User Tag List

Like Tree5Likes
 • 2 Post By ahilanlaks
 • 1 Post By safron
 • 1 Post By selvipandiyan
 • 1 Post By kkmathy

ஆரோக்கியம் தரும் நடைப்பயிற்சி!


Discussions on "ஆரோக்கியம் தரும் நடைப்பயிற்சி!" in "Exercise & Yoga" forum.


 1. #1
  ahilanlaks's Avatar
  ahilanlaks is offline Ruler's of Penmai
  Real Name
  Athilakshmi Ahilan ( Bhuvana )
  Gender
  Female
  Join Date
  Mar 2015
  Location
  Chennai
  Posts
  12,408

  ஆரோக்கியம் தரும் நடைப்பயிற்சி!

  இன்று ஆரோக்கியமான வாழ்வை தேடி மக்கள் அலைகின்றனர். புதிது புதிதாக முளைத்திருக்கும் ஹெல்த் சென்டர்கள், நவீன எலக்ட்ரானிக் உபகரணங்கள், செயற்கையான உடற்பயிற்சி கூடங்கள் என மக்களைத் தன் பக்கம் இழுக்கும் வியாபார யுக்திகள் பெருகி வருகின்றன. இவற்றால் முழுமையான ஆரோக்கியம் கிடைக்காது. குறையை நம்மிடம் வைத்துக் கொண்டு ஆரோக்கியத்தை வெளியே தேடி அலைகின்றோம். இயற்கையான உணவு, நல்ல உடற்பயிற்சி, நல்ல தூக்கம் இம்மூன்றும் இருந்தால் நோயின்றி நூறாண்டு வாழலாம். நவீன யுகத்தில் நேரமின்மை என்ற வார்த்தை அனைவராலும் சொல்லப்படுகிறது. உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் தேடிய செல்வத்தை பாதுகாக்க முடியும்.

  இயற்கை உணவுகள்:

  * காய்கள், கீரைகள், பழங்கள் போன்ற மென்மையான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பெரும்பாலும் எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது.

  உடற்பயிற்சி:

  * ஓடி ஆடி வேலை செய்வதே நல்ல உடற்பயிற்சி தான். ஆனால் அவை மனதிற்கும் உடலுக்கும் சிறந்த பயிற்சி ஆகாது.
  * தினமும் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் உடற்பயிற்சி செய்வது நல்லது. நேரம் கிடைக்காதவர்கள் மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் உடற்பயிற்சி செய்யலாம்.
  * உடற்பயிற்சி என்பது வேகமாக ஓடுவது, கை கால்களை ஆட்டுவது மட்டுமே அல்ல. நடை பயிற்சியும் சிறந்த உடற்பயிற்சி தான்.

  நடைப்பயிற்சி:

  * நடை ஒரு நல்ல உடற்பயிற்சி. கடின உழைப்பாளிகளுக்கும் தினமும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும், நடைப்பயிற்சி தேவையில்லை.
  * சிலர் அருகில் உள்ள தெருக்கள் மற்றும் கடைகளுக்கு செல்ல மோட்டர் வாகனங்களை உபயோகப்படுத்துகின்றனர். இதனால் நடை என்பது இன்று அரிதாகிப்போன விஷயமாகிவிட்டது.
  * தினமும் காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
  * 40 வயதை கடந்தவர்கள் கண்டிப்பாக நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
  * காலைக் காற்றில் ஓசோன் மண்டலத்தில் ஆக்ஸிஜன் அதிகமாக நிறைந்திருக்கும். இந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது நல்லது.
  * வேகமாக நடக்கக் கூடாது. மெதுவாக நடந்தால் போதும்.
  * அவரவர் உடல் நிலைக்குத் தக்கபடி அரை மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை நடக்கலாம்.
  * நடக்கும் போது பேசிக்கொண்டோ, பாடல் கேட்டுக்கொண்டோ நடக்கக்கூடாது.
  * கைகள் இரண்டையும் வீசிக்கொண்டு நடப்பது நல்லது.
  * இறுக்கமான உடைகள் அணியக் கூடாது.
  * தினமும் 3 கி.மீ தூரமாவது நடக்க வேண்டும்.
  * இரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகள் அதிக மூச்சு வாங்கும்போது சிறிது நேரம் அமர்ந்து பின் எழுந்து நடக்கலாம்.
  * இரவில் தூக்கமில்லாதவர்கள் மறுநாள் காலையில் நடக்கக்
  கூடாது.
  * புதிதாய் நடைப்பயிற்சி செய்பவர்கள் ஆரம்பத்தில் 1 கி.மீ தூரம் நடந்தால் போதும்.
  * கடற்கரைக்கோ, மலைப் பிரதேசங்களுக்கோ செல்லத் தேவையில்லை. வீட்டிற்கு அருகே குறுநடை போட்டால் போதும்.
  * சிறிது நேரம் அமைதியாக காற்றோட்ட முள்ள இடத்தில் அமர்ந்து தியானம் செய்வது போல் சுவாசிக்க வேண்டும்.

  நடைப்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்:

  * நடைப்பயிற்சி செய்யும்போது உடம்பில் உள்ள அசுத்த நீரானது வியர்வை மூலம் வெளியேறும்.
  * சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் நெருங்காது.
  * உடம்பின் எல்லா பாகங்களுக்கும் சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும்.
  * அமைதியாக நடக்கும்போது மனம் ஒருநிலைப்பட்டு சிந்தனை சக்தியைத் தூண்டும்.
  * மூளைக்கு ரத்தம் செல்வதால் எப்போதும் புத்துணர்ச்சி பெறச் செய்யும். இனியும் கால தாமதம் செய்யாமல் உடனே நடக்கச் செல்லுங்கள், சோம்பேறித்தனத்தை விரட்டி எளிய நடைப்பயிற்சி மூலம் நோயின்றி வாழலாம்.


  Similar Threads:

  Sponsored Links
  selvipandiyan and kkmathy like this.
  ​Bhuvana Ahilan

  Love Makes Life Beautiful

 2. #2
  safron's Avatar
  safron is offline Citizen's of Penmai
  Real Name
  sumy
  Gender
  Female
  Join Date
  May 2016
  Location
  srilanka
  Posts
  625

  Re: ஆரோக்கியம் தரும் நடைப்பயிற்சி!

  Good sharing sissy
  Hereafter kandippa nadakjanum...
  Thanks..

  ahilanlaks likes this.
  Sumy..
  உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

 3. #3
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  35,278
  Blog Entries
  14

  Re: ஆரோக்கியம் தரும் நடைப்பயிற்சி!

  T F S bhuvana.......

  ahilanlaks likes this.

 4. #4
  ahilanlaks's Avatar
  ahilanlaks is offline Ruler's of Penmai
  Real Name
  Athilakshmi Ahilan ( Bhuvana )
  Gender
  Female
  Join Date
  Mar 2015
  Location
  Chennai
  Posts
  12,408

  Re: ஆரோக்கியம் தரும் நடைப்பயிற்சி!

  Quote Originally Posted by safron View Post
  Good sharing sissy
  Hereafter kandippa nadakjanum...
  Thanks..
  Welcome Sumy

  ​Bhuvana Ahilan

  Love Makes Life Beautiful

 5. #5
  ahilanlaks's Avatar
  ahilanlaks is offline Ruler's of Penmai
  Real Name
  Athilakshmi Ahilan ( Bhuvana )
  Gender
  Female
  Join Date
  Mar 2015
  Location
  Chennai
  Posts
  12,408

  Re: ஆரோக்கியம் தரும் நடைப்பயிற்சி!

  Quote Originally Posted by selvipandiyan View Post
  T F S bhuvana.......
  Welcome Selvi ka

  ​Bhuvana Ahilan

  Love Makes Life Beautiful

 6. #6
  kkmathy's Avatar
  kkmathy is offline Minister's of Penmai
  Real Name
  komathy
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  Malaysia
  Posts
  3,189

  Re: ஆரோக்கியம் தரும் நடைப்பயிற்சி!

  Very useful info, Bhuvana

  ahilanlaks likes this.

 7. #7
  ahilanlaks's Avatar
  ahilanlaks is offline Ruler's of Penmai
  Real Name
  Athilakshmi Ahilan ( Bhuvana )
  Gender
  Female
  Join Date
  Mar 2015
  Location
  Chennai
  Posts
  12,408

  Re: ஆரோக்கியம் தரும் நடைப்பயிற்சி!

  Quote Originally Posted by kkmathy View Post
  Very useful info, Bhuvana
  Thanks Mathy sis

  ​Bhuvana Ahilan

  Love Makes Life Beautiful

 8. #8
  kuttypaiya is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  USA
  Posts
  202

  Re: ஆரோக்கியம் தரும் நடைப்பயிற்சி!

  Thanks for the information!


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter