User Tag List

Like Tree17Likes

சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்டு&#


Discussions on "சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்டு&#" in "Fans Club and Others" forum.


 1. #91
  vijigermany's Avatar
  vijigermany is online now Lord of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Germany
  Posts
  101,792

  Re: சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்ட&

  அரசியலுக்கு வரும் முன் அரிதாரம் பூசும் கமல்!
  ஆர்.கே.நகரில் பிரசாரம்
  கமல், தன்னை அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவராக காட்டிக் கொள்ளும் முயற்சியாக, கோவில் பிரச்னையை கையில் எடுத்துள்ளார்.

  நடிகர் கமல், தன்னை ஒரு நாத்திகராகவே, வெளிப்படுத்தி வந்துள்ளார். 'நீட்' நுழைவுத்தேர்வு பிரச்னையில் மத்திய அரசையும், ஊழல் விவகாரங்களில் மாநில அரசையும் விமர்சித்து, சமூக வலைதளத்தில், அவர் கருத்து வெளியிட்டு வருகிறார்.அவரது கருத்துகளில், பெரும்பாலும், கம்யூனிஸ சிந்தனை அதிகமாக காணப்படுகிறது. ஹிந்து தீவிரவாதம் தொடர்பான கருத்து, அவருக்கு கடும் எதிர்ப்பை சம்பாதித்து கொடுத்தது.


  ஆண்டவன் செயல் அல்ல


  அது, ஹிந்துக்களுக்கு எதிரானவர் போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.அதையடுத்து, விரைவில், அரசியல் கட்சி துவங்கவுள்ள அவர், தன்னை நடுநிலையாளராக நிலைநிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். சமீபத்தில்,


  அவர், 'டுவிட்டர்' பக்கத்தில், 'கோவிலை கொள்ளை அடிப்பவரை தாக்க, நான் தயார். நான் தொழுபவனா, இல்லையா என்பதல்ல கேள்வி.உன்னை கைவிடுவது, ஆள்பவர் செயல்; நீர் நம்பும் ஆண்டவன் செயல் அல்ல' என, பதிவிட்டிருந்தார்.

  இது, நடுநிலைவாதியாக காட்டிக் கொள்ள, அவர் எடுத்திருக்கும் முயற்சியாககருதப்படுகிறது.இது குறித்து, கமல் தரப்பினர் கூறியதாவது:கமல்,கட்சி துவங்குவது குறித்து பேட்டி அளித்தபோது, ''நான் நாத்திகன் இல்லை. அது, ஆத்திகர்கள் கண்டுபிடித்த வார்த்தை. என்னை, பகுத்தறிவுவாதி என, சொல்லிக் கொள்ளவே விரும்புகிறேன்,'' என்றார்.இந்த சூழலில் அவர், கோவில் குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவன் என்பதை, அவர் காட்ட விரும்புகிறார்.அவர், தமிழகம் முழுவதும், கோவில் ஆக்கிரமிப்புகள் தொடர்பான தகவல்களை சேகரிக்க, நற்பணி மன்றத்தினருக்கும், ஆதர வாளர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக, அவர் போராட்டம் துவங்கவுள்ளார். அது, அவரை மக்கள் மனதில், நடுநிலைவாதியாக நிலைநிறுத்தும் என நம்புகிறார். இவ்வாறு அவர்கள்கூறினர்.


  ஆர்.கே.நகரில் பிரசாரம்

  ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து வரும் நடிகர் கமல், ஆர்.கே.நகர் களத்தில் இறங்கி, மக்களின் நாடித் துடிப்பை பார்க்க, ஆவலாக உள்ளார்.
  மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து வரும் கமல், சமீபத்தில், சென்னை, எண்ணுார் பகுதிக்கு சென்று, மக்களின்


  குறைகளை கேட்டறிந்தார்.


  தற்போது, விஸ்வரூபம் 2 பட வேலையில் உள்ள கமல், இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே.நகருக்கு செல்ல, தயாராகி வருகிறார்.தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தை பயன்படுத்த, கமல் எண்ணியுள்ளார். கமல், தன் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவரை, வேட்பாளராக நிறுத்தாவிட்டாலும், அவர் ஆதரவு பெற்ற வேட்பாளராக, விஷாலை அறிவிக்கவேண்டும் என, சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில், மக்களின் நாடித் துடிப்பை அறியும் வகையில், 'ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது' என்பதை மையமாக வைத்து, கமல் ரசிகர்கள், ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்ய ட்டமிட்டுள்ளனர்.அதில், கமலும் பங்கேற்பார் என, தகவல்வெளியாகியுள்ளது


  Sponsored Links

 2. #92
  vijigermany's Avatar
  vijigermany is online now Lord of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Germany
  Posts
  101,792

  Re: சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்ட&

  2 படங்களை முடித்ததும் கமல்ஹாசன் அரசியல் பிரவேசம்


  விஸ்வரூபம்-2, சபாஷ்நாயுடு படங்களின் படப்பிடிப்புகளை முடித்து விட்டு நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார்.

  நடிகர் கமல்ஹாசன் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது படப்பிடிப்புகளில் தீவிரமாகி உள்ளார்.


  பாதியில் நின்றுபோன விஸ்வரூபம்-2, சபாஷ்நாயுடு ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகளில் அவர் பங்கேற்று நடித்து வருகிறார்.


  இந்த படங்களை முடித்து விட்டு அவர் அரசியலில் குதிக்கும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த மாதத்துக்குள் படப்பிடிப்புகள் முடிந்துவிடும் என்றும் தமிழ் புத்தாண்டில் அரசியல் கட்சியை அறிவிப்பார் என்றும் நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.


  விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை அதன் முதல் பாகம் வெளியான 2013-ஆம் ஆண்டிலேயே கமல்ஹாசன் பெருமளவு முடித்து விட்டார். அந்த வருடம் இறுதியில் விஸ்வரூபம்-2 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு நிதிநெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதமாகி நின்றுபோனது.
  சபாஷ் நாயுடு, விஸ்வரூபம்-2 படங்களில் கமல்ஹாசன் தோற்றங்கள்.


  இதுபோல் 2008-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய தசாவதாரம் படத்தில் போலீஸ் அதிகாரியாக கமல்ஹாசன் நடித்து இருந்த பல்ராம்நாயுடு கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அந்த பெயரை தொடர்புபடுத்தி ‘சபாஷ் நாயுடு’ என்ற புதிய படம் தயாரானது. இதில் கமல்ஹாசன், சுருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்தனர்.


  முதல் கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தபோது படத்தின் டைரக்டர் ராஜீவ் குமாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் கமல்ஹாசனே படத்தை இயக்கினார். முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியதும் வீட்டு மாடி படிக்கட்டில் இருந்து கமல்ஹாசன் தவறி விழுந்து அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் அந்த படத்தின் படப்பிடிப்பும் பல மாதங்களாக நின்று போனது.


  2 படங்களின் படப்பிடிப்புகளை முடிக்கும் பணிகளில் கமல்ஹாசன் ஈடுபட்டு உள்ளார். இந்த படங்கள் வெளியானபிறகு அரசியல் கட்சியை அறிவித்து விட்டு சில மாதங்கள் இடைவெளி விட்டு, ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.


 3. #93
  vijigermany's Avatar
  vijigermany is online now Lord of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Germany
  Posts
  101,792

  Re: சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்டĬ

  ரஜினிக்கு போட்டியாக ஜனவரியில் அரசியல் அறிவிப்பை வெளியிடும் கமல்ஹாசன்

  நடிகர் கமலஹாசன் விரைவில் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ட்வீட்டரில் கருத்து தெரிவித்தார். பின்னர் ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்தார்.


  இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்ட்ட நிலையில் கமலஹாசன் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று அவரது நற்பணி இயக்கத்தின் அகில இந்திய பொறுப்பாளர் கோவை ஆர். தங்கவேலு மீண்டும் தெரிவித்துள்ளார்.


  சேலம் மாவட்ட கமலஹசன் நற்பணி இயக்கம் சார்பில் முப்பெரும் விழா சேலத்தில் நடந்தது. இதில் கோவை தங்கவேலு கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் சேலம் மாவட்ட பொறுப்பாளர் பாலசந்தர் மற்றும் நற்பணி இயக்கத்தினர் திரளாக பங்கேற்றனர்.


  பின்னர் கோவை ஆர். தங்கவேலு நிருபர்களிடம் கூறுயதாவது-


  நடிகர் கமலஹாசன் ஏற்கனவே அரசியலுக்கு வந்து விட்டார். அரசியல் பயணத்துக்கான செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது விஸ்வரூபம்-2 படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த பணிகளை முடித்துவிட்டு இம்மாத இறுதியில் தமிழகம் வர உள்ளார்.


  ஜனவரி மாதத்தில் அரசியல் பிரவேசம் குறித்து கமல் அறிவிக்க உள்ளார். கடந்த மாதம் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த கமல் இனி மேல் ஒவ்வொரு ஊரிலும் ரசிகர்கள், மக்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.


  அரசியல் பயணத்தை கமல்ஹாசன் தொடரும் போது கலைப் பயணத்தில் இருந்து விடுபடுவார் என்று எதிர்பார்க்கிறோம். ரஜினிகாந்தை இதுவரை போட்டியாக நினைத்தது இல்லை. அவருடன் இணைந்து செயல்படுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவு.


  கடந்த 39 வருடங்களாக இயக்க பணியை மட்டும் மேற்கொண்டு வருகிறோம். அரசியல் தங்களுக்கு புதிது என்பதால் அதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம். கமல் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தனியாகவே செயல்படுவார்.


  திரைத்துறையை சேர்ந்த கமல் நிச்சயம் முதல்வராக வருவார். தமிழகத்தில் தற்போது மோசமான அரசியல் நடைபெற்று வருகிறது. அதை முடிவுக்கு கொண்டு வர நேர்மையான ஆட்சியை வழங்குவார். மக்களும் அவரை முழுமையாக நம்புகிறார்கள். இதனால் அவர் அரசியலில் வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.


  இந்த அறிவிப்பால் கமல் விரைவில் தீவிர அரசியலில் ஈடுபட போவது உறுதியாகி உள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


 4. #94
  vijigermany's Avatar
  vijigermany is online now Lord of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Germany
  Posts
  101,792

  Re: சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்டĬ

  இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும்: நடிகர் கமல் ஹாசன் புத்தாண்டு வாழ்த்து


  இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும் என தனக்கே உரிய பாணியில் நடிகர் கமல் ஹாசன் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  இன்று நள்ளிரவுடன் 2017-ம் ஆண்டு முடிந்து 2018-ம் ஆண்டு பிறக்கிறது. இதையொட்டி, முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயில்களில் நள்ளிரவு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதனால், மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


  அவ்வகையில் 2018-ஆங்கிலப்புத்தாண்டு நாளை பிறக்க உள்ளதையொட்டி நடிகர் கமல் ஹாசன் டுவிட்டரில் தனக்கே உரிய பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


  ‘புது வருடம் கண்டிப்பாய்ப் பிறந்தே தீரும். புது உணர்வும் பொது நலமும் நம் மனதில் பிறக்க வாழ்த்துக்கள். இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும் ஆர்வம் பொங்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என கமல் தெரிவித்துள்ளர்.


 5. #95
  vijigermany's Avatar
  vijigermany is online now Lord of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Germany
  Posts
  101,792

  Re: சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்டĬ

  ரஜினி அதிரடி அறிவிப்பால் கமல் அரசியல் பிரவேசம் தாமதம்


  நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்ததால், கமலின் அரசியல் பிரவேசம் தாமதமாகி இருக்கிறது என்று அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #Rajinikanthpoliticalentry #RajiniForTamilNadu #Rajnikanth

  நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் 21 ஆண்டுகளாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் கிளைமாக்ஸ் முடிவுக்கு வந்தது.


  அவர் தற்போதைய அரசியலில் இருந்து வித்தியாசமாக ஆன்மீக அரசியல் என்ற புதிய பாதையை தேர்வு செய்துள்ளார். இதுவரை கட்சி தொடங்கியவர்கள் உடனே கட்சிக்கு பெயர் சூட்டி, கொடி சின்னத்தை மேடையிலேயே அறிவித்து தொண்டர்களை திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.


  ஆனால் ரஜினி அரசியல் பிரவேசம் என்ற வகையில் நிறுத்திக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை இனிமேல்தான் மேற்கொள்ள இருக்கிறார்.


  ரஜினி போல் நடிகர் கமல்ஹாசனும் அரசியல் பிரவேசத்துக்கு தயாராகி வந்தார். அரசை விமர்சித்து டுவிட்டர்களில் கருத்து தெரிவித்து வந்தார். அவருக்கு அமைச்சர்களும், பல்வேறு கட்சி தலைவர்களும் பதிலடி கொடுத்து வந்தனர். இதனால் அரசியலில் விறுவிறுப்பு ஏற்பட்டது.


  ஆனால் சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் ரஜினியும், கமலும் ஒன்றாக கலந்து கொண்ட போது ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அறிவுரை கூறுவதுபோல் பேசினார். “சிறந்த நடிப்பால் உயர்ந்து நிறைய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்த சிவாஜியால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை” என்று பேசி கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தை எச்சரித்தார்.


  இதனால் கமல்ஹாசன் தனது அரசியல் ‘டுவிட்’களை படிப்படியாக குறைத்துக் கொண்டார். கடைசியாக ‘விஸ்வரூபம்-2’ படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் அரசியல் டுவிட்களை அடியோடு நிறுத்திக் கொண்டார்.

  கமலை எச்சரித்ததால் ரஜினியும் நேரடி அரசியலுக்கு வரமாட்டார் என்றே அரசியல் தலைவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் கமலை எச்சரித்து விட்டு திடீர் என்று ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பை வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


  இதை சற்றும் எதிர்பார்க்காத கமல்ஹாசன், ரஜினிக்கு டுவிட்டரில் வாழ்த்து மட்டும் தெரிவித்துள்ளார். ரஜினியின் அறிவிப்பு கமல்ஹாசனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாகவே அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


  இதுபற்றி திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனர் சுப.வீரபாண்டியன் கூறியதாவது:-


  ரஜினியின் அரசியல் பிரவேசம் நிச்சயம் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தையும், அரசியல் கணக்குகளையும் பாதிக்கும். கமல்ஹாசன் முன்கூட்டியே அரசியல் அறிவிப்பை வெளியிட்டு அதன்பிறகு ரஜினி அறிவிப்பை வெளியிட்டு இருந்தால் அது கமல்ஹாசனின் வாக்குகளை பாதித்து விடும். அது இருவருக்கும் இடையே தேர்தல் மோதலாகி விடும்.


  அடையாள அரசியல் வரும்போது ரஜினிகாந்த் தன்னை தமிழன் என்று சொல்லிக் கொண்டு அவருடன் இணைந்து பணியாற்றுவது கடினம்.


  அதேசமயம் ரஜினி சினிமாவில் அதிரடி ஹீரோ என்ற அளவில் மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார். கமல்ஹாசன் சூப்பர் நடிகர். ஆனால் அவருக்கு குறைந்த சதவீதம் வாக்குகள்தான் கிடைக்கும்.


  இவ்வாறு அவர் கூறினார்.


  ரஜினியின் அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து கமல்ஹாசன் அரசியல் அறிவிப்பு எப்போது வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ரஜினி அறிவிப்பை வெளியிட்டு விட்டதால் இப்போதைக்கு கமல்ஹாசனிடம் இருந்து அறிவிப்பு வராது. ஏனெனில் அவ்வாறு அறிவித்தால் அது போட்டி அரசியல் போல் இருவருக்கும் இடையே ஏற்பட்டு விடும்.


  எனவே கமல்ஹாசனின் அரசியல் பிரவேச அறிவிப்பு தாமதமாகத்தான் வெளியாகும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்


 6. #96
  vijigermany's Avatar
  vijigermany is online now Lord of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Germany
  Posts
  101,792

  Re: சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்டĬ

  ரஜினிக்கு போட்டி:
  கமல் திட்டவட்டம்


  நடிகர் ரஜினி, அரசியலில் நுழைந்துள்ள நிலையில், அவருக்கு முன், அரசியல் அறிவிப்பு வெளியிட்ட கமல், 'தன் முடிவில் மாற்றம் இல்லை' என, திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

  சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' மாநில அரசை விமர்சித்து, அரசியல் பதிவுகளை, கமல் வெளியிட்டு வந்தார். அதற்கு, அமைச்சர்கள் மற்றும், பா.ஜ.,வினரிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தனிக்கட்சி துவங்கி, அரசியலில் குதிக்கப் போவதாக, கமல்

  அறிவித்தார். அதற்கு முன், திரைப்பட பணிகளை முடிப்பதற்காக, அமெரிக்கா சென்றுள்ளார்.

  இந்த சூழலில், நடிகர் ரஜினி, அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். அதை, 'டுவிட்டரில்' கமல் வரவேற்றார். எனினும், ரஜினி, கட்சி துவங்குவதாக அறிவித்தது, கமலுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதனால், ரஜினிக்கு போட்டியாக, அரசியலில் கமல் குதிப்பாரா என, சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், அரசியலில் குதிப்பதை, கமல் உறுதி செயதுள்ளார்.

  இது குறித்து, அவர் கூறியிருப்பதாவது: சென்னை, ஆர்.கே.நகர் தேர்தல், மிகப் பெரிய களங்கம். சென்னை வெள்ளத்தின்போது, மக்களாகிய நீங்கள் காட்டிய அன்பு, நெகிழச் செய்தது. அப்படிப்பட்ட நீங்கள், ஆளுங்கட்சி தந்த பணத்திற்கும், சுயேச்சை வேட்பாளர் தந்த, 20 ரூபாய், 'டோக்கனுக்கும்' விலை போகலாமா; அது, திருடனிடம் பிச்சை எடுப்பது போன்றது.  என் சினிமா பணிகளை முடித்துவிட்டு, அரசியலுக்கு செல்லவிருப்பதை அறிந்த, அமெரிக்காவில் உள்ள நண்பர்கள் பலர், அங்குள்ள வாய்ப்பை பட்டியலிட்டு, 'அரசியல் வேண்டாம்' என்கின்றனர். ஆனால், அரசியலுக்கு வரும் அவலத்திற்கு, என்னை இங்குள்ள சிலர் ஆளாக்கி விட்டனர். என் பழைய பேட்டிகளில் கூறியதைப் போல், அரசியலுக்கு வருவேன் என, மறுபடியும் கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்


 7. #97
  vijigermany's Avatar
  vijigermany is online now Lord of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Germany
  Posts
  101,792

  Re: சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்டĬ

  ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு

  சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் ஜனவரி 26-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன் என அறிவித்துள்ளார்.

  கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபடுவதில் உறுதியாக இருக்கிறார். புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கமல்ஹாசன் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை பெற்று வருகிறார்.

  இதுதொடர்பாக அவர் கேரள முதல் மந்திரி பிரணாயி விஜயன், டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.

  மேலும், கொல்கத்தா சென்ற கமல், மேற்குவங்க மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து, தனது அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

  கடந்த மாதம் 7-ம் தேதி கமல்ஹாசன் தனது பிறந்த நாளையொட்டி, பொதுமக்கள் கருத்தை அறிவதற்காக ‘செல்போன் செயலி’ ஒன்றை தொடங்கினார்.

  அப்போது, அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. கட்சியின் பெயர் குறித்து மக்களை நேரில் சந்தித்த பிறகு முடிவு செய்து அறிவிப்பேன். இதற்காக மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்வேன் என அறிவித்தார்.

  இந்நிலையில், ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்.

  சென்னையில் நடைபெற்ற விகடன் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். சுற்றுப்பயணங்கள் குறித்த அனைத்து விவரங்களும் ஜனவரி 18-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்


 8. #98
  vijigermany's Avatar
  vijigermany is online now Lord of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Germany
  Posts
  101,792

  Re: சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்டĬ

  பிப். 21-ல் கட்சிப் பெயரை வெளியிடுகிறார் கமல்ஹாசன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  பிப்ரவரி 21-ம் தேதி கட்சியின் பெயரை வெளியிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  தமிழக அரசியலில் களமிறங்க திட்டமிட்டுள்ள கமல்ஹாசன் கட்சி குறித்தான அறிவிப்பை வெளியிடாமல் இருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

  என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்துக்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியைத் தாண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. அக்கடமைகளின் துவக்கமாக எம் மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து வருகிற பிப்ரவரி மாதம் 21-ம் தேதி துவக்க இருக்கிறேன்.  ஆரம்பக்கட்டச் சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். இது நீண்ட நாட்களாகத் திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான இந்தச் சந்திப்பு புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல. என் புரிதல். எனக்கான கல்வி.

  இதை மக்களோடு மக்களாக நின்று, தேசிய ஒருமைப்பட்டுக்கு உதாரணமாக இருக்கும் ராமநாதபுரம் மண்ணில் பிப்ரவரி 21-ம் தேதி என் கட்சியின் பெயரை அறிவித்து என் அரசியல் பயணத்தை துவக்க இருக்கிறேன். இது என் நாடு, இதை நான் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு மாத்திரம் இருந்தால் போதாது. இங்கு தலைவன் என்பவன் வழிநடத்த மாத்திரமன்று பின்பற்றவே தலைவன் இருக்க வேண்டும்.

  பின் தொடர்வதற்கே ஒரு தலைமைப் பொறுப்பு இருக்க வேண்டும், நாமெல்லாம் சேர்ந்து இந்தத் தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம் அந்த நாயகர்களைச் சந்திக்கத்தான் நான் சென்றுகொண்டிருக்கிறேன்.

  இது ஆட்சியைப் பிடிக்க திட்டமா? என்று கேட்பார்கள். ஆட்சியை ஒரு தனி ஆள் பிடிக்க முடியுமா? யாரின் ஆட்சி, யாரின் அரசு குடியின் அரசு அப்படியென்றால் முதலில் அவர்களை உயர்த்த வேண்டும். அதற்கான கடமைகளை நினைவுபடுத்த வேண்டும். அதை நோக்கிய பயணம்தான் இது. உங்களின் ஆதரவோடு இந்தப் பயணத்தை தொடங்குகிறேன். கரம் கோர்த்திடுங்கள். களத்தில் சந்திப்போம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 9. #99
  vijaykumar12's Avatar
  vijaykumar12 is offline Ruler's of Penmai
  Gender
  Male
  Join Date
  Aug 2012
  Location
  India
  Posts
  14,453

  Re: சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்டĬ  Last edited by vijaykumar12; 17th Jan 2018 at 01:02 PM.

 10. #100
  vijigermany's Avatar
  vijigermany is online now Lord of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Germany
  Posts
  101,792

  Re: சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்டĬ

  ரஜினிகாந்தின் கருத்தை வழிமொழிகிறேன்..! கமல்ஹாசன் பதில்
  இருவரும் ஒன்று சேர்ந்து பயணிப்பது குறித்த ரஜினிகாந்தின் கருத்தை வழிமொழிகிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
  ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளனர். மேலும் பிப்ரவரி 21-ம் தேதி கட்சி பெயர் அறிவிக்கப்படும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்,`கமலுடன் கூட்டணி வைப்பது குறித்து காலம்தான் பதில் சொல்லும். தனிக்கட்சி ஆரம்பிக்க உள்ள கமலுக்கு எனது வாழ்த்துகள்' என்று தெரிவித்திருந்தார்.


  அதன்பிறகு செய்தியாளர்ளிடம் கமல்ஹாசன், 'அரசியல் சுற்றுப் பயணத்தின்போது மக்களையே மக்கள் முன் நிறுத்தப்போகிறேன். மக்களின் பலம்தான் நாட்டிற்கு பலம். அதனை மக்களுக்கு உணர்த்தப்போகிறேன். ரஜினியுடனான கூட்டணிக்கு காலமே பதிலாக இருக்கட்டும். இந்த விஷயத்தில் ரஜினியை வழிமொழிகிறேன். நான் பகுத்தறிபவன். உங்களுடைய கடவுளை பகுத்தறிவதும் என்னுடைய கடமை. ஆன்மீக அரசியலில் ஈடுபடமாட்டேன். என் நம்பிக்கை எனக்கு. அவருடைய நம்பிக்கை அவருக்கு' என்று தெரிவித்தார்.


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter