Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine May! | All Issues

User Tag List

Like Tree3Likes

SPB receives legal notice from Ilayaraja - இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் - எஸ்.பĬ


Discussions on "SPB receives legal notice from Ilayaraja - இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் - எஸ்.பĬ" in "Fans Club and Others" forum.


  1. #1
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    89,345

    SPB receives legal notice from Ilayaraja - இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் - எஸ்.பĬ

    இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் 'ஷாக்' ஃபேஸ்புக் பதிவு!

    கடந்த சில மாதங்களாக உலகளவில் இசைக் கச்சேரிகளை நடத்திவருகிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கச்சேரிக்காக இவரது அணி தற்போது அமெரிக்காவில் இருக்கிறது. அங்கிருந்து தன்னுடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இளையராஜா சார்பில் இவருக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
    எஸ்.பி.பியின் பதிவு கீழே!
    ரசிகர்களுக்கு வணக்கம். சியாட்டிலிலும், லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெற்ற இசைக்கச்சேரியில் கலந்துகொண்டவர்களுக்கும், அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி.
    சில நாட்களுக்கு முன்பு, இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர், எனக்கும், சரணுக்கும், பாடகி சித்ராவிற்கும், உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் 'இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத்தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும்' என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் இந்த மாதிரியான சட்ட திட்டங்கள் பற்றிய புரிதல் எனக்கு இல்லை.
    என் மகன் சரண்தான், இந்த உலக கச்சேரியை ஏற்பாடு செய்தார். 'எஸ்.பி.பி.50' என்ற பெயரில் கடந்தவருடம் டொரன்டோவில் முதல் கச்சேரியைத் தொடங்கினோம். அதன்பிறகு ரஷ்யா, ஶ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் நிகழ்ச்சி நடத்திவருகிறோம். அப்போதெல்லாம் இளையராஜா சார்பில் எந்த நோட்டீஸும் வரவில்லை. ஆனால் அமெரிக்காவில் இசைக்கச்சேரி நடத்தும் போது மட்டும் ஏன் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பதுதான் தெரியவில்லை. முதலில் சொன்னமாதிரி எனக்கு இந்த சட்டம் குறித்த அறிவு கிடையாது. ஆனாலும் இதுதான் சட்டம் என்றால் எற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.
    இந்த சூழ்நிலையில் நானும், எங்கள் அணியினரும், இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டோம். ஆனாலும் இந்த கச்சேரி நடக்கவேண்டும். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்த பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். இனிவரவிருக்கும் அனைத்து கச்சேரிகளுக்கும் உங்களின் ஆசீர்வாதம் இருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் அன்புக்கும், ஆதரவிற்கும் நான் எப்பொழுதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
    உங்கள் அனைவரிடமும் நான் கேட்கும் ஒரே கோரிக்கை, இந்த விஷயம் பற்றி எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம். கடவுளின் எண்ணம் இதுவென்றால் இதுவே நடக்கட்டும்."
    இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

    Similar Threads:

    Sponsored Links
    Chill Queen and sharathusha like this.

  2. #2
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    89,345

    Re: SPB receives legal notice from Ilayaraja - இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் - எஸ்.ப&

    பெரிதுபடுத்த வேண்டாம்: எஸ்.பி.பி., வேண்டுகோள்

    இளையராஜா தான் இசையமைத்த பாடல்களுக்கு தன்னிடம் காப்புரிமை உள்ளதால் அதை பொது வெளிகளில் பாடக்கூடாது பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு, இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

    இந்நிலையில் இளையராஜா விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என இசைப்பிரியர்களுக்கும், ரசிகர்களுக்கும் எஸ்.பி.பி., வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  3. #3
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    8,009

    Re: SPB receives legal notice from Ilayaraja - இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் - எஸ்.ப&

    இளையராஜா- எஸ்.பி.பி விவகாரம்! வெங்கையா நாயுடு அதிர்ச்சி

    'இசையமைப்பாளர் இளையராஜா- பாடகர் எஸ்.பி.பி இடையேயான காப்புரிமை பிரச்னை அதிர்ச்சியளிக்கிறது' என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

    பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த சில மாதங்களாக உலகளவில் இசைக் கச்சேரிகளை நடத்திவருகிறார். இச்சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்த நிறுவனத்துக்கு, இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை பாடி வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    இளையராஜாவின் நோட்டீசுக்கு முகநூலில் பதில் அளித்த எஸ்.பி.பி, ''இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்த பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன்”, என்று கூறியிருந்தார்.

    இளையராஜாவின் காப்புரிமை நோட்டீசுக்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இளையராஜா பாடல்களை வர்த்தக ரீதியாக பயன்படுத்தவே எதிர்ப்பு தெரிவித்து பாடகர் எஸ்.பி.பி.க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக இளையராஜாவின் வழக்கறிஞர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

    இந்நிலையில், இளையராஜா-எஸ்.பி.பி இடையேயான காப்புரிமை பிரச்னை தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை அதிர்ச்சியளிக்கிறது. இவர்கள் இடையில் ஏற்பட்டுள்ள காப்புரிமை பிரச்னை விரைவில் சுமூகமான முறையில் முடிவுக்கு வர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


  4. #4
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    89,345

    Re: SPB receives legal notice from Ilayaraja - இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் - எஸ்.ப&

    இளையராஜாவின் செயல் முட்டாள்தனமானது: விமர்சித்த கங்கை அமரன்

    தான் இசையமைத்த பாடல்களை தன்னுடைய அனுமதி பெறாமல் மேடை நிகழ்ச்சிகளில் பாடக்கூடாது என இளையராஜா அவர்கள், பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம், பாடகர் சரன் மற்றும் பாடகி சித்ரா ஆகியோருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
    இந்நிலையில், இளையராஜாவின் இந்த செயல் குறித்து அவரது தம்பியும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் விமர்சனம் செய்துள்ளார்.

    எஸ்பிபிக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது முட்டாள்தனமானது. நான்தான் என்ற அகங்காரம் இளையராஜாவுக்கு இருக்கக்கூடாது என கூறியுள்ளார்.

    இதற்கிடையில் இளையராஜாவின் சட்ட ஆலோசகர் கூறியதாவது, இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை மேடைகளில் பாடி பலர் பணம் சம்பாதிக்க நினைக்கின்றனர்.

    எனவே அவர் பாடல்களைப் பாடி பணம் சம்பாதிப்பதைத் தடுக்கவே எஸ்.பி.பிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.


  5. #5
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    89,345

    Re: SPB receives legal notice from Ilayaraja - இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் - எஸ்.ப&

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது ஏன்- இளையராஜா தரப்பில் விளக்கம்

    பாடல்கள் விவகாரம் குறித்து இளையராஜா, பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் இளையராஜாவுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து இளையராஜா தரப்பில் இருந்து காப்புரிமை ஆலோசகர் பிரதீப் குமார் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

    எங்களது கேள்வி எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கான கேள்வியாக பார்த்து யாரும் தவறாக விமர்சனம் செய்ய வேண்டாம். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக, காப்புரிமை பணியை தொடர்கிறோம். இது எஸ்.பி.பிக்காக மட்டும் அனுப்பிய நோட்டீஸ் அல்ல, உரிய அனுமதியை பெற்று பாடுங்கள் என கூறுகிறோம்.

    கிராமங்களில் கச்சேரி நடத்துபவர்களுக்கு இது பொருந்தாது. கிராம கச்சேரி கலைஞர்கள் பிழைப்புக்காக பாடுகின்றனர். ஆனால் சிலர் வருமான நோக்கோடு கச்சேரி செய்கின்றனர். வருமானம் ஈட்டுபவர்களிடம் உரிமையை கேட்கிறோம். இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.


  6. #6
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    89,345

    Re: SPB receives legal notice from Ilayaraja - இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் - எஸ்.ப&

    பாடல் உங்களுக்கு மட்டும் சொந்தமில்லை! இளையராஜாவுக்கு மதன் கார்க்கி பதிலடி

    தன்னுடைய பாடல்களை தன்னுடைய அனுமதியின்றி மேடையில் பாடக்கூடாது என இளையராஜா பிரபல பாடகர்களான பாலசுப்ரமணியம், சித்ரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது. இத்தனை வருடங்கள் இல்லாமல் இப்போது ஏன் இப்படி செய்கிறார் என பலரும் அதிர்ச்சி தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் பாடலாசிரியர் மதன் கார்க்கி "பாடல்களின் ராயல்டி இசையமைப்பாளருக்கு மட்டும் சொந்தமில்லை. அந்த பாடலை எழுதியவர் மற்றும் தயாரித்தவருக்கும் உரிமையுண்டு."

    "இளையராஜாவே மேடையில் அவரின் பாடல்களை பயன்படுத்தவேண்டும் என்றாலும் பாடலாசிரியர், தயாரிப்பாளரிடம் முன் அனுமதி பெறவேண்டும்"

    "இளையராஜா செய்தது சட்டப்படி சரி என்றாலும், இந்த பிரச்னையை அவர் ஒரு போன் கால் செய்து முடித்திருக்கலாம்" என மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.


  7. #7
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    89,345

    Re: SPB receives legal notice from Ilayaraja - இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் - எஸ்.ப&

    இளையராஜா நோட்டீஸ்- எஸ்.பி. சரண் எடுத்த அதிரடி முடிவு

    இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

    இதுகுறித்து எஸ்.பி அவர்களின் மகன் சரண் கூறியதாவது, இளையராஜா இசையில் பாடுவதற்கு முன்பே அப்பா சினிமாவில் பாடிக் கொண்டிருக்கிறார். இளையராஜா இசை அல்லாது மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் 38 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். அந்த பாடல்களே நாங்கள் இசை நிகழ்ச்சி நடத்த போதுமானது.

    இளையராஜாவுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க கூடாது என அப்பா உறுதியாக கூறிவிட்டார்.

    அதனால் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்போம். அவர் அனுப்பிய நோட்டீஸ்க்கு மட்டும் பதில் அனுப்புவோம் என்றார்.


  8. #8
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    89,345

    Re: SPB receives legal notice from Ilayaraja - இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் - எஸ்.ப&

    இளையராஜா, எஸ்.பி பாலசுப்பிரமணியம் இடையே பிரச்சனைக்கு காரணம் இதுதானா- அதிர்ச்சி தகவல்

    இளையராஜா தன்னுடைய பாடல்களின் காப்புரிமை பிரச்சனைக்காக போராடி வருகிறார். இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடர, இளையராஜாவின் பாடல்களை காப்புரிமை பெறாமல் வெளியிடக் கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    கடந்த வருடம் அமெரிக்காவில் இளையராஜாவின் இசைக் கச்சேரி நடந்தது. இதற்கு முன் வரை இளையராஜா நடத்தும் கச்சேரிகளில் பாட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ரூ.7 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. ஆனால் அமெரிக்க கச்சேரியில் பாட எஸ்.பி. பால சுப்பிரமணியம் ரூ. 20 லட்சம் கேட்க, இளையராஜா கொடுக்க மறுத்துள்ளார். இதனால் எஸ்.பி.பி அவர்கள் அமெரிக்க கச்சேரியை புறக்கணித்துள்ளார்.

    இப்போது அமெரிக்காவில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கச்சேரி நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களை பாடக் கூடாது என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    இவர்களின் 40 ஆண்டுகால நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.


  9. #9
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    89,345

    Re: SPB receives legal notice from Ilayaraja - இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் - எஸ்.ப&

    இதுவரை சம்பாதித்தது போதாதா? இளையராஜாவை தாக்கி பேசிய பிரபல இசையமைப்பாளர்

    இளையராஜா பாடல்களை மேடையில் பாட ராயல்டி கொடுக்கவேண்டும் என spbக்கு நோட்டீஸ் அனுப்பியது இசை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜா செய்தது சட்டப்படி சரி என்றாலும் சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

    இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் இதுபற்றி பேசும்போது " என்னுடைய பாடல்களை கேட்கவேண்டாம், பாடவேண்டாம் என மாணிக்கவாசகர், வள்ளலார் ஆகியோர் கூட சொன்னதில்லை.

    இனிமேலும் சம்பாதித்த என்ன செய்ய போகிறீர்கள், அந்த அளவுக்கா பணகஷ்டம் வந்துவிட்டது. தங்கள் பாடல்களை மற்றவர்கள் பாடினால் உங்களுக்கு தானே பெருமை. பாடக்கூடாது என சொல்வது அசிங்கமாக உள்ளது" என பேசியுள்ளார்.


  10. #10
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    89,345

    Re: SPB receives legal notice from Ilayaraja - இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் - எஸ்.ப&

    இளையராஜா - எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இடையேயான 40 ஆண்டு கால நட்பில் விரிசல்







    vijaykumar12 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter