'குட்பை' சொல்லலாம் மங்குக்கு!வெ
யிலில் அதிகம் அலைவதால் சருமத்தில் ஏற்படும் மங்கு எனப்படும் பிக்மென்டேஷனை நீக்க, வீட்டிலேயே சுலபமாகச் செய்யக்கூடிய ஃபேஷியல் முறைகளைச் சொல்கிறார், சென்னையில் உள்ள விகாஷினி பியூட்டி சலூனின் உரிமையாளர் லக்ஷ்மி மனோகரன்.‘‘பிக்மென்டேஷனை சரிசெய்ய, சரும மருத்துவர் அல்லது அனுபவம் வாய்ந்த அழகுக் கலை நிபுணரிடம் ‘கிளைகோலிக் பீல்’ சிகிச்சை மேற்கொள்ளலாம். தவிர, வீட்டிலேயே இந்த ஃபேஷியலை செய்துகொள்ளலாம்.


ஸ்டெப் 1
முதலில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். சில துளிகள் எலுமிச்சைச் சாற்றுடன் இரண்டு சிட்டிகை தூளாக்கிய சர்க்கரையைக் கலந்து, சருமத்தில் மங்கு உள்ள இடத்தில் தடவி மிருதுவாக மசாஜ் செய்யவும். பத்து நிமிடங்கள் ஊறவிட்டுக் கழுவவும்.

ஸ்டெப் 2
இரண்டு ஸ்பூன் பொடி செய்த ஓட்ஸ் எடுத்து, காய்ச்சாத பாலில் குழைத்து முகத்தில் தடவி ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் கொடுத்த பின், ஐந்து நிமிடங்கள் உலரவிடவும். அதே நேரத்தில், மெல்லியதாக சீவப்பட்ட உருளைக் கிழங்கை கண்களுக்கு மேல் வைக்காமல் கீழே வைக்கவும். இது கருவளையத்தை நீக்கும். பின்னர் பாலில் நனைத்த பஞ்சைக் கொண்டு `பேக்’கை துடைத்தெடுக்கவும். சருமம் பளிச் என மாறும்.

ஸ்டெப் 3
விதைகள் நீக்கிய தக்காளிச் சாற்றை பஞ்சில் தொட்டு முகத்தில் தடவி, பத்து நிமிடங்கள் கழித்துக் கழுவவும். மங்கு உள்ள சருமத்தினருக்கு கைமேல் பலனளிக்கக் கூடிய சிகிச்சை இது.

ஸ்டெப் 4
தோல் நீக்கிய பப்பாளித் துண்டுகளை தேவையான அளவு எடுத்து நன்கு மசித்து முகத்தில் தடவி காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவவும். இந்த சுலபமான ஃபேஷியல் வெயில் கால சரும பாதிப்பிலிருந்து காப்பது மட்டும் இல்லாமல், சருமத்தின் ஆரோக்கியத்துக்கும், அழகுக்கும் உத்தரவாதம் தரும்.’’

Similar Threads: