Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4Likes
 • 1 Post By chan
 • 3 Post By chan

பருக்களை நீக்கும் அழகு சாதனங்கள்


Discussions on "பருக்களை நீக்கும் அழகு சாதனங்கள்" in "Face Care" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,551

  பருக்களை நீக்கும் அழகு சாதனங்கள்

  பருக்களை நீக்கும் அழகு சாதனங்கள்


  காதலிக்கும் பெண்ணின் வண்ணக் கன்னம் ரெண்டிலே மின்னும் பருவும்கூட பவளம் தானே...’ என்பது பாடலாக ரசிக்க வேண்டுமானால் அழகாக இருக்கும். நிஜத்தில் பருத்தொல்லை என்பது பெருந்தொல்லை!  முதல் நரைமுடி எட்டிப் பார்க்கிற போது ஏற்படுகிற மன உளைச்சலுக்கு இணையானது முகத்தில் தோன்றுகிற முதல் பரு. பருவ வயதின் தொடக்கத்தில் வர ஆரம்பித்து சிலருக்கு சில ஆண்டுகளில் அது தானாகவே மறைந்துவிடும். சிலருக்கு தொடர்கதையாகும். பருக்களை விரட்ட ஒவ்வொருவரும் செய்கிற பிரமப் பிரயத்தனம் சொல்லி மாளாது.

  பருக்கள் வருவதன் பின்னணி, அவற்றை எப்படிக் கையாள வேண்டும், பரு நீக்கும் பொருட்களை உபயோகிப்பது எப்படி, கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள், பருக்கள் வராமல் தவிர்க்கும் முறைகள் என எல்லாவற்றையும் விளக்கமாகப் பேசுகிறார் அழகுக்கலை நிபுணர் உஷா.

  பருக்கள் ஏன் வருகின்றன?

  * நமது சருமத்தின் இரண்டாவது அடுக்கில் செபேஷியஸ் கிளான்ட்ஸ் எனப்படுகிற எண்ணெய் சுரப்பிகள் உள்ளன. இவை ஆண்ட்ரோஜென் ஹார்மோனின் தூண்டுதலால் சீபம் என்கிற எண்ணெயைச் சுரக்கும். இது ரோமக்கால்களின் வழியே சருமத்தின் மேல்பரப்புக்கு வந்து, சருமத்தை எண்ணெய் பசையுடன் வைத்திருக்கிறது. சுற்றுச்சூழல் மாசில் உள்ள அழுக்கும், தூசுகளும் இந்த எண்ணெயுடன் சேர்ந்து சருமத் துவாரங்களை அடைத்துக் கொண்டு சீபம் வெளியே வரமுடியாமல் உள்ளேயே தங்கும். இப்படிச் சேர்கிற சீபம்தான் பருக்களாக உருவாகிறது.

  * சருமத்தை சரியாக சுத்தப்படுத்தாததே எண்ணெய் பசை சருமத்துக்கும், அதனால் உண்டாகிற பிரச்னைகளுக்கும் காரணம். சரியாக சுத்தப்படுத்தாத பட்சத்தில், அழுக்குகள் சருமத் துவாரங்களில் சேர ஆரம்பிக்கும். அதனுடன் பாக்டீரியாவும் சேர்ந்து, பருக்களாக உரு மாறும்.

  * ஆண் ஹார்மோனான ஆண்ட்ரோஜென் பருவ வயதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் செபேஷியஸ் சுரப்பிகளைத் தூண்டி, சீபம் சுரப்பை அதிகரிக்கும். அதனால்தான் பருவ வயதில் பருப் பிரச்னையும் ஆரம்பிக்கிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களாலும் சிலருக்கு பரு வரலாம்.

  * பரம்பரையாகவும் சிலருக்கு பருப் பிரச்னை தொடரலாம்.

  பருக்களை அதிகப்படுத்துகிற விஷயங்கள்...

  - மாதவிலக்கு வருவதற்கு 2 முதல் 7 நாட்கள் வரை பெண்ணின் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்கள்...
  - அதிக எண்ணெய் பசை உள்ள அழகு சாதனங்களின் உபயோகம்.
  - சமையலறை போன்ற பிசுபிசுப்பான சூழலில் அதிக நேரம் உழல்வது.
  - சுற்றுப்புற மாசு.
  - பருக்களை அடிக்கடி தொடுவது, கிள்ளுவது, பிதுக்குவது.
  - மன அழுத்தம்.

  உணவுக்கும் பருவுக்கும் தொடர்புண்டா?

  சாக்லெட், கேக் போன்றவற்றை சாப்பிடுவதால் பரு வரும் என்பது காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. அவை முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், பழங்கள், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றுக்கு இயல்பிலேயே சருமத்தை அழகாகவும் பளிச்சென்றும் வைக்கிற தன்மை உண்டு என்பதால் பரு இருப்பவர்களுக்கும் அவை பரிந்துரைக்கப்படுகின்றன.

  மன அழுத்தமும் பருக்களை ஏற்படுத்துமா?
  இதற்கும் நேரடித் தொடர்பில்லை என்றாலும், பருக்கள் இருப்பவர்களுக்கு மன அழுத்தமும் இருந்தால் அது இன்னும் தீவிரமடையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

  யாருக்கு வரும்?
  11 முதல் 30 வயது வரையிலான அனேகம் பேருக்கு பருக்கள் வருவது இயல்பு. சிலருக்கு 30 வயதுக்குப் பின் பருக்கள் தாமாக மறையத் தொடங்கும். அரிதாக சிலருக்கு 40க்கு பிறகும் 50 வயதிலும்கூட பருக்கள் இருக்கும்.பருக்களுக்கான சிகிச்சைகள்

  கிளென்சர்
  பருக்கள் உள்ள சருமத்துக்கென்றே பிரத்யேக கிளென்சர்கள் உள்ளன. நுரை வரக்கூடிய, நுரையை ஏற்படுத்தாத கிளென்சர்கள் கிடைக்கின்றன. நுரையற்ற கிளென்சர்கள் சருமத்தை அதிகம் வறண்டு போகச் செய்யாது. சரும மருத்துவர் அல்லது அழகுக் கலை நிபுணரின் ஆலோசனையின் பேரில் மெடிக்கேட்டட் கிளென்சரும் உபயோகிக்கலாம்.

  மெடிக்கேட்டட் கிளென்சர்களில் பென்ஸைல் பெராக்சைடு, சாலிசிலிக் ஆசிட் அல்லது சல்பர் இருக்கும். அது சருமத் துவாரங்களை சுத்தப்படுத்தி, பருக்கள் குறைய உதவும். ஆனால், அவை சருமத்தை மிகவும் வறண்டு போகச் செய்து விடும். எனவே நிபுணர்களின் ஆலோசனையின்றி இவற்றை உபயோகிக்க வேண்டாம்.

  ஆன்ட்டிபயாடிக்ஸ்

  * மருத்துவர்கள் உள்ளுக்கு எடுத்துக் கொள்கிற மற்றும் பருக்களின் மேல் பூசக்கூடிய ஆன்ட்டிபயாடிக்குகளை பரிந்துரைப்பார்கள். அவை பருக்களைச் சுற்றியுள்ள பாக்டீரியாக்களை அழித்து வீக்கத்தையும் குறைக்கக்கூடியவை. சில வகை ஆன்ட்டிபயாடிக்குகள் சருமத்தை உரிந்து போகச் செய்வது, சிவந்து போக வைப்பது போன்ற பக்க விளைவுகள் தரலாம்.

  * உள்ளே எடுத்துக் கொள்கிற ஆன்ட்டிபயாடிக்குகள் தலைவலி, வயிற்று வலி, தலைசுற்றல், கேட்கும் திறன் பிரச்னை போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

  * இந்த ஆன்ட்டிபயாடிக்குகளை முறையான ஆலோசனையின் பேரில் சரியாகப் பயன்படுத்தாவிட்டால், ஆன்ட்டி பயாடிக் எதிர்ப்புத் தன்மை உருவாகி, பருக்களுக்குக் காரணமான பாக்டீரியாக்கள் வீரியம் கொள்ளவும், பருக்கள் மற்றும் இதர இன்ஃபெக்ஷன் அதிகரிக்கவும் கூடும்.
  மேல்பூச்சுகள்

  * பெரும்பாலான ஆன்ட்டி அக்னே கிரீம் மற்றும் ஜெல்களில் பென்ஸாயில் பெராக்சைடு, ரெட்டினாயிடு, Azelaic அமிலம் போன்றவை இருக்கும். பென்ஸாயில் பெராக்சைடு உபயோகித்ததும் பருக்களுக்குக் காரணமான பாக்டீரியாக்களின் தாக்கத்தைக் குறைத்து, சருமத் துவாரங்கள் அடைபடுவதையும் தவிர்க்கும். ஆனால், சருமம் அதீத வறட்சி அடைவது, உரிந்து போவது, வெயில் பட்டால் ஒவ்வாமைக்கு உள்ளாவது போன்ற பிரச்னைகளும் போனஸாக கிடைக்கும்.

  * ரெட்டினாயிடு என்பவை வைட்டமின் ஏ உடன் தொடர்புடையவை. பருக்களை விரட்டுவதில் Adapalene மற்றும் Tretinoin என்கிற இரண்டு வகையான ரெட்டினாயிடுகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவை சீபம் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, சருமத் துவாரங்களை அடைத்துக் கொள்கிற இறந்த செல்களை நீக்கி புதிய செல்கள் உருவாகவும் உதவக்கூடியவை. ஒருசிலருக்கு ரெட்டினாயிடு உபயோகம் சருமத்தில் லேசான எரிச்சலையும், கடுப்பையும் ஏற்படுத்தலாம்.

  பென்ஸாயில் பெராக்சைடு மற்றும் ரெட்டினாயிடு அலர்ஜியை ஏற்படுத்துவதாக உணர்பவர்கள் azelaic அமிலம் கலந்த தயாரிப்புகளை உபயோகிக்கலாம். மற்ற இரண்டையும்விட இது சற்றே மிதமானது என்றாலும் இதிலும் சரும வறட்சியும் எரிச்சலும் இருக்கவே செய்யும். பருக்களுக்கான பார்லர் சிகிச்சை, வீட்டு சிகிச்சை உள்ளிட்ட தகவல்கள் அடுத்த இதழிலும்...

  பழங்கள், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றுக்கு இயல்பிலேயே சருமத்தை அழகாகவும் பளிச்சென்றும் வைக்கிற தன்மை உண்டு என்பதால் பரு இருப்பவர்களுக்கும் அவை பரிந்துரைக்கப்படுகின்றன.

  பருக்கள் இருப்பவர்களுக்கு மன அழுத்தமும் இருந்தால் அது இன்னும் தீவிரமடையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.


  Similar Threads:

  Sponsored Links
  selvivinayagam likes this.

 2. #2
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,551

  Re: பருக்களை நீக்கும் அழகு சாதனங்கள்

  பருக்களைப் போக்கும் பார்லர் மற்றும் வீட்டு சிகிச்சைகள்


  பருக்களைப் போக்கும் பார்லர் மற்றும் வீட்டு சிகிச்சைகள், பொதுவான ஆலோசனைகள் பற்றி விளக்குகிறார் அழகுக் கலை நிபுணர் உஷா.  சோப்பும் தண்ணீரும் தினமும் இருவேளைகள் மிதமான சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு முகத்தை நன்கு கழுவுவதுதான் பருக்களை வரவிடாமல் தடுக்கும். ஏற்கனவே வந்துவிட்ட பருக்களை விரட்ட இது உதவாது. ஆனால், முகத்தின் சருமம் சுத்தமாக இருந்தால் புதிதாக பருக்கள் வராமல் தடுக்கப்படும். ‘முகத்தைக் கழுவுகிறேன்’ என்கிற பெயரில் அழுத்தித் தேய்க்கக்கூடாது. அது பருக்களையும் அதிகப்படுத்தும். சருமத்துக்கும் நல்லதல்ல.

  தவிர்ப்பது எப்படி?

  * பருக்கள் இருப்பவர்கள் காலையில் தினம் 2-3 முறைகள் மிக மிதமான கிளென்சர் கொண்டு முகம் கழுவ வேண்டும். உடற்பயிற்சி செய்கிற வழக்கமுள்ளவர்கள் அதை முடித்ததும் முகம் கழுவ வேண்டும்.

  * சிலர் பருக்கள் இருந்தால் ஆஸ்ட்ரின்ஜென்ட் உபயோகிப்பார்கள். சருமம் மிகவும் எண்ணெய் பசையுடன் இருப்பவர்கள்தான் ஆஸ்ட்ரின்ஜென்ட் உபயோகிக்க வேண்டும்.

  * பரு இருப்பவர்கள் சருமத்தை மட்டுமின்றி, கூந்தலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் எண்ணெய் வழிகிற கூந்தல் என்றால் ஒருநாள் விட்டு ஒருநாள் தலையை அலச வேண்டும்.

  * சருமத்துக்கான எந்த அழகு சாதனத்தை வாங்கினாலும் அதில் non-comedogenic எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அத்தகைய பொருட்கள்தான் சருமத் துவாரங்களை அடைக்காது. சருமத் துவாரங்கள் அடைபட்டால் அது பருக்களாக வெளிக்கிளம்பும் வாய்ப்புகள் அதிகம்.

  * தினம் இருவேளைகள் மிதமான கிளென்சர் உபயோகித்து முகம் கழுவ வேண்டும்.

  * கிளென்சர் உள்ளிட்ட எந்த அழகு சாதனமும் சொரசொரப்புத் தன்மை கொண்டதாகவோ, ஸ்க்ரப்பிங் துகள்கள் கொண்டதாகவோ இருக்கக்கூடாது. அவை பருக்களை அதிகப்படுத்தும்.

  * பருக்களைக் கிள்ளவோ, அழுத்தி எடுக்கவோ கூடாது. இது பருக்களை அதிகப்படுத்துவதுடன், தழும்புகளையும் உருவாக்கும்.

  * பருக்கள் இருப்பவர்கள் அதிக மசாஜ் தேவைப்படுகிற ஃபேஷியல்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். பருக்கள் உள்ளவர்களுக்கான பிரத்யேக ஃபேஷியல்கள் பற்றிக் கேட்டறிந்து அவற்றைச் செய்து கொள்வதே சிறந்தது.

  பருக்களுக்கான கிரீம்களை தவிர்க்க வேண்டியவர்கள்...

  * கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் ஊட்டுபவர்கள்.

  * மருந்து அலர்ஜி உள்ளவர்கள், வேறு உடல்நலக் கோளாறுகளுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு இருப்பவர்கள். பிற சிகிச்சைகள் கெமிக்கல் அடங்கிய கிரீம் மற்றும் லோஷன்களை உபயோகிக்கத் தயங்குபவர்கள் டீ ட்ரீ ஆயில் அடங்கிய கிரீம்கள், ஆல்பா ஹைட்ராக்சி அடங்கிய கிரீம்கள் மற்றும் துத்தநாக (ஸிங்க்) சப்ளிமென்ட்டுகளை உபயோகிக்கலாம்.

  பார்லர் சிகிச்சை

  * ஹைபரீக்வன்சி என்கிற சிகிச்சை பருக்களை விரட்டும் முதல் கட்டத் தீர்வாக இருக்கும்.

  * லேசர் மற்றும் லைட்தெரபியின் மூலம் சருமத்தை பாதிக்கச் செய்யாமல் பருக்களை விரட்டவும், அதனால் உண்டாகும் வீக்கத்தையும் குணப்படுத்த முடியும். இவற்றை அந்த சிகிச்சைகளில் தேர்ந்த நிபுணர்களிடம் மட்டுமே செய்து கொள்ள வேண்டும்.

  * கெமிக்கல் பீல் மற்றும் டெர்மாப்ரேஷன் சிகிச்சைகளும் பலனளிக்கும். பருக்களுக்கான பிற சிகிச்சைகளுடன் இவற்றையும் சேர்த்துச் செய்கிற போது, பருக்கள் விட்டுச் சென்ற தழும்புகளையும் போக்க முடியும்.

  பொடுகு இருந்தால் பருக்கள் வரும்!

  பொடுகுப் பிரச்னை இருப்பவர்களுக்கு மற்றவர்களைவிடவும் பருக்களின் தீவிரம் அதிகமாக இருக்கும். குறிப்பாக நெற்றிப் பகுதியில் பருக்கள் வரும். எனவே கூந்தலை சுத்தமாக, பொடுகின்றி வைத்துக் கொள்வதன் மூலம் பருக்களிடம் இருந்து தப்பிக்கலாம்.

  முட்டை மற்றும் முட்டைகோஸில் உள்ள வைட்டமின் பி, பொடுகைக் கட்டுப்படுத்தும். பொடுகுதான் பருக்களுக்கான காரணம் என்பதைக் கண்டுபிடித்துவிட்டால், Anti Dandruff ஷாம்பு உபயோகித்து பொடுகின்றி கூந்தலைப் பராமரிக்க வேண்டும். பரு என்பது முகத்தில் மட்டும்தான் வரும் என்றில்லை.

  தோள்பட்டை, முதுகுப் பகுதிகளிலும் வரலாம். அதனால், பொடுகு இருப்பவர்கள் கூந்தலை விரித்து சருமத்தில் படும்படி விடாமல் கட்டிக் கொள்ள வேண்டும். தலைக்கு உபயோகிக்கிற சீப்பு, ஹேர் பேண்ட், தலையணை உறை போன்றவற்றை இரண்டு நாட்களுக்கொரு முறை சுத்தப்படுத்தி உபயோகிக்க வேண்டும்.

  வீட்டு சிகிச்சைகள்

  * பொடுகினால் வரும் பருக்களை விரட்டுவதில் டீ ட்ரீ ஆயிலுக்கு முதலிடம் உண்டு. நீங்கள் உபயோகிக்கிற ஷாம்புவில் சில துளிகள் டீ ட்ரீ ஆயில் கலந்து குளித்தால் அதில் உள்ள ஆன்ட்டி பாக்டீரியல் தன்மையானது பொடுகைக் கட்டுப்படுத்தி, பருக்கள் வராமலும் காக்கும்.

  * முதல் நாள் இரவே ஊற வைத்த வெந்தயத்தை மறுநாள் அரைத்து தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறி, மிதமான ஷாம்புவால் அலசினால் பொடுகும், அதனால் வரும் பருக்களும் கட்டுப்படும்.

  * ஐஸ் கட்டிகளை ஒரு சுத்தமான துணியில் கட்டி, பருக்களின் மேல் ஒற்றி ஒற்றி எடுக்கலாம். அது பருக்களால் சருமத்தில் ஏற்பட்ட சிவப்பை மாற்றி, அந்த இடத்தில் ரத்தஓட்டத்துக்கும் உதவும்.

  * ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், சில துளிகள் டீ ட்ரீ ஆயில் கலந்து பருக்களின் மேல் தடவி, 20 நிமிடங்கள் கழித்து சுத்தமான தண்ணீரில் அலசலாம்.

  * ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை 4 டீஸ்பூன் தண்ணீருடன் கலந்து, அதில் பஞ்சைத் தொட்டு, முகம் முழுக்க ஒற்றி எடுக்கவும். இது பருக்களைச் சுற்றியுள்ள பாக்டீரியா தொற்றினை உடனடியாக சுத்தம் செய்யும்.

  * முல்தானி மிட்டி 2 டீஸ்பூன், வேப்பிலை பவுடர் அரை டீஸ்பூன், பன்னீர் சிறிது - இவை மூன்றையும் குழைத்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் காய்ந்ததும், குளிர்ந்த தண்ணீரில் கழுவவும். வாரம் 2 முறைகள் இப்படிச் செய்யலாம். ஜாதிக்காயை அரைத்து, பருக்களின் மேல் மட்டும் படும்படி போடலாம்.

  * 4 டீஸ்பூன் ரத்த சந்தனப் பொடியுடன், சீரகத்தை வேக வைத்த தண்ணீர் 3 டீஸ்பூன், 1 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து பேஸ்ட் போலச் செய்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், பருக்களால் உண்டான தழும்புகள் மறையும்.

  ‘முகத்தைக் கழுவுகிறேன்’ என்கிற பெயரில் அழுத்தித் தேய்க்கக் கூடாது. அது பருக்களையும் அதிகப்படுத்தும். சருமத்துக்கும் நல்லதல்ல.


  Last edited by chan; 30th Aug 2016 at 05:08 PM.
  honey rose, VaSun and Strawberry like this.

 3. #3
  safron's Avatar
  safron is offline Citizen's of Penmai
  Real Name
  sumy
  Gender
  Female
  Join Date
  May 2016
  Location
  srilanka
  Posts
  625

  Re: பருக்களை நீக்கும் அழகு சாதனங்கள்

  Good sharing sis..

  Sumy..
  உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

 4. #4
  Strawberry's Avatar
  Strawberry is offline Citizen's of Penmai
  Real Name
  ishu
  Gender
  Female
  Join Date
  May 2016
  Location
  srilanka
  Posts
  656

  Re: பருக்களை நீக்கும் அழகு சாதனங்கள்

  Nice tips

  Ishu..
  Ur Dream Is Ur Signature..

 5. #5
  kema's Avatar
  kema is offline Penman of Penmai
  Blogger
  Commander's of Penmai
  Real Name
  G.Hemajothy
  Gender
  Female
  Join Date
  May 2013
  Location
  srilanka
  Posts
  1,907

  Re: பருக்களை நீக்கும் அழகு சாதனங்கள்

  super tips  Courteous
  G.Kema


  My completed stories


 6. #6
  honey rose's Avatar
  honey rose is offline Yuva's of Penmai
  Real Name
  Divya Bharathi.R
  Gender
  Female
  Join Date
  Aug 2013
  Location
  chennai
  Posts
  9,252

  Re: பருக்களை நீக்கும் அழகு சாதனங்கள்

  Useful sharing sis.tfs


 7. #7
  selvivinayagam is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2016
  Location
  thiruvannamalai
  Posts
  247

  Re: பருக்களை நீக்கும் அழகு சாதனங்கள்

  good message,to remove pimples


 8. #8
  Gender
  Female
  Join Date
  Aug 2017
  Location
  VISBY
  Posts
  74

  Re: பருக்களை நீக்கும் அழகு சாதனங்கள்

  Good tips. Thanks for sharing.


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter