Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree55Likes

Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்


Discussions on "Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்" in "Exercise & Yoga" forum.


  1. #11
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

    ம்ருத்யூ சஞ்சீவி முத்திரை


    ஹெல்த்/முத்திரைகள்... சூட்சமங்கள்!
    டல் முழுவதுக்கும் ரத்தத்தைப் பாய்ச்சிக்கொண்டிருக்கும் உறுப்பு இதயம். நாம் தூங்கும்போதும் துடிப்போடு செயல்படும்; ஓய்வின்றி உழைக்கும்;

    ஒரு நிமிடத்துக்கு 70 முறைகளுக்கு மேல் துடிக்கும். தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து, ரத்தக் குழாய்களில் படிந்து, அடைப்பை ஏற்படுத்துகிறது. மனஅழுத்தத்தால் இதயம் துடிக்கும் அளவு முறையற்றதாகி, இதயத் தசைகளும் பாதிக்கப்படுகின்றன. இதயத்தைப் பாதுகாக்க, ஒப்பில்லாத மருந்து முத்திரை வடிவில் நம் கைவிரல்களிலேயே உள்ளது. இந்த முத்திரைக்கு ‘ம்ருத்யூசஞ்சீவி’ எனப் பெயர். ‘ம்ருத்யூ’ என்றால் மரணம். ‘சஞ்சீவி’ என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, ‘மரணமில்லாதப் பெருவாழ்வு’ என்பது இந்த முத்திரையின் பெயர்.



    கட்டளைகள்

    தரையில் நேராக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து செய்யலாம்; நாற்காலியில் நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து, பாதங்களைத் தரையில் பதித்துச் செய்யலாம்.

    காலை, மாலை என வெறும் வயிற்றில் 10-30 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    இதய அறுவைசிகிச்சை செய்தவர்கள், முத்திரை பயிற்சியாளரின் ஆலோசனைக்குப் பிறகே செய்ய வேண்டும்.

    முத்திரையைச் செய்யத் தொடங்கும்போது, மிதமாக வலி வருவதுபோலத் தெரியும். ஏனெனில், முதன்முறையாக சீரான ரத்த ஓட்டம் செல்வதால் ஏற்படும் அறிகுறி இது. பின் வலி மறையும். தொடர்ந்து செய்துவர, நல்ல பலன்களை உணரலாம்.

    அவசர காலத்தில், அதாவது நெஞ்சுவலி ஏற்பட்டால் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் செய்யலாம். உயிர் காக்க உதவும் முத்திரை இது.

    மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற சந்தேகம் தோன்றிய உடனேயே, இம்முத்திரையைச் செய்யத் தொடங்கவும். வலி, படபடப்பு, நெஞ்சு எரிச்சல் குறையும். மருத்துவரை அணுகி சிகிச்சை தொடங்கும் வரை முத்திரையை விடாமல் செய்வது நல்லது.

    பலன்கள்

    படபடப்பு, சீரற்ற சுவாசம், பதற்றம் மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு பிரச்னைகள் சரியாகின்றன.

    சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது.

    ரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்து, தசைகளை வலுவாக்கும்.

    உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

    அதிகமாக வியர்த்தல், தலை சுற்றுதல் போன்ற பிரச்னை இருக்கும்போது, இந்த முத்திரையைச் செய்தால் உடனடி பலன் தெரியும்.

    வாயு அதிகமாவதால் ஏற்படும் வயிற்று உப்புசம், வயிற்றைப் பிரட்டுதல், மலச்சிக்கல், மலம் மற்றும் வாயு தங்கியிருந்து வலி ஏற்படுதல் ஆகியவை குணமாகும்.

    பல்வலி, குதி்கால் வலி, மூட்டுக்களின் உள்ளே குத்துவது போன்ற வலி, கெண்டைக்காலில் தசை இறுக்கம், வலி மற்றும் பிடித்துக்கொள்ளுதல், சிறுநீர் சரியாகப் போகாமல் இருத்தல் ஆகியவற்றுக்குப் பலனளிக்கும்.

    நெஞ்சு வலி, வாயுப்பிடிப்பு, நெஞ்சு எரிச்சல், குத்துதல் போன்றவை குணமாகும்.

    ஹார்ட் பிளாக் பிரச்னை இருப்பவர்கள், தொடர்ந்து செய்துவர அறுவைசிகிச்சையைத் தடுக்க வாய்ப்புகள் அதிகமாகும்.

    40 வயதைக் கடந்தவர்கள், மன அழுத்தச் சூழலில் இருப்பவர்கள், உடல் பருமனானவர்கள், மூச்சுத் திணறல் உள்ளவர்கள் தினமும் இந்த முத்திரையைச் செய்துவர, இதய நோய் பாதிப்பிலிருந்து முழுமையாக தற்காத்துக்கொள்ள முடியும்.



    எப்படிச் செய்வது?
    ஆள்காட்டி விரலை மடக்கி, கட்டை விரல் அடிரேகையைத் தொட வேண்டும். கட்டைவிரல் நுனியுடன் மோதிரவிரல் மற்றும் நடுவிரல் நுனியை சேர்த்து வைக்கவும். சுண்டு விரல் நேராக நீட்டி இருக்க வேண்டும்.


    Sponsored Links
    Last edited by chan; 19th Sep 2015 at 04:20 PM.
    gkarti, Dangu and ishitha like this.

  2. #12
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

    Very useful details. Thanks Lakshmi

    chan likes this.

  3. #13
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

    மூட்டுகளைப் பாதுகாக்கும் சந்தி முத்திரை


    நம் உடலின் அசைவுகளுக்கும் இயக்கத்துக்கும் உதவுபவை மூட்டுகள். இரண்டு எலும்புகளை ஆதாரமாகக்கொண்டு, நடுவில் வட்ட (Disc) வடிவில் இருக்கும். தசைநார்கள், சவ்வு ஆகியவற்றால் ஒன்றோடு ஒன்று இணைந்து, அதைச் சுற்றிலும் ஈரப்பசையான திரவத்தால் (Synovial fluid) மூடப்பெற்று, ரத்தமும் நரம்புகளும் அதன் வழியாகச் செல்லும் ஓர் அற்புத இயற்கைப் படைப்பு.

    ஒரு காலத்தில் 60 வயதில் வந்த மூட்டு வலிப் பிரச்னை, இப்போது 30-40 வயதுக்குள்ளேயே வந்துவிடுகிறது. உடலுக்கு வந்து செல்லும் எத்தனையோ பிரச்னைகளில், மூட்டு வலி மட்டும் நிரந்தரமாகத் தங்கிவிடுகிறது.

    வலிக்குக் காரணத்தைக் கண்டறிந்து குணப்படுத்தாமல், தொடர்ந்து வலி நிவாரணி மாத்திரைகளை மட்டுமே சாப்பிடுவதால், சிறுநீரகப் பாதிப்பு எனும் பின்விளைவு, நம்மைப் பின்தொடர்கிறது. இதற்குத் தீர்வாக மருந்தில்லா மருத்துவமாக, அதாவது நம் கைகளிலே இருக்கக்கூடிய இயற்கை அளித்த கொடைதான், ‘சந்தி முத்திரை.’

    மண் மற்றும் ஆகாயம் ஆகிய இரு பூதங்களும் சமன்படுவதால் வலுவற்ற, தளர்வான மற்றும் இறுக்கமான மூட்டுகளுக்கு நிவாரணம் அளித்து அவற்றை உறுதியாக்கும் வேலையை சந்தி முத்திரை செய்கிறது.

    கட்டளைகள்
    நாற்காலியில் அமர்ந்து, இரண்டு பாதங்களையும் தரையில் ஊன்றிச் செய்யலாம். இயன்றவர்கள் சப்பளங்கால் போட்டு அமர்ந்தும் செய்யலாம். யோகா செய்து பழகியவர்கள் வஜ்ராசனத்தில் செய்தால், சிறந்த பலன் பெற முடியும். வெறும் வயிற்றிலோ, உணவு உண்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின்போ செய்யலாம்.

    முத்திரையை 20 - 45 நிமிடங்கள் வரை செய்யலாம். பல ஆண்டுகளாக மூட்டு வலியால் அவதிபடுவோர், ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். ஓய்வு நேரத்திலும் செய்யலாம்.
    எப்படிச் செய்வது?
    வலது கை: பெருவிரல் நுனியுடன் மோதிர விரல் நுனியை சேர்த்துவைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

    இடது கை: பெருவிரல் நுனியுடன் நடுவிரல் நுனியை சேர்த்துவைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

    பலன்கள்
    *முழங்கால் மூட்டு வலி, இடுப்பு வலி, மணிக்கட்டு மற்றும் சிறுமூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கங்களைக் குறைக்கும்.

    *மூட்டுகளில் தேங்கும் வாயுவே வலி வரக் காரணம். அதிகப்படியான வாயுவைக் குறைத்து, வலியைக் குறைக்கும்.


    *வயோதிகத்தால் மூட்டுகளில் உள்ள ஈரப்பசை குறைவதால் வறட்சி ஏற்பட்டு, நடக்கும்போதும், காலை நீட்டி மடக்கும்போதும் சத்தம் கேட்கும். இதற்கு சந்தி முத்திரை செய்தால், மூட்டுகளில் ஈரப்பசை உருவாகி, மூட்டுக்கள் ஒன்றோடு ஒன்று உரசாமல் தடுக்கும்.


    *அதிக தூரம் நடப்பவர்கள், மலையேறுபவர்கள், நின்றுகொண்டே வேலைபார்ப்பவர்கள் போன்றோர், சந்தி முத்திரை செய்ய உடனடியாக வலி குறையும்.


    *இடுப்பு எலும்புத் தேய்மானம், சவ்வு விலகல், ஈரப்பசை குறைதலுக்கு சிறந்த பலன் அளிக்கிறது.


    *மூட்டுகளைச் சுற்றியுள்ள தசை நார் கிழிவுகளில் ஏற்படும் பிறழ்வு, வலி, வீக்கத்துக்குத் தீர்வு கிடைக்கிறது.


    *வஜ்ராசனத்தில் செய்துவந்தால், 60 வயதில்கூட மூட்டு வலி வராமல் தடுக்க முடியும்.


    *சிக்குன்குனியா, வாதஜுரம், டெங்கு போன்ற முடக்குவாதக் காய்ச்சல்களில் மூட்டு வலி அதிகமாக இருக்கும். காய்ச்சல் இருக்கும் போதே படுத்த நிலையிலோ அல்லது உட்கார்ந்த நிலையிலோ முத்திரை செய்துவர, உடல் அசதி, வலி, காய்ச்சலால் ஏற்படும் மூட்டுப் பாதிப்புகள் குறையும்.


    *முழங்கால் மூட்டுகளில் ஏற்படும் தசைநார்க் கிழிவு (Ligament tear), மீண்டும் ஒன்றுகூடப் பல நாட்கள் ஆகும். வலியும் தீவிரமாக இருக்கும். இதற்கு சந்தி முத்திரை சிறந்த தீர்வு.


    *பல வருடங்களுக்கு முன் சிக்குன்குனியாவால் வந்த முடக்குவாதம் மற்றும் மூட்டுவலி, மூட்டுகள் வளைதல் போன்ற பிரச்னை இருப்போர், தொடர்ந்து மூன்று மாதங்கள் இந்த முத்திரையைச் செய்துவர, பரிபூரண பலனை உணர முடியும்.


    *தரையில் உட்கார முடியாதோர், வயோதிகத்தால் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமல் தவிப்போர், இந்த முத்திரையைச் செய்யலாம்.


    Raji.v, gkarti and ishitha like this.

  4. #14
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

    Very good info, Letchmy.
    Thanks for sharing.

    chan likes this.

  5. #15
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

    உடல் எடை குறைக்கும் சூரிய முத்திரை

    உடல்பருமனாக இருப்பதுதான் அனைத்து நோய்களுக்கும் முதல் காரணம். அதிக உடல் எடையால் இதய நோய், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வலி, மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் வருகின்றன. உடல் எடையைக் கட்டுக்குள்வைத்தாலே,

    பல்வேறு நோய்கள் வராமல் தடுத்துவிடலாம். இதற்குத் துணைபுரிவது சூரிய முத்திரை. யோகப் பயிற்சியில் சூரிய நமஸ்காரம் செய்யும் பலனை இந்த முத்திரை அளிக்கும்.

    பஞ்ச பூதங்களில் ஒன்றான தீ, கழிவுகளை எரித்து அழிக்கும் தன்மைகொண்டது. உடலில் நெருப்பை அதிகப்படுத்தும் இந்த முத்திரைக்கு, ‘சூரிய முத்திரை’ என்று பெயர். உடலில் உள்ள திடக்கழிவுகளை எரித்து அழிப்பதே சூரிய முத்திரை. உண்ணும் உணவில் முழுமையாகச் செரிக்கப்படாதவை, கொழுப்பாக மாறுகின்றன.

    நெருப்பு என்னும் சக்தியே செரிமானத்துக்குத் துணைபுரிந்து, உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராமல் உடலை சுறுசுறுப்பாகவும் லேசாகவும் வைத்திருக்க உதவுகிறது.


    கட்டளைகள்

    சப்பளாங்கால் இட்டு 5-10 நிமிடங்கள் வரை செய்தால் போதும். தினமும் இருவேளை, வெறும் வயிற்றில் செய்வது சிறந்த பலனைத் தரும்.
    முத்திரையைச் செய்யும் முன், அருகில் ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்துவைத்த பின் முத்திரை செய்யலாம். முத்திரை செய்து முடித்த உடனே தண்ணீரைக் கட்டாயம் குடிக்க வேண்டும்.

    அதிக உடல் எடையுடன் இருப்பவர், முத்திரை செய்யும்போது, கை, கால், தொடைகளில் வலி ஏற்படலாம். தொடர்ந்து செய்யச் செய்ய, படிப்படியாக வலி குறைந்துவிடும். வலி இருக்கும்போது, தண்ணீர் அருந்துவது முக்கியம்.
    உச்சி வெயில் நேரம், வெயிலில் பயணம் செய்யும் சமயங்களில், இந்த முத்திரையைத் தவிர்க்கவும். கோடையில் தினமும் ஒரு முறை செய்தால் போதும்.

    நீர்த்தன்மை குறைந்தவர்கள், கருவளையம், ஒல்லியான உடல்வாகு, படபடப்பு, உடல் உஷ்ணம், ஹைப்பர் தைராய்டு, கல்லடைப்பு, நீர்க்கடுப்பு, வாய்ப்புண், வெள்ளைப்படுதல், கண் சிவப்பு, ஒற்றைத் தலைவலி ஆகிய பிரச்னை உள்ளவர்கள், இந்த முத்திரையைத் தவிர்க்கலாம்.

    எப்படிச் செய்வது?
    மோதிர விரலை மடக்கி, உள்ளங்கையின் நடுவில் தொட வேண்டும். கட்டை விரலால் மோதிர விரலை மிதமாக அழுத்த வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

    பலன்கள்
    உடலின் வெப்ப நிலையை அதிகரித்து, பசியைத் தூண்டும். செரிமானத்துக்கு உதவும். எப்போதும் உடலை லேசாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும்.


    உடலில் அதிகக் கொழுப்புச்சத்து உடையவர்களுக்கு முத்திரையைச் செய்யத் தொடங்கிய ஒரு மாதத்தில், கெட்ட கொழுப்பு குறையத் தொடங்கும்.
    அதிக உடல் எடையால் சிலருக்குக் குழந்தைபேறு தள்ளிப்போவதை இந்த முத்திரை தடுக்கும்.

    ஹைப்போதைராய்டு பிரச்னை உள்ளவர்கள், ஒரு வேளை மட்டும் 20 நிமிடங்கள் முத்திரையைச் செய்ய, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி, உடலைச் சுறுசுறுப்பாக்கும். சரும வறட்சி, குளிரைத் தாங்க முடியாதது, மந்த குணம், மனச்சோர்வு, நாக்கு தடித்தல், தொண்டை வீக்கம் ஆகியவை சரியாகும்.

    பார்வைத்திறன் மேம்படும். கண்புரை வராமல் தடுக்கும். கண்களைச் சுற்றி நீர் கோத்ததுபோல இருப்பவர்களுக்கு, வீக்கம் குறையும்.

    ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, கொழுப்புச் சேருதல் (Atherosclerosis) ஆகியவற்றைச் சரிசெய்து, சீரான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுக்கும்.

    Last edited by chan; 19th Oct 2015 at 01:34 PM.
    sumitra, RathideviDeva and ishitha like this.

  6. #16
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

    It is of really a great help for reducing our weight! thank you!

    chan likes this.

  7. #17
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

    காய்ச்சலை போக்கும் லிங்க முத்திரை!


    முத்திரைகள் என்பவை தந்திர யோகத்தின் ஒரு பகுதி. தந்திரம் (தன் + திறம்) என்பது, கடினமான செயலைக்கூட தன் திறத்தால் செய்து முடிக்கக்கூடியது. நாட்பட்ட நோய்கள், அவசரகாலத் தேவை, தீராத நோய்கள் போன்றவற்றை எளிதாகச் சரிசெய்யும் தன்மை கொண்டது.

    லிங்க முத்திரை
    லிங்கம், வெப்பத்தின் வடிவமாகக் கருதப்படுகிறது. இது, வெப்பம் மற்றும் உயிர்சக்தியைத் தன்னிடத்தில் உள்ளடக்கி, நோய் க்கிருமிகள், உடலில் தேங்கி உள்ள கழிவுகளை அகற்றவல்லது. பல மணி நேரம் நடைப்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வியர்த்தல் உள்ளிட்ட பலனை சில நிமிடங்களில் இந்த முத்திரை தந்துவிடும்.


    எப்படிச் செய்வது?

    இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று கோத்துக் கொள்ள வேண்டும். ஒரு கை கட்டை விரலை மட்டும் உயர்த்திக்கொள்ள வேண்டும்.

    பெண்கள்: வலது கை மேற்புறமாக இருக்குமாறு கோத்து, இடது கை கட்டைவிரலை உயர்த்த வேண்டும்.

    ஆண்கள்: இடது கை மேல்புறமாக இருக்குமாறு கோத்து, வலது கட்டை விரலை உயர்த்த வேண்டும்.

    கட்டளைகள்
    சப்பளங்கால் இட்டு அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து அல்லது நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றியபடி இந்த முத்திரையைச் செய்ய வேண்டும்.

    அதிகமான வியர்வை மற்றும் படபடப்பு தோன்றினால், முத்திரை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.

    அதிக நேரம் இந்த முத்திரையைச் செய்தால் சோர்வு ஏற்படலாம். முத்திரை செய்யும் காலங்களில் பழங்கள், பழச்சாறு, மோர், தண்ணீர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

    பெரியவர்கள் காய்ச்சல் சமயத்தில் இந்த முத்திரையைச் செய்யலாம். குழந்தைகள் செய்யக் கூடாது.

    பலன்கள்
    *பருமனான உடல்வாகு உடையவர்கள், வியர்வை வரும் அளவுக்கு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்ய இயலாதோர் காலை, மாலை என வெறும் வயிற்றில் இந்த முத்திரையைச் செய்ய, உடல் எடை குறையும்.

    *வியர்வை வராமல் உடல் வறட்சியாக இருப்போர் இதைச் செய்தால், உடல் வெப்பமாகி, வியர்வை உண்டாகி சரும வறட்சியைப் போக்கும். இவர்கள் வியர்வை வரும் வரை முத்திரையைச் செய்யவேண்டும்.

    *ஏ.சி-யால் அலர்ஜி இருப்பவர்கள், ஏ.சி அறையில் இருக்க வேண்டிய சூழ்நிலையில், அதிகக் குளிர், நடுக்கம் போன்றவை ஏற்பட்டால், இந்த முத்திரையைச் செய்துவர, உடல் வெப்பமாகி இதமாக இருக்கும்.

    *ஐஸ்க்ரீம், கூல்டிரிங்க்ஸ் குடித்த பிறகு, 10 நிமிடங்கள் வரை இந்த முத்திரையைக் குழந்தைகள் செய்தால், சளி, இருமல் போன்றவை வராமல் தடுக்கலாம்.

    *ஆண்கள், விந்துவின் வீரிய விருத்திக்கு காலை, மாலை முறையே ஐந்து நிமிடங்கள் என்ற அளவில் ஒரு மாதம் வரை செய்ய வேண்டும்.

    *ஆஸ்துமா பிரச்னையுள்ளோர், குளிரில் அல்லது குளிர்ச்சியான பொருட்களை உண்ட பின் இளைப்பு ஏற்பட்டால், இந்த முத்திரையை 10 நிமிடங்கள் செய்ய இளைப்பு கட்டுக்குள் வரும்.

    *காய்ச்சல் என்பது உடலில் உள்ள நோய்க் கிருமிகளின் தொற்றை அழிப்பதற்கு உடல் ஏற்படுத்தும் அதிகப்படியான வெப்பமே. காய்ச்சல் மற்றும் குளிர் காய்ச்சல் உள்ளவர்கள், முத்திரையைச் செய்ய காய்ச்சல் குறையும். ஆனால், குழந்தைகளுக்கு இந்த முத்திரை மூலம் காய்ச்சலைக் குறைக்க முயற்சி செய்யக் கூடாது.

    *தலையில் நீர் கோத்தல், சளியுடன் கூடிய இருமல், குளிர் காய்ச்சல் போன்ற தொந்தரவுகளுக்கு இந்த முத்திரை நல்ல பலன் தரும்.

    Last edited by chan; 3rd Nov 2015 at 02:53 PM.
    ishitha likes this.

  8. #18
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

    வலிமையாக்கும் மண்முத்திரை


    ஞ்சபூதங்களில் ஒன்றான நிலம்தான் நம் தாய்மடி. உணவும் உடையும் உறைவிடமும் நமக்குத் தரும் பேரியற்கை. உடலுக்குத் தேவையான தாதுக்கள், உயிர்ச்சத்துக்கள் அனைத்தும் மண்ணில் இருந்தே கிடைக்கின்றன. மனித உடலின் பல பகுதிகள் நிலத்தின் தன்மை கொண்டவை. திடமும் வளர்ச்சியும் நிலத்தின் பண்புகள். அதுபோல நம்மைத் திடப்படுத்தவும், வளர்ச்சி அடையவைக்கவும் மண் முத்திரை உதவுகிறது.

    மூலாதாரச் சக்கரத்தை வலுப்படுத்துவதால், இதற்கு ‘மூலாதார முத்திரை’ என்றும் ‘ப்ருத்வி முத்திரை’ என்றும் பெயர்கள் உள்ளன. இந்த முத்திரை நம் உடலில் நிலத்தின் பண்புகளைச் சமன்படுத்த உதவுகிறது.


    எப்படிச் செய்வது?

    மோதிர விரல் நுனியுடன் கட்டை விரல் நுனியைச் சேர்த்து வைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நீட்டி இருக்க வேண்டும்.

    கட்டளைகள்

    *தரையில் துண்டு அல்லது பெட்ஷீட் விரித்து, அதன் மேல் சப்பளங்கால் போட்டு அமர்ந்தோ, தரையில் பாதங்களைப் பதித்தபடி, நாற்காலியில் அமர்ந்தோ செய்யலாம்.

    *காலை, மாலை என வெறும் வயிற்றில், முறையே 20 நிமிடங்கள் செய்யலாம் அல்லது 10 நிமிடங்களுக்கு நான்கு வேளை செய்யலாம். 12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இதைச் செய்ய வேண்டாம்.

    *ஆரோக்கியமாக இருக்கும், 10-20 வயது வரையுள்ள ஆண்கள், இந்த முத்திரை செய்வதைத் தவிர்க்கலாம். வளர்ச்சிக் குறைபாடு உள்ளவர்கள் செய்யலாம்.

    பலன்கள்
    *வயோதிகத்தில் ஏற்பட்ட உடல் சோர்வு, உடல் மெலிதல், பசியின்மை, நாட்பட்ட நோய்களால் ஏற்படும் வலிகள் படிப்படியாகக் குறையும்.

    *எடை குறைவாக இருக்கும் குழந்தைகள், வளர்ச்சிக் குறைபாடு, கை கால் சூம்பி இருத்தல் போன்ற பிரச்னை உள்ளோர், இரு வேளை 10 நிமிடங்கள் தொடர்ந்து செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.

    *சத்துக் குறைபாடு உள்ளவர்கள் இந்த முத்திரையை அவசியம் செய்ய வேண்டும். இதனுடன், சத்துள்ள உணவுகளையும் சாப்பிடுவது நல்லது.

    *குறிப்பிட்ட காலத்துக்கு மேல் சத்து மாத்திரைகளைச் சாப்பிட முடியாமல் நிறுத்தியவர்கள், மேற்கொண்டு இந்த முத்திரையைச் செய்துவர நல்ல பலன் தெரியும்.

    *டைஃபாய்டு காய்ச்சலுக்குப் பின் ஏற்படும் உடல்சோர்வு, உடல்வலி, எடைக் குறைவு பிரச்னைகள் உள்ளோர், இந்த முத்திரையை ஒரு மாதம் தொடர்ந்து செய்துவர, பிரச்னைகள் சரியாகும்.

    *மூலாதாரச் சக்தியைத் தூண்டுவதால், பருவமடையத் தாமதமாகும் பெண்கள், இந்த முத்திரையைத் தினமும் இரண்டு வேளையும் 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    *அரிப்பு, தடிப்பு போன்ற பிரச்னை உள்ளவர்கள், இதைச் செய்துவர படிப்படியாகப் பிரச்னைகள் குறையும்.

    *போலியோ, பக்கவாதம் இருப்போர் இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, அன்றாட வேலைகளை இயல்பாகச் செய்யும் அளவுக்கு உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.

    *ஆண்கள் வீரிய விருத்திக்குத் தினமும் செய்யலாம்.

    *40 வயதுக்கு மேல், இரு வேளையும் முறையே 20 நிமிடங்கள் செய்துவரலாம்.

    *வறண்ட சருமம், நகம் அடிக்கடி உடைதல், பற்கூச்சம், முடி உதிர்தல், நுனி முடிப் பிளவுபடுதல், செம்பட்டை முடி, இளநரை இருப்பவர்கள், இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

    *உடைந்த எலும்புகளை ஒட்டவைக்க சிகிச்சை எடுப்பவர்கள், ஓய்வு நேரத்தில் இந்த முத்திரையை ஐந்தாறு முறையாகப் பிரித்து, 20 நிமிடங்கள் வரை செய்ய, எலும்புகள் விரைவாகக் கூடுவதற்கு உதவியாக இருக்கும்.

    *பெண்களின் ஹார்மோன் குறைபாடுகளைச் சரிசெய்ய, இந்த முத்திரையைத் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் செய்ய வேண்டும்.

    Last edited by chan; 18th Nov 2015 at 04:14 PM.
    ishitha likes this.

  9. #19
    vasanthi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    403

    Re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

    Very very useful
    thanks
    vasanthi mct


  10. #20
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

    very informative post. i save it.... excellent.!!!!

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter