Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 1 Post By vaishnnavi
  • 1 Post By jv_66

Neck Care


Discussions on "Neck Care" in "Face Care" forum.


  1. #1
    vaishnnavi's Avatar
    vaishnnavi is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2014
    Location
    chennai
    Posts
    502

    Neck Care

    சங்கு போன்ற கழுத்து.... என்பார்கள் உவமைக்கு! பராமரிப்பு, உடல் எடை, முதலில் கழுத்தில் தான் பிரதிமபலிக்கும். ஆனால், பல பெண்கள் அந்தக் கழுத்துக்கான முக்கியத்துவத்தை தராமல் விடுவதால்... கழுத்தில் கருமை தட்டுவது, மடிப்புகள் விழுவது, முரடு தட்டிப்போவது என சீக்கிரத்திலேயே வயோதிக தோற்றத்தைப் பெற்றுவிடுகிறார்கள். பியூட்டி பார்லரில் முகத்துக்கு மட்டும் பேஷியல் செய்யும் போது நாளடைவில் கழுத்துப் பகுதி தொய்ந்து, சுருக்கம் விழுந்து, வயதைக் கூட்டிக் காட்டும். எனவே, முதலில் கழுத்துக்கு பேஷியல் ஸ்ட்ரோக் தந்த பிறகு, முகத்துக்கு பேஷியல் செய்து கொள்ளுங்கள்.

    * குட்டையான கழுத்து இருப்பவர்கள், கழுத்தை சரியாகப் பராமரிக்காமல் விட்டால், கயிறு கட்டியது போல் மடிப்புகள் தோன்றி, பின் கழுத்தில் கறுப்பு வரிகள் ஏற்படும். இதற்கு, பாதாம் எண்ணெயையும் தேங்காய் எண்ணெயையும் சம அளவு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

    இந்த எண்ணெயை சிறிது எடுத்து, லேசாக சுடவைத்து, கழுத்தில் தடவி, தினமும் மேலிருந்து கீழாக விரல்களால் தேய்த்துக் குளிக்க வேண்டும். இப்படிச் செய்யும் போது, கழுத்தின் இறுக்கம் குறைந்து, மடிப்பு மறைந்து விடும். கருமையும் மாறும்.

    * தினமும் காலையில் எழுந்ததும், கழுத்தை மேலும், கீழும், பக்கவாட்டிலும் திருப்பி எக்ஸர்சைஸ் செய்வதால், தசைகள் தளர்வாகி, தோல் தொய்ந்து விடாமல் பாதுகாக்கப்படும். கழுத்தில் அணிந்திருக்கும் மஞ்சள் சரடை மாற்றாமல், நாட்கணக்கில் போட்டியிருந்தால் கழுத்துப் பகுதி முரடு தட்டி, கருமை படர்ந்து விடும். சிலருக்கு நகைகளும் ஒவ்வாமல் போகலாம். இதற்கு, ஒரு டீஸ்பூன் சர்க்கரை பவுடர், ஒரு டீஸ்பூன் வெண்ணெய், கால் டீஸ்பூன் பச்சைக் கற்புர பவுடர் மூன்றையும் கலந்து... பின் கழுத்து, முன் கழுத்து, தோள்பட்டை வரை தினமும் தேய்த்துக் குளியுங்கள். கருமை மறைந்து தோலும் மிருதுவாகும்.

    * சாப்பாட்டில் வெந்தயக்கீரையை அதிகம் சேர்த்துக் கொள்வதோடு, அந்தக் கீரையை அரைத்து கழுத்தில் பூசி வர வெண்சங்கு போல் ஜொலிக்கும் உங்கள் கழுத்து.

    * குட்டையான கழுத்து இருப்பவர்கள், கழுத்தை ஒட்டி நெக்லஸ், சோக்கர்ஸ் அணிவதை விட, நீளமான செயின் அல்லது மணிகளை அணிவது, கழுத்தை இன்னும் எடுப்பாகக் காட்டும்.

    --ராஜம் முரளி
    மூலிகை அழகு கலை நிபுணர்



    Similar Threads:

    Sponsored Links
    jv_66 likes this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Neck Care

    Thanks Vaishnavi for sharing the useful tips for neck care.

    vaishnnavi likes this.
    Jayanthy





  3. #3
    marclewis is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jul 2014
    Location
    USA
    Posts
    441

    Re: Neck Care

    Neck stretching is best to do for flexibility. But do carefully and slowly.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter