உடல் எடையை குறைக்க நீச்சல் பயிற்சி

நாம் பல உடற்பயிற்சிகளை கேள்விப்பட்டு இருக்கிறோம். சில பேர் பலவித பயிற்சிகளை செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கின்றோம். எல்லா பயிற்சியிலும் ஒரு நிவாரணம் இருக்கும்.இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக உடலில் உள்ள அனைத்து பாகங்களும் வேலை செய்ய நீச்சல் என்னும் உடற்பயிற்சி பயன்படுகிறது. முக்கியமான செய்தி நீச்சலும், சைக்கிள் ஓட்டுவதும் வாழ்க்கையில் ஒரு முறை கற்றால் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம்.

நீச்சலின் பயன்கள்:

நீச்சல் என்பது ஒரு வகையான கலை மட்டும்லல நல்ல உடற்பயிற்சியும் தான்.

தினமும் 1 மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்தால் உடலில் உள்ள ஊளைச் சதைகள் குறையும்.

கை, கால் மற்றும் தொடைப்பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறும்.

நன்கு பசி எடுக்கும். கை, காலை குடைச்சல் மற்றும் மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

இரத்த ஓட்டம் சீராகிறது.

நன்கு மூச்சு விடுவதற்கு நுரையீரல் பகுதி விரிந்து காணப்படும்.

ஆழ்ந்த உறக்கத்திற்கு நீச்சல் மாபெரும் மருந்தாகும்.

உடலுக்கும், உள்ளத்திற்கும் பயன்தரும்.

Similar Threads: