Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree55Likes

Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்


Discussions on "Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்" in "Exercise & Yoga" forum.


  1. #21
    ishitha's Avatar
    ishitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    tirunelveli
    Posts
    2,088

    Re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

    worthful sharing sis! TFS


    Sponsored Links
    chan likes this.


    அன்புடன்...
    இஷிதா


    என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

  2. #22
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

    ஆகாய முத்திரை

    ஞ்சபூதங்களில் ஆகாயம்தான் பிற சக்திகளான நிலம், நீர், நெருப்பு மற்றும் காற்றுக்கு இடம் அளிப்பது. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் விரிந்துள்ளது ஆகாயம். நமது உடலிலும் காதின் உட்பகுதி, இதயம் போன்ற பல்வேறு இடங்களில் ஆகாயத்துக்கு ஒப்பான வெற்றிடங்கள் உள்ளன. எனவே, காது, மூட்டு, இதயம் சார்ந்த தொந்தரவுகளைச் சரிசெய்ய ஆகாய முத்திரையைப் பயன்படுத்தலாம். இந்த முத்திரை, ஆகாய சக்தியைச் சமன் செய்து, ஆகாய சக்தியின் ஏற்றத் தாழ்வுகளால் ஏற்படும் நோய்களைச் சரிசெய்கிறது.


    கட்டளைகள்

    *தரை விரிப்பின் மீது சம்மணமிட்டோ, நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றியோ செய்யலாம்.

    *ஒரு நாளைக்கு இரு வேளை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.

    *ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

    *நின்றுகொண்டோ, நடந்துகொண்டோ செய்யக் கூடாது.

    *ஆகாய முத்திரையை ஒரு கையில் மட்டும் செய்யக் கூடாது.

    எப்படிச் செய்வது?
    கட்டை விரல் நுனியுடன் நடுவிரல் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

    பலன்கள்
    *பயணங்களால் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, ஜெட்லாக் காதுவலி, காது இரைச்சல் போன்றவற்றைத் தவிர்க்க, இதைச் செய்யலாம். பயணம் தொடங்குவதற்கு ஐந்து முதல் 10 நிமிடங்களுக்கு முன்பும் இந்த முத்திரையைச் செய்யலாம்.

    *வயதாகும்போது காதுகளில் கேட்கும் திறன் குறையும். கேட்கும் திறன் மேம்பட இந்த முத்திரை உதவும்.

    *பல்வலி, ஈறுகளில் ஏற்படும் வலி, பற்கூச்சம் ஆகியவற்றுக்கு இந்த முத்திரையைச் செய்யலாம்.

    *மன அழுத்தம் குறைய இரு வேளையும் இந்த முத்திரையைச் செய்யலாம்.

    *அதிக நேரம் ஹெட் செட், தொலைபேசி, கைபேசி ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் தொந்தரவுகளுக்கு இந்த முத்திரையைச் செய்யலாம்.

    *காது அடைப்பு, காது மந்தம், காது சவ்வு கிழிதல், காதில் சீழ் வழிதல் பிரச்னைகளுக்கு முதலுதவிபோல இந்த முத்திரையைச் செய்த பின், தகுந்த மருத்துவரை அணுகலாம்.

    *வெர்ட்டிகோ, தள்ளாட்டம், நிலை தடுமாற்றம் போன்ற பிரச்னைகளுக்கு ஒருமாதம் வரை தொடர்ந்து செய்ய வேண்டும். காரணமின்றி ஏற்படும் விக்கல், கொட்டாவி விடுவதால் தாடையில் ஏற்படும் பிடிப்பு (Lock jaw) ஆகியவற்றை உடனடியாகச் சரிசெய்யும்.

    *குழந்தைகள், வயோதிகர், இதயநோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு ஏற்படும் இதயப் படபடப்பு, முறையற்ற இதயத்துடிப்பு (Irregular heart beat), முறையற்ற ரத்த அழுத்தம் ஆகியவை மட்டுப்படும்.

    *மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குறைய 2-5 நிமிடங்கள் மட்டும் செய்யலாம்.

    *தினமும் இரு வேளை ஐந்து நிமிடங்கள் செய்ய, எலும்பு அடர்த்திக் குறைதல் பிரச்னை தடுக்கப்படுகிறது.

    *அதீத உற்சாகம், அதிக துக்கம், கவலை, பயம், அதிக படபடப்பு, அதிக சிந்தனை கட்டுக்குள்வர இந்த முத்திரை உதவும்.

    Ragam23 likes this.

  3. #23
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

    சுவாசகோச முத்திரை



    உடலுக்குத் தேவையான ஆக்சிஜன், சுவாசித்தலின்போது கிடைக்கிறது. காற்று எவ்விதத் தடையும் இன்றி நமது நுரையீரலுக்குள் செல்வதாலேயே உடலுக்கு ஆக்சிஜன் கிடைக்கிறது. இதில் ஏதேனும் தடை ஏற்பட்டால், மனநிலை மாற்றம், எரிச்சல், மனச்சோர்வு, தூக்கமின்மை, தாழ்வு மனப்பான்மை, ஹார்மோன் கோளாறுகள் ஏற்படுகின்றன.

    ஆஸ்துமா எனப்படும் இரைப்பு நோய், பொதுவாக குளிர், மழைக்காலம் அல்லது தூசி ஒவ்வாமை போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. நுரையீரலில் சளி அடைத்துக்கொண்டு, காற்று உள்ளே புகமுடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இருமல், இரைப்பு, இருமினாலும் சளி வெளிவராமை, மூச்சுத்திணறல், காற்றுக்காக​ ஏங்குதல், மூச்சடைப்பு ஏற்படுகிறது. இதற்கான நிரந்தரத் தீர்வை மருந்துகள் மூலம் அடைய முடிவது இல்லை. சுவாசகோச முத்திரை இதற்குத் தீர்வு அளிக்கிறது.

    சுவாசகோச முத்திரையானது, நீரைக் குறைத்து, வெப்பம் மற்றும் ஆகாயத்தைச் சமன்படுத்தி, காற்றை அதிக அளவில் உடலுக்குள் செல்ல அனுமதிக்கிறது.


    எப்படிச் செய்வது?

    பெருவிரலில் உள்ள அடி ரேகை, நடு ரேகை மற்றும் நுனியைக் கவனிக்க வேண்டும். பின்னர் சுண்டுவிரலால் கட்டை விரலின் அடி ரேகையையும் மோதிர விரலால் கட்டை விரலின் இரண்டாவது ரேகையைத் தொட்டும், நடுவிரலின் நுனியால் கட்டை விரலின் நுனியைத் தொட வேண்டும். ஆள்காட்டி விரலை மட்டும் முழுமையாக மேல்நோக்கி நீட்டிவைக்க வேண்டும்.

    இந்த முத்திரையில் கையின் உள்ளங்கைப் பகுதி வெளிநோக்கிப் பார்க்க, ஆள்காட்டி விரலை 90 டிகிரி மேல்நோக்கி வைத்திருக்க வேண்டும். கையை கவிழ்த்துவைத்தோ, கீழ்நோக்கியோ செய்யக் கூடாது.

    கட்டளைகள்
    *விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டோ, நாற்காலியில் அமர்ந்தோ கால்களை தரையில் ஊன்றியோ, அவசர காலத்தில் படுத்த நிலையிலோ இந்த முத்திரையைச் செய்யலாம்.

    *ஒரு நாளைக்கு குறைந்தது 5 முதல் 6 முறை செய்யலாம். அல்லது இரைப்பு, இருமல் குறையும் வரை செய்துகொண்டே இருக்கலாம்.

    *ஒவ்வொரு முறையும் 5 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். தீவிரமான இரைப்பு இருக்கும் காலங்களில் நேரம் கணக்கிடாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.


    பலன்கள்

    *குழந்தைகள் முதல் வயோதிகர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்படும் இரைப்பிருமல் கட்டுக்குள் வரும்.

    *இரைப்பிருமல் ஏற்பட்டு, தீவிர நிலையில் மூர்ச்சையாதல் மற்றும் உயிரிழப்பில் இருந்தும் காக்கக்கூடியது. இதற்கு எந்த நிலையில் இருந்தாலும், எவ்வளவு நேரமானாலும் செய்யலாம்.

    *மழைக்காலங்களில் நெஞ்சில் சளி உருவாவது தடுக்கப்படும்.

    *மூச்சுத்திணறல், மூச்சுக்குழல் இறுக்கம், இரைப்பிருமல் ஆகியவை குறையும்.

    *மனஅழுத்தம் மிகுந்த வேலையில் இருப்போருக்கும், இயல்பிலேயே சிலருக்கும் மூச்சு மேல்சுவாசமாக ஆழம் இல்லாமல் இருக்கும். இந்த முத்திரையைச் செய்துவர, சில வாரங்களில் அவர்களது மூச்சு ஆழ்ந்து செல்லத் தொடங்கும். மன அழுத்தம் குறையும்.

    *ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து செய்துவர, 3 மாதங்களில் நோயின் தீவிரம் குறையும். மூச்சுவிடுதல் எளிமையாகும். இன்ஹேலர் பயன்படுத்துவதாக இருப்பின் அதன் அவசியமும் படிப்படியாகக் குறையும்.

    *இரைப்பிருமல் வரத்தொடங்கி ஆரம்ப நிலையில் இருக்கும் எல்லா குழந்தைகளும் இந்த முத்திரையை தினமும் செய்ய வேண்டும்.

    *இன்ஹேலர் பயன்படுத்தும் நிலை வருவதற்கு முன், இந்த முத்திரையைச் செய்து வர ஆஸ்துமா வராது. ஆஸ்துமா நோய் வராமல், வருமுன் காக்க இந்த முத்திரை உதவும்.

    *இன்ஹேலர், மருந்துகள், மருத்துவர் இல்லாத சமயங்களில் இந்த முத்திரை முதலுதவியாக மூச்சுத்திணறல் குறையும் வரை பயன்படுத்தலாம்.

    *சளி தொந்தரவுகள், தும்மல், அலர்ஜி ஆகியவை சரியாகும்.

    Last edited by chan; 23rd Dec 2015 at 04:41 PM.

  4. #24
    diyamadevi is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    chennai
    Posts
    91

    Re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

    Nantry Arumaiyana Thakavalkal

    chan likes this.

  5. #25
    diyamadevi is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    chennai
    Posts
    91

    Re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

    Hi Entha time vena seiyalama

    chan likes this.

  6. #26
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

    முதுகுத்தண்டு முத்திரை

    ட்காரும் நிலை சரியின்மை, நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்திருப்பது, ஹை ஹீல்ஸ் அணிவது, பல மணி நேரம் நிற்பது, வாகனம் ஓட்டுவது, அதிக எடை தூக்குவது போன்ற காரணங்களால் இடுப்பு மற்றும் முதுகு வலி ஏற்படும். முதுகுத்தண்டு சார்ந்த நோய்களும் இடுப்பு மற்றும் முதுகு வலிக்கான காரணங்கள். இந்த வலியை சரிசெய்ய முதுகுத்தண்டு முத்திரை உதவும்.

    எப்படிச் செய்வது?
    வலது கை: கட்டை விரல் நுனியுடன் சுண்டு விரல் மற்றும் நடு விரல் நுனிகளைச் சேர்த்துவைக்க வேண்டும். ஆள்காட்டி விரல் மற்றும் மோதிர விரல் நீட்டி இருக்க வேண்டும்.

    இடது கை: கட்டை விரலின் நடுரேகையில் ஆள்காட்டி விரலின் நகப்பகுதியைவைத்து, கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

    தரையில் சப்பளமிட்டு அமர்ந்தோ, தரையில் காலை ஊன்றியபடி நாற்காலியில் அமர்ந்தோ, 5-15 நிமிடங்கள் வரை இந்த முத்திரையைச் செய்யலாம். ஒரு நாளைக்கு 3 முதல் 5 முறை செய்வது நல்லது.

    பலன்கள்
    ஈரத்தில் வேலை செய்வோர், உட்கார்ந்தே வேலை செய்வோர் ஐந்து நிமிடங்கள் இந்த முத்திரையைச் செய்ய இடுப்பு வலி குறையும். மேலும், இடுப்பு வலி வராமல் தடுக்கலாம்.

    L3, L4, L5, L5S ஆகிய முதுகுத்தண்டுவட எலும்புகளின் இடைப்பட்ட ஜவ்வு விலகுதல், பிதுங்குதல் ஆகியவற்றால் ஏற்படும் முதுகுவலிக்கு இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, சிறந்த பலன் கிடைக்கும். முதுகில் ஏற்படும் தசைப்பிடிப்பு, உச்சந்தலையில் பிடிப்பது போன்ற வலி, இடுப்பு வலி சரியாகும்.

    சயாடிக்கா (Psciatica) எனும் வலி, அடிமுதுகு, தொடை, மூட்டு, கெண்டைக்கால், குதிகால் வரை பரவும். தினமும் 10 நிமிடங்கள் செய்ய, சில வாரங்களிலேயே இந்த வலி குறையும்.

    பெண்களுக்கு, இடுப்பு எலும்புத்தசை பலப்படவும், பிரசவத்துக்கு பின்னர், இடுப்பு எலும்புகள் நல்ல நிலைக்குத் திரும்பவும் இந்த முத்திரையைச் செய்யலாம்.




  7. #27
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

    மான் முத்திரை

    கைகளில் இந்த முத்திரை செய்யும்போது, மான்போல தோன்றுவதால் `மான் முத்திரை’ எனப் பெயர். இதை `ம்ருஹி முத்திரை’ என்றும் சொல்வர்.

    எப்படிச் செய்வது?

    கட்டைவிரல் நுனியை, மோதிர விரல் மற்றும் நடுவிரலின் முதல் ரேகைக் கோட்டில் வைத்து மிதமாக அழுத்த வேண்டும். மற்ற இரண்டு விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். உள்ளங்கை மேல்நோக்கிப் பார்த்தவாறு தொடையின் மேல் இரு கைகளிலும் முத்திரை பிடிக்க வேண்டும்.

    கட்டளைகள்

    நாற்காலியில் அமர்ந்து நிமிர்ந்த நிலையில், கால்களைத் தரையில் ஊன்றிச் செய்யலாம். விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டும் செய்யலாம்.

    காலை, மாலை என 10-40 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    வெறும் வயிற்றில் அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின்னரே செய்ய வேண்டும்.

    பலன்கள்

    பெருங்குடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றும் பெருங்குடலின் கடைமடைப் பகுதியில் இசைவுத்தன்மையை உண்டாக்கி, இலகுவாக மலம் வெளியேற உதவும். மனஅழுத்தத்தால் உண்டாகும் தற்காலிக மலச்சிக்கல் பிரச்னையைப் போக்கும்.

    நாள்பட்ட ஒற்றைத் தலைவலி குணமாக ஒரு மாதம் தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்ய வேண்டும். நீர்க்கோவைப் பிரச்னையால் வரும் தலைவலி சரியாகும்.

    அதீத இயக்கம் (Hyperactivity) கொண்ட குழந்தைகளை, கட்டுப்படுத்துவதற்கு மூன்று மாதங்களுக்கு காலை, மாலை 20 நிமிடங்கள் மான் முத்திரை செய்யச் சொன்னால், அவர்கள் இயல்புநிலைக்குத் திரும்புவர்.

    அளவுக்கு மீறிய குறும்புத்தனம், ஓர் இடத்தில் நிற்காமல் ஆடிக்கொண்டே இருப்பது, எந்த வேலையையும் முழுமையாக முடிக்காமல் அடுத்தடுத்த வேலைகளுக்குச் சென்றுவிடுவது, கட்டுப்படுத்த முடியாத ஆக்ரோஷத்தனம் ஆகிய பிரச்னை உள்ளவர்கள் மூன்று மாதங்களுக்கு இந்த முத்திரையைச் செய்ய பலன் கிடைக்கும்.

    மனதை அமைதிப்படுத்தி ஆழ்ந்த தூக்கத்தைத் தரும். வளர் இளம் பருவத்தில் வரும் முரட்டுத்தனத்தைக் கட்டுப்படுத்தும். சாந்தமான மனநிலை மற்றும் குணங்கள் பெற முடியும்.

    வலிப்பு நோய் உள்ளவர்கள், நரம்பு தளர்ச்சியுடையோர், மன அழுத்தம், கோபம், மனசோர்வு ஆகியவை நீங்கி இயல்புநிலைக்குத் திரும்ப உதவும்.

    பல்வலி, ஈறுகள் சார்ந்த வலி, வீக்கம் குறைய உதவும்.(பல் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெறுவது அவசியம்).

    காது வலி, தலைக்குள் ஏற்படும் வலி, மதமதப்பு ஆகியவை குறையும்.



  8. #28
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

    ருத்ர முத்திரை


    யோக முத்திரைகளில் மிகவும் சக்தி வாய்ந்தது ருத்ர முத்திரை. வயதானவர்களுக்கு ருத்ர முத்திரை ஒரு வரம்.

    எப்படிச் செய்வது?

    கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல்களின் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். நடுவிரலும் சுண்டுவிரலும் நீட்டி இருக்க வேண்டும்.

    நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து, கால்களைத் தரையில் பதித்தோ, விரிப்பின் மீது சப்பளங்கால் போட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்தோ, 10 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.


    பலன்கள்


    சோர்வு, களைப்பு, தலைசுற்றல் உணர்வு, வயோதிகத்தில் ஏற்படும் கிறக்கம் ஆகியவற்றைச் சரிசெய்யும். உடலுக்கு ஆற்றலைத் தரும்.

    தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். நினைவாற்றல், கவனம் அதிகரிக்கும். மாணவர்களை அவசியம் செய்யச் சொல்லலாம்.

    பார்வைத்திறனைக் கூர்மைப்படுத்தும். ரத்த அழுத்தப் பிரச்னை, சுவாசப் பிரச்னைகளைச் சீர்செய்யும்.

    உடலில் உள்ள ஏழு சக்கரங்களில் ஒன்றான, மணிப்பூரகச் சக்கரத்தைத் தூண்டுகிறது. இதனால், உடலில் ஏற்பட்ட சமநிலையின்மை குணமாகும். சிலர், ஒரு பக்கமாக சாய்ந்து நடப்பர், வலது பக்கம் மட்டும் நன்றாகக் கை வரும், இடது பக்கம் வராது. இதுபோன்ற சமநிலைத் தன்மை இல்லாதவர்களுக்கு, இந்த முத்திரை நல்ல பலனைத் தரும்.

    மன அழுத்தத்தால் ஏற்படும் இறுக்கம், கழுத்து, முதுகு, இடுப்பு மற்றும் மார்பக வலி ஆகியவற்றை இந்த முத்திரை குறைக்கும்.

    ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள், கட்டிகள் ஆகியவற்றைச் சரிசெய்யும்.

    காலில் உள்ள ரத்த நாளங்கள் சுருண்டுகொள்ளும் வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கான வாய்ப்பைக் குறைக்கும். ஆண்களுக்கு விதைப்பையிலும், விரையிலும் உள்ள வெரிகோஸிட்டி பிரச்னை சரியாகும்.

    வயோதிகத்தில் ஏற்படும் நினைவாற்றல் பாதிப்பு நோய்களான நடுக்குவாதம் (Parkinson), அல்சைமர் பாதிப்பு உள்ளவர்கள் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவர முன்னேற்றம் காணலாம்.





  9. #29
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

    முஷ்டி முத்திரை


    கோபம் கட்டுக்கு அடங்காமல் வந்தால், இயல்பாக முஷ்டியை மடக்கிக் குத்திக்கொள்வோம். இதுவே, முஷ்டி முத்திரை. பஞ்சபூதங்களில் கட்டைவிரல் அக்னியைக் குறிக்கிறது. எனவே, தீ எனும் சக்தியால் மற்ற நான்கு சக்திகளை அடக்க முடிவதால் மனம் நிதானமாகி, உணர்வுகள் கட்டுப்படுகின்றன.

    எப்படிச் செய்வது?

    ஆள்காட்டிவிரல், நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல்களை மடக்கி, உள்ளங்கைப் பகுதியில் வைத்து, கட்டைவிரலை நடுவிரலின் மேல் வைத்து மிதமாக அழுத்த வேண்டும். விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டு, முதுகுத்தண்டு நிமிர்ந்திருக்கும்படி அமர்ந்து, இரு கைகளாலும் இந்த முத்திரையைப் பிடிக்க வேண்டும். நாற்காலியில் கால்கள் தரையில் பதியும்படி அமர்ந்தும் செய்யலாம். இருவேளையும் 15-30 நிமிடங்கள் வரை, வெறும் வயிற்றில் இந்த முத்திரையைச் செய்ய வேண்டும்.

    பலன்கள்
    வயோதிகர்களுக்கு மலச்சிக்கல் இருக்கும். அதனால் உண்டாகும் கோபம், எரிச்சலைப் போக்கும்.
    கல்லீரலின் இயக்கத்தைத் தூண்டி, சீராகச் செயல்படவைக்கும்.

    மனச்சோர்வு, களைப்பு, கோபம், டென்ஷன், கவலை, மனஉளைச்சல், பயத்தைப் போக்க உதவும்.
    மனஅழுத்தம் இருப்பவர்களுக்குப் பசியின்மை மற்றும் அஜீரணப் பிரச்னைகள் ஏற்படும். இந்த முத்திரையைச் செய்துவர, அஜீரணம் சரியாகிப் பசி எடுக்கும்.

    உணர்வுகளைக் கட்டுக்குள் அடக்கிவைத்து, எடுத்த காரியத்தைச் சிறப்புடன் செய்ய உதவிபுரியும்.
    கோபம் அதிகம் வருபவர்கள் முஷ்டி முத்திரையை 48 நாட்கள் செய்துவர கோப குணம் மாறுவதோடு, படபடப்பு நீங்கும், இதயக் கோளாறு கட்டுப்படும்.

    பித்தப்பை, கணையம் ஆகியவற்றின் இயக்கத்தைச் சீர்செய்து, குடல், செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைச் சரிசெய்கிறது.
    கோபம் வருகையில் இந்த முத்திரையைச்செய்தால், சுவாசம் வெளியே சீறிப் பாயாமல் படிப்படியாகக் கோபம் குறையும்.


    chan likes this.

    KOTHAISURESH

  10. #30
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

    ஆதி முத்திரை

    தி என்பது எல்லாவற்றுக்கும் முந்தையது, பழைமையானது. இந்த முத்திரை ஆரம்ப காலம் முதலே செய்யப்பட்டுவருவதால் ‘ஆதி முத்திரை’ என்று பெயர் பெற்றுள்ளது. தாயின் வயிற்றில் இருக்கும்போது சிசு தன் கையில் இந்த முத்திரையை வைத்திருக்கும். நவீன ஸ்கேன் படத்தில் இதைக் காண முடியும். இந்த முத்திரை நமக்குப் புதிதானது அல்ல. பஞ்ச பூதங்களும் ஒடுங்கி நிற்கும் நிலையை இந்த முத்திரை தருவதால், வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச்சிதறல்களில் இருந்து விடுபட இந்த முத்திரை உதவும்.


    எப்படிச் செய்வது?


    கட்டை விரலை மடக்கி, சுண்டு விரலின் மேட்டுப் பகுதியில் வைத்து அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரலை மடக்கி, கட்டை விரலைச் சுற்றிப் பிடிக்க வேண்டும்.

    விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டு, நேராக அமர்ந்தோ, நாற்காலியில் நேராக அமர்ந்து பாதம் தரையில் பதியும்படியோ இரு கைகளாலும் இந்த முத்திரையைப் பிடிக்க வேண்டும். தினமும், 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    பலன்கள்

    நுரையீரலின் மேல்பகுதிக்கு ஆக்சிஜன் செல்ல உதவுகிறது.

    முறையற்ற சுவாசம் சரியாகும். அனைத்து சுவாசப் பிரச்னைகளும் தீரும்.

    தலை, கழுத்து, தோள்பட்டை, கைகள் மற்றும் விரல்களில் வரும் இறுக்கம் தளர்கிறது.

    மூளை மற்றும் தொண்டைப் பகுதிக்கு ரத்த ஒட்டம் சீராகப் பாயும். நரம்புகளைப் பலப்படுத்தும்.

    வயிற்றுக்கோளாறுகள், செரிமானப் பிரச்னை, உணவு உண்ட பின் மலம் கழித்தல், அடிக்கடி மலம் கழித்தல் சரியாகும்.

    தோல், நாக்கு, கண், மூக்கு, காது ஆகிய ஐந்து புலன்களுக்கும் இழந்த சக்தியை மீட்டுத் தரும்.

    தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகரும் உணர்வு, கேட்டல், பார்த்தலின் மீது கட்டுப்பாடு வரும். அலைபாயும் மனதைக் கட்டுக்குள்வைக்கும்.

    பய உணர்வு நீங்கும். நேர்மறை எண்ணங்கள், மன உறுதி, மன அமைதி ஏற்படும். சிந்தனை சீராகும்.



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter