Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

முகத்தில் எண்ணெய் பசையா? ஸ்கரப் பண்ணுங்க


Discussions on "முகத்தில் எண்ணெய் பசையா? ஸ்கரப் பண்ணுங்க" in "Face Care" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    முகத்தில் எண்ணெய் பசையா? ஸ்கரப் பண்ணுங்க

    முகத்தில் எண்ணெய் பசையா? ஸ்கரப் பண்ணுங்க...

    எப்போது பார்த்தாலும் முகம் எண்ணெய் பசையோடு இருப்பது மட்டுமல்லாமல் சருமத்துளைகள் அதிகம் காணப்படுவது போல் தோன்றுகிறதா? அப்படி இருந்தால் எதற்கும் கவலைப் படவேண்டாம். அதற்கு முகத்திற்கு ஸ்கரப் செய்தால் போதும். இதனால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் குழிகள் மெதுவாக மறைய ஆரம்பிக்கும்.

    மேக்கப் போடும் முன்...


    குளித்து முடித்து, முகத்திற்கு மேக்கப் செய்யும் முன், சிறிது எலுமிச்சை சாற்றை முகத்திற்கு தடவி, 10 நிமிடம் கழித்து, மேக் கப் செய்யவேண்டும். முகத்திற்கு எந்த ஒரு பொருளை போடும்போதும், மோரை முகத்திற்கு தடவி, 10-15 நிமிடத்திற்குப் பின் போடவேண்டும்.

    எங்கேனும் பார்ட்டிக்கு செல்லும் போது, முகத்திற்கு மேக்கப் செய்வதற்கு முன்பு, முகத்தை ஐஸ் கட்டிகளால் சிறிது நேரம் தேய்த்து, பின் காய வைத்து, பிறகு மேக்-கப் போட்டால், சருமம் எண்ணெய் பசையோடு காணப்படுவதை தவிர்க்கலாம்.

    மற்ற ஃபேஸ் ஸ்கரப்கள்...


    ஆப்பிளை மிகவும் மெலிதாக நறுக்கி, அதனை முகத்தின் மேல் வைத்து, 15 நிமிடம் கழித்து, அதனை நீக்கிப் பார்த்தால், சருமத் தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, முகத்தில் இருக்கும் சருமத்துளைகளையும் மெதுவாக நீங்கச் செய்யலாம்.

    ஒரு கப் அரிசி மாவை எடுத்துக் கொண்டு, அதோடு நன்கு கனிந்த பப்பாளியை அரைத்து சேர்த்து, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு, முகத்தை கழுவி, ஈரத்துடன் இந்த கலவையை வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்து, 10-15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவவேண்டும்.

    அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து, அதனை நன்கு அரைத்து, அதோடு தக்காளி சாற்றை விட்டு, அந்த கலவையை உடல் முழுவதற்கும் தடவி ஊறவிடவேண்டும். 15 நிமிடத்திற்குப் பின் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இதனால் உடலில் இருக்கும் இறந்த செல்கள் நீங்குவதோடு, எண்ணெய் பசையுள்ள சருமத்தில் இருக்கும் பழுப்பு நிற சருமத்தையும் நீக்கிவிடும்.

    எண்ணெய் பசை அதிகம் உள்ள சருமத்தில் சருமத்துளைகள் அதிகமாக இருந்தால், அதற்கு டோனரை பயன்படுத்த வேண்டும். மேலும் அந்த சருமத்தில் கரும்புள்ளிகள் நீங்கி, மென்மையான சருமத்தை பெற, சர்க்கரை கலந்திருக்கும் ஸ்கரப் தான் சிறந்தது. ஆகவே அதற்கு காப்பி பவுடரை, சர்க்கரையுடன் கலந்து, 2 துளிகள் ஆலிவ் ஆயிலை ஊற்றி, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவலாம்.


    Similar Threads:

    Sponsored Links
    malbha likes this.

  2. #2
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: முகத்தில் எண்ணெய் பசையா? ஸ்கரப் பண்ணுங்

    Very useful info, friend.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter