Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By chan

Suggestions to maintain good relationship-சின்னச் சின்ன ஆலோசனை-பின்பற்றித்&#


Discussions on "Suggestions to maintain good relationship-சின்னச் சின்ன ஆலோசனை-பின்பற்றித்&#" in "Family & Relationship" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Suggestions to maintain good relationship-சின்னச் சின்ன ஆலோசனை-பின்பற்றித்&#

    சின்னச் சின்ன ஆலோசனை-பின்பற்றித்தான் பாருங்களேன்

    வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகின்றன. பட்டால் தான் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றில்லை. பல நபர்கள் அனுபவத்தால் கற்றதை இங்கு உங்களுக்காக தொகுத்துள்ளோம்.

    மற்றவரின் எதிர்பார்ப்புகளை மிஞ்சுங்கள் உற்சாகத்துடன்!

    கேட்பதை எல்லாம் நம்ப வேண்டாம்.
    இருப்பதை எல்லாம் செவழிக்க வேண்டாம்.
    விரும்பும் அளவு தூங்க வேண்டாம்.

    நிதானமாக பேசுங்கள், விரைவாக சிந்தியுங்கள்.

    உங்களுக்கு பதில் சொல்ல பிடிக்கவில்லை என்றால், கேள்வி கேட்டவரைப் பார்த்து "எதற்காக கேட்கிறீர்கள்?" என்று புன்னகையுடன் கேளுங்கள்.

    தோற்றாலும் அதில் கற்ற பாடத்தை கோட்டை விட வேண்டாம்.

    உறவினர்களை வைத்து ஒருவரை மதிப்பிடாதீர்கள்.

    மற்றவர்களின் லட்சியங்களை ஊக்குவியுங்கள்.

    சண்டைப் போடும் நேரத்தில் பிரச்சனைப் பற்றி பேசுங்கள், நபர்களைப் பற்றி அல்ல.

    வருடத்திற்கு ஒரு முறையாவது இதுவரை நீங்கள் செல்லாத இடத்திற்கு செல்லுங்கள்.

    கடவுளை நம்புங்கள். அதே நேரத்தில் வீட்டுக் கதவையும் பூட்டுங்கள்.

    சிறிய பிரச்சனையால் ஆழமான நட்பு பாதித்துவிடக் கூடாது.

    தவறை உணர்ந்தால் உடனடியாக அதைச் சரி செய்யுங்கள்.

    தொலைப்பேசியில் புன்னகையுடன் "ஹலோ" சொல்லுங்கள்.

    டி.வி. பார்ப்பதைவிட புத்தகங்களை அதிகமாக படிப்பது நல்லது.

    தனிமையில் சிறிது நேரத்தை செலவிடுங்கள்.

    மன்னிப்பு கேட்கும்போது மற்றவரின் முகத்தைப் பார்த்து கேளுங்கள்.

    பேருக்காக `ஐ லவ் யூ' சொல்ல வேண்டாம்.

    காதலித்து ஏமாற்றம் அடைவது காதலிக்காமல் இருப்பதை விட மேலானத

    மாறுதல்களை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் பண்பை விட்டுக் கொடுக்காதீர்கள்.

    பல நேரங்களில் மௌனமே சிறந்த பதிலாக அமைந்துவிடும்.

    உங்கள் குணங்களும், பண்பும் உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிப்பவை.

    விரும்பியது கிடைக்காமல் போவதும் சில நேரங்களில் நல்லது தான்.

    முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவுங்கள்.

    உங்கள் வெற்றிகளை கணக்கிடும் போது அதைப் பெற எவ்வளவு இழந்தீர்கள் என்பதையும் கணக்கில் கழித்துப் பாருங்கள்.

    மற்றவர்கள் உங்களைப் புகழும் போது அதை தடுக்க முயலாதீர்கள்.

    வீட்டில் அழகான அமைதியான சூழலை உருவாக்குங்கள்.

    எழுத்தும், அதன் அர்த்தமும் ஒன்றுதானா என்பதை யோசித்துப் பாருங்கள்.

    உங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.

    வயதாக ஆக வாழ்க்கைத் துணைவரின் உரையாடல் தனிமையைப் போக்கும் அவர் அழகு அல்ல.

    Similar Threads:

    Sponsored Links
    jv_66 and bharathi saravanan like this.

  2. #2
    bharathi saravanan's Avatar
    bharathi saravanan is offline Commander's of Penmai
    Real Name
    Dhivya Bharathi
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    Chennai
    Posts
    1,612

    Re: சின்னச் சின்ன ஆலோசனை-பின்பற்றித்தான் ப

    Nice lines akka.....

    Thank u...........

    Very little is needed to make a happy life; it is all within yourself, in your way of thinking.


    எனது வரிகள்

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: சின்னச் சின்ன ஆலோசனை-பின்பற்றித்தான் ப

    Good suggestions

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter