Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 1 Post By chan
  • 2 Post By chan

Black circles and its remedies - கருவளையங்களுக்கான அழகு சாதனங்களுī


Discussions on "Black circles and its remedies - கருவளையங்களுக்கான அழகு சாதனங்களுī" in "Face Care" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Black circles and its remedies - கருவளையங்களுக்கான அழகு சாதனங்களுī

    கருவளையங்களுக்கான அழகு சாதனங்களும் சிகிச்சைகளும்

    கண்களுக்குக்கீழே கருவளையங்கள் என்பது ஒருவருக்குத் தூக்கம் தொலைக்க வைக்கிற அளவுக்குப் பெரிய பிரச்னை. தூக்கம் தொலைப்பதால் அந்தப் பிரச்னை இன்னும் தீவிரமாகும் என்பது வேறு கதை. கண்களுக்கு அடியில் வருகிற கருவளையமானது ஆண், பெண் யாரையும் பாதிக்கலாம். காரணத்தைக் கண்டுபிடித்து ஆரம்பத்திலேயே அக்கறை எடுத்துக் கொண்டால் கருவளையங்களைப் போக்கலாம்.

    அதிகமாவதைத் தவிர்க்கலாம் என்கிறார் நேச்சுரல்ஸ் வீணா குமாரவேல். கருவளையங்கள், கண்களுக்கடியில் காணப்படும் வீக்கம், சுருக்கங்கள் ஆகியவற்றுக்கான காரணங்களுடன், இவற்றைப் போக்கப் பயன்படுத்தும் அழகு சாதனங்களைத் தேர்ந்தெடுக்கும் முறை, கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என எல்லாவற்றையும் விளக்குகிறார் அவர்.

    கருவளையங்களுக்கான காரணங்கள்

    * பரம்பரைத்தன்மை
    பரம்பரையாக சிலருக்கு இந்தப் பிரச்னை தொடரலாம். ஒரு சிலருக்கு காலப் போக்கில் மறைவதும், வேறு சிலருக்கு அப்படியே
    நின்று விடுவதும் உண்டு.

    * தூக்கமின்மையும் அதிக தூக்கமும்
    6 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் இல்லாதவர்களுக்கு கருவளையங்கள் வரும். அதே போல அளவுக்கு அதிகமாக தூங்குகிறவர்
    களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம் என்கிறது லேட்டஸ்ட் ஆராய்ச்சி.

    * ஸ்ட்ரெஸ்
    மன அழுத்தம் என்பது தலை முதல் கால் வரை எல்லா பிரச்னைகளுக்கும் காரணமாகிறது. அது கருவளையங்களையும் விட்டு வைப்பதில்லை.

    * சைனஸ் பிரச்னை
    இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு மூக்கையும் கண்ணையும் இணைக்கிற ரத்த நாளங்கள் அடைபட்டுப் போவதன் விளைவாகவும் கண்களுக்கு அடியில் கருவளையங்கள் வரலாம். கண்களுக்குக் கீழே பை மாதிரித் தெரியலாம்.

    * இரும்புச்சத்துக் குறைபாடு
    இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு கண்களைச் சுற்றியுள்ள தசைகளுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறன் ரத்தத்தில் குறைவாக இருப்பதால் கருவளையங்கள் வரலாம்.

    * வாழ்க்கை முறை
    கண்ட நேரத்துக்கு சாப்பிடுவது, கண்ட நேரத்துக்குத் தூங்குவது, புகை மற்றும் மதுப் பழக்கம், அடிக்கடி காபி, டீ குடிப்பது போன்ற பழக்கங்களும் கருவளையங்கள் மற்றும் கண்களுக்கடியிலான வீக்கத்துக்குக் காரணம்.

    * கதிர்வீச்சு
    எந்நேரமும் கம்ப்யூட்டர், செல்ஃபோன், டி.வி., லேப்டாப் போன்றவற்றைப் பார்த்துக் கொண்டே இருப்பவர்களுக்கு அந்தக் கதிர்களின் தாக்குதல் காரணமாகவும் கருவளையங்கள் வரலாம்.

    * ஹார்மோன் மாறுதல்கள்
    பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும் மெனோபாஸ் காலத்திலும் ஏற்படுகிற ஹார்மோன் மாறுதல்களும் கருவளையங்களை
    ஏற்படுத்தலாம்.

    * சருமத்தில் ஏற்படுகிற அசாதாரண மாற்றங்கள்
    கண்களுக்கடியில் உள்ள சருமம் மிகவும் மென்மையானது. சென்சிட்டிவானது. அதனால்தான் உள்ளே உள்ள ரத்த நாளங்கள் வெளியில் தெரிகின்றன. சரும நிறத்தைத் தீர்மானிக்கிற மெலனின், சீராக வினியோகிக்கப்படாதபோது அது கருவளையங்களாகப் பிரதிபலிக்கும்.

    * வயது
    வயதாக ஆக, நாம் நம் சருமத்தின் மீள் தன்மைக்குக் காரணமான கொலாஜனை இழப்போம். கண்களுக்கு அடியிலும் இது குறைவதே கருவளையங்களுக்கும், கண்களுக்கு அடியில் உண்டாகிற சுருக்கங்களுக்கும் காரணம்.

    * அதிக உப்பு
    அதிக உப்பு சேர்த்த உணவுகள் உடல் முழுக்கவே வீங்கிய தோற்றத்தைத் தரும். கண்களுக்கு அடியில் வீக்கத்துக்கும் அது ஒரு காரணம்.
    கண்களுக்கு அடியில் ஏற்படும்

    சுருக்கங்களுக்கு காரணங்கள்...

    வயதானவர்களுக்குத்தான் கண்களுக்கு அடியில் சுருக்கங்கள் ஏற்பட வேண்டும் என அவசியமில்லை. இந்த சுருக்கங்களுக்கு Crows feet என்றும் Laughter lines என்றும் பெயர். முக பாவனைகளே இதற்கான பிரதான காரணங்கள். இதைத் தவிர்ப்பது சிரமம். மற்றபடி சரியான சருமப் பராமரிப்பின்மை, அதிக நேரம் வெயிலில் அலைவது, கண்களைச் சுருக்கிப் பார்ப்பது, தலையணையில் முகத்தை அழுத்திய படி ஒரு பக்கமாகப் படுத்துத் தூங்குவது, கண்களை அடிக்கடி கசக்குவது, கண்களின் மேக்கப்பை முறையாக அகற்றாமல் தூங்குவது போன்றவையும் சுருக்கங்களை ஏற்படுத்தலாம்.

    கருவளையங்களுக்கான அழகு சாதனங்களில் கவனம்...

    * கருவளையங்களைப் போக்க சீரம், கிரீம், ஜெல் என பல அழகு சாதனங்கள் கிடைக்கின்றன. இவற்றில் சீரம் என்பது நீர்க்க இருக்கும். சற்றே ஸ்ட்ராங்கானது. சீக்கிரமே சருமத்தால் உறிஞ்சப்படும். கிரீம் என்பது அடர்த்தியாக இருக்கும். ரொம்பவும் மிதமாக உபயோகிக்க வேண்டும். எதை உபயோகிப்பதானாலும் அவற்றில் உள்ள கலவையைப் பற்றிய விழிப்புணர்வும் அவை பாதுகாப்பானவைதானா என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    * பெரும்பாலான ஐ கிரீம்களில் வைட்டமின் கே முக்கிய பொருளாக சேர்க்கப்படும். இது ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து சருமத்தைக் கருப்பாக்கக் கூடியது. சிலருக்கு கண்கள் சிவந்து போவது, அரிப்பு போன்றவையும் வரலாம்.

    * Plant extracts என்று குறிப்பிடப்பட்டிருந்தால் ஓரளவு பாதுகாப்பானதாக இருக்கும். கெமிக்கல்கள் அதிகம் குறிப்பிடப்பட்டிருந்தால் கவனம் தேவை.
    * இந்த வகையான கிரீம்களில் ஹைட்ரோகுவினான் என்கிற கெமிக்கலும் சேர்க்கப்படும். அது கண்களுக்கு அடியில் உள்ள
    சருமத்தை பிளீச் செய்யக்கூடியது. கருவளையத்துக்கான காரணம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாக இருக்கலாம். சரியான காரணம் தெரியாமல் ஹைட்ரோகுவினான் சேர்த்த ஐ கிரீமை உபயோகித்தால், அது சரும நிறத்தை சீரற்று மாற்றும்.

    * ரெட்டினால் என்கிற கெமிக்கலும் ஐ கிரீம்களில் சேர்க்கப்படுகிறது. இது சுருக்கங்களை நீக்கவும் பயன்படுகிறது. கருவளையங்களையும் போக்கக்கூடியது. ஆனால், இது எல்லோருக்கும் ஏற்றுக் கொள்வதில்லை. சிலருக்கு வீக்கத்தைக் கொடுக்கும். கருவளையங்களுக்கான பார்லர் சிகிச்சை, வீட்டு சிகிச்சை, குறைக்கும் வழிகள் போன்ற தகவல்கள் அடுத்த இதழிலும்...

    மனஅழுத்தம் என்பது தலை முதல் கால் வரை எல்லா பிரச்னைகளுக்கும் காரணமாகிறது. அது கருவளையங்களையும் விட்டு வைப்பது இல்லை.

    கம்ப்யூட்டர், செல்ஃபோன், டி.வி., லேப்டாப் போன்றவற்றைப் பார்த்துக் கொண்டே இருப்பவர்களுக்கு அந்தக் கதிர்களின் தாக்குதல் காரணமாகவும் கருவளையங்கள் வரலாம்.


    Similar Threads:

    Sponsored Links
    honey rose likes this.

  2. #2
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கருவளையங்களுக்கான அழகு சாதனங்களும் சி&

    கருவளையங்களுக்கான அழகு சாதனங்களும் சிகிச்சைகளும்
    எப்படிக் குறைப்பது?

    * அடர்த்தி குறைந்த மாயிச்சரைசர் கலந்த சன் ஸ்கிரீன் உபயோகிப்பது கருவளையங்களின் தீவிரத்தைக் குறைக்கும்.

    * அழகுக்கலை நிபுணரை ஆலோசித்து ஸிங்க் ஆக்சைடு அல்லது டைட்டேனியம் டை ஆக்சைடு கலந்த ஐ கிரீம் உபயோகிக்கலாம். சிலருக்கு இது அலர்ஜியை ஏற்படுத்தலாம். அப்படியானால் அதை உபயோகிப்பதைத் தவிர்த்து விடவும்.

    * வெயிலில் செல்லும் போது யுவி கதிர்களின் தாக்கம் காரணமாக கருவளையங்கள் அதிகமாகலாம். அதைத் தவிர்க்க தரமான கண்ணாடிகள் அணியலாம்.

    * உங்களுக்கு ஏதேனும் அலர்ஜி இருந்து அதன் விளைவாக கண்களுக்கு அடியில் கருமையும் வீக்கமும் இருந்தால் மருத்துவரைக் கேட்டு அலர்ஜிக்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

    வீட்டிலேயே என்ன செய்யலாம்?
    * ஒரு டீஸ்பூன் தக்காளிச் சாறும், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறும் கலந்து தினம் ஒன்றிரண்டு முறைகள் கண்களுக்கடியில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவலாம்.

    * வெள்ளரிக்காயைத் துருவி சாறு எடுத்துக் கொள்ளவும். அதில் பஞ்சை நனைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். தினம் சிறிது நேரம் இந்தப் பஞ்சை கண்களின் மேல் வைத்தபடி படுத்துக் கொண்டு ஓய்வெடுக்கவும். இது கருவளையங்களையும் போக்கி, கண்களின் களைப்பையும் சரியாக்கும்.

    * பச்சை உருளைக்கிழங்கை மண் போக நன்கு கழுவி, துருவி, அப்படியே கண்களின் மேல் வைத்து, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இது கண்களுக்கடியிலான சருமத்தை பிளீச் செய்யும்.

    * உபயோகித்த டீ பைகளை ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரச் செய்து, கண்களுக்கு மேல் வைத்து ஓய்வெடுப்பதும் கண்களுக்குப் புத்துணர்வு தரும்.

    * கண்களை கிளென்ஸ் செய்யும் போதும் சரி, கிரீம் தடவும் போதும் சரி, எப்போதும் முதலில் மேல் நோக்கி யும், பிறகு வெளிப்பக்கமாகவும், அடுத்து உள் பக்கமாகவும் தடவ வேண்டும்.

    * கண்களுக்கான கிரீம்களை ஆலோசனையின்றி அளவுக்கதிகமாக உபயோகிக்க வேண்டாம்.

    * கண்களுக்குள் விளக்கெண்ணெய் விடும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தேவையற்றது. விளக்கெண்ணெயை மோதிர விரலால் தொட்டு, கண்களைச் சுற்றி மிக மென்மையாக வருடிக் கொடுக்கலாம்.

    * கான்டாக்ட் லென்ஸ் உபயோகிப்பவர்களுக்கு கண்களுக்கடியில் கருமையும், பை மாதிரியான தோற்றமும் வருவது இயல்பு. லென்ஸ் உபயோகிப்பவர்கள், குறிப்பிட்ட காலத்துக்கொரு முறை அதை மாற்ற வேண்டும்.

    * கண்களுக்கு உபயோகிக்கிற பொருட்கள் ஏதேனும் அலர்ஜி எனத் தெரிந்தால், அவற்றை உடனே நிறுத்தி விட்டு, ஒவ்வாமை தராத நல்ல தயாரிப்புகளை உபயோகிக்க வேண்டும்.

    * கண்களின் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் அடிப்படையான விஷயம் நல்ல தூக்கம். சிலருக்கு 5 மணி நேரத் தூக்கமே போதுமானதாக இருக்கும். சிலருக்கு 7 மணி நேரம் தேவைப்படலாம். சராசரியாக 8 மணி நேரம் தூக்கம் நல்லது என்கிறார்கள். இதை ஒரேயடியாக 8 மணி நேரமாகவோ அல்லது இரண்டு பகுதிகளாகவோ பிரித்துக் கொள்ளலாம்.

    * சிலருக்குக் கண்கள் எப்போதும் களைப்பாகக் காணப்படும். கூடவே அரிப்பும் இருக்கும். அப்படி அரிக்கிற போது, கண்களைத் தேய்ப்பார்கள். தேய்க்கும் போது இதமாக இருந்தாலும், தேய்த்து முடித்ததும், கண்களைச் சுற்றி கருமை அதிகமாகும்.

    * என்னதான் பிசியான வேலைகள் இருந்தாலும், ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறையும் 10 நிமிடங்களைக் கண்களுக்காக ஒதுக்க வேண்டும். கண்களை மூடி, மூடித் திறப்பது ஓரளவுக்கு கண்களை ரிலாக்ஸ் செய்யும்.

    * பயணத்துக்குப் பிறகு சிலருக்குக் கண்கள் களைத்து, வீங்கி, சிவந்து காணப்படும். சரியான தூக்கமின்மையே அதற்குக் காரணம். அப்படிப்பட்ட நேரத்திலும் 10 நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வெடுப்பது அவசியம்.

    * வெயிலில் வெளியே செல்லும் போது, கண்களுக்கும் பாதுகாப்பு அவசியம். சூரியனின் புற ஊதாக் கதிர்கள், கண்களைப் பாதிக்கும். அதனால் கண்களைப் பாதுகாக்கும் நல்ல கண்ணாடி உபயோகிக்க வேண்டும். ‘நான் ரெஃப்ளெக்டிவ்’ கண்ணாடிகளாக இருந்தால், சூரியனின் யுவி கதிர்களின் தாக்கத்திலிருந்து, கண்களைப் பாதுகாக்கும்.

    * கண்களுக்கு தவறாமல் மேக்கப் போடும் பழக்கமுள்ளவர்கள், இரவில் எக்காரணம் கொண்டும் அந்த மேக்கப்புடன் தூங்கக் கூடாது. அப்படியே விட்டால், கண்களைச் சுற்றி கட்டிகள் வரலாம். அந்த இடத்துத் தசைகள் பலவீனமடையலாம். எனவே கண்களுக்கான மேக்கப்பை அகற்றவென்றே கிடைக்கிற `ஐ மேக்கப் ரிமூவர்’ அல்லது கற்றாழை ஜெல் உபயோகித்து, கண்களில் போட்ட மேக்கப்பை நீக்கி விட்டே தூங்கவும். அப்படி அகற்றும் போதும், கண்களை அழுத்தித் தேய்க்காமல், மென்மையாகத் துடைத்து எடுக்க வேண்டும்.

    * சிலர் ஏதேனும் பிரச்னைகளுக்காக கண்களுக்கு டிராப்ஸ் உபயோகிப்பார்கள். மருத்துவர் எத்தனை நாட்களுக்கு உபயோகிக்கச் சொன்னாரோ, அத்தனை நாட்கள் மட்டும்தான் அதை உபயோகிக்க வேண்டும். பிறகும் தொடர்வது பாதுகாப்பற்றது.

    * சிலருக்கு கண்கள் வறண்டும், எப்போதும் அரிப்புடனும் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் மருத்துவரைப் பார்த்து, ஆலோசனை பெறுவதே நல்லது.

    * வெளிச்சம் குறைந்த இடத்தில் படிப்பது, படுத்துக் கொண்டும், பயணத்தின் போதும் படிப்பது, நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் டி.வி. முன் இருப்பது போன்றவை கண்களுக்கு நல்லதல்ல. ஒரே இடத்தை அல்லது காட்சியை நீண்ட நேரம் வெறித்துப் பார்ப்பதால், கண்கள் வறண்டு போகலாம். ஒவ்வொரு அரை மணிக்கு ஒரு முறையும் 30 முறைகள் கண்களை மூடி மூடித் திறக்க வேண்டும். இதனால் கண்களுக்குள் ஈரப்பதம் இருப்பதுடன், போதிய ஆக்சிஜனும் கிடைக்கும்.

    * நீச்சல் பழக்கமுள்ளோர், நீந்தும் போது, தண்ணீரில் உள்ள குளோரின் கண்களைத் தாக்காமலிருக்க, கண்ணாடி அணிய வேண்டும்.

    * குடி மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு கண்களுக்கடியில் பை போலவும், சுருக்கங்களும் இருக்கும். புகைப்பவர்கள் பக்கத்தில் இருந்து, அந்தப் புகையை சுவாசிப்பவர்களுக்கும் இப்படி வரலாம் என்பதால், இந்தப் பழக்கங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

    பார்லர் சிகிச்சை
    * கருவளையங்களுக்கான பிரத்யேக சிகிச்சைகள் உள்ளன. கண்களுக்கு அடியிலான சருமமானது மிகவும் மென்மையானது என்பதால், அங்கே அதிக அழுத்தம் இல்லாத மசாஜ் செய்யப்பட வேண்டும். அது தெரியாமல் பல இடங்களிலும் அழுத்தி மசாஜ் செய்வார்கள். அப்படிச் செய்வது கருவளையங்களை இன்னும் அதிகமாக்கும். கருமையைப் போக்கும் பிரத்யேக ஃபேஷியல்களும் செய்யப்படுகின்றன.

    கண்களின் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் அடிப்படையான விஷயம் நல்ல தூக்கம். சராசரியாக 8 மணி நேரத் தூக்கம் நல்லது!


    Last edited by chan; 21st Aug 2016 at 12:04 PM.

  3. #3
    honey rose's Avatar
    honey rose is offline Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi.R
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    9,000

    Re: கருவளையங்களுக்கான அழகு சாதனங்களும் சிĨ

    thanks for the useful tips sis


  4. #4
    kanikadugal011 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2016
    Location
    Ludhiana
    Posts
    146

    Re: Black circles and its remedies - கருவளையங்களுக்கான அழகு சாதனங்களு&

    rose water is thew best remedy for black circles.


  5. #5
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: Black circles and its remedies - கருவளையங்களுக்கான அழகு சாதனங்களு&

    thanks for sharing..


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter