காந்தி தாத்தாவிற்கு பிறந்த நாள் நல்வாழ்&
Discuss here on காந்தி தாத்தாவிற்கு பிறந்த நாள் நல்வாழ்& within the Birthdays and Anniversaries forums, part of the Wishes forum; எங்கள் பெருமைக்குரிய காந்தி தாத்தாவிற்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். காந்தி தாத்தா நம் பாரதம் பல துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது. பல மேலை நாடுகளின் வணிக இலக்கு ...
-
2nd Oct 2011, 11:06 AM #1
காந்தி தாத்தாவிற்கு பிறந்த நாள் நல்வாழ்&
எங்கள் பெருமைக்குரிய காந்தி தாத்தாவிற்கு,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
காந்தி தாத்தா நம் பாரதம் பல துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
பல மேலை நாடுகளின் வணிக இலக்கு நம் பாரதம் தான்..
அது சரி என்றுமே நம் பாரதம் இலக்காக தானே இருந்திருக்கிறது.
அன்று ஆள்வதற்கு, இன்று வணிகத்திற்கு.
நம் நாட்டு மைந்தர்கள் பேர் சொல்லும் மைந்தர்களாக இருக்கிறார்கள்.
நான் இந்தியன் என்று அயல் நாட்டில் வேலை செய்துக்கொண்டு.
அடுப்பில் தீ மூட்டிக்கொண்டிருந்த பெண்கள் என்ற காலம் போய்
விண்வெளியில் தீ மூட்டி அதில் கருகிய கல்பனா சாவ்லா
நம் இந்திய பெண் தான் தாத்தா
ஆண்களே காவல் காக்க வேண்டும் என்ற காலம் போய்
நிகராய் நின்று அநியாயங்களை தட்டி கேட்கும் கிரண் பேடி
நம் இந்திய பெண் தான் தாத்தா
வீட்டிற்க்குள் பல்லாங்குழி மட்டுமே ஆடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த காலம் போய்
வீதியில் நின்று வெற்றி வாகை சூடும் சானியாவும் செய்னாவும்
நம் இந்திய பெண்கள் தான் தாத்தா.
பெண்கள் விஷயத்தில் நீங்கள் எதிர்பார்த்த சுதந்திரம் இன்று பல துறைகளில் தலை இடத்தை பிடித்துள்ளது.
சரி நாட்டு சுதந்திரம் விஷயத்தில்... நேர்மை விஷயத்தில்... அஹிம்சை விஷயத்தில்..
சரி விடுங்க தாத்தா இன்று உங்கள் பிறந்த நாள், நீங்கள் மகிழ்வோடு இருக்க வேண்டும்..
அதனால் தான் நீங்கள் உவகை கொள்ளும் விஷயங்கள் மட்டுமே சொல்லியிருக்கிறேன்.
மற்றவை நம் அடுத்த கடிதத்தில் பாக்கலாம்.
பூவுடல் நம்மை விட்டு சென்றாலும்,
பூமியில் நினைவுகளை விட்டு சென்றிருக்கும்,
நம் தேசப்பிதாவின் புகழை, நாளைய
சமுதாயத்திடம் எடுத்து செல்வது நம் கடமையன்றோ...
தோழிகளே,
நம் காந்தி தாத்தாவிற்கு தங்கள் வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அனுLast edited by Anupriya86; 2nd Oct 2011 at 11:16 AM.
-
2nd Oct 2011, 11:20 AM #2
Re: காந்தி தாத்தாவிற்கு பிறந்த நாள் நல்வாழ
Thinking outside the box!!! Xllent!!!
nlakshmi.
Every closed eye is not sleeping, and every open eye is not seeing.-Bill Cosby
-
2nd Oct 2011, 07:54 PM #3
Re: காந்தி தாத்தாவிற்கு பிறந்த நாள் நல்வாழ
நன்றி லக்ஷ்மி,
தங்கள் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் பதிவு செய்யுங்கள்.
அனு
-
2nd Oct 2011, 09:45 PM #4
Re: காந்தி தாத்தாவிற்கு பிறந்த நாள் நல்வாழ
அன்புள்ள அனு!
நம்ம காந்தி தாத்தாவுக்கு அழகா....அருமையா அவர் சந்தோஷ படர விஷயமா சொல்லி பிறந்த நாள் வாழ்த்து சொல்லிட்ட இதை விட அழகாவா நாங்க சொல்லிட போறோம்?
இருந்தாலும் பரவாயில்லை அப்பறம் நான் வாழ்த்து சொல்லலன்னு காந்தி தாத்தா அழ ஆரம்பிச்சுட்ட ரூபா நோட்டு எல்லாம் நனைஞ்சு போயிடும் அதனால இதோ என்னோட வாழ்த்தையும் வாங்கிகோங்க தாத்தா.
தயவு செஞ்சு உங்க இறந்த நாளன்னைக்கு இந்த பக்கம் (அதான் இந்த அனு இருக்குற பக்கம்) வந்துடாதீங்க..... அப்பறம் நாட்ல நடக்கற உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை எல்லாம் லிஸ்ட் போட்ருவா. உங்களுக்கு கஷ்டமா போய் நீங்க அழ ஆரம்பிச்சுடுவீங்க ரூபா நோட்டு நனைஞ்சிடும் (ஆகா மொத்தம் எங்களுக்கு அது நானா இருக்கறது தான் முக்கியம்)
என்னஅனு நான் சொன்னது சரி தானே?
With Regards
Yamini
Expectation is the only devil which smiles at you when you feed it daily!
http://www.penmai.com/forums/poems/6567-a.html
-
3rd Oct 2011, 08:10 PM #5
Re: காந்தி தாத்தாவிற்கு பிறந்த நாள் நல்வாழ
அடக்கடவுளே..
ஒரு த்ரெட் தேசபக்தி ரேஞ்சுக்கு ஆரம்பிச்சா இப்படி காமெடி ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டியே யாம்ஸ்..
பாரு காந்தி தாத்தா இன்னைக்கு கனவுல வந்து உன்னை தடியால அடிப்பாரு..
அனு
Similar Threads
-
25-வது நாளைத் தொட்ட அஜித்தின் ‘மங்காத்தா’
By Filmics in forum MoviesReplies: 0Last Post: 24th Sep 2011, 12:02 PM -
பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவ&
By Kavibhanu in forum Astrology, Vastu etc.Replies: 19Last Post: 21st Sep 2011, 08:06 PM -
பிரியங்கா, பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
By Anupriya86 in forum Birthdays and AnniversariesReplies: 23Last Post: 13th Sep 2011, 11:46 AM -
எத்தனை மலர்கள் - கொண்டுவந்தது & சாற்றியது?
By sumathisrini in forum Interesting FactsReplies: 142Last Post: 26th Aug 2011, 05:39 PM -
அந்த நாலு வார்த்தைக்கு நன்றி!
By lathabaiju in forum Stories & NovelsReplies: 3Last Post: 17th Aug 2011, 03:34 PM


1Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks