உடற்பயிற்சி என்றால் என்னவெல்லாம் செய்யலாம்?

தோட்டத்தில் செடிகளை பராமரிப்பது, தண்ணீர் ஊற்றுவது என 30 முதல் 45 நிமிடங்கள்.

வீட்டில் கூரை, ஜன்னல், கதவுகளை துடைப்பது, கழுவுவது என 45 முதல் 60 நிமிடங்கள்.

காரை கழுவி, துடைத்து, மெருகேற்றுவது 45 முதல் 60 நிமிடங்கள்.

ஐந்து மைல் தூரம் சைக்கிள் ஓட்டுவது - 45 நிமிடங்கள்.

நண்பர்களோடு கைப்பந்து விளையாடுவது - 45 நிமிடங்கள்.

குழந்தைகளோடு கால்பந்து விளையாடுவது - 30 முதல் 45 நிமிடங்கள்.

கூடைப்பந்து மைதானத்தில் தொடர்ச்சியாக கூடையில் பந்தை போடுவது - 30 நிமிடங்கள்.

பிடித்த பாடல்களுக்கு நடனம், மேலைநாட்டு நடனம், பரதம், குச்சுப்பிடி, மோகினியாட்டம் என ஏதேனும் நடன வகைகள் - 30 நிமிடங்கள்.

3 கிலோ மீட்டர் தூரத்தை 30 நிமிடங்களில் நடப்பது. 20 நிமிடங்கள் நீந்துதல்.

வீட்டைச் சுற்றி விழுந்து கிடக்கும் இலை, தழைகளை கூட்டி சுத்தப்படுத்துவது - 30 நிமிடங்கள்.

குடும்பத்தினரோடு இறகுப்பந்து விளையாடுவது - 45 நிமிடங்கள்.

மாடிப்படிகளில் ஏறி இறங்குவது - 20 நிமிடங்கள். ஸ்கிப்பிங் - 15 நிமிடங்கள்.

மெது ஓட்டம் - 3 கிலோ மீட்டர் தூரம் - 20 முதல் 30 நிமிடங்கள்.

Similar Threads: