முகத்துக்கு மஞ்சள் பூசினால் முடி உதிருமா?

'பெண்கள் முகத்துக்கு மஞ்சள் பூசிக் குளிப்பதால்தான் அவர்களது முகத்தில் மீசை, தாடி வளர்வதில்லை என்ற நம்பிக்கை கிராமப்புறங்களில் உண்டு.

இதனால் ஆண்கள் முகத்தில் மஞ்சள் பூசப் பயப்படுவார்கள்.

ஆனால், மஞ்சளுக்கும் முடி உதிரலுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுதான் உண்மை. பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வது என்பது ஹார்மோன்களால் ஏற்படுவது.

பிறகு ஏன் பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசிக் குளிக்கிறார்கள்?

மஞ்சள் ஓர் அழகுசாதனப் பொருள். சருமத்தைப் பொலிவாக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு.

எனவேதான் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு அந்தப் பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது.

அதற்குப் பதிலாக மஞ்சள் சேர்க்கப்பட்ட அழகு க்ரீம்களைப் பயன்படுத்துகிறார்கள்.

காசு அதிகம் கொடுத்து ரசாயனங்களுடன் சேர்க்கப்பட்ட மஞ்சளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இயற்கையாகக் கிடைக்கும் மஞ்சளைப் பயன்படுத்தியே அழகைப் பெறலாமே!

Similar Threads: