குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்யும் போது ஆபத்து நேராமல் இருக்க சில டிப்ஸ்


Winter Workout Tips - குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்யு&#-excersice.jpg


பனி மற்றும் குளிர் நிறைந்த இந்த காலத்தில் வெளியே சென்று உடற்பயிற்சி செய்வதென்பது ஒரு சிறந்த காரியம் அல்ல. பொதுவாக குளிர் காலத்தில் மிகவும் சோம்பலாகவும், சுறுசுறுப்பு இல்லாமலும் இருக்கும். இன்னும் சிறிது நேரம் தூங்கலாம் என்றும் தோன்றும். இத்தகைய சூழலில் நமது உடலின் தசைகளும் குளிரால் இறுகிய நிலையில் இருக்கும். இத்தகைய இறுகிய தன்மையையும் உடல் சோம்பலையும் உடற்பயிற்சயால் தான் சரி செய்ய முடியும். மேலும் இதன் மூலம் சுறுசுறுப்பையும் கொண்டு வர முடியும். குளிர்காலத்தில் உடலுக்கு சக்தியையும் சுறுசுறுப்பையும் தருவது உடற்பயிற்சி தான். இந்த மந்தமான குளிரில் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமானதாக உள்ளது. இவ்வாறு உடற்பயிற்சி செய்து வருவதால் இக்காலத்திலும் நமது உடல் இதமாக இருக்கும். உடற்பயிற்சி உடலின் பாகங்கள் நன்றாக வேலை செய்யவும், உடல் செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றது. உடலில் ஒரு புத்துணர்வு வந்து அந்த நாளின் வேளைக்கு நம்மை தயார் செய்யும் வண்ணம் இப்பயிற்சிகள் விளங்குகின்றன. உடற்பயிற்சிகளை தினமும் மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டியது அவசியமானதாகும். குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்யும்
போது நாம் கவனிக்க மற்றும் கடைபிடிக்க வேண்டிய சில காரியங்களைப் பற்றி இப்போது நாம் பார்ப்போம். பொதுவாக நாம் செய்யும் உடற்பயிற்சிகளில் நாம் சிறிதளவு மாற்றங்களை செய்து கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் அளவிற்கு அதிகமான பயிற்சியை மேற்கொள்ளும் போது உடலில் வலி, பிடிப்புகள் மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உடற்பயிற்சியின் போது நாம் எடுக்க வேண்டிய குளிர்காலத்திற்கேற்ற ஒரு சில பாதுகாப்பு முறைகளைப் பற்றி நாம் இங்கு காண்போம்: இதமான ஆடையை அணிதல் குளிர்காலம் பொதுவாக நமது உடலையும் சருமத்தையும் பாதிக்கக் கூடியதாக இருக்கும். நமது உடம்பை இத்தகைய குளிரில் வெளிப்படுத்தினால் சளி மற்றும் இருமல் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். நமது காதுகளை கம்பளி துணியால் மூடுவது நல்லது. ஏனெனில் காதுக்குள் குளிர்ந்த காற்று சென்றாலும் நமக்கு மிகுந்த ஆபத்தாகி விடும். இந்த காலத்தில் திறந்த வெளியில் எந்த ஒரு கவசமும் இன்றி, அதாவது மேலாடை, சாக்ஸ் மற்றும் தடியான காற்சட்டை ஆகியவற்றை போடாமல் செல்வது உடலுக்கு கேடு விளைவிக்கும். குளிர் காற்றில் அதிக அளவில் செல்லாமல் இருப்பதும் நல்லது. நீங்கள் ஒரு வேளை வெளியே சென்று உடற்பயிற்சி செய்ய முற்பட்டால் மேல் கூறிய விஷயங்களை கடைப்பிப்பது நிச்சயம் நமக்கு நன்மை தரும். மென்மையான உடற்பயிற்சி உடலில் உள்ள மூட்டு எலும்புகள் குளிர்காலத்தில் இறுகிய நிலையில் இருக்கும். தசைகளும் குளிரில் உலர்ந்து இருப்பதால் அதிக அளவில் பயிற்சி மேற்கொள்ளும் போது வலியும், வீக்கங்களும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆகையால் உங்களது சக்திக்கேற்ப உற்பயிற்சிகளை மேற்கொள்ளுவது மிகவும் அவசியமாகும். நமது தசைகளையும் எந்த ஒரு பாதிப்புமின்றி பார்த்துக் கொள்ளும் வண்ணம் நாம் கவனத்துடன் செயல்பட வேண்டும். இத்தகைய வலி மற்றும் வீக்கங்கள் வந்தாலும் அதை நாம் சரியாக கவனிக்க வேண்டும். இல்லையென்றால் அவை நமக்கு பெரும் பிரச்சினைகளை தந்து விடும். சமீப காலத்தில் ஏதேனும் இத்தகைய காயங்களோ அல்லது எலும்பு முறிவோ ஏற்பட்டிருந்தால் அவற்றையும் கருத்தில் கொணடு நாம் செயல்பட வேண்டியது அவசியமானதாகும். இத்தகைய காரியங்களை நாம் கவனத்தில் கொண்டு பயிற்சியில் மென்மையாக ஈடுபடுவது உகந்தது. குடிநீர் நாம் பயிற்சி மேற்கொள்ளும் போது காற்றில் உள்ள குறைந்த ஈரப்பதத்தின் காரணமாக தொண்டை வறண்டு போகிறது. அதுமட்டுமல்லாமல் நாம் செய்யும் பயிற்சியின் போது வெளியேரும் வியர்வை ஆகிவற்றால் உடலிலுளள் நீரின் அளவு குறைகிறது. ஆகையால் இந்த குறைபாட்டை சரி செய்ய எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியுமோ அவ்வளவு அதிகமாக நாம் தண்ணீரை அருந்த வேண்டும். தண்ணீர் இதற்கு மட்டுமல்லாமல், இதர பிரச்னைகளுக்கும் பெரும் தீர்வாக அமைகின்றது. ஒருவேளை நாமது உடம்பில் போதுமான அளவு தண்ணீர் இல்லை என்றால் நிறைய சிக்கல்களை நாம் சந்திக்க நேரும். நாம் செய்யும் பயிற்சிகளின் இடையில் தேவைபடும் போது சிறிதளவு தண்ணீர் குடிப்பது சிறந்த வழியாகும். லேசான உடற்பயிற்சி குளிர்காலத்தில் யோகா, நடனம் மற்றும் தியானம் ஆகிய வீட்டுக்குள் இருந்தபடி செய்யக் கூடிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் அவை சிறந்த பலன்களை தருகின்றன. இந்த வழிமுறைகள் உடலை கட்டுகோப்பாக வைப்பது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகின்றன. அதுமட்டுமல்லாமல் குளிர்கால சூழலில் நாம் வெளியே செல்லாமல் இந்த பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் மற்றும் மிகுந்த பலனையும் தரக்கூடியதாகவும் இருக்கும். இவை உடலுக்கு மட்டுமல்லாமல் உள்ளம் மற்றும் சருமத்திற்கும் நன்மை தருவதாக அமைகின்றன. மன அழுத்தத்திற்கு விடை கொடுங்கள் பெருமளவில் பயிற்சி செய்து உடலை வருத்திக் கொள்ளாதீர்கள். தரையில் இருந்த படி செய்ய கூடிய பயிற்சிகளை செய்வது நல்லது. கூடிய வரையிலும் இயந்திரங்கள் மற்றும் எடைகளை தூக்கி அதன் மூலம் செய்யும் உடற்பயிற்சிகளை தவிர்ப்பது நல்லது. குளிர் காலத்தில் செய்யக் கூடிய இத்தகைய பயிற்சிகளால், உடலில் வலிகள் ஏற்பட்டு மிகுந்த மன உளைச்சலையும் காயங்களையும் ஏற்படுத்த நேரலாம்.

Similar Threads: