Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree1Likes
 • 1 Post By chan

முகத்துக்கு நண்பன் முல்தானிமட்டி!


Discussions on "முகத்துக்கு நண்பன் முல்தானிமட்டி!" in "Face Care" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  முகத்துக்கு நண்பன் முல்தானிமட்டி!

  முகத்துக்கு நண்பன் முல்தானிமட்டி!
  டாக்டர். எஸ்.டி.வெங்கடேஸ்வரன்

  முல்தானிமட்டியைக் குழைச்சு முகத்தில் பூசினால், பளிச்னு இருக்கும்’ என, பாட்டி வைத்தியத்தில் தொடங்கி பியூட்டி பார்லர் வரை முல்தானி மட்டிக்கு செம மவுசு!

  'முல்தானிமட்டினா என்ன?’ என்று யாரிடமாவது கேளுங்கள். 'அது ஒரு பவுடர்...’ என்பதற்கு மேல் வேறு எந்தத் தகவலும் தெரியாமல் விழிப்பார்கள்.
  சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் இணைப் பேராசிரியர் டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரனிடம் முல்தானிமட்டி பற்றி கேட்டோம்.

  முல்தானிமட்டி என்பது, ஆற்றுப்படுகைகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை மண். முல்தான்’ என்பது, பாகிஸ்தானில் ஆற்றோரம் இருக்கும் ஒரு ஊர். மட்டி’ என்றால் மண். இந்த மண்ணுக்கும் களிமண்ணுக்கும் சிறிதளவுதான் வித்தியாசம். இதன் வேதிப்பெயர் அலுமினியம் சிலிகேட். இந்த மண்ணில், மக்னீசியம், துத்தநாகம், சிலிகான் போன்ற முக்கியமான தாதுக்கள் உள்ளன.

  பாறையில் இருந்து வரும் முல்தானிமட்டி, சிறுசிறு கட்டிகளாக இருக்கும். வெள்ளை, தந்த நிறம், மஞ்சள் எனப் பல வண்ணங்களில் கிடைக்கிறது. அரை வெண்மை நிறத்தில் இருப்பதுதான் தரமானது. மேலும், பட்டுப் போல மென்மையாக இல்லாமல், கொஞ்சம் நெருநெருவென இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும்.


  பயன்பாடு

  முல்தானிமட்டி, ஒரு க்ளீனிங் ஏஜென்ட். அந்தக் காலத்தில் வீட்டுக்கு வெள்ளை அடிப்பதற்கும், வர்ணம் தீட்டுவ தற்கும் இந்த மண்ணை உபயோகப்படுத்தி இருக்கிறார் கள். நீரேற்று நிலையங்களில்,தண்ணீரில் இருக்கும் ஃப்ளோரைடு என்னும் வேதிப்பொருளை உறிஞ்சி எடுக்க, முல்தானி மட்டி பயன்படுகிறது.

  சருமத்தை சுத்தப்படுத்தவும், வெளுப்பாக்கவும் (ப்ளீச்சிங்), உலர்ந்த செல்களை நீக்கவும் (ஸ்கிரப்பிங்), எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்கை உறிஞ்சி எடுக்கவும் முல்தானி மட்டி முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் இருக்கும் துத்தநாகம், சருமத்தில் பருக்களால் ஏற்படும் காயங்களை ஆற்றும் திறன் கொண்டது.
  ஆனால், இதை அதிகமாகப் போட்டுத் தேய்த்தாலோ, அதிக நேரம் வைத்து இருந்தாலோ, முக சருமத்தின் மேலே உள்ள அதிமென்மையான அடுக்கு (Superfine layer), பாதிக்கப்படும்.


  பயன்படுத்தும் முறை

  முல்தானிமட்டியை சுத்தமான பன்னீரில் குழைத்து, ஒரு சிறிய பிரஷால் முகத்தில் தடவி வைத்திருந்து (தேய்த்தல் கூடாது), 10 நிமிடங்கள் கழித்து, தண்ணீரால் கழுவவேண்டும். பரு பிரச்னை உள்ளவர்கள், அதிகமான எண்ணெய் சுரப்பு உள்ளவர்களுக்கு நல்லது. 15 நிமிடங்களுக்கு மேல் அந்த பேக்கை வைத்திருக்கக் கூடாது. வெளியே செல்லும் முன், முல்தானிமட்டி போட்டு முகத்தைச் சுத்தப்படுத்தினால், முகம் பளீரென இருக்கும்.

  கோடைக்காலத்தில் முல்தானிமட்டி பயன் படுத்தும்போது, சிலருக்கு முகத்தில் எரிச்சல் ஏற்ப டலாம். அவர்கள் முல்தானிமட்டியுடன் தூய்மை யான சந்தனத்தூளைக் கலந்து பூசலாம். எரிச்சல் குறைந்து, குளுமையாக இருக்கும்.

  மட்டி டிப்ஸ்!

  கால் கட்டு புதினா இலைகளின் விழுது, 50 வேப்ப இலைகளின் விழுது... இவற்றுடன், 2 டீஸ்பூன் முல்தானிமட்டியைக் கலந்து, முகப் பருவின் மீது போட்டு வந்தால், பருக்கள் விரைவில் மறையும். வேம்பு, மிகச் சிறந்த கிருமிநாசினி. புதினா, பருவைக் காயச் செய்யும்.

  முகத்தில் வரும் கரும்புள்ளி, வெண்புள்ளிப் பிரச்னைக்கு, பலரும் பார்லரையே தேடிப் போகிறார்கள். பார்லர் கருவிகளால் நோய்த்தொற்று ஏற்பட்டு, திரும்பத் திரும்ப வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால், முல்தானிமட்டியுடன் வேப்ப இலை விழுதைக் கலந்து தடவி, காய்ந்ததும் கழுவி வந்தால், இந்தப் பிரச்னையை அடியோடு தீர்க்கலாம்.

  'மண்’ வைத்தியம்

  காவ்லின்’ (kaolin) எனப்படும் சீனக் களிமண்ணும், முல்தானிமட்டியின் இயல்பைக் கொண்டதுதான். அலோபதி மருந்துகளை விநியோகிக்கும் மொத்தக் கடைகளில் இதை வாங்க முடியும். முன்பெல்லாம் அலோபதி மருத்துவர்கள், கடுமையான வயிற்றுப்போக்கு கொண்ட குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் காவ்லினை தண்ணீரில் கரைத்துக் கொடுப்பார்கள். பேதி, உடனே நிற்கும். இப்போது, பல இடங்களில் இந்த நடைமுறை இல்லை. முல்தானிமட்டி கிடைக்காதவர்கள், இந்த சீனக் களிமண்ணை வாங்கி, முகத்துக்கு பேக் போடலாம்.  Similar Threads:

  Sponsored Links
  Last edited by chan; 7th Apr 2015 at 03:28 PM.
  saidevi likes this.

 2. #2
  saidevi's Avatar
  saidevi is offline Guru's of Penmai
  Real Name
  sarala devi
  Gender
  Female
  Join Date
  Mar 2014
  Location
  tn
  Posts
  5,086

  Re: முகத்துக்கு நண்பன் முல்தானிமட்டி!

  Thanks for sharing.


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter