செய்முறை :

விரிப்பில் மல்லாந்து படுத்துக் கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். உடலை ஆசுவாசமாக வைத்திருங்கள். ஆழமாக மூச்சை இழுத்து விடலாம். கால்களை 90 டிகிரி மேலே தூக்குங்கள். இதைச் செய்ய இயலாதவர்கள் சற்றே மடித்த நிலையிலும் தூக்கலாம். தூக்கிய காலை மடித்து அடிவயிறு, வயிறு ஆகியவற்றின் மேல் படியும்படி வையுங்கள்.

மடித்த கால்களைக் கட்டிக்கொள்ளுங்கள். தொடைகள் இரண்டும் வயிற்றுப் பகுதியை நன்கு அழுத்தியிருக்க வேண்டும். தலையைத் தூக்கி முழங்காலில் தாடை படும்படி வைக்க வேண்டும். மூச்சு சீராக இருத்தல் நலம். தொடைகளை வயிற்றோடு சேர்த்து வைக்க முடியாவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்யலாம். ஒரு சில நாட்களில் வசப்படும்.

இல்லாவிட்டாலும் முடிந்தவரை அழுத்தினால் போதும். இதே நிலையில் உடலை ஆசுவாசப்படுத்த முடிந்தால் நல்லது. பின்னர் முதலில் கழுத்தை மெதுவாகக் கீழே வைக்க வேண்டும். பிறகு கைகளை விடுவியுங்கள். மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டே கால்களை மெதுவாக மேலே உயர்த்துங்கள். முடிந்தால் 90 டிகிரி. அல்லது முடிந்த அளவு. மூச்சை வெளியில் விட்டபடி கால்களை மெதுவாகக் கீழே இறக்குங்கள்.

பலன்கள் :

அடிவயிறு, தொடைகள், இடுப்பு, பின்பகுதி ஆகியவற்றுக்கு வலு சேர்க்கும். கழுத்துக்குப் பயிற்சி கிடைக்கும். அடிவயிறு அழுத்தப்படுவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது உள் உறுப்புகளுக்கு நல்லது. பெருங்குடலில் தேங்கியிருக்கும் வாயுவை வெளியேற்றும். ஜீரண உறுப்புகள் நன்கு வேலை செய்யும். மலச்சிக்கல் குறையும் / நீங்கும். முதுகின் அடிப்புறத் தசைகளுக்கு வலு சேரும். முதுகெலும்புக்கும் தண்டுவடத்துக்கும் ஆசுவாசம் கிடைக்கும்.


1 1
Similar Threads: