Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By shansun70

Live together but don't depend on anyone-சேர்ந்து வாழுங்கள், சார்ந்து வாழா&#


Discussions on "Live together but don't depend on anyone-சேர்ந்து வாழுங்கள், சார்ந்து வாழா&#" in "Family & Relationship" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Thumbs up Live together but don't depend on anyone-சேர்ந்து வாழுங்கள், சார்ந்து வாழா&#

    பல நம்பிக்கைகள் காலாவதியாகி விட்டவை; சில நம்பிக்கைகள் இன்று துளியும் பொருந்தாதவை. காலத்திற்கு பொருந்தாத, அதே சமயம், நாம் உற்சாகமூட்டி வரும் நம்பிக்கைகளை ஒதுக்க வேண்டும். முன்பெல்லாம் பெண்கள், வீட்டில் இருக்கும் மற்றவர்களையோ, ஆண்களையோ சார்ந்து தான் வாழ்ந்தனர். குழந்தைப் பருவத்தில் - பெற்றோரை, சிறு வயதில் - உடன் பிறந்தவரை, பருவ வயதில் - காதலனை, மணமான பின் - கணவனை, வயதான பின் - தன் பிள்ளைகளை என, தன் வாழ்நாள் முழுவதும் குடும்ப உறுப்பினர்களை சார்ந்து தான் வாழ்ந்து வந்திருக்கின்றனர். எவரும் தனித் தீவு அல்ல
    அப்படி வாழ்க்கையில், தனக்கான ரசனை, தனக்கான மனநிலை, தனக்கான வாழ்க்கை முறை எல்லாமே மாறி, எல்லாமே ஏதோ ஒன்றை சார்ந்ததாய் மாறி விடுகிறது. உடுத்தும் உடை துவங்கி, கேட்கும் இசை வரை ரசனை கூட மற்றவர்களின் ரசனையோடு சார்ந்து, சுயமிழந்து போகிறோம்.
    சார்ந்திருப்பது என்பது, குடும்ப வலை ஒன்றில், நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது தான்.
    'இது தான் இந்திய கலாசாரம்;
    பாதுகாப்பானதும் கூட' எனச் சொல்லப்பட்டு வந்தாலும், தன் காலில் நிற்பவர்களால் தான் எந்த நிலையிலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும். ஒரேயடியாக சார்ந்து இருப்பது, தேவையற்ற எதிர்பார்ப்பையும், வேதனையையும் தரக் கூடும்.எவரும் தனித் தீவு அல்ல என்கிறது,
    ஒரு ஆங்கிலப் பழமொழி. இதற்கு, 'சார்ந்திருப்பது தான் சிறந்தது' என்று அர்த்தமில்லை; 'சேர்ந்து இருப்பது' என்றும் ஒரு அர்த்தம் உண்டு. ஒருவருக்கு ஒருவர் துணையாக தொடர்வது, எக்காலத்திலும் தேவையான ஒன்று; துணையில்லாத வாழ்வு, தொடர்
    தொல்லைகள் தரலாம்.
    ஆனால், குறிப்பிட்ட நிலை வரை தான், ஏதோ ஒன்றை சார்ந்து வாழ்வது சரியானதாய் படலாம். தனியாய் வாழப் பக்குவம் வரும் நிலையில், சார்தல் நிறுத்தப்பட வேண்டும். விலங்குகளின் வாழ்க்கை முறை கூட இது தான் சரியென நிரூபிக்கிறது. ஆனால், சமுதாய வழக்கம் இந்த நம்பிக்கையில் தொடரவில்லை என்பதையும் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.
    'நான் யாரையும் சார்ந்து இருக்க முடியாது; அவசியமானதும் இல்லை. நான் ஒரு லட்சியவாதி. நான் எங்கே போகிறேன் என்று, எனக்கே தெரியாது; ஆனாலும், சரியான பாதையில் தான் செல்கிறேன்' என்று சொன்னவர்களை, சமூகம் முட்டாள்களாய் தான் பார்த்தது.
    'பிறரைச் சார்ந்து வாழ்வது இழிவே. அற்பத்தனம் மூலம் வாழ்வாதாரத்தைப் பெறுவதை விட, மரணமே மேலானது'
    என்கிறது, ஒரு வாழ்க்கைத் தத்துவம். இது தான், 'சேர்ந்து வாழுங்கள்; சார்ந்து வாழாதீர்கள்' என்றுரைக்கப்படுகிறது.
    'பெண்களே... ஆசைகளுக்கும், ஆண்களுக்கும் அடிமையாக இருக்க மறுத்து விடுங்கள்' என, காந்தி சொல்லி இருக்கிறார்.
    விலங்கினங்களும், பறவைகளும், சிறிது காலத்திற்கு, தாயை சார்ந்து வாழ்கின்றன. அதன்பின், தன் காலில் நிற்கப்
    பழகிக் கொள்கின்றன.
    மனிதனுக்கோ, உறவுகள் வழியே, பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதனால், தன் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள, உறவுகளை பயன்படுத்துவதில்லை; மகிழ்ச்சியோ, துக்கமோ யாரிடமாவது பகிர்ந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.உலகியல் சார்ந்த தேவைகளைப் பொறுத்தவரை, அனைவருமே, ஒருவரை ஒருவர் சார்ந்து தான் வாழ வேண்டியிருக்கிறது. ஆனால், உங்கள் அனுபவத்தின் தன்மையைப் பொறுத்து, நீங்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.சார்ந்து வாழாத வகையில்...
    ஆனால், உங்கள் மகிழ்ச்சியும், ஆனந்தமும், முழுக்க முழுக்க உங்களைச் சார்ந்தே இருக்கும்போது, உங்களைச் சுற்றியிருப்போருடன் அருமையான உறவுகளை வளர்த்துக் கொண்டு, சேர்ந்து வாழப் பழகுங்கள்; அதை விடுத்து, சார்ந்து வாழ முற்படாதீர்கள்.
    பிரச்னை இல்லாமல் இணைந்து, சார்ந்து வாழ் என்பது சொல்வதற்கு எளிது; நடைமுறையில் கடினம். எல்லாராலும் அவ்வளவு சுலபமாக, மற்றவர்களுடன் சார்ந்து வாழ்ந்துவிட முடியாது. கருத்து வேறுபாடு, சுயத்தைத் தொலைக்கும் அபாயம் என பல காரணிகள், சார்ந்து வாழ்வதை தவிர்க்கச் சொல்லும். எனவே, சேர்ந்து வாழுங்கள்; சார்ந்து வாழாதீர்கள். சார்ந்து வாழாத வகையில், உங்கள் வாழ்க்கைக் களத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
    ஏனெனில், உங்கள் நிழல் கூட, வெளிச்சம் உள்ளவரை தான் துணைக்கு வரும்!
    உறவுகளுடன், நட்புகளுடன், சமுதாயத்துடன் சேர்ந்து வாழுங்கள்; முழுமையாக சார்ந்து வாழாதீர்கள்! இது தான் இப்போதைய சமுதாயத்திற்கு தேவையான நீதி.

    உங்கள் மகிழ்ச்சியும், ஆனந்தமும், முழுக்க முழுக்க உங்களைச் சார்ந்தே இருக்கும்போது, உங்களைச் சுற்றியிருப்போருடன் அருமையான உறவுகளை வளர்த்துக் கொண்டு, சேர்ந்து வாழப் பழகுங்கள்; அதை விடுத்து, சார்ந்து வாழ முற்படாதீர்கள்

    Similar Threads:

    Sponsored Links
    jv_66 and spv like this.

  2. #2
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: சேர்ந்து வாழுங்கள், சார்ந்து வாழாதீர்க

    Nice sharing sir.


  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Live together but don't depend on anyone-சேர்ந்து வாழுங்கள், சார்ந்து வாழĬ

    ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்தான் .

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter