Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

User Tag List

Like Tree1Likes

யார் பிள்ளை தனுஷ் ?


Discussions on "யார் பிள்ளை தனுஷ் ?" in "Fans Club and Others" forum.


  1. #11
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    6,563

    Re: யார் பிள்ளை தனுஷ் ?

    உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜரானார், நடிகர் தனுஷ்!

    மதுரை மேலூர் தம்பதியினர், நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையில், தனுஷை நேரில் வந்து ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
    இதையடுத்து, தனுஷ் இன்று உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் ஆஜராகியுள்ளார். தற்போது, வழக்குத் தொடர்ந்த மேலூர் தம்பதியினர் கூறியபடி, தனுஷுக்கு அங்க ஆடையாளங்கள் சரிபார்ப்பு, தனி அறையில் நடந்துவருகிறது.


    Sponsored Links

  2. #12
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    86,114

    Re: யார் பிள்ளை தனுஷ் ?

    மேலூர் தம்பதி வழக்கு: தனுஷுக்கு டி.என்.ஏ.சோதனை கேட்டு மனு...!

    நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி தாக்கல் செய்துள்ள வழக்கில், சான்றிதழில் குறிப்பிட்டுள்ளபடி அங்க அடையாளங்களை சோதிப்பதற்காக நேற்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் ஆஜரானார்.


    அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது நடிகர் தனுஷுக்கு மரபணு பரிசோதனை நடத்தக்கோரி மேலூர் கதிரேசன்-மீனாட்சி தம்பதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேலும் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதனால், இவ்வழக்கு வேகமெடுத்துள்ளது.
    மதுரை மாவட்டம், மேலூர், மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் திரைப்பட நடிகர் தனுஷ், தங்களது மூத்த மகன் என்று உரிமை கோரி மனுத் தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த பள்ளி ஆவணங்களில் உள்ள அங்க அடையாளங்கள் நடிகர் தனுஷ் உடலில் உள்ளதா என்பதை சரிபார்க்க ஆஜராக கூறி உத்தரவிட்டிருந்தது. இதன்படி ஆஜரான தனுஷின் உடலில் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டன. அதன் அறிக்கை நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷுக்கும், தனக்கும் மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் என்று கதிரேசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.


    அதில், நடிகர் தனுஷ் என்னுடைய மகன் என்பதற்கு போதிய ஆதாரம் உள்ளது. அவரைப் பதினோறாம் வகுப்பு வரை நான் படிக்க வைத்தேன். இந்நிலையில், அவரது தற்போதைய சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு உண்மையான பெற்றோராகிய எங்களை அவரது பெற்றோர் இல்லை என்று மறுத்து வருகிறார். இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது அவர் தாக்கல் செய்த பிறப்புச் சான்று மற்றும் பள்ளி மாற்றுச் சான்றுகள் போலியானது.


    இத்தகைய சூழலில் மரபணு சோதனை நடத்தினால் மட்டுமே இருவருக்கும் இடையேயான உறவை துல்லியமாக கண்டறிய முடியும். எனவே எனக்கும், நடிகர் தனுஷுக்கும் மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இதனால் தனுஷ் வழக்கு பரபரப்பை கிளப்பியுள்ளது. ஏற்கெனவே தனுஷ் தரப்பில் தாக்கல் செய்துள்ள சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை விசாரிக்கவும் தனி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


  3. #13
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    86,114

    Re: யார் பிள்ளை தனுஷ் ?

    தனுஷுக்கு சிக்கல் தந்திருக்கும் DNA பற்றி தெரியுமா? #HowDNAworks

    நடிகர் தனுஷின் படங்கள் வெளியாகும் வேகத்தை விட சர்ச்சைகள் வேகமாக வருகின்றன. அப்படி ஒன்றுதான் நீதிமன்றத்துக்கு வந்தது. கதிரேசன் - மீனாட்சி தம்பதி தனுஷ் தங்கள் மகன் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். ஏகப்பட்ட குழப்பங்களை ஏற்படுத்தி வரும் இந்த வழக்கு முடியாமல் நீண்டு கொண்டே போகிறது.


    நீதிமன்றத்தில் தனுஷ் தரப்பில் இயற்பெயர் வெங்கடேஷ்பிரபு என்றும், இதை தனுஷ் என மாற்றியதாகவும் தெரிவித்தனர். ஆனால், அவருடைய பள்ளி மாற்றுச்சான்றிதழில் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை என்று கதிரேசன், மீனாட்சி தம்பதி தரப்பில் சந்தேகம் கிளப்பப்பட்டது.

    இவர்கள் அளித்த சான்றிதழில் உள்ள அங்க அடையாளங்கள், தனுஷின் உடலில் இருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்தார்கள். இதற்காக நீதிமன்றத்தில் மருத்துவச் சோதனை நடத்தப்பட்டது. தனுஷ் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், பெயர் மாற்றம் செய்ததற்கான கெஸட் நகல்கள் ஆகியவற்றில் உள்ள விவரங்கள் பல கேள்விகளை எழுப்பியதால் ‘சான்றிதழ்களில் சந்தேகம் உள்ளது’ என கதிரேசன் - மீனாட்சி தரப்பின் வழக்கறிஞர் சொன்னார்.


    டி.என்.ஏ சோதனை செய்தால் உடனே முடியும் வேலையை இழுத்தடிப்பதால் சோஷியல் மீடியாவிலும் இது பற்றி அதிகம் பேசப்பட்டது. கதிரேசன் தரப்பில் டி.என்.ஏ. சோதனைக்கு தயார் என நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள். அடுத்து என்ன ஆகப்போகிறது என்பதுதான் மர்மமாகவே இருக்கிறது.

    எல்லோருக்கும் டி.என்.ஏ டெஸ்ட் தெரியும். ஆனால், அது எப்படி செய்யப்படுகிறது என்பது தெரியுமா?


    உயிரின் அடிப்படை மூலக்கூறே டி.என்.ஏ தான். மற்ற எந்த மூலகூறுகளுகள் போல் இல்லாமல், டி.என்.ஏ தன்னைத் தானே நகல் செய்துகொள்கிறது. இதுதான் உயிரின் அடிப்படை. இந்த மூலக்கூறை ஆராய்ந்தால், அதில் ஒரு பேட்டர்ன் கிடைக்கும். அதை வைத்து இரண்டு பேருக்கிடையில் ரத்த தொடர்பு இருக்கிறதா, அவர்தான் நிஜமான உயிரியல் பெற்றோரா என்பதை கண்டறிய முடியும்.
    ரத்தம், முடி, தோல் அல்லது உடலில் இருக்கும் எதாவது ஒரு திசுவின் மாதிரி கிடைத்தால் போதும். அதில் இருக்கும் டி.என்.ஏ. மூலக்கூறுவை ஆராய்ந்து அதன் வடிவத்தை பதிவு செய்துக்கொள்ளலாம்.
    பொதுவாக கீழ்கண்ட காரணங்களுக்காக டி.என்.ஏ டெஸ்ட் செய்யப்படும்.


    1) Newborn screening
    பிறந்த குழந்தைக்கு செய்வார்கள். அமெரிக்காவில் இது அதிகம். இதன் மூலம் பிறந்த குழந்தைக்கு எதாவது குறை இருந்தால், அதை ஆரம்பத்திலே சரி செய்ய முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.


    2) Forensic testing
    குற்றவாளிகளை கண்டறிய... எல்லா குற்றங்களிலுமே அதை செய்பவர்கள் எதாவது ஒரு க்ளூவை விட்டுச் செல்வார்கள் என்பார்கள். அப்படி அவர்கள் விட்டுச்செல்வது அவர்கள் உடல் சார்ந்த விஷயம் என்றால், அதிலிருந்து டி.என்.ஏ. மாதிரியை எடுத்து குற்றவாளிகளை கண்டறிய முயற்சி செய்வார்கள்.


    3) carrier testing
    இதில்தான் பெற்றோர் இருவரின் டி.என்.ஏ மாதிரியை வைத்து மகன் அல்லது மகளின் டி.என்.ஏவுடன் ஒப்பிடுவார்கள். தனுஷ் வழக்கு போன்ற விஷயத்துக்காக மட்டுமில்லாமல், பரம்பரையாக இருக்கும் நோய் பற்றி அறியவும் இந்த டெஸ்ட் பயன்படும்.


    4) Prenatal testing
    இது குழந்தை பிறக்கும் முன்னரே செய்யப்படும் டெஸ்ட். பிறக்க போகும் குழதைக்கு ஜெனடிக் டிஸ் ஆர்டர் எதாவது இருக்குமா என முன் கூட்டியே அறிவதற்காக செய்யப்படுவது,.
    இன்னும் பல காரணங்களுக்காக டி.என்.ஏ டெஸ்ட் செய்வதுண்டு.
    தனுஷ் விஷயத்தில் டி.என்.ஏ டெஸ்ட் செய்யப்படுமா என்பதை விரைவில் நீதிமன்றம் உறுதி செய்யும். கதிரேசன் தம்பதி தரப்பில் டி.என்.ஏ. டெஸ்டுக்கு தயார் என சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.


  4. #14
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    86,114

    Re: யார் பிள்ளை தனுஷ் ?

    தனுஷ் மீது உரிமை கோரும் வழக்கு: மருத்துவர்கள் அறிக்கையில் புதிய தகவல்

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

    வழக்கு விசாரணையின் போது கதிரேசன் -மீனாட்சி தரப்பில் சில சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்ட‌ன. இந்த சான்றிதழ்களில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளனவா? என கண்டறிய அவரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மார்ச் 2 ஆம் தேதி தனுஷ் நேரில் ஆஜரானார்.



    இந்நிலையில், தனுஷ் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. மதுரை அரசு மருத்துவமனை டீன் முன்னிலையில் 2 மருத்துவர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர். தனுஷ் உடலில் இருந்து சில அங்க அடையாளங்கள் லேசர் கருவி மூலம் அழிக்கப்பட்டதாக, மருத்துவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனையடுத்து விரிவான விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்தி வைத்தது.


  5. #15
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    6,563

    Re: யார் பிள்ளை தனுஷ் ?

    never ending story!


  6. #16
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    86,114

    Re: யார் பிள்ளை தனுஷ் ?

    பெற்றோருக்கு தனுஷ் நன்றி


    பவர்பாண்டி படம் மூலம் இயக்குனராகியுள்ள நடிகர் தனுஷ், தன் தாய், தந்தை, சகோதரி மற்றும் ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

    நடிகர் தனுஷ் முதல் முறையாக இயக்கியுள்ள படம், பவர்பாண்டி. இதில், கதை நாயகனாக ராஜ்கிரண் நடித்துள்ளார். பிரசன்னா, ரேவதி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின், டீசர் வெளியீட்டு விழா, நேற்று நடந்தது. பின், நடிகர் தனுஷ் கூறியதாவது: உலகில், நல்லது, கெட்டது; அன்பு, வெறுப்பு என, இரண்டும் உள்ளது.

    இதில், நாம் எதை தேர்ந்தெடுக்கிறோம்; எதை நோக்கி போகிறோம் என்பது, நம் கையில்தான் உள்ளது. நேர்மறையான சிந்தனைகளை தேர்ந்தெடுத்தால், நிம்மதியாக இருக்கலாம்; இதுதான், பவர்பாண்டி. இப்படத்திற்கான நம் மண்ணின் இசையை தர முயற்சித்துள்ளோம்.

    எதிர்காலத்தில், நம் மண் இசையே நமக்கு தேவை. இப்படத்திற்கு, ராஜ்கிரண் கிடைத்தது மிகப்பெரிய ஆசிர்வாதம். உதவி இயக்குனர்கள், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என்னை இந்தளவுக்கு உயர்த்திய அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகள் மற்றும் ரசிகர்களுக்கும் நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.


    அம்மா, அப்பாவுக்கு நன்றி கூறிய தனுஷ், அவரது அப்பா, அம்மா யார் என்ற வழக்கு சர்ச்சை குறித்து, கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.


  7. #17
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    6,563

    Re: யார் பிள்ளை தனுஷ் ?

    கேட்டால் ரஜினியே நடித்திருப்பார். ஆனால், என் மருமகன் தனுஷ்...’ - உருகும் ராஜ்கிரண்

    தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங் நடிப்பில் உருவாகிவரும் ‘பவர்பாண்டி’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பும், டிரெய்லர் வெளியீடும் இன்று நடைபெற்றது. படத்தின் பெயர் பவர்பாண்டி. ஆனால், வரிச்சலுகை காரணமாக ‘ப.பாண்டி’ என்ற டைட்டிலுடன் டிரெய்லர் வெளியிட்டனர்.
    தனுஷ், ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், டிடி, ரோபோ ஷங்கர், சென்ட்ராயன், ரேவதி, வித்யுலேகா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், எடிட்டர் பிரசன்னா.கே., நடன இயக்குநர் பாபா மாஸ்டர், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்துகொண்டனர்.


    ஷான்ரோல்டன் பேசும்போது, “ஜோக்கர் பட பாடல் ரிலீஸ் நேரத்தில், வேலைப்பளுவினால் அசதியில் தூங்கிட்டேன். அந்த நேரம் தனுஷ் சார் ட்விட்டரில் ஜோக்கர் பட பாடல் பத்தி நிறைய ட்வீட் பண்ணியிருந்தார். ஜோக்கர் இல்லைன்னா, தனுஷ் சார் படத்தில் நான் இல்லை. எல்லோருக்குமே ஒரு கட்டத்தில் எனர்ஜி குறையும். ஆனா எப்போதுமே எதையாவது யோசிச்சுட்டும், செய்துட்டும் இருக்குறது தனுஷ் சார் ஸ்டைல். ரொம்ப பெரிய மனிதர். ஆனா எளிமையானவர். எந்த விஷயம் பேசினாலும் ஆழமா தெரிஞ்சிட்டுதான் பேசுவார். அவரோட மிகப்பெரிய ரசிகன். இப்போ ஒரே மேடையில் அவரோட இருக்குறதே ஆச்சர்யமாதான் இருக்கு.” என்றார்.
    ராஜ்கிரண், “ இயக்குநர் கஸ்தூரி ராஜா 27 வருடங்களுக்கு முன்னால் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் என்னைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அவரின் மகன், என்னுடைய ‘மருமகன் தனுஷ்’ என்னை மீண்டும் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். இப்படியொரு அனுபவம் யாருக்கும் அமையாது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என்று பல பரிமாணங்களில் வெற்றியடைந்திருக்கும் இவர் இயக்கும் முதல் படத்தில் ரஜினி சாரிடம் நடிக்கக் கேட்டாலும்கூட வருவார். ஆனால், 'நான் ராஜ்கிரணை ஹீரோவாக வைத்துத்தான் படமெடுப்பேன்' என்கிற முடிவில் தனுஷின் தன்னம்பிக்கை தெரிகிறது. ‘பவர் பாண்டி’ குழுவில் எல்லோருமே என் பிள்ளைகள்தான். மருமகன் கதையை விளக்கிய விதத்தில் என்னை அறியாமலேயே அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. இந்தப் படத்தில் புதிதாக ஒரு ராஜ்கிரணை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் தனுஷ். " என்றார்.


    தனுஷ் பேசும்போது, “ உலகத்துல நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கு ஒவ்வொரு மனிதருக்குள்ளும்.... அன்பும் இருக்கு, வெறுப்பும் இருக்கு. எதைத் தேர்வு செய்கிறோம், எது வேண்டும், எதை நோக்கிப் போகிறோம் என்பது நம் கையில்தான் இருக்கு. சுற்றி இருப்பவர்களின் அன்பு, நிம்மதி, பாசம், நல்லது என்று பாசிட்டிவான விஷயங்களை மட்டுமே எடுத்துக்கொண்டால் நிம்மதியாக இருக்கலாம் என்பதே பவர்பாண்டி. இந்தப் படத்திற்காக முதலில் நன்றி சொல்ல நினைப்பது என்னுடைய உதவி இயக்குநர்களுக்குத்தான்.
    இந்தப் படத்திற்குக் கிடைத்த ஆசீர்வாதம்தான் ராஜ்கிரண் சார். அவரின் சிரிப்பும், அரவணைப்பும், அன்பும் தான் இந்தப்படத்தை முழுமைப்படுத்தியிருக்கிறது. இந்தப் படம் பாசிட்டிவ் அதிர்வோட இருக்க முழுக்க முழுக்க காரணம் ராஜ்கிரண் சார் தான். அவருக்கு நன்றினு சொல்லுற வார்த்தைகூட குறைவான வார்த்தைதான்.
    ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் ராஜ்கிரண் சார் நடிப்பை பலமுறை வீட்டில் நடிச்சுப் பார்ப்பேன். என்னுடைய சூப்பர் ஹீரோ மாயாண்டி. எங்க குடும்பத்தோட பயணத்தை மாத்துனதே இந்த மாயாண்டி தான். எங்க குடும்பத்துக்கு மேல இருக்குற பாசமானு தெரியலை, ஓகே சொல்லிட்டுத்தான் கதையே கேட்டாங்க. இந்த ‘பவர் பாண்டி’ கதைய எழுதி ஒன்றரை ஆண்டுக்கு மேல் ஆகிடுச்சு. அவர் நடிச்சதுனாலதான் படமே முழுமை அடைஞ்சிருக்கு.
    இந்தப் படத்தோட மிகப்பெரிய பலம் ரேவதி. அவர் இயக்குநர் என்பதால், எதுவும் சொல்லணும்னு அவசியமே இல்லை. அவங்களே சுலபமா நடிச்சுட்டுப் போய்ட்டாங்க.


    நான் இருந்த அதே மனநிலையில்தான் ஷான் ரோல்டனும் இருந்தார். அதுனால பாடல்களும் நல்லா வந்திருக்கு. இந்தப் படத்துல இருக்குற பாசிட்டிவிட்டியை ரசிகர்களும் உணர்வாங்க. இறைவனுக்கு நன்றி...!" என்று சாந்தமாகப் பேசினார் தனுஷ்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter