Valentines's Day Contest
Discuss here on Valentines's Day Contest within the Contests & Rewards forums, part of the Penmai forum; அன்பான பெண்மை நண்பர்களே , உணர்வு பிழம்புகளின் ஓட்டு மொத்த கோர்வையாய் பல யுகங்கள் கடந்து வாழும், வளரும், ஒப்பிலாத உணர்வு காதல். காதல் நமது ஆதி ...
-
1st Feb 2012, 05:46 PM #1
Valentines's Day Contest
அன்பான பெண்மை நண்பர்களே,
உணர்வு பிழம்புகளின் ஓட்டு மொத்த கோர்வையாய் பல யுகங்கள் கடந்து வாழும், வளரும், ஒப்பிலாத உணர்வு காதல். காதல் நமது ஆதி உணர்வு, நாகரிக மாற்றத்தை எதிர்த்து நம்மிடையே எஞ்சியிருக்கும் மரபுகளில் ஓன்று. ஊனை உருக்கி உள்ளொலி பெருக்கும் மொழி காதல்.
உலகும் முழுவதும் உலவும் காதலை கொண்டாடும் வகையில் பெண்மையில் வேலண்டைன்ஸ் டே' போட்டி இதோ உங்களுக்காக....
காதல் பற்றி நீங்கள் என்ன நினைக்கறீர்கள் என்று பகிர்ந்துகொண்டு, போட்டியில் பங்கு பெறுங்கள். காதல் பற்றிய சிறந்த கருத்துக்களை கூறும் நபருக்கு, பெண்மையில் இருந்து பரிசு அளிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
"கண்டதும் காதல் கொண்டேன்"
"பார்த்தேன், பழகினேன், பிடித்துவிட்டது, உடனே காதலும் வந்துவிட்டது"
"எனக்கு உன்னை பிடித்திருக்கிறது, உனக்கும் என்னை பிடித்திருக்கிறது, இனி நாம் இருவரும் காதல் செய்வோம்"
இது தான் காதலா?... இல்லை என்கிறீர்களா...
அது சரி, காதல்ன்னா என்னவென்று இங்கு சொல்லுங்கள்... காதலைப் பற்றி உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
விதிமுறைகள்:
- ஒருவர், ஒரு முறை மட்டுமே தங்களது கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும், உங்களது கருத்தை பதிவு செய்ய கடைசி நாள் February 13ம் தேதி.
- உங்களது சொந்த கருத்தை மட்டும் பதிவு செய்ய வேண்டும், இணையத்தில் இருந்து எடுக்கக்கூடாது. முழுவதும் கவிதையாகவும் இருக்க கூடாது.
- காதல் என்ற உணர்வை பற்றி மட்டும் உங்களது கருத்துக்களை பகிருங்கள்.
- சிறந்த கருத்தை பதிவை செய்தவர் பற்றிய விவரங்கள் February 14ம் தேதி அறிவிக்கப்படும்.
Last edited by Penmai; 13th Mar 2012 at 07:49 PM. Reason: To add Winner.
-
4th Feb 2012, 02:42 PM #2
Newbie
- Gender
- Female
- Join Date
- Feb 2012
- Location
- erode
- Posts
- 0
Re: Valentines's Day Contest
kankalaal katta mudiyatha onrai,kaathukalaal ketka mudiyatha onrai,vaarthaikalaal solla mudiyatha onrai, iru managalum unarvathu thaan kathal..
-
7th Feb 2012, 09:31 PM #3
Newbie
- Gender
- Female
- Join Date
- Feb 2012
- Location
- sivakasi
- Posts
- 0
Re: Valentines's Day Contest
kadhal enbadhu kadavulaivida melanadhu kadhalal oru sadharana manidhan palarum nimirindhu pakkum alavirkku periavan agalam adhe neram kadhalal oru manidhan irundha idam illamalum pogalam but ellarukkum kadhal varum but adhu endha alavukku avungala thakkudhu adhu dhan marubadum. It is nice feeling, It can give heaven as well as hell.
-
8th Feb 2012, 04:06 PM #4
Newbie
- Gender
- Female
- Join Date
- Jun 2011
- Location
- Chennai
- Posts
- 3
Re: Valentines's Day Contest
Its a great feeling which can be felt, not explained!!
Hence feel the love to know what it is!
-
9th Feb 2012, 04:49 PM #5
Re: Valentines's Day Contest
hi tell ur heart " ALL ISSSSSSSSSSSSS WELL "
-
12th Feb 2012, 12:37 AM #6
Newbie
- Gender
- Female
- Join Date
- Feb 2012
- Location
- Kovai
- Posts
- 34
Re: Valentines's Day Contest
பார்வை பரிமாற்றத்தில் தொடங்கும் காதல்........அந்த பார்வையை இழந்து போனாலும் கூட பாதை மாறாமல் நிலைத்திருக்க வேண்டும்.குருடனுக்கு கூட காதல் வரலாம்.....ஆனால் குருட்டு காதல் மட்டும் யாருக்குமே வந்துவிட கூடாது.
என்னைப் பொறுத்தவரையில் காதல் என்று நான் உணர்வதை மட்டும் இங்கே உங்களோடு பகிர்கிறேன் தோழிகளே!
என் துணைக்கு எந்த குறைப்பாடு இருந்தாலும் அல்லது வருங்காலத்தில் வந்தாலும் என் காதலில் எவ்வித மாற்றமும் இருக்காது.அதே போல என்னையும் என் குறைகளோடு ஏற்றுக்கொள்ளும் மனமும் குணமும் என் துணைக்கு இருத்தல் வேண்டும்.
என்னால் முடிந்தவரை என்னிடமுள்ள குறைகளைக் களைந்து விட்டுக்கொடுக்க நான் முயற்சிப்பேன்.அந்த முயற்சிக்கு என் துணை சிறிதேனும் மதிப்பளித்து என்னோடு ஒத்துழைக்க வேண்டும்.
என் துணையின் மீது எந்நாளும் நம்பிக்கை வைத்திருப்பேன்.ஆனால் அதையும் மீறி எனக்குள் சந்தேகங்கள் வந்தால் அதை என் துணையிடமே கேட்டு தெளிவடைய முயற்சிப்பேன்.இதே எண்ணம் என் துணைக்கும் இருந்தால் மனம் மகிழ்வேன்.
எந்த பிரச்சனை வந்தாலும் எந்த துன்பம் வந்தாலும் எந்த சந்தோஷம் நிகழ்ந்தாலும் நானும் என் துணையும் அதை பகிர்ந்துக்கொள்ள வேண்டும்.
என்னிடம் கோபம் வந்தால் அதை வெளிப்படையாக என்னிடமே காட்டிவிட வேண்டும்.மனதுக்குள் புதைத்து வைத்துக்கொண்டு மருகக்கூடாது.
என் துணைக்காக உயிரையே கொடுக்கவும் சித்தமாக இருக்கும் எனக்காக, என் துணை செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான்............போக்குவரத்து நெரிசலிலும்,நெடுஞ்சாலை விரைவு பயணங்களிலும் அவரின் உயிரை எனக்காக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.இயற்கையாய் ஏற்படும் நிகழ்வுகளை தடுக்க அவராலோ என்னாலோ முடியாது.ஆனால் நிமிட நேர அவசரத்தில் நடக்கும் இது போன்ற தவறுகளை எனக்காக.....என் காதலுக்காக அவர் விட வேண்டும்.ஏனென்றால் அவர் உயிர் மற்ற எல்லாவற்றையும் விட எனக்கு பெரிது.
கண்ணே மணியே என்பதைக் காட்டிலும் இந்த சிறு சிறு எண்ணங்களும் பரிமாற்றங்களுமே காதலின் பலமான அஸ்திவாரம் என்பது என் கருத்து.Last edited by Athip; 12th Feb 2012 at 12:44 AM.
-
12th Feb 2012, 08:55 PM #7
Newbie
- Gender
- Female
- Join Date
- Aug 2011
- Location
- chennai
- Posts
- 85
Re: Valentines's Day Contest
kadal kadalithal mattum puriyum sugam............. love will win when both parents accepted...lovers should understand this..........true love never hurts anyone.....kathiruthal kooda sugam endru puriyum kadal valimayanadu.
simple to say nee naan, naane neee.
-
12th Feb 2012, 10:54 PM #8
Re: Valentines's Day Contest
Engeum Eppothum Etharkhagavum Evarium Varuthapaduthatha Anbae Kathal,Athuvae
Cirantha Kathal,(kathal vaznthalum allathu kathal veeznthalum).
-
13th Feb 2012, 10:14 AM #9
Newbie
- Real Name
- MayilVagana Prabhu
- Gender
- Male
- Join Date
- Feb 2012
- Location
- Coimbatore
- Posts
- 0
Re: Valentines's Day Contest
பெண்மையின் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம்...
காதல், அன்பு, பாசம் இவை அனைத்திற்கும் ஆங்கிலத்தில் ஒரே அர்த்தம் தான்... ஆனால் இவை வெளிப்படுத்தப்படும் தருணங்கள் மட்டும் வேறுபடுகின்றது.. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கும் இடையேயான அன்பு, பாசம், காமம் இவை மூன்றின் அலாதியான, ஆர்ப்பரிக்கும், உண்மையான வெளிப்பாடே காதல்!!!
-
13th Feb 2012, 11:18 AM #10
Re: Valentines's Day Contest
உலகம் சொன்ன முதல் உண்மையும், பொய்யும் இதுவே இந்த காதல்!!!
ஒலி கூட்டங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மொழியும், இலக்கணமும் படைபதற்கு முன்னாள் விழி கூட்டங்கள் ஒன்று சேர்ந்து எழுதி படைத்த காவியம் காதல்!!!
கடவுளின் கூடாரத்தில் கிசுகிசுத்த ரகசியங்கள் பிரபஞ்ச வெளியில் கசிந்தபோது அது காதல் எனப்பட்டது ஆம் கடவுள் காதலிதான், காதல் மொழி பேசினான். மனிதனை படைப்பதற்கு முன்னாள் அவன் முழு நேர தொழிலே காதல்!!!
அந்த பெருந் தெய்வங்களும், குட்டி தேவதைகளும்
காதலால் பேசினார்கள்
காதலை பேசினார்கள்
காதலில் பேசினார்கள்!!!
கடவுள் - கடவுள்
கடவுள் - மனிதன்
மனிதன் - கடவுள்
மனிதன் - மனிதன்
காதலால் பேசினார்கள்.
காதலும் புரட்சியும் ஒன்று தான்
இவை இரண்டும் உரச, உரச.
பேச, பேச பற்றிக்கொள்ளும்!!!
பல யுக புரட்சிகளை உருவாக்கியது காதல்.
பல தேசங்களின் எல்லை கோடுகளை நகர்தியது காதல்
காதல் சித்தாந்தங்களை உருவாக்கியது
பல தத்துவங்களை பெற்றெடுத்தது காதல்.
ஆறறிவின் அரைகுறையை உணர்த்துவது காதல், ஏழாம் அறிவின் எல்லை கோடு காதல்!!!
காதல் எதையும் வேற்றுமை பாடுதுவதில்லை, சில நேரங்களில் அவை உணர்வுகளை ஒருமையில் சேர்கிறது!!!
ஆகவே காதல் செய்வீர்!!!தமிழ்தாசன்.
Suriya Narayanan.
...........................................................................................................................
"நான் அடைப்புகுறிக்குள் வாழ்கிறேன்
பிரபஞ்சத்தின் எல்லை கோடுகள் நான் வரைந்தவையே"
"சொல்லும் பொருளுமற்று சும்மா இருக்கவே அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே"
Similar Threads
-
Top Contributor's Contest
By Penmai in forum Top Contributor's ContestReplies: 1Last Post: 1st Sep 2011, 09:54 AM


145Likes
LinkBack URL
About LinkBacks


Reply With Quote
Bookmarks