செய்யும் முறை

முழங்கால்களில் மண்டியிட்டு நின்று கொள்ள வேண்டும். வலது காலை முன்பக்கமாக அதிக தூரத்திற்கு நீட்டி, பின்பு மடக்கி வலது பாதத்தை ஊன்றி நிற்கவும். இடுப்பு பகுதியை நன்றாக முன்பக்கமாக தள்ளவும்.

இடது கால் பின் பக்கமாக நீண்டு இருக்க வேண்டும்

இரண்டு உள்ளங்கைகளையும் முகத்திற்கு நேராக கூப்பி கும்பிட்ட நிலையில் சேர்த்து வைத்து கொள்ளவும்

சுவாசத்தை உள் இழுத்தவாறு கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி பின் பக்கமாக கொண்டு செல்லவும்

உள்ளங்கைகள், மார்பு, முகம் இவை ஆகாயத்தை பார்த்த வண்ணம் இருக்க வேண்டும்

முதுகு பகுதி பின் பக்கமாக நன்றாக வளைந்திருக்க வேண்டும்

அதே நிலையில் ஐந்து சுவாசங்கள் எடுக்க வேண்டும்

சுவாசத்தை வெளியிட்டவாறு முன் பக்கமாக கைகளை கொண்டு வந்து ஆசனத்தை முடித்து முழங்கால்களில் நிற்கவும்

இப்போது இடது காலை முன்னால் அதிக இடைவெளி விட்டபடி தூக்கி வைத்து இடுப்பை முன் பக்கமாக கொண்டு சென்று வலது காலை பின் பக்கமாக நீட்டிய நிலையில் வைத்து கொள்ளவும்

கைகளை கும்பிட்ட நிலையில் வைத்து சுவாசத்தை உள் இழுத்தவாறு முன் போல செய்யவும்

ஆசனம் முடித்து சற்று நேரம் ஓய்வு எடுக்கவும்.

சந்திரனை பார்க்கும்போது ஒரு மகிழ்ச்சி ஏற்படும். பிறை சந்திரன், முழு நிலவு இரண்டுமே உள்ளத்திற்கு உவகை தரவல்லது.

சந்திர நமஸ்காரம் மனக்குழப்பங்களை நீக்கி அலைகள் இல்லாத சமுத்திரம் போல மனதிற்கு ஒரு பேரமைதியை தருகிறது.

Similar Threads: