Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine September! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 3 Post By chan
  • 2 Post By jv_66

Can we apply Toothpaste on Pimples?-பருவின் மேல் டூத்பேஸ்ட் தடவலாமா?


Discussions on "Can we apply Toothpaste on Pimples?-பருவின் மேல் டூத்பேஸ்ட் தடவலாமா?" in "Face Care" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,440

    Can we apply Toothpaste on Pimples?-பருவின் மேல் டூத்பேஸ்ட் தடவலாமா?

    பருவின் மேல் டூத்பேஸ்ட் தடவலாமா?



    ஐயம் தீர்க்கிறார் சரும நோய் மருத்துவர் ஏ.ருக்மணி...“வீட்டு மருத்துவமாக இப்போது பிள்ளைகள் டூத்பேஸ்ட்டை பருக்களில் தடவுவது சகஜமாகிவிட்டது. இது தவறான முறை. கண்டிப்பாக முயற்சி செய்யக்கூடாது. இவர்கள் பற்பசையை பருக்களில் தடவினால் உடனடியாக குணமாவதாக நினைக்கிறார்கள். இதுபோல செய்வதால் பருக்கள் உள்ள இடத்தில் அரிப்பு ஏற்பட்டு, மேலும் சிவந்து வீங்கி விடும்.

    சிலவகை குளியல் சோப், டியோடரன்ட், பற்பசை மற்றும் பாடி வாஷ்களில் ட்ரைக்ளோசன் (Triclosan) என்ற பாக்டீரியா எதிர்ப்பு மூலப்பொருள் உள்ளது. ட்ரைக்ளோசன், பருக்களை நீக்கும் கிரீம்களிலும் ஒரு கூடுதல் மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டாலும், உண்மையில் இதனால் எந்தப் பயனும் இல்லை. ‘பாக்டீரியா எதிர்ப்பு மருந்து (Anti Bacterial) பருக்களை குணமாக்கிவிடும்’ என தவறாக புரிந்து கொண்டு பருக்களில் பற்பசையை தடவும் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

    இப்போது சந்தையில் விதவிதமான பற்பசைகள் வந்துவிட்டன. இத்தகைய தயாரிப்புகளில் Benzoyl peroxide, Salicylic acid, Sulphur, Flouride போன்ற ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதோடு, பற்களை வெண்மையாக்க, பற்கூச்சத்தை போக்க என்று சொல்லப்படும் பற்பசைகளில் கூடுதல் ரசாயனப் பொருட்கள் கலந்திருக்கக்கூடும். இவை சென்சிட்டிவான சருமத்தில் மேலும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

    ஒரு மருந்துப் பொருள் சந்தைக்கு வருவதற்கு முன் எலிகளிடத்தில் பலகட்ட ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டு, அரசிடம் முறையான அங்கீகாரம் பெற்ற பின்னர்தான் மருத்துவர்களால் நோயாளிக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில் தாங்களாகவே இதுபோன்ற தவறான முயற்சிகளில் இறங்கினால் அதன் விளைவுகளை சம்பந்தப்பட்ட நோயாளிகளே எதிர்கொள்ள நேரிடும். பற்பசை பற்களுக்கானது மட்டுமே.

    அதை பருக்களின் மேல் தடவக்கூடாது. வீட்டு மருத்துவமாக, மஞ்சள், சந்தனம் போன்ற இயற்கைப் பொருட்களை உபயோகிக்கலாம். அல்லது சரும மருத்துவரின் ஆலோசனையுடன் தகுந்த சிகிச்சை பெறுவது நல்லது. மாறாக, இயற்கை நமக்கு கொடுத்த அழகான முகத்தில், தேவையற்ற ஆராய்ச்சிகளை செய்து கோரமாக்கிவிடக்கூடாது” என எச்சரிக்கிறார் டாக்டர் ருக்மணி.


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 17th Aug 2016 at 01:28 PM.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,950

    Re: Can we apply Toothpaste on Pimples?-பருவின் மேல் டூத்பேஸ்ட் தடவலாமா?

    Thanks for this caution.

    chan and honey rose like this.
    Jayanthy





  3. #3
    honey rose's Avatar
    honey rose is offline Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    8,895

    Re: Can we apply Toothpaste on Pimples?-பருவின் மேல் டூத்பேஸ்ட் தடவலாமா?

    tfs sis_/\_


  4. #4
    kanikadugal011 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2016
    Location
    Ludhiana
    Posts
    146

    Re: Can we apply Toothpaste on Pimples?-பருவின் மேல் டூத்பேஸ்ட் தடவலாமா?

    I think use remedies for pimples.


  5. #5
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: Can we apply Toothpaste on Pimples?-பருவின் மேல் டூத்பேஸ்ட் தடவலாமா?

    thanks for sharing dear.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter