Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Things to be noted before doing Pranayama - பிராணயாமம் செய்ய தொடங்கும் முன் க


Discussions on "Things to be noted before doing Pranayama - பிராணயாமம் செய்ய தொடங்கும் முன் க" in "Exercise & Yoga" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Cool Things to be noted before doing Pranayama - பிராணயாமம் செய்ய தொடங்கும் முன் க

    பிராணன், உயிர் ஆற்றல் எனப்படும். இதை ஒழுங்குபடுத்துவதே பிராணயாமம். பிராணயாமம் என்பது வெறும் சுவாசம் அல்ல. சுவாச முறை (மூச்சை உள்ளிழுத்தல், வெளிவிடுதல், நிறுத்திக் கொள்ளுதல்) உயிராற்றலை தன்னிடத்து கொண்டிருக்கவில்லை.

    பிராணயாமம் சுவாசத்தை ஒழுங்குபடுத்துகிறது. அத்துடன் புலன்களையும், மனத்தையும் செம்மைப்படுத்துகிறது. பிராணயாமத்தினால் நாம் உடலை ஆரோக்கியமானதாகவும், வலுவுள்ளதாகவும் ஆக்கிக் கொள்ளலாம். பிராணயாமத்தினால் உடலில் தேங்கிக்கிடக்கும் அதிகப்படியான கொழுப்பு கரைக்கப்படுகிறது. பிராணயாமத்தில் ஈடுபடுபவர்கள் சளி, இருமல் போன்ற நோய்களிலிருந்து விடுபடுவார்கள்.

    பிராணயாமத்தை தொடர்ந்து செய்து வருபவர்களின் முகத்தில் நல்ல தேஜஸ் தோன்றும். பிராணயாமப் பயிற்சினால், நுரையீரல் முழுவதும் போதிய பிராணவாயுவை பெறுகிறது. அதற்கு கிடைக்கும் ரத்த்தின் அளவும், தரமும் அதிகமாகிறது. உடலின் எல்லாத்திசுக்களுக்கும், செல்களுக்கும் ஏராளமான சுத்தரத்தமும், நிணநீரும் கிடைக்கின்றன.

    உயிர்களின் வளர்ச்சியை பிராணயாமம் துரிதப்படுத்துகிறது. பிராணயாமப் பயிற்சிகளை செய்வதற்கு குறிப்பிட்ட யோக ஆசன நிலைகள் சிறந்தவை. எல்லா பிராணயாமப் பயிற்சிகளையும் ஏதாவது ஒரு உட்கார்ந்திருக்கும் நிலையில் தான் பயிற்சி செய்ய வேண்டும்.

    அப்போது முதுகு, கழுத்து, தலை ஆகியவை நேராக இருக்க வேண்டும். பிராணயாமம் செய்யும் முன் உடலையும், உள்ளத்தையும் அமைதியாக வைத்திருக்க உதவும் சவாசனத்தை செய்து பிறகே பிராணயாமத்தை தொடங்க வேண்டும்.

    யோகசானங்கள் செய்வதற்கு பலவித கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். ஆனாலும் சவாசனம் என்ற சாந்தி ஆசனத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு எந்த கட்டுப்பாடுகளுகளும் இல்லை. குறிப்பாக நோயினால் அவதிப்படுபவர்கள் இந்த சவாசனத்தை செய்வதன் மூலம் நோயின் வலியையும், மனக்குழப்பத்தையும் தணித்துக் கொள்ளலாம். மிகச்சிறந்த ஆசனம் இது.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    rifan's Avatar
    rifan is offline Registered User
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Nathasaa Shiyan
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Sri Lanka
    Posts
    8,176
    Blog Entries
    140

    Re: பிராணயாமம் செய்ய தொடங்கும் முன் கவனிக்

    vayathellai kattuppaadukal illaatha aasanam
    pakirthalukku nanri


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter