View RSS Feed

வானவில் பெண்

பூவுலகம் காண வாராய் மகளே

Rate this Entry
by , 21st May 2012 at 07:24 PM (10149 Views)
எல்லோரையும் மயக்கும் குளிர்ச்சியான பின் மாலை மாலைப்பொழுது அது, இனிமைகளை குத்தகை எடுத்த அழகான, மிதமான பொழுதும் கூட.. துபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு பயணித்துக்கொண்டிருந்தேன்.

என்னுடன் பயணித்தவர்கள் அந்த கால நிலையையும், அதன் அழகையும் தங்கள் கண்களில் பருகி, உதடுகளில் புன்னகையாக வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர். ஏனோ என் மனம் அதில் லயிக்காமல், ஒரு வித பயம், பதட்டம், சந்தோஷம் என உணர்ச்சிகளின் கலவையாக குழம்பிக்கொண்டிருந்தது. ஏனென்றால் என் சகோதரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அன்று அதிகாலையில் அனுமதிக்கபட்டிருந்தாள். பத்து மாத காத்திருப்பின் பலனாக தேவதையவள் சுக பிரசவத்தில் வீடு வந்தாள். நாங்கள் மொத்தம் பன்னிரண்டு பேத்திகள் எங்கள் குடும்பத்தில், ஒவ்வொருவரையும் தேவதையாகவே கொண்டாடினார்கள் எங்கள் வீட்டில். ஆனாலும் ஒரு மூலையில் சமூகத்திற்காக, பெரியவர்களின் திருப்த்திக்காக சித்தி, அத்தைகள் எப்போதாவது ஆண் வாரிசிற்காக வேண்டிக் கொண்டுதானிருந்தார்கள்.

என் அக்காவின் குட்டி தேவதைக்கு எங்கள் வீட்டிலிருந்த வரவேற்ப்பு அவளின் வீட்டிலில்லை, அத்தை (அக்காவின் மாமியார்) இவர்கள் வீடு நுழையும் போதே தலையில் அடித்து கொண்டார்களாம். அடுத்து ஆண் குழந்தை பிறக்கும் வரை கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அக்கா வார்த்தைகளால் குத்தப்பட்டு கொண்டுதானிருந்தாள். திருமணமாகி ஒரு வருடம் முடிவதற்குள் இவர்களின் குழந்தை நச்சரிப்பு ஆரம்பித்து விடுகிறது, அப்படியும் ஒரு குழந்தை பிறந்தால் ஆணாக தான் பிறக்க வேண்டும் பலருக்கு, இல்லையேல் அதின் பின் விளைவுகளை தாயும், அச்சிறு பெண் குழந்தையுமே சந்திக்க நேரும். எத்தனை கொடுமை இல்லையா???

இந்நேரம் நீங்கள் நான் எழுதபோகும் விஷயத்தை ஊகித்திருந்தால் உங்களுக்கு எனது பாராட்டுக்கள். சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்னால் விஜய் தொலைக்காட்சியில் அமீர் கானின் சத்யமேவ ஜெயதேவை காண நேரிட்டது. இன்று நம்மில் பலர் குறைந்து விட்டதாக நினைக்கும் பெண் சிசு கொலை இன்னும் நடைமுறையில் இருந்து கொண்டுதானிருக்கிறது. அதுவும் படித்த, மேல் தட்டு மக்களிடமும் இம்மனநிலைமை அதிகமாக காணப்படுவது தன் உட்ச்சகட்ட வேதனை.

பெண்களை தெய்வங்களாக மதிக்கும் பாரத நாட்டை, பாரத மாதா எனவே விளிக்கிறோம். துர்கா, மீனாட்சி, கருமாரி, பண்ணாரி, சீதா தேவி என பல பெயரிட்டு வணங்குகின்றோம்.ஆனால் குலம் செழிக்க ஆணே வேண்டும். ஆண் இறுதி காரியத்தை செய்தால் மட்டுமே முக்தி கிட்டுமாம்.

நிகழ்ச்சியில் உதரணமாக காட்டியவர்களில் படித்தவர்களே அதிகம். அதுவும் ஒரு மருத்துவர் பெண் குழந்தைகளை (இரட்டையர்) பிரசவித்ததற்காக கொடுமைபடுத்தபட்டிருக்கிறார். அவரின் கணவரும் மருத்துவரே, மாமியார் பல்கலைகழகத்தில் பணி புரிபவர். எனக்கு எப்போதும் ஆச்சரியம் கொடுக்கும் விஷயம் இவர்கள் எல்லாம் எப்படி மாணவர்களுக்கு வாழ்க்கையை கற்பிப்பார்கள். ஒரு மாதம் கூட ஆகாத அச்சிறுகுழந்தையை இரண்டாவது மாடிப்படியில் இருந்து எட்டி உதைத்திருக்கிறார். உயிர் தப்பியது அக்குழந்தையின் தாய் செய்த புண்ணியமே. அந்த மாமியாருக்கும் இரண்டு பெண்கள் உண்டு.

அடுத்த பெண் குழந்தையின் தாய்க்கு பலமுறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொருமுறையும் அவரின் அனுமதி இல்லாமலேயே செய்யபட்டிருக்கிறது. காரணம் வயிற்றில் உள்ள சிசு பெண் என்பதால்.
இவை எல்லாவற்றையும் விட உச்சகட்ட அதிர்ச்சி உண்டானது, கணவரால் முகம் கடித்து கொடூரமாக்கபட்ட பெண்ணை கண்டபோது தான். அவரின் முகம் நமக்கு கண்ணீரை வரவழைக்கும். அவரின் முகத்தை கடித்தே உருகுலைத்திருக்கிறார், எத்தனை கொடுமை??

முதலில் பேசிய பெண் கூறியது என்னவென்றால் இவை எல்லாவற்றிக்கும் காரணகர்த்தாக்கள் மருத்துவர்களே. இது வரை ஒரு மருத்துவர் கூட பெண் சிசு கருகலைப்புக்காக சிறை செல்லவில்லை, உரிமையும்(லைசென்ஸ்) ரத்து செய்ய படவில்லை. ஆனால் இது வரை மூன்று கோடி பெண் சிசு கொலைகள் நடந்திருக்கிறது. பத்திரிக்கையாளர் இருவர் கேமரா உடன் சென்ற போதும் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாது ஐந்து மாத கருவை கலைத்து விடலாம் என கூறுகிறார்கள் மருத்துவர்கள். அவ்வாறு வீடியோ எடுத்த பின்னும் சட்டம் அவர்களை எதுவும் செய்யவில்லை.

நீதிபதி, தீர்ப்பு எழுதி, தண்டனை கொடுக்க வேண்டியவரே ஆண் குழந்தை தான் குலதீபம். இதற்காக ஏன் இவர்களை(கொடுமைபடுத்தப்பட்ட பெண்ணின் மாமியார், கணவர், மற்றும் குடும்பம்) கைது செய்து கொண்டுவந்தீர்கள் என வக்கீலிடம் கேட்டுள்ளார். இந்த கொடுமையை எங்கு பொய் சொல்வது???

ஆய்வுகளின் படி இதில் அனைவரும் அடக்கம், மருத்துவர், ஐ.ஏ.எஸ் ஆபீசர், ஹெல்த் டிபார்ட்மென்ட் உட்பட. ஒரு பக்கம் ஹரியானாவில் 35 வயதான ஆண்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவிக்கிறார்கள். ராஜஸ்தானில் பெண்கள் பிற மாநிலங்களில் இருந்து விலைக்கு வாங்கப்படுகிறார்கள். அவர்கள் ஒரு பொருளாகவே கருதபடுகிறார்கள். உபயோகிக்க மட்டுமே, மதிப்பு மரியாதை எதையும் எதிர்பார்க்க முடியாது.

விரைவில் இந்நிலைமை பல மாநிலங்களில் பரவக்கூடும், நம் தொட்டில் குழந்தை திட்டம் நமக்கு சிறுதளவு உதவ கூடும். இதனால் நம் மரியாதை கூடும் என தோழி ஒருவர் கூறினார். ஆனால் உண்மை அது அல்ல. கொடூரமான உண்மை என்னவெனில், பெண்கள் இனி பொருளாக விற்கப்படலாம். ஒரு பெண்ணை இரு ஆண்கள் மணக்க நேரிடலாம் . இதற்க்காகவே ஒரு கும்பல் கிளம்பி பெண்களை கடத்தி விற்க நேரிடலாம். இவை எல்லாம் நடக்க கூடியவை மட்டுமே.

இதை தடுக்ககூடிய மந்திரகோல் நம்மிடம், நம் ஒவ்வொருவரிடமும் தான் உள்ளது. இவ்வாறான நிகழ்ச்சிகளை காணும் போதும், கேட்கும் போதும், படிக்கும் போதும் உணர்ச்சிவசபடுவதோடு மட்டும் அல்லாது நடைமுறையில் செயல் படுத்த வேண்டும். உங்கள் கண்முன் எங்கேனும் பெண் சிசுவை கலைக்க முயற்சி செய்தால், முடிந்த வரை எடுத்து கூறி தடுத்து நிறுத்துங்கள். அப்படியும் முடியாவிட்டால் போலீஸ் உதவியை நாடலாம். எதேனும் மருத்துவர் இக்காரியங்களை செய்கிறார் என்றால் தயங்காமல் அவர்மேல் கம்ப்ளைன்ட் செய்யுங்கள். அப்படி உங்களின் சூழ்நிலை செய்யவிடாமல் தடுத்தாலும் உங்களுக்கு தெரிந்த துணிச்சலான உறவினரோ, தோழியிடமோ கூறி தகுந்த நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுங்கள். போதும்..இது போதும் இனியும் நம் சகோதரிகள் கொல்லப்படக்கூடாது, நம் தாய்மார்கள் கண்ணீரிலும் குற்ற உணர்ச்சியிலும் தவிக்க கூடாது. பெண்ணால் முடியாதது ஏதும் இல்லை பெண்ணே. வாருங்கள் இனி ஒரு விதி செய்வோம்.

கன்னிப்பருவம் தொலைத்து கணவனுக்கு
துணைவியாய் அவன் வீடு புகுந்தேன்
ஓருயிரை எனக்குள் வைத்தவன்
மகளாய் அவளை படைத்திட்டதும்

உயிர்ப்பந்தாய் அவள் உருளுகையில்
கருவழிக்க சொன்னவனை
கொண்டவன் அவனென
உரைத்திடவும் மனமில்லையே..

பெண்ணாய் பிறந்திட்டும்
பெண்மகளை கொல்ல மனம் வருமோ
பித்தாய் கெஞ்சினேன் பிடிக்கொடுக்காது
வஞ்சித்தவன் போய்த்தொலை என்றான்.

கட்டிய தாலியின் சுமையிறக்கி

கொண்டவன் கண்படாமல்
ஆயிரம் துயர் தாங்கி என்
ஆருயிரை சுமந்து வந்தேன்

உதிரம் பிரிந்து வெளிவருவாளென
உற்று நோக்கி காத்திருக்கிறேன்
செல்வ மகள் சிரிப்புக்காய்
பத்து திங்கள் தவமிருக்கிறேன்

கையிலேந்தும் கனவானவள்மேடிட்ட வயிற்றின் உயிர்க்காற்றானவள்
பிஞ்சு காலெடுத்து உதைப்பாளவள்
மென்னசைவுகளால் உயிர்ப்பாளவள்

கருவறையில் தெய்வமாய் இருப்பாளவள்
எனை தாயாக்கி என் தாயானவள்
உனைக்காக்க என்னுயிர் தருவேன்
பூவுலகம் காண வாராய் என் மகளே.இது குறித்து மேலும் தகவல்கள் அறிய மற்றும் உதவ முன் வருவோர் இந்த இணைய தளத்தை காணவும். இது அவர்களின் முகநூல்(Facebook) பக்கம்.

அமீர் கான் இது போல பல கண்திறப்பு நிகழ்ச்சிகளுடன் மேடை ஏற வேண்டும். பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள் அமீர்ஜி.

கவிதை : கவிபானு

அன்புடன்,
கங்கா

Submit "பூவுலகம் காண வாராய் மகளே" to Digg Submit "பூவுலகம் காண வாராய் மகளே" to del.icio.us Submit "பூவுலகம் காண வாராய் மகளே" to StumbleUpon Submit "பூவுலகம் காண வாராய் மகளே" to Google

Categories
Uncategorized

Comments

 1. sumathisrinii's Avatar
  ///பெண் சிசு கொலை.........இதை தடுக்ககூடிய மந்திரகோல் நம்மிடம், நம் ஒவ்வொருவரிடமும் தான் உள்ளது. பெண்ணால் முடியாதது ஏதும் இல்லை பெண்ணே. வாருங்கள்..... இனி ஒரு விதி செய்வோம். ///

  Well Said GANGA........
  இனி ஒரு விதி செய்வோம்.....
  Parasakthi, Ganga and Geetha A like this.
 2. Ganga's Avatar
  ஆமாம் சுமா சேச்சி..நம்மால் முடியாதது ஏதும் இல்லை..வெகுவிரைவில் இந்நிலை மாறவேண்டும்...பெண்கள் உண்மையாகவே நம் நாட்டின் கண்களாகவே மதிக்க படவேண்டும்...

  இந்நிலை மாறும்..மாற்றுவோம்...வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி சேச்சி....
  Parasakthi likes this.
  Updated 22nd May 2012 at 01:01 PM by Ganga
 3. Parasakthi's Avatar
  Ganga intha article padikkave romba aacharyama than iruku enaku. yena ippa kooda intha mari sisu kolai nadakutha nu...

  Inga enga veetla ellorukume pon kulanthaina avvalavu pidikum, ennoda 2 mamavume akka ku ponnu than pirakunum nu ethirpathanga....

  Paiyan piranthappa vida, ponnu piranthappa naanga ellorume santhosapattom.

  Enga veetla ennoda sethi 3 ponnunga, enga oorla ellorum solvanga 3 ponnunga irukarathunala than veede amsama irukumpaanga, ippa kooda akka ellam veetuku vanthanga na veede je je nu irukum thiruvila mathiri.

  Mmm enna seiya, pon kolanthaingaloda perumai theriama innum oru sila pakkam intha mari ellam nadanthutu than iruku....

  Ellorum muyarchi senja intha nilaiyum seekiram maridum. athuku thevaiyaana vilippunarvu makkalkita varanum.

  kavithai romba nalla iruku pa, enaku romba pidichirunthuchu
  Ganga and Nishahameetha like this.
 4. Ganga's Avatar
  Quote Originally Posted by Parasakthi
  Ganga intha article padikkave romba aacharyama than iruku enaku. yena ippa kooda intha mari sisu kolai nadakutha nu...

  Inga enga veetla ellorukume pon kulanthaina avvalavu pidikum, ennoda 2 mamavume akka ku ponnu than pirakunum nu ethirpathanga....

  Paiyan piranthappa vida, ponnu piranthappa naanga ellorume santhosapattom.

  Enga veetla ennoda sethi 3 ponnunga, enga oorla ellorum solvanga 3 ponnunga irukarathunala than veede amsama irukumpaanga, ippa kooda akka ellam veetuku vanthanga na veede je je nu irukum thiruvila mathiri.

  Mmm enna seiya, pon kolanthaingaloda perumai theriama innum oru sila pakkam intha mari ellam nadanthutu than iruku....

  Ellorum muyarchi senja intha nilaiyum seekiram maridum. athuku thevaiyaana vilippunarvu makkalkita varanum.

  kavithai romba nalla iruku pa, enaku romba pidichirunthuchu
  எஸ் டியர் சக்தி...நான் எழுதி இருக்கிறது ரொம்ப கம்மி தான்மா...நம் நாட்டில் இன்றைய நிலை என்னவென்றால் 1000 ஆண் - 914 பெண்ணே உள்ளோம். இது ஆயிரத்துக்கு ஓகே தானே என நாம் நினைப்போம் ஆனால் லட்சம், கோடி என கணக்கிட்டு பாருங்கள், விபரீதம் புரியும்.
  ராஜஸ்தானில் இது வரை 15000 பெண்கள் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து வாங்க பட்டிருக்கிறார்கள் திருமணம் செய்து கொள்ளவதற்கு. நிகழ்ச்சியில் ஹரியானாவை சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்கள் 35 வயதை தாண்டியவர்கள், ஆன்லைனில் வந்து அமீரிடம் பேசினார்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகவில்லை காரணம், திருமணம் செய்து கொள்ள பெண்கள் இல்லை. இந்நிலை சீக்கிரம் மற்ற மாநிலகளுக்கும் நேரலாம். குறைந்து வரும் பெண்களின் எண்ணிக்கையால்.

  மருத்துவர்கள் இதை ஒரு package போல செய்கிறார்களாம். ஆண் என்றால் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா எனவும் , பெண் என்றால் ஜெய் துர்கா மாதா எனவும் கூறுவார்களாம். பெண் எனில் எல்லா செலவும் சேர்த்து 20000 ரூபாய். அத்தாயின் மனநிலையை யாரும் யோசிக்க கூட மாட்டார்கள். அவரின் அனுமதி இல்லாமல் தான் பல இடங்களில் நடக்கிறதாம்.

  எங்கள் வீடும் 12 பேத்திகள் மற்றும் ஆத்தை, சித்தி.பாட்டி என களை கட்டும். பெண் குழந்தையை என்றுமே எங்கள் வீட்டில் சுமையாக கருதினது கிடையாது. வி ஆர் லக்கி டா..

  இவர்களுக்கு பெண்ணின் பெருமை விரைவில் புரியும் டா...ஆனால் நீ சொன்னது போல் விழிபுணர்ச்சி தான் கேள்வி குறி???

  நம் மக்கள் உணர்ச்சி வசபடுவதோடு நிறுத்தி கொள்வார்கள். நடைமுறை படுத்துவது நடக்குமா தெரியவில்லை டா..நடக்கும் என நம்புவோம்..நடத்தி காட்டுவோம்.

  கவிதை நம் பானு எழுதியது, பாராட்டுக்கள் அவருக்கே.

  வருகைக்கும், பதிவிற்கும் நன்றி டா சக்தி.
  Parasakthi likes this.
 5. Ashick's Avatar
  Hi Ganga akka, I feel very shoked after reading ur blog, till the day i thought sisu kolai was very long back, ur blog will be very useful for many people, Tks for sharing the blog to us

  Reg,
  M.Syed Ashick
  Ganga likes this.
 6. Ganga's Avatar
  Quote Originally Posted by Ashick
  Hi Ganga akka, I feel very shoked after reading ur blog, till the day i thought sisu kolai was very long back, ur blog will be very useful for many people, Tks for sharing the blog to us

  Reg,
  M.Syed Ashick
  Ya Syed, It is very shocking to know about it.. that's too in this modern era..where most of us are well educated.... Hope things will change soon anna....Thanks for steeping in and for the d feed back....
 7. mandhagini's Avatar
  engalukku irandu pen kuzhanthaikal enpathal kudumba soththe en mamanaral marukkappattathu(pen kuzhanthaikal enpathal soththu aduththa veettukku poividum).pen kuzhanthaikal endral kuzhanthaikalodu petrorum purakkanikkappadukirarkal...
 8. Ganga's Avatar
  Quote Originally Posted by mandhagini

  பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்று சட்டமே வந்த பிறகும், தங்களின் தீராத வெறுப்பை இவ்வாறு வெளிப்படையாக காட்டுபவர்களிடம் நாம் என்ன சொல்வது?

  இவர்களை இவ்வுலகுக்கு கொண்டு வந்ததும் ஒரு பெண், உலகின் மகிழ்ச்சியை கொடுத்ததும் ஒரு பெண் தான், தனக்கென வரும் பெண் சீரும் சிறப்போடும் வர வேண்டும். ஆனால் தன்னால் ஒரு பெண்ணை வளர்க்க கூட முடியாது. அது ஒரு சுமை. இது தான் இவர்களின் மன நிலை.

  இது போன்ற அநீதிகளுக்கு எதிராக நாம் சட்டரீதியாக எதாவது செய்தால் தான், அடுத்த தலைமுறையின் பெண்கள் ஓரளவுக்கேனும் நிம்மதியாக இருப்பார்கள்.

  நன்றி சேச்சி..உங்களின் இந்நிலை மாற என் வேண்டுதல்கள். விரைவில் மாறும்.
 9. Kavibhanu's Avatar
  அன்புத்தோழிக்கு,

  பெண் சிசுக்கொலை உசிலம்பட்டியோடு 20 வருடங்களுக்கு முன் முடிந்துவிட்டது என தான் நாம் நம்பிக்கொண்டிருந்தோம், சத்யமேவ ஜயதே நிகழ்ச்சியை பார்த்து தான் இது நம் இந்திய நாட்டின் முழுமைக்குமான சாபக்கேடு என புரிந்தது.. அதுவும் அதில் பேசிய ஒரு பெண்ணிற்கு 6 வருடத்தில் 8 முறை பெண் சிசு வயிற்றில் வளர்கிறது என்பதாலேயே கருக்கலைப்பு கட்டாயமாக செய்யப்பட்டிருக்கிறது.. ஒரு குழந்தையை முழுதுமாக சுமந்து பெற்றாலே எவ்வளவு வலிகளை அனுபவிப்போமோ அதை விட பன் மடங்கு இது போன்ற முறையற்ற கருக்கலைப்பு தரும், அந்த பெண்ணின் கருப்பையை இப்படி பாத்திரம் கழுவது போல் கழுவ அந்த கணவனுக்கு உரிமை கொடுத்தது யார்.. இது எங்கோ எவருக்கோ தானே நடைபெறுகிறது என நாம் நம் பொழுது போக்குகளில் மூழ்கி கிடக்கிறோம், இன்றும் கூட சட்டத்திற்கு புறம்பாக நம் தமிழ் நாட்டிலேயே ஸ்கேன் மூலம் குழந்தை ஆணா, பெண்ணா என அறிந்து கருக்கலைப்பு செய்கின்றனர்..அடிப்படை உரிமைகளை கூட அறியாத பல படிக்காத பெண்கள் இந்த அவல நிலைகளுக்கு ஆளாகின்றனர் என பார்த்தால் படித்த நல்ல நிலையில் உள்ள பெண்களுக்கும் இதே நிலைதான்.. இன்றும் கூட ஈரோடு மாவட்டத்தில் சில கிராமங்களில் கேரளாவிலிருந்து தான் பெண் தேடி திருமணம் செய்கின்றனர். பெண்கள் சதவீதம் மிகக்குறைவாக உள்ளதால் இந்த நிலை.. ஆனால் யார் வந்து என்ன சொன்னாலும், தனக்கு ஏற்பட்டால் தான் அது கொடுமை என நினைக்கும் நம் மனப்பாங்கு தான் இது போன்ற சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பாடாமல் இருப்பதற்கு காரணம்.. உலகமே அழிந்தாலும் என் தேநீரை நான் ரசித்து குடிக்க வேண்டுமென்ற நம் மக்களின் மனம் மாறினால் நடப்பவை நன்மையாக முடியலாம்.. சட்ட ரீதியில் பார்த்தால் இதுவும் ஒரு கொலைதான், நம் கண்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ எங்கு இக்கொடுமை நடந்தாலும் அதற்கெதிரான நம் ஒன்று சேர்ந்த போராட்டத்தை நாம் முன்னிருத்தினால் இதை செய்வோருக்கு ஒரு பயம் ஏற்படும்.. ஒரு முன்வைப்பை நீங்கள் தொடங்கியிருக்கிறீர்கள், நம் எதிர்ப்பை சிசுக்கொலைக்கெதிராக காண்பிக்க எவ்வளவோ வழி முறைகள் இருக்கிறது.. சற்று முன் வைப்போம்.. இனி ஒரு விதி செய்வோம்...
  nlakshmi, Ganga and Geetha A like this.
 10. nlakshmi's Avatar
  Nalla aritcle ganges,
  Pen sisu abortion pathi awareness and truth.. innum nam mugathil pattendru adikirathu...
  Rajasthanla than indha maathiri abortion maximum level nadakuthu... oru hindi serial Diya aur baati hum, athula rajasthan girls eppadi nadatha paduraanganu romba nalla solraanga..
  Pen sisu kolaikku mudhal kaaranam.. antha ponnuku 20 years kalichu kodukka padara dowrykaaga payanthu thaan.. innoru veetuku pogura ponnuku namma yen kaasu kodukanum.. namma sotha yen kudukanum...appadindra ennam.. ithu.. munnadi namma naatulayum irundhuhu... indha dowry system 70, 80's peakla irundhapa nariya awareness media koduthuhu...one example is visu films...dowry pathi, athunaala sisu abortions pathi, athunaala ponnunga veetula erpadra kastham.. ithellam parthu paarthu thaan, ippo dowry awareness vanthurukku.. still fulla eradicate pannalenaalum konjam koranjirukku,same thing about caste marriage, love marriage.. etc etc...

  intha pen sisu kolaikku mukkiya kaaranam, male dominance or else male worshipping in that part of society..pala mooda nambikaigala innum nambi irukirathu thaan, so itha thadukka just law mattum podhathu.. "Laws are always made to be broken".. so ithuku adipadai arivu, intha issueva pathi unara vaikirathu thaan mukkiyam...athuku.. best and easy way, media-television, radio.... humma saas-bahu serials pottu eppadi aduthava kudiya kedukkalaam, eppadi oruthar husbanda parikalaamnu parkurathukku pathila...intha maathiri "bringing up girls" pathi awareness sollalam..

  parkalaam.. ippo thaane konjam salasalappu aramchi iruku...
  Ganga likes this.
 11. mandhagini's Avatar
  Quote Originally Posted by Ganga
  பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்று சட்டமே வந்த பிறகும், தங்களின் தீராத வெறுப்பை இவ்வாறு வெளிப்படையாக காட்டுபவர்களிடம் நாம் என்ன சொல்வது?

  இவர்களை இவ்வுலகுக்கு கொண்டு வந்ததும் ஒரு பெண், உலகின் மகிழ்ச்சியை கொடுத்ததும் ஒரு பெண் தான், தனக்கென வரும் பெண் சீரும் சிறப்போடும் வர வேண்டும். ஆனால் தன்னால் ஒரு பெண்ணை வளர்க்க கூட முடியாது. அது ஒரு சுமை. இது தான் இவர்களின் மன நிலை.

  இது போன்ற அநீதிகளுக்கு எதிராக நாம் சட்டரீதியாக எதாவது செய்தால் தான், அடுத்த தலைமுறையின் பெண்கள் ஓரளவுக்கேனும் நிம்மதியாக இருப்பார்கள்.

  நன்றி சேச்சி..உங்களின் இந்நிலை மாற என் வேண்டுதல்கள். விரைவில் மாறும்.
  Ganga likes this.
 12. mandhagini's Avatar
  Thanks Ganga....maarivittathu.10 varudangal poradi engal urimaiyai petruvittathodu vairakkiyamaga athai vida athikamaga property kuzhanthakalukku erpaduththik koduthuvittom.  ..
  Ganga likes this.
 13. Ganga's Avatar
  Quote Originally Posted by Kavibhanu
  அன்புத்தோழிக்கு,

  பெண் சிசுக்கொலை உசிலம்பட்டியோடு 20 வருடங்களுக்கு முன் முடிந்துவிட்டது என தான் நாம் நம்பிக்கொண்டிருந்தோம், சத்யமேவ ஜயதே நிகழ்ச்சியை பார்த்து தான் இது நம் இந்திய நாட்டின் முழுமைக்குமான சாபக்கேடு என புரிந்தது.. அதுவும் அதில் பேசிய ஒரு பெண்ணிற்கு 6 வருடத்தில் 8 முறை பெண் சிசு வயிற்றில் வளர்கிறது என்பதாலேயே கருக்கலைப்பு கட்டாயமாக செய்யப்பட்டிருக்கிறது.. ஒரு குழந்தையை முழுதுமாக சுமந்து பெற்றாலே எவ்வளவு வலிகளை அனுபவிப்போமோ அதை விட பன் மடங்கு இது போன்ற முறையற்ற கருக்கலைப்பு தரும், அந்த பெண்ணின் கருப்பையை இப்படி பாத்திரம் கழுவது போல் கழுவ அந்த கணவனுக்கு உரிமை கொடுத்தது யார்.. இது எங்கோ எவருக்கோ தானே நடைபெறுகிறது என நாம் நம் பொழுது போக்குகளில் மூழ்கி கிடக்கிறோம், இன்றும் கூட சட்டத்திற்கு புறம்பாக நம் தமிழ் நாட்டிலேயே ஸ்கேன் மூலம் குழந்தை ஆணா, பெண்ணா என அறிந்து கருக்கலைப்பு செய்கின்றனர்..அடிப்படை உரிமைகளை கூட அறியாத பல படிக்காத பெண்கள் இந்த அவல நிலைகளுக்கு ஆளாகின்றனர் என பார்த்தால் படித்த நல்ல நிலையில் உள்ள பெண்களுக்கும் இதே நிலைதான்.. இன்றும் கூட ஈரோடு மாவட்டத்தில் சில கிராமங்களில் கேரளாவிலிருந்து தான் பெண் தேடி திருமணம் செய்கின்றனர். பெண்கள் சதவீதம் மிகக்குறைவாக உள்ளதால் இந்த நிலை.. ஆனால் யார் வந்து என்ன சொன்னாலும், தனக்கு ஏற்பட்டால் தான் அது கொடுமை என நினைக்கும் நம் மனப்பாங்கு தான் இது போன்ற சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பாடாமல் இருப்பதற்கு காரணம்.. உலகமே அழிந்தாலும் என் தேநீரை நான் ரசித்து குடிக்க வேண்டுமென்ற நம் மக்களின் மனம் மாறினால் நடப்பவை நன்மையாக முடியலாம்.. சட்ட ரீதியில் பார்த்தால் இதுவும் ஒரு கொலைதான், நம் கண்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ எங்கு இக்கொடுமை நடந்தாலும் அதற்கெதிரான நம் ஒன்று சேர்ந்த போராட்டத்தை நாம் முன்னிருத்தினால் இதை செய்வோருக்கு ஒரு பயம் ஏற்படும்.. ஒரு முன்வைப்பை நீங்கள் தொடங்கியிருக்கிறீர்கள், நம் எதிர்ப்பை சிசுக்கொலைக்கெதிராக காண்பிக்க எவ்வளவோ வழி முறைகள் இருக்கிறது.. சற்று முன் வைப்போம்.. இனி ஒரு விதி செய்வோம்...
  கடந்த மாதம் பெங்களூர் அப்ரீனின்(Baby Afreen) நிலையை காணும் வரை, நானும் பெண் சிசு கொலைகள் குறைந்து விட்டது என்று தான் நினைத்தேன் தோழி. மூன்று மாத குழந்தையை எப்படி, அப்படி கொல்ல மனம் வந்தது ஒரு தந்தைக்கு???? இந்நிகழ்ச்சியை தொடர்ந்து சத்யமேவ் ஜெயதேவிலும் பெண் சிசு கொலைகள் இன்னும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை கேட்கும் போது பட்ட வருத்தத்தை வார்த்தையில் சொல்ல இயலாது தோழி.

  அத்தனை கருகலைப்பிற்கு பிறகும் தைரியமாக ஒரு பெண் குழந்தைக்கு தாயாகி, தனித்து கவுரவமாக வாழும் அத்தாய்க்கு நான் தலை வணங்குகிறேன்.

  நமக்கோ அல்லது நம்மை சுற்றியோ, நடந்தால் மட்டுமே பொங்கி எழுவோம்.இல்லையேல் எங்களுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.

  நம் மக்கள் எப்போதுமே ஒன்றுக்காக உணர்ச்சிவசபடுவார்கள், ஆனால் அடுத்தது வந்ததும் இதை மறந்து விடுவார்கள்... ஆக நிரந்தர தீர்வு கிட்டாமலே போய் விடுகிறது. இந்நிகழ்ச்சியை பார்த்ததும் என் சகோதரியிடம் கூறி அவள் இருக்கும் மகளிர் குழுவின் மூலம் ஊரில் அனைவருக்கும் எடுத்து கூற சொன்னேன். அவர்களும் தங்களாலான சிறு உதவியை முழு மனதுடன் செய்கிறார்கள். ஆனால் பெரு நகரங்களில் எப்படி சாத்தியம்??? உங்களுக்கு தெரிந்ததை எங்களுடன் பகிருங்கள்...

  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி தோழி.
 14. Ganga's Avatar
  Quote Originally Posted by mandhagini
  Thanks Ganga....maarivittathu.10 varudangal poradi engal urimaiyai petruvittathodu vairakkiyamaga athai vida athikamaga property kuzhanthakalukku erpaduththik koduthuvittom.  ..
  இதை கேட்கும் போதே பெருமையும் சந்தோசமுமாக இருக்கிறது சேச்சி..உங்களை போல் எல்லோரும் செய்தால் எத்தனை நன்றாக இருக்கும்..சிலரை தான் அன்பால் திருத்த முடியும்...இவர்களை எல்லாம் திருத்தவே முடியாது....

  Convey my regards to ur angels.

  Love,
  Ganga
  mandhagini likes this.
 15. Ganga's Avatar
  Quote Originally Posted by nlakshmi
  Nalla aritcle ganges,
  Pen sisu abortion pathi awareness and truth.. innum nam mugathil pattendru adikirathu...

  உண்மை லக்ஸ்..மிக கசப்பான உண்மை...
  Rajasthanla than indha maathiri abortion maximum level nadakuthu... oru hindi serial Diya aur baati hum, athula rajasthan girls eppadi nadatha paduraanganu romba nalla solraanga..

  ஆம் ராஜஸ்தான், ஹரியானா இங்கே தான் அதிகமாக நடக்கிறதாம். திருமணத்திற்காக பெண்கள் அடுத்த மாநிலங்களில் இருந்து வாங்க படுவதும் இங்கு தான்..
  Pen sisu kolaikku mudhal kaaranam.. antha ponnuku 20 years kalichu kodukka padara dowrykaaga payanthu thaan.. innoru veetuku pogura ponnuku namma yen kaasu kodukanum.. namma sotha yen kudukanum...appadindra ennam.. ithu.. munnadi namma naatulayum irundhuhu... indha dowry system 70, 80's peakla irundhapa nariya awareness media koduthuhu...one example is visu films...dowry pathi, athunaala sisu abortions pathi, athunaala ponnunga veetula erpadra kastham.. ithellam parthu paarthu thaan, ippo dowry awareness vanthurukku.. still fulla eradicate pannalenaalum konjam koranjirukku,same thing about caste marriage, love marriage.. etc etc...

  intha pen sisu kolaikku mukkiya kaaranam, male dominance or else male worshipping in that part of society..pala mooda nambikaigala innum nambi irukirathu thaan, so itha thadukka just law mattum podhathu.. "Laws are always made to be broken".. so ithuku adipadai arivu, intha issueva pathi unara vaikirathu thaan mukkiyam...athuku.. best and easy way, media-television, radio.... humma saas-bahu serials pottu eppadi aduthava kudiya kedukkalaam, eppadi oruthar husbanda parikalaamnu parkurathukku pathila...intha maathiri "bringing up girls" pathi awareness sollalam..

  parkalaam.. ippo thaane konjam salasalappu aramchi iruku...
  டௌரி, ஆண் குழந்தைங்க மேல இருக்கற தனி பாசம், சொத்து விட்டு போய்ட கூடாது.. இதெல்லாம் தான் பெண் சிசுகொலைக்கு முக்கிய காரணம், ஆனா இதுல எதுவுமே இன்னும் நம்ம நாட்டுல இருந்து ஒழியல.... நீங்க சொல்ற மாதிரி மீடியா எப்பவுமே இந்த அவர்னேஷ் கொடுத்துட்டு தான் இருக்கு.. படங்களிலும் இதெல்லாம் பார்த்தா கூட நம்ம நாட்டுல திருந்தறவங்க ரொம்ப கம்மி.. இதுல நாட்டு மக்களும், நம்ம கவர்மென்ட், மீடியா எல்லாம் சேர்ந்து தான் இதுக்கான அவர்னேஷ் உருவாக்கணும்..

  மேலும் பெண் குழந்தைகளை நேசிக்கற பெற்றோர்கள் கண்டிப்பா தங்களோட அனுபவங்களையும் , அவங்க நேசிக்கற பெண் குழந்தைங்கள பத்தியும் மீடியால ஷேர் பண்ணா கூட, நிறைய பேர் அதை உணரது இல்லை... முக்கியமா இந்த மாதிரி சட்டத்துக்கு புறம்பான கருகலைப்பு பண்ற டாக்டர்ஸ் மேல தீவிரமான நடவடிக்கை எடுத்தா தான் இதுக்கு ஒரு முடிவு வரும்.. மேலும் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டங்கள் இன்னும் நம்ம மக்களை போய் சேரவே இல்லை.. ஒரு சிறு விதை கூட பெரிய விருட்சமாக முளைக்கும்.. இப்ப வந்திருக்கற இந்த அவர்னேஷ்
  நிச்சயம் நல்ல பலனை கொடுக்கும்னு எதிர்பார்க்கலாம்..

  நாம இப்போ குறைஞ்சு இருக்கறத நினைச்சுட்டு இருக்கற வரதட்சணை கொடுமைகள் தான் போன வாரம் காட்டினார்கள். அதை பற்றி சீக்கிரம் எழுத முயற்சிகிறேன்.  வருகைக்கும், பகிர்விற்கும் நன்றி லக்ஸ்...
  nlakshmi and Geetha A like this.
 16. dayamalar's Avatar
  hi gangaka nice thanks for creating a blog for this........
  pengal ella fieldalyum munneriyum...... yen nadaiye aatchi panra kalam vanthum.....
  namalam etho oru idathil thengi vaika padurom..... educated athum doctorse epdi nadanthu kirathu romba kastama iruku........ intha nilamai maranum......
  unga blog athuku oru vilipunarva irukum....... once again thanks for sharing ganga ka.........
  Ganga likes this.
 17. Ganga's Avatar
  Dear Malar,

  Quote Originally Posted by dayamalar
  hi gangaka nice thanks for creating a blog for this........

  Thanks dear

  pengal ella fieldalyum munneriyum...... yen nadaiye aatchi panra kalam vanthum.....
  namalam etho oru idathil thengi vaika padurom.....

  Yes da..idhu nam naatin sabakaedu...

  educated athum doctorse epdi nadanthu kirathu romba kastama iruku........

  Here i have to agree that not ALL doctors, but there are few who does this work and they will be punished for this one fine day...its not very far..

  intha nilamai maranum......

  Marum da..maatruvom
  unga blog athuku oru vilipunarva irukum....... once again thanks for sharing ganga ka.........
  Ohh Thank you so much dear...all credit goes to Satyameva jayate's team...Your words meant a lot to me..do visit often and drop ur feedbacks
  Thank you dear
  dayamalar likes this.
 18. sakthic's Avatar
  hi ganga unga blog padichathu enaku romba happy. and balakumaran novels lam unga kita eruntha update panunga .... thanks
Like It?
Share It!Follow Penmai on Twitter