Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree55Likes

Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்


Discussions on "Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்" in "Exercise & Yoga" forum.


  1. #31
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

    நீர் முத்திரை

    வெயில் காலம் தொடங்கிவிட்டது. அதிக வெப்பம், தாகம் என்று பிரச்னைகள் கலந்துகட்டித் தாக்கும். இந்தச் சூழ்நிலையில், உடலைப் பாதுகாத்துக்கொள்ள ஒரே ஒரு முத்திரை செய்வது போதாது. எனவே, கோடையை சமாளிக்க உதவும் சில முத்திரைகளைப் பார்க்கலாம்.

    நீர் முத்திரை: 10-20 நிமிடங்கள் வரை ஒரு நாளைக்கு 5 முறை செய்யலாம். அமர்ந்தோ, நடந்தோ, பயணத்தின்போதோ எந்த நிலையிலும் செய்யலாம்.

    பலன்கள்: நாவறட்சி, தொண்டை வறட்சி, தாகம், தண்ணீர் குடித்தும் தாகம் தீராத பிரச்னை, கூந்தல் வறட்சி, வெயிலால் ஏற்படும் சருமத் தொல்லைகள், சருமம் கருத்துப்போதல், அரிப்பு, வியர்க்குரு, நீர்க்கடுப்பு, வெள்ளைப்படுதல், உடற்சூட்டால் ஏற்படும் வயிற்றுவலி சரியாகும். வெயிலில் விளையாடுவோர், நடப்போர் இந்த முத்திரையைச் செய்துவருவது நல்லது.

    வியான முத்திரை: 10 நிமிடங்கள் வரை

    ஒரு நாளைக்கு 3 முறை செய்யலாம். காலை, மாலையில் சப்பளாங்கால் இட்டோ, நாற்காலியில் பாதங்கள் தரையில் படியும்படி அமர்ந்தோ செய்ய வேண்டும்.

    பலன்கள்: சோர்வு, வியர்வை, வெயில் சூட்டால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, அதீதத் தூக்க உணர்வு, வயிற்றுக்கடுப்பு, தலைசுற்றல், மயக்கம், வெயிலால் ஏற்படும் பக்கவாதம், வயதானோர் வெயிலைச் சமாளிக்க முடியாமல் போவது, படபடப்பு, ரத்தக்கொதிப்பு, தலைபாரம், தலையில் நீர்க்கோத்தல் சரியாகும்.

    லபதி முத்திரை: 10 நிமிடங்கள் வரை

    மாலை மற்றும் இரவு என இரண்டு முறை, அமர்ந்தோ, படுத்த நிலையிலோ செய்ய வேண்டும்.

    பலன்கள்: கண் சிவந்துபோதல், கண் எரிச்சல், வெப்பமான மூச்சுக்காற்று, உதடு, நாக்கு, தொண்டை, வாயின் உட்பகுதியில் எரிச்சல், புண்கள், கொப்பளங்கள் வராமல் தடுக்கப்படும்.

    அபான முத்திரை: 20 நிமிடங்கள் வரை

    இரவில் மட்டும் நிமிர்ந்து உட்கார்ந்து செய்ய வேண்டும்.

    பலன்கள்: அபான முத்திரையால் உள்ளங்கை வியர்வை, மூலம், மூலச்சூடு, கடுப்பு, ரத்த மூலம் வராமல் தடுக்கலாம். வெயில் காலத்தில் ஏற்படும் ரத்த அழுத்தம் குறையும். சிறிய கல் அடைப்புகள் நீங்கும்.


    Sponsored Links

  2. #32
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

    சந்தி முத்திரை

    யதானவர்களின் நிரந்தரப் பிரச்னை, கை,கால்வலி, மூட்டுவலி மற்றும் உடல்வலி. வலி மாத்திரைகளால் பெரிய பலனும் கிடைப்பது இல்லை. மருந்துகள் இல்லாமல், ஓய்வு நேரங்களில் சில முத்திரைகளைச் செய்தாலே, மூட்டுவலி காணாமல் போய்விடும்.
    சந்தி முத்திரை

    வலது கை: மோதிர விரல், கட்டை விரலின் நுனிகள் தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.

    இடது கை: நடுவிரல், கட்டை விரலின் நுனிகள் தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.

    காலை மாலை என இருவேளையும் 20 நிமிடங்கள் செய்யலாம்.

    பலன்கள்: முழங்கால் மூட்டுவலி சரியாகும். முழங்கால் மூட்டு சவ்வுக் கிழிதல், மூட்டு பலமின்மை, மூட்டில் உள்ள திரவம் குறைதல், வீக்கம், வலி சரியாகும்.

    முதுகுத்தண்டு முத்திரை

    வலது கை: நடு விரல், சுண்டு விரல், கட்டை விரல் ஆகிய நுனிகள் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்கட்டும்.

    இடது கை:
    ஆள்காட்டி விரல், கட்டை விரலின் நடுப்பகுதியைத் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.

    மூன்று வேளையும் 20 நிமிடங்கள் செய்யலாம்.

    பலன்கள்: முதுகுவலி தேய்மானம், சயாட்டிக்கா எனும் முதுகு வலி, டிஸ்க் புரொலாப்ஸ், முதுகில் இருந்து பின்னங்கால் வழியாகப் பாதம் வரை வரும் வலி, இடுப்பின் ஏற்படும் இறுக்கம் சரியாகும்.

    வாயு முத்திரை

    ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடிரேகையைத் தொட வேண்டும். கட்டை விரலால் ஆள்காட்டி விரலை மிதமாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும். இரண்டு கைகளிலும் இந்த முத்திரையைப் பிடிக்க வேண்டும்.

    அதிகப்படியான வாயுவே மூட்டுவலிக்குக் காரணம். தினமும் இருமுறை, 10 நிமிடங்களுக்கு வாயு முத்திரை செய்த பின், மற்ற முத்திரைகளைச் செய்ய வேண்டும்.

    பலன்கள்: நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், வயிற்று உப்புசம், வாயுக்குத்தல், மூச்சுப்பிடிப்பு, அடிக்கடி ஏப்பம் வருதல், உணவு செரிக்காமை, கால்களில் குத்துவது போன்ற உணர்வு, குடைச்சல், வலி, மனஇறுக்கம் நீங்கும்.

    முநீ முத்திரை


    வலது கை: நடு விரல், சுண்டு விரல், கட்டை விரல் ஆகிய நுனிகள் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

    இடது கை:
    சுண்டு விரல், கட்டை விரலின் நடுப்பகுதியைத் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.

    வாயு, சந்தி முத்திரையைச் செய்த பின், கழுத்துவலி முத்திரையை 20 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

    பலன்கள்: கழுத்துவலி, கழுத்து எலும்புத் தேய்மானம், கழுத்து வீக்கம், இடுப்புவலி, கணினி முன் வேலை செய்பவர்களுக்கான மூட்டுவலி தீரும்.


    Last edited by chan; 21st Apr 2016 at 02:28 PM.

  3. #33
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

    அழகை மேம்படுத்தும் முத்திரைகள்

    முகம் பிரகாசிக்க, பளிச்சிட எவ்வளவோ செலவு செய்கிறோம். என்ன செய்தாலும் ஓரிரு மணி நேரத்துக்குப் பிறகு முகம் சோர்ந்துவிடுகிறது. உடல் ஆரோக்கியத்தின் வெளிப்பாட்டை முகத்தில் காணலாம். முக அழகை மேம்படுத்தக்கூடிய முத்திரைகள் சிலவற்றைப் பார்ப்போம்.


    நீர் முத்திரை


    சுண்டு விரல், கட்டை விரலின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்கட்டும். இரு கைகளிலும் இந்த முத்திரையைப் பிடிப்பது அவசியம். இந்த முத்திரையை 10 நிமிடங்கள் வரை செய்யலாம்

    பலன்கள்: கருவளையத்தைப் போக்கும். தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்துவர, இரண்டு வாரங்களிலேயே மாற்றம் தெரியும். முகப்பரு மறையும். முகத்தில் பளபளப்பு அதிகரிக்க, இதைச் செய்யலாம். முகத்தில் உள்ள மாசு, மருக்கள் மறையும். சருமம் மற்றும் கூந்தல் வறட்சி சரியாகும். சருமம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் தீரும். வயோதிகத்தால் வரும் தோல் சுருக்கங்கள் தாமதமாகும்.

    பங்கஜ முத்திரை

    சப்பளங்கால் இட்டு, நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து, நெஞ்சுப் பகுதியில், கைவிரல்களை உடலில் ஒட்டாமல் வைக்க வேண்டும். இரண்டு கைகளின் கட்டைவிரலும், சுண்டு விரலும் முழுமையாக ஒட்டியிருக்க வேண்டும். மற்ற விரல்களை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு மலர்ச்சியாக விரித்துவைக்க வேண்டும். 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    பலன்கள்: மனமகிழ்ச்சியையும் மலர்ச்சியையும் உண்டாக்கி, முகமலர்ச்சியை உண்டாக்குகிறது. முகம் பொலிவடைகிறது.

    மகா சிரசு முத்திரை

    மோதிரவிரல், உள்ளங்கை நடுவில் தொட்டிருக்க வேண்டும். நடுவிரல், ஆட்காட்டி விரல், கட்டை விரல் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். சுண்டு விரல் நேராக இருக்கட்டும். இரு கைகளிலும் இந்த முத்திரையைப் பிடிப்பது அவசியம். 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    பலன்கள்: சிரசாசனம் செய்வதற்குரிய பலனை இந்த முத்திரை தரும். இதனால், தலைக்கு சீரான ரத்த ஓட்டம் ஏற்படுகிறது. தலை, முகத்தில் மசாஜ் செய்ததுபோல், முகத்தின் தசைகள் ஓய்வு பெறுகின்றன. நெற்றி, கன்னம், மூக்கின் மேல் ஏற்படும் கருமைப்படலம் மறைகிறது. முகம் பளிச்சிடும்.

    பிராண முத்திரை

    மோதிரவிரல், சுண்டுவிரல், கட்டைவிரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்கலாம். இரண்டு கைகளிலும் செய்யலாம். 20 - 40 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

    பலன்கள்: ஆக்சிஜன் பயன்பாடு குறையக் குறைய, வயோதிகமும் சோர்வும் அதிகமாகிறது. இது, அனைத்து நோய்களுக்கும் வாசலாக அமைகிறது. தொடர்ந்து பிராண முத்திரை செய்துவர, உடல் சோர்வு, மந்தம், களைப்பு சரியாகும். கூந்தலும் சருமமும் உயிரோட்டம் பெறும்.

    Last edited by chan; 14th Jun 2016 at 04:51 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter