Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 3 Post By chan
  • 2 Post By jv_66

Why only Women are blamed in family problems-உறவு சார்ந்த பிரச்சினைகளில் பெண்


Discussions on "Why only Women are blamed in family problems-உறவு சார்ந்த பிரச்சினைகளில் பெண்" in "Family & Relationship" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Why only Women are blamed in family problems-உறவு சார்ந்த பிரச்சினைகளில் பெண்

    உறவு சார்ந்த பிரச்சினைகளில் பெண்ணையே குறிவைத்து தாக்குவது ஏன்?




    பெண்கள் மென்மையானவர்கள், எதிர்த்துப் பேசத் தயங்குபவர்கள், வன்மத்தில் ஈடுபடாதவர்கள் என்று ஒரு மாயவலையை உருவாக்கி வைத்துள்ளது இந்தச் சமூகம். ஆண் செய்யும் தவறு அவனை மட்டுமே பாதிக்கும். பெண் செய்யும் தவறு தலைமுறையையே பாதிக்கும் என்ற கருத்து காலக் காலமாய் வலுவாகச் சொல்லப்பட்டதன் விளைவே இது.

    பெண் தவறு செய்து விடுவாளோ என்ற சந்தேகமே அவளை எப்போதும் கண்காணிக்கச் சொல்கிறது. விளைவு? அவளின் ஒவ்வொரு செயலும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. என்னதான் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேறினாலும் அனைத்து இடத்திலும் ஆண்களின் சதவீதம் அதிகம். அப்படி இருக்கும்போது தங்கள் இனத்தை எப்படி விட்டுக் கொடுப்பார்கள்? இதுவே தவறு செய்பவர்களுக்குத் தைரியத்தைக் கொடுக்கிறது.

    தங்கள் தவறுகளை மறைத்து, பெண்கள் மீது பழி போடுகிறார்கள். ஆண் - பெண் உறவு சார்ந்த அனைத்திலும் எப்போதுமே தராசு முள் பெண் பக்கமே கீழிறங்குகிறது. தராசுக் கோல் ஆண்களின் கையில்தானே இருக்கிறது! அறிவு சார்ந்து அவள் தன் பணியில் எவ்வளவுதான் முன்னேறினாலும், சந்தேகக் கண்ணோட்டத்திலேயே இந்தச் சமூகம் அவளை அணுகுகிறது.

    பெண் மட்டுமே கலாச்சாரச் சீர்கேட்டுக்குக் காரணம் என்று சித்தரிக்கப்படுகிறது. குடும்பம், குழந்தைகளைக் கவனிப்பது அவளுடைய கடமை மட்டுமே என வலியுறுத்தப்படுகிறது. ஆண்கள் தங்கள் மனதை விசாலமாக்கத் தேவையில்லை. மனது என்று ஒன்று தங்களுக்கு இருக்கிறது என்று உணர்ந்தாலே போதும்.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Why only Women are blamed in family problems-உறவு சார்ந்த பிரச்சினைகளில் பெண&a

    இதற்கு முக்கிய காரணம் , பெண்களால் ஒரு குடும்பத்தை ஆக்கவும் முடியும் , அழிக்கவும் முடியும் என்ற உண்மையான கருத்தினால்தான்.

    ஒரு பெண் நல்ல கட்டுசெட்டாக இருந்து குடும்பத்தை ஏழ்மையிலிருந்து முன்னேற்றவும் முடியும் , அதே போல ஊதாரித்தனமாக இருந்து குடும்ப நிலைமையை அதல பாதாளத்தில் தள்ளவும் முடியும் .

    குடும்பத் தலைவன் சரியாக இல்லாவிட்டாலும் , அந்தக் குடும்பத்தலைவி மனது வைத்தால் , குடும்பத்தை நிமிர வைக்க முடியும் .

    உறவினர்களையும் அரவணைத்து போவதில் பெண்களுக்கே முன்னுரிமை .

    அவர்கள் செய்வதைப் பார்த்தே கணவரும் , குழந்தைகளும் பின்பற்றுகின்றனர் . பெரும்பாலான குடும்பங்களில் உள்ள நிலைமை இது .

    குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே தாயானவள் கற்பிக்க வேண்டியது , தன்னால் தவறு நேர்ந்தால் , அதை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதை .

    sumathisrini and chan like this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter