உடற்பயிற்சி இன்மையும் இருதய கோளாறும்

அமெரிக்காவின் இதயம் தொடர்பான அமைப்பொன்றின் அறிக்கையின் படி, போதியளவு உடற்பயிற்சி செய்யாதவர்கள் தங்களை இருதய நோய்களுக்கு உள்ளாக்குகின்றனர் கூறுகிறது.

உடற்பயிற்சிகளை ஒழுங்காக செய்யும் போது மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.

அதிக அளவான மரணங்கள் இதய சம்பந்தமான நோய்களினாலேயே ஏற்படுகின்றன என அமெரிக்க வைத்தியர்கள் கூறுகின்றனர்.


ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல், புகைப்பிடித்தலை நிறுத்துதல், உடற்பயிற்சி என்பன இதயத்தின் ஆரோக்கியத்தை பேணுகின்றன.

உயர் குருதியழுத்தம், நீரிழிவு நோய் போன்ற நோய்களும் இருதய நோய் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது.

உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலினுள் ஏற்றப்படும் இன்சுலினும் உடல்பூராகவும் பரவி நோயினை குறைப்பதற்கு காரணமாக அமைகின்றது.

உடற்பயிற்சியானது மனரீதியாக ஏற்படும் மன அழுத்தத்தையும் குறைக்கின்றது என அந்த அமைப்பு மேலும் கூறுகின்றது.

அநேகமான நாட்களில் 30 நிமிட உடற்பயிற்சி அவசியம்.

இருதய நோய்களை குறைப்பதற்கு மிகச் சிறந்த உடற்பயிற்சி நடைப்பயிற்சியாகும்.

30 தொடக்கம் 60 நிமிட பயிற்சிகளானவை இதயத்தினதும், நுரையிரலினதும் சுற்றோட்டத்தை அதிகரிக்கும்.

அதிக அளவான பயிற்சிகளில் ஈடுபடும் போது 10 அல்லது 15 நிமிட இடைவேளை எடுங்கள்.

உடற்யிற்சியை தினமும் செய்ய முயற்சியுங்கள் அப்போதுதான் சிறந்த பலன் கிடைக்கும்.

வயது முதிந்தவர்கள் படிகளில் ஏறி இறங்குதல் மற்றும் தோட்டம் மற்றும் வீட்டு வேலைகள் போன்றவற்றில் ஈடுபடுவது சிறந்தது என அந்த அமைப்பு கூறுகின்றது.

Similar Threads: