந்துதலால் தனது அழகிய நேரான கூந்தலுக்கு கொஞ்சம் வர்ணம் சேர்க்க விரும்புகிறாள் சிறுமி கர்லா.
    லோரியல் நிறுவனத்தின் தயாரிப்பான கூந்தல் நிறமியை வாங்கி வருகிறாள். லோரியல் என்பது பாரிசை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் உலகிலேயே மிகப் பெரிய அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
    வீட்டுக்கு வந்து, தனது தலையில் கொஞ்சமாய் தலையில் அந்த ஹேர் டை யை தேய்க்கிறாள். கொஞ்சம் எரிச்சல், அரிப்பு வருவது போலத் தோன்றுகிறது. ஏன் அரிக்கிறது என யோசித்துக் கொண்டே தனது வேலையை முடித்துக் கொள்கிறாள்.
    இரவில் நிம்மதியாய் தூங்கி, மறுநாள் காலையில் உற்சாகமாய் எழும்பிய சிறுமி, தனது பல வண்ணக் கூந்தல் எப்படி மிளிர்கிறது என கண்ணாடியில் பார்த்தபோது அதிர்ந்து போகிறாள். அவளுடைய முகம் ஒரு பூசணிக்காய் போல வீங்கியிருக்கிறது. !!
    அழகு சாதனப் பொருட்கள் ஆபத்தையும் தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கின்றன என்பதற்கான ஒரு சிறு உதாரணம் தான் மேற்கூறிய இந்த நிகழ்வு.
    அந்த ஹேர் டை யில் நச்சுப் பொருளான PPD எனும் வேதியல் பொருள் இருந்ததே இந்த ஒவ்வாமைக்குக் காரணம் என்பது பின்னர் தெரிய வந்திருக்கிறது. இந்த பொருள் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.


    உலகின் மாபெரும் நிறுவனத்தின் பொருட்களிலேயே இந்த விஷத் தன்மை இருக்கிறதெனில் மற்ற பொருட்களைப் பற்றி கேட்கவே வேண்டாம் என அதிர்ந்து போயிருக்கின்றனர் விஷயம் கேள்விப்பட்டோர்.
    வெறுமனே வீக்கம் வந்துவிட்டு விலகிப் போகும் சமாச்சாரம் என்று இதை தள்ளி விட முடியாது. இந்த வீக்கம் பெரிதாகி நாக்கு, தொண்டை போன்றவை அளவுக்கு அதிகமாகி வீங்கி விட்டால் உயிருக்கே ஆபத்து என்பது அச்சுறுத்தும் உண்மையாகும்.
    விஷப் பொருள் இருக்கிறது என்று தெரிந்தும் அதை அனுமதிப்பது என்பது அந்த நிறுவனத்தை நம்பும் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைக்கும் செயல். இனிமேல் என் வாழ்நாளில் ஹேர் டை எனும் பேச்சுக்கே இடமில்லை என கலங்கிப் போய் கூறுகிறாள் சிறுமி.
    ஹேர் டை உபயோகிப்பவர்களில் 7.1 விழுக்காடு மக்களுக்கு ஏதேனும் எதிர் விளைவுகள் ஏற்படுவதாக 2007ம் ஆண்டைய புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.
    இந்த அழகுப் பொருட்களிலெல்லாம் எந்த அச்சுறுத்தலும் இல்லை, மக்கள் இதைத் தைரியமாகப் பயன்படுத்தலாம் என லோரியல் நிறுவனம் தனது மறுப்பில் தெரிவித்துள்ளது.
    அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழும் நிகழ்வுகளைப் பொதுமைப் படுத்தக் கூடாது என்பது அவர்களின் வாதம். எனில் எதையும் உதாசீனப் படுத்தக் கூடாது என்பது நமது விருப்பம் !


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails The hair dye allergy you should know about  - ஹேர் டை : ஆபத்தாகும் அழகுப் பொருள்-image.jpg   The hair dye allergy you should know about  - ஹேர் டை : ஆபத்தாகும் அழகுப் பொருள்-image.jpg  
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: The hair dye allergy you should know about - ஹேர் டை : ஆபத்தாகும் அழகுப் பொருள

    We should be very much careful while using these products! We should apply it in a small area preferably behind your ears or any other place you feel it is not important and wait for reasonable time to check whether any skin problems are coming out due to the application of these products to our skin. If there is no problem, then you should use it to your head very cautiously and little quantity only. Then you have to wait and see. If there is no problem only you have to go for applying over your head fully. That much precaution you should take even though the manufacturer has not recommended any test application or precaution message printed on the packet. Thank you!


  3. #3
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: The hair dye allergy you should know about - ஹேர் டை : ஆபத்தாகும் அழகுப் பொருள&am

    Quote Originally Posted by sumitra View Post
    We should be very much careful while using these products! We should apply it in a small area preferably behind your ears or any other place you feel it is not important and wait for reasonable time to check whether any skin problems are coming out due to the application of these products to our skin. If there is no problem, then you should use it to your head very cautiously and little quantity only. Then you have to wait and see. If there is no problem only you have to go for applying over your head fully. That much precaution you should take even though the manufacturer has not recommended any test application or precaution message printed on the packet. Thank you!
    thank u very much for the added info sumithra sis.....

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  4. #4
    Suasin is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Kuwait
    Posts
    52

    Re: The hair dye allergy you should know about - ஹேர் டை : ஆபத்தாகும் அழகுப் பொருள

    I heard a popular politician died cos of haircolor poisoning.. Repeated use damaged his nervous system. Hair color, black henna, dye, all are extremely dangerous.


  5. #5
    srirenga is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    tiruvarur
    Posts
    220

    Re: The hair dye allergy you should know about - ஹேர் டை : ஆபத்தாகும் அழகுப் பொருள

    thanksfor sharing


  6. #6
    srirenga is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    tiruvarur
    Posts
    220

    Re: The hair dye allergy you should know about - ஹேர் டை : ஆபத்தாகும் அழகுப் பொருள&am

    thanks for sharing


  7. #7
    kuttypaiya is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    USA
    Posts
    202

    Re: The hair dye allergy you should know about - ஹேர் டை : ஆபத்தாகும் அழகுப் பொருள

    Thanks for the Share!!!


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter