பெண்களுக்கு மூன்று நாட்கள் மாதவிடாய் பிரச்சனை மட்டுமல்லாது அவர்களது உடல்நிலை ஒவ்வொரு காலநிலை மாற்றத்தின்

போதும் ஏதாவது ஒரு உடல்நல பிரச்சனையை சந்திக்கிறது. பெண்களின் அனைத்து உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும்

தீர்வளிக்கும் சிறந்த உணவுகள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிடிப்புகளுக்கு பெண்கள் கீரை வகைகள், நார்ச்சத்து மற்றும் குறைந்து கொழுப்புச்சத்து,

தானியம் போன்ற உணவு வகைகளை உட்கொள்ளும் போது இந்த பிரச்சனைகளில் இருந்து தீர்வுக் காணலாம். நார்ச்சத்து

நிறைந்த உணவுகள் சீரிய முறையில் தீர்வளிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தயிர், பீன்ஸ், ஓட்ஸ் போன்ற உணவுகளை நீங்கள் சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனைகளுக்கு நல்லதோர் தீர்வு காண

இயலும். மற்றும் அதிக அளவில் தண்ணீர் அருந்துவதும் பயனளிக்கும். பொதுவாகவே தினமும் 4 லிட்டர் தண்ணீர் பருகி வந்தால்

உடல்நலம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.

தூக்கமின்மையை பிரச்சனையால் அவதிப்படும் பெண்கள் அன்னாசிப்பழம், ஆரஞ்சு மற்றும் வாழைப்பழங்கள் சாப்பிட்டு

வந்தால் தீர்வுக் காண முடியும். இந்த மூன்று பழங்களும் சீரம் மெலடோனின் எனப்படும் நமது உடலில் தூக்கநிலையை

கட்டுப்படுத்தும் ஹார்மோனை சீர்செய்கிறது. இதனால் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படும் பெண்கள் இந்த பழங்களை

சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வினை பெற முடியும்.

பெண்கள் கருப்பட்டி டீ மற்றும் பசலை கீரை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும். மிகுந்த தலைவலியாக நீங்கள் உணரும்

பட்சத்தில் அன்றைய நாளில் பசலை கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் வைட்டமின் சத்துகள் உடல்நிலை

புத்துணர்ச்சி அடைய உதவுகிறது.

வெண்ணெய்பழம் (Avocado), ப்ளுபெர்ரி, இஞ்சி, நட்ஸ், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்ற உணவுகள் தசை வலி

பிரச்சனைகளுக்கு நல்ல பயன் தரும். இவைகளில் பொட்டசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துகள் இருக்கின்றன. மற்றும்

இவைகளில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தசை வலிகளை குறைக்க உதவுகிறது. பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம்Similar Threads: