Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By vaishnnavi
  • 1 Post By datchu

kaaleeswara mudra


Discussions on "kaaleeswara mudra" in "Exercise & Yoga" forum.


  1. #1
    vaishnnavi's Avatar
    vaishnnavi is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2014
    Location
    chennai
    Posts
    502

    kaaleeswara mudra

    நம் மனதில் மண்டிக்கிடக்கும் தீய எண்ணங்களை- அதர்மப் போக்குகளை அழித்து, மனதைப் பண்படுத்தும் ஒரு அருமையான பயிற்சியாகும். எனவேதான் இந்த முத்திரைக்கு நம் முன்னோர்கள் "காளீஸ்வர முத்திரை' என்று பெயரிட்டனர்.

    இந்த முத்திரை நமது மனதிலுள்ள தீமைகளை அழிப்பதோடு, நமது சக்தி உடலில்- குறிப்பாக மனோமய கோசத்தில் தங்கி நிற்கும் எதிர்மறை எண்ணப் பதிவுகளையும் அழித்துவிடும். மனோமய கோசம் தூய்மையடையும். செய்முறை :

    ஒரு விரிப்பில் அமைதியான இடத்தில் அமர்ந்து மூன்று முறை மூச்சை இழுத்துவிடுங்கள். மனதையும் உடலையும் அமைதிப்படுத்துங்கள். இரண்டு கை நடுவிரல்களின் நுனிப் பகுதிகளை ஒன்றாக இணையுங்கள். பெருவிரல்களை விரித்து நுனிப்பகுதிகளை இணையுங்கள்.

    பிற மூன்று விரல்களையும் மடக்கி, அடுத்த கையின் மடக்கிய விரல்களை தொட்டுக் கொண்டிருக்கும்படி வைத்துக்கொள்ளுங்கள். பெருவிரல்கள் உங்களது நெஞ்சுப் பகுதிக்கு அருகில் (அனாஹதச் சக்கரம்) இருக்கும்படி வைத்துக்கொள்ளுங்கள். மனதை ஒருமுகப்படுத்தி, நீங்கள் செய்யும் முத்திரையின்மீது குவியுங்கள்.

    மனம் ஒருமுகப்படுதல் எவ்வளவு அதிகமாக உள்ளதோ, அவ்வளவு அதிகமாக முத்திரையின் பலன்களும் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். காளீஸ்வர முத்திரையை தினமும் 20 நிமிடங்கள் வீதம் 15 நாட்கள் செய்யும்போதே பலவிதமான உடல்ரீதியான- மனரீதியான மாற்றங்கள் உங்களுக்குள்ளே நிகழுவதை நீங்கள் உணரமுடியும். பத்மாசனம், அர்த்த பத்மாசனம், வஜ்ராசனம் ஆகிய ஆசனங்களில் அமர வேண்டும். ஆசனங்களில் பரிச்சயமில்லாதவர்கள் கால்களை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து செய்யவும்.
    பலன்கள் :

    மனதிலுள்ள அழுக்குகளும் தீய சிந்தனைகளும் படிப்படியாக அழிந்து மறையும். கோபம், வெறுப்பு, சுயநலம், பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்கள் மனதிலிருந்து படிப்படியாக அகலும். அன்பு, பாசம், கருணை, இரக்கம், பொதுநலம் நாடுதல் போன்ற நல்ல குணங்கள் மனதில் உருவாகும். தன்னம்பிக்கை பெருகும்.

    மனதிலிருக்கும் தேவையற்ற பயங்கள், தயக்கங்கள் மறைந்து, எந்தச் சூழலையும் தைரியமாக எதிர்கொள்ளும் மனத் திண்மை, தைரியம், தன்னம்பிக்கை ஆகியவை உருவாகும். எதிர்மறை எண்ணப் பதிவுகளால் உருவான நோய்களும் படிப்படியாகக் குறைந்து, சில மாதங்களில் முற்றிலுமாக மறைந்துபோகும்.

    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini and datchu like this.

  2. #2
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: kaaleeswara mudra

    Good sharing Vaishnavi.

    vaishnnavi likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter