Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree446Likes

லெக்கின்ஸ் ஆபாச உடையா?


Discussions on "லெக்கின்ஸ் ஆபாச உடையா?" in "Fashion" forum.


  1. #91
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    @jash,

    dear friend, koilukku potutu varadhu mathiram illi, kannai, kannai uruttikittu, naalu peru nammalai paarkirangala nu look vidara jenmangal.... i always feel like kolling kolling...


    Sponsored Links
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  2. #92
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    Quote Originally Posted by naanathithi View Post
    oh ithu than antha dam porul evalaa?" romba correct sis!

    naan podamaatten

    athu pidikaathunnu illai..
    athu podakoodathunu illai..
    yaarum venaamnum sollalai..

    But eppavume athu oru bad luck enaku, ennoda topsku sariyana colour match kidaikarathu illa!
    idhu ellaam jujubi problem... mix and match try panni, different colour combination le.... theeya poduvoam illa naanga....(ippo trend, matching aaa irukka koodadhu, oddhu...vendaaa, not neceessary)

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  3. #93
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    Quote Originally Posted by naanathithi View Post
    atleast 40% influences cinema vala varuthunrathai maruka mudiyuma? ippo paaru trisha illanaa nayanthara film vanthiche.. kaithatti vistle panni pasanga kondaadaraanga. intha entality healthy aa? intha mathiri fun element oda kodukappadara poison romba danger..easy aa poi senthuruthu. ithai paarkkara irundum kettaan teenage pasanga enna maathiri attitude valarthupaanga?

    i accept that there are so many factors responsible for a social change! aana mass media voda power appadi. athoda reach pola maththa factors avlo efficient aa poi serrathu illa. they takes their time..slowly and steadily.. mass media apdiyilla.. athu tsunami pola! athanala than cinema vai mattum point out panni sonnen.
    Yeah uchu neenga solrathu cent percent true thaan. Cinema influences common man a lot. Athoda reach athigam gratha maruku mudiyathu. Neenga sona pola entertainment ah matum pakra alavuku teliva irukanum thaan solren naanum....

    Flim edukravana keta audience taste ku edukren solvan....pakravanga ennatha padam edukranga apdi vimarsanam solitu athey padatha pakranga...ithu namaku sabakedu thaan uchu...

    Cinema edukravan kita sandai podratha vida, nama cinema va epdi pakanum nu attitude valarthukrathu pathi awareness uruvakurathu thaan important solla vanthen uchu

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  4. #94
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,003
    Blog Entries
    14

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    Quote Originally Posted by diyaa View Post
    அச்சோ ஆன்டி எதுக்கு கோவம் கூல் கூல்


    ஹைதராபாத்ல நீங்க எந்த காலேஜ்ல போய்

    அட்மிசன் வாங்கினாலும் டிரஸ் கோட் லிஸ்ட்ல

    இந்த கண்டிசன் கண்டிப்பா இருக்கும்


    நான் சும்மா டுமீலுக்கு சொன்னேன்னு நெனச்சிட்டிங்களா


    அடி ஆத்தி நோ கோவம் மீ ரெம்ப பாவம்ஸ்

    with luv

    Diya
    Quote Originally Posted by diyaa View Post
    நல்லவேளை சமயத்தில வந்து காப்பாத்தினீங்க


    நான் ரெம்ப பயந்திட்டேன் தெரியுமா ..!!

    with luv

    Diya
    ஹா..ஹா...எனக்கு கோவமே வராதும்மா.....அந்த படங்களில் இருந்த பெண் அணிந்திருந்தது லாங் டாப்தான்.........காத்தில் பறக்கும்போது படம் எடுத்து போட்டிருந்தார்கள்...ரோட்டில் போகும் பெண்ணின் ஆடை விலகிய கோலத்தை படம் எடுத்து ஒரு பத்திரிகையில் போடும் உரிமையை கொடுத்தது யார்???இதுதான் எனக்கு கடுப்பை கிளப்பியது.......ஆபாசமா உடை அணிவது சரியென்றோ, அதற்கு ஆதரவு அளித்தோ நான் பேசவில்லை.....இன்னும் அந்த பெண்ணிற்கு தன்னைத்தான் படம் எடுத்து போட்டிருக்கிறார்கள் என்று தெரியுமோ தெரியாதோ?????பத்திரிக்கை விற்பனைக்காக என்ன வேணும்ன்னாலும் செய்வார்களா???


  5. #95
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,003
    Blog Entries
    14

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    Quote Originally Posted by girija chandru View Post
    girija romba rommmmmmmmmbaaaaa late aa vandhuttaalo???

    உடை அணிவது அவர் அவர் வைத்து கொள்வோம்.
    நாம் அணியும் ஆடை யார் கண்ணையும் உறுத்த கூடாது.
    எங்கே, எப்போது, என்று , எது என உணர்ந்து அணிந்தால்
    .கொஞ்சூண் டு பரவா இல்லை நு நினைக்கிறேன்.

    உதாரணம் :-

    1) நான் போடுவேன். பள்ளிக்கு அல்ல.
    2) நான் போடுவேன்.கோயிலுக்கு அல்ல.
    3) நான் போடுவேன் பண்டிகை நாட்களில் அல்ல.
    4) நான் போடுவேன். திருமணம் போன்ற .விசேஷங்களில் அல்ல.
    girija.........

    girija chandru likes this.

  6. #96
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,003
    Blog Entries
    14

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Hahaha aunty kovil kati kumbabishegam pananum aunty ungaluku...ithu kelvi correct ah nachu nu adicheenga

    Yar aunty dignity define pananum???? dress podra pona??? illa exhibition porul madhiri ponna pakuravana???
    புடவை கட்டியிருந்தாலும் எப்போடா விலகும்னு பார்க்கிறவன் பார்க்கத்தான் செய்வான், லேகிங்க்ஸ் போட்டாலும் பார்க்கத்தான் செய்வான்.....நம்ம வேலைய பார்துக்கிட்டுபோயிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்!!!!


  7. #97
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,003
    Blog Entries
    14

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    Quote Originally Posted by jash View Post
    haha ha dont wry dear.......

    selvi ka avlooooo terror illa konjunthu nallavanga thaan ilaiyaa ka
    naanum rowdithaan...naanum rowdithaan!!!!!!!


  8. #98
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,003
    Blog Entries
    14

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    மாணவிகள் லெக்கிங்ஸ் அணிந்து வரக் கூடாது’ என சென்னையை சேர்ந்த கல்லூரி நிறுவனம் ஒன்று அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையும், ஒரு வாரப் பத்திரிகை லெக்கிங்ஸ் அணிவதே ஆபாசம் என்று சொல்லி பெண்களின் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுத்து பிரசுரித்திருப்பதும் பலத்த சர்ச்சையையும் விவாதத்தையும் எழுப்பியிருக்கிறது. ‘இது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதற்கு சமமானது... மத தீவிரவாதிகள் அமல்படுத்தத் துடிக்கும் கட்டுப்பாட்டுக்கு நிகரானது... தாலிபானிச பத்வாவுக்கு ஒப்பானது...

    கட்டுப்பாடு என்று விதித்தால் அதை மீறத்தான் தோன்றும். இது அபாயகரமான விளைவை ஏற்படுத்தும்...’ என்றெல்லாம் டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையதளங்களில் இதற்கு எதிராக பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். வெகு சிலரே இந்த ஆடை பற்றிய கண்ணோட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இவற்றில் யார் சொல்வது சரி என்று பார்ப்பதற்கு முன் சில அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

    உடை அரசியல்

    அதில் முதன்மையானது உடை அரசியல். இதை சாதாரண துண்டை கொண்டே விளக்கலாம். ஒரு மனிதன் தன்னிடம் இருக்கும் துண்டை இடுப்பில் கட்ட வேண்டுமா அல்லது தோளில் போட்டுக் கொள்ள வேண்டுமா அல்லது அக்குளில் இடுக்கிக் கொள்ள வேண்டுமா என்பதை அவன் தீர்மானிப்பதில்லை. பதிலாக சமூகமே சாதியின் அடிப்படையில் எந்த இடத்தில் அவன் துண்டை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுகிறது. இந்த சாதி அடக்குமுறைக்கு எதிராக பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் போராடி வந்ததன் பலனைத்தான் இன்றைய தலைமுறை அனுபவிக்கிறது. இன்னொரு எடுத்துக்காட்டு காக்கி உடை.

    சட்டம் ஒழுங்கை பேணி வரும் காவல்துறைக்கு உரிய சீருடை இது. ஆனால், இந்த சீருடையை பெரும்பாலான மக்கள் நட்புடன் பார்ப்பதில்லை. அதிகாரத்தின் வெளிப்பாடாகத்தான் கருதுகிறார்கள். தொழிலாளர்கள் காக்கி உடை அணிந்தால் ‘ஏய் இங்க வா...’ என அதட்டுவதற்கும் காவல்துறையை சேர்ந்தவர்கள் அதே நிற ஆடையை அணிந்திருப்பதை பார்த்ததுமே பம்முவதற்கும் வேறுபாடு இருக்கிறது. இத்தனைக்கும் அது உடலை மறைக்கும் ஓர் ஆடைதான். சுருக்கமாக சொல்வதென்றால் ஒவ்வொரு உடைக்கு பின்னாலும் ஓர் அரசியல், அதிகாரம் இருக்கிறது. எனவே இதற்கு எதிரான கலகமும் உடை வடிவத்திலேயே வெளிப்படுகிறது.

    காந்தியும் அம்பேத்கரும்

    மகாத்மா காந்தியும் சரி, அண்ணல் அம்பேத்கரும் சரி சமூகத்தை சீர்படுத்த நிறைய எழுதினார்கள். எண்ணற்ற கூட்டங்களில் பங்கேற்று பேசினார்கள். கணக்கற்ற போராட்டங்களை தலைமையேற்று நடத்தினார்கள். இவற்றுக்கெல்லாம் அச்சாணியாக தங்கள் உடைகளையும் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை எப்போதும் மறந்துவிடக் கூடாது. காந்தி, உடைகளே வாங்க முடியாத அளவுக்கு வறுமையில் உழன்றவர் அல்ல. இருந்தாலும் தன் பின்பாதி வாழ்க்கை முழுக்க அரையாடையைத்தான் அணிந்தார். இடுப்பில் மட்டுமே, அதுவும் முட்டிக்கால் வரை வேட்டி அணிந்தார். காரணம் தமிழகத்தில் அவர் சந்தித்த கூலி விவசாயிகள் இந்த கோலத்தில்தான் காட்சியளித்தார்கள். எனவே ‘என் நாட்டு மக்கள் எப்போது முழுமையாக ஆடை அணிகிறார்களோ அப்போது நானும் என்னை பூரணமாக மறைத்துக் கொள்கிறேன்’ என்றார்.

    மகாத்மா எடுத்த இந்த முடிவும், இதன் பின்னர் அவர் அணிய ஆரம்பித்த அரையாடையும் சுதந்திரப் போராட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
    இதற்கு நேர்மாறாக அண்ணல் அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுக்க கோட், சூட் அணிந்து வலம் வந்தார். காரணம், அவர் வாழ்ந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் மறைவிடம் தவிர்த்து வேறு உடல் பாகங்களை மறைக்கக் கூடாது என ஒடுக்கும் மக்களால் நிர்பந்திக்கப்பட்டார்கள். இதற்கு எதிரான கலகமாகவே ஒடுக்கும் மக்களின் ஆடையை, அண்ணலும் அணிய ஆரம்பித்தார். இந்த வழிமுறையை மற்ற ஒடுக்கப்பட்ட மக்களும் பின்பற்றத் தொடங்கி தங்களை பிணைத்திருந்த அடிமைச்சங்கிலியை தகர்த்து எறிந்தார்கள் என்பது வரலாறு.

    தோள்சீலைப் போராட்டம்

    தமிழக வரலாற்றில் மறக்கவோ மறைக்கவோ முடியாத போராட்டங்களில் தோள்சீலைப் போராட்டமும் ஒன்று. இன்றைய கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும், இப்போதைய கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் சில பகுதிகளும் சேர்ந்து அன்று திருவாங்கூர் சமஸ்தானம் என்று அழைக்கப்பட்டது. சாதி அடக்குமுறைகளை அதிகம் சந்தித்த இந்த சமஸ்தானத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் தங்கள் மார்பகத்தை ஆடையால் மறைக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஒருவேளை மறைக்க முற்பட்டால் அதற்கு வரிசெலுத்த வேண்டும். இதை எதிர்த்து, பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து தீரமுடன் போராடினர். கிட்டத்தட்ட 37 ஆண்டு கால போராட்டத்துக்கு பின்னரே திருவாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட பெண்கள், தங்கள் மார்பகத்தை மறைக்கும் உரிமையை பெற்றனர்.

    நாகரீகத்திலிருந்து கற்காலத்துக்கு

    இப்படி நிலப்பிரபுத்துவ சமூகத்தின் அடக்குமுறைக்கு எதிராக நீண்ட நெடிய ‘ஆடைப் போராட்டம்’ தமிழக - இந்திய வரலாற்றில் நடைப்பெற்றிருக்கிறது. இதனால்தான் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அரசாங்கம் கல்வி நிறுவனங்களை திறந்தபோது சீருடை அணியும் வழக்கத்தை கொண்டு வந்தது. அனைத்து சாதியினரும் ஒரே உடையை அணிய வேண்டும்... பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மாணவ மாணவிகளின் மனதில் பதியக் கூடாது... என்பதில் கவனம் செலுத்தியது.

    இந்தநிலை இன்று கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மீண்டும் கற்காலத்துக்கு திரும்புகிறோமோ என்ற சந்தேகத்தை இன்றைய பல அரசியல் கட்சித் தலைவர்களும், மதவாத சக்திகளும் விதைத்து வருகிறார்கள். இதன் ஒரு வெளிப்பாடுத்தான் கல்லூரி செல்லும் பெண்கள் லெக்கிங்ஸ் அணிந்து வரக் கூடாது என்ற வாய்மொழி / எழுத்துப்பூர்வமான உத்தரவு.

    கல்வி வள்ளலான நிலச்சுவான்தார்கள்

    இன்று தனியார் கல்லூரிகளை நடத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் நிலச்சுவான்தார்களாக இருந்தவர்கள். அதனால்தான் பண்ணையடிமை முறையை நவீன வடிவத்தில் அமல்படுத்த முயல்கிறார்கள். எப்படி பத்து கிராமங்களை அவர்கள் ஆண்டபோது இந்த இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த இந்த உடைகளை அணியக் கூடாது என்று கட்டளை பிறப்பித்தார்களோ அப்படி இப்போது பெண்கள் எந்தெந்த ஆடைகளை அணிய வேண்டும் என்று உத்தரவிடுகிறார்கள். தங்கள் கல்லூரியின் தரத்தை உயர்த்தாமல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல், இதுகுறித்து யாரும் கேள்வி கேட்டு விடக் கூடாதே என்று இதுபோன்ற சில்லறை விஷயங்களில் கவனத்தை குவிக்கிறார்கள்.

    ஆண்களிடம் பேசக் கூடாது, லஞ்ச் ஹாலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இருக்கைகள், பெண்கள் பூ வைக்கக் கூடாது, கொலுசு அணியக் கூடாது, ஜிமிக்கி மாட்டக் கூடாது... என்றெல்லாம் உத்தரவிட்டு ஒட்டுமொத்த இளைய சமுதாயத்தையும் நிலப்பிரபுத்துவ காலகட்டத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். தமிழகத்தில் இருக்கும் எந்தவொரு பொறியியல் கல்லூரியும் சர்வதேச தரத்தில் மட்டுமல்ல... இந்திய தரத்திலேயே இல்லை. உண்மை இப்படியிருக்க பெண்கள் அணிய வேண்டிய உடைகள் குறித்து கட்டளையிட இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது? அந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர் இதை எப்படி அனுமதிக்கிறார்கள்?

    லெக்கிங்ஸ் வரலாறு

    உண்மையில் லெக்கிங்ஸ் என்பது சமீபத்திய கண்டுபிடிப்பு அல்ல. முகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் ஆண்களும், பெண்களும் இடுப்புக்கு கீழ் அணிந்த உடைதான் இது. சொல்லப்போனால் 10ம் நூற்றாண்டிலேயே ஐரோப்பாவில் இது புழக்கத்துக்கு வந்துவிட்டது. மறுமலர்ச்சி காலத்தில் ஆண்களும் பெண்களும் சர்வசாதாரணமாக இதை பேன்ட் ஆக அணிந்திருக்கிறார்கள்.

    அவ்வளவு ஏன், இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ராணுவத்தினரின் உடையாகவே லெக்கிங்ஸ் விளங்கியது. மண் துகள்கள் ஷூவுக்குள் நுழைந்து விடக் கூடாது என்பதற்காகவும், பனி குளிரில் இருந்து தங்கள் கால்களை பாதுகாத்துக் கொள்ளவும், வியர்வை கசகசப்பில் இருந்து தப்பிக்கவும், சிரமம் இன்றி நடக்கவும் ஓடவும் லெக்கிங்ஸே சிறந்தது என்பது அனுபவப்பூர்வமான உண்மை.

    ஆபாசத்தின் அளவுகோல்

    நிஜத்தில் ஆண்களும் பெண்களும் தங்கள் இடுப்புக்கு கீழ் அணியும் உடையாக லெக்கிங்ஸ் இருக்க எதற்காக பெண்கள் மட்டும் இதை அணிந்து வரக் கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கான விடையில்தான் ஆபாசத்தின் அளவுகோலே அடங்கியிருக்கிறது. பெண்களை போகப் பொருளாகவும், தங்கள் இன - சமூக அடையாளத்தை பெருக்க உதவும் இனப்பெருக்க இயந்திரமாக அவர்களைப் பார்க்கும் ஆணாதிக்க பார்வையும் இதற்குள் மறைந்திருக்கிறது. கலாச்சார உடையாக சொல்லப்படும் சேலை, எந்தளவுக்கு பெண்கள் நடமாட தடையாக இருக்கிறது என்பது அவர்களுக்குத்தான் தெரியும். இன்று பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்று வருகிறார்கள்.

    ஆண்களுக்கு சமமாக அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். திரைகடலோடியும் திரவியம் தேடுகிறார்கள். குடும்பத்தை, நாட்டை உயர்த்துகிறார்கள். இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கிறார்கள். எனவே தங்களுக்கு எது சவுகரியமாக இருக்கிறதோ, எந்த உடை சாலை விபத்து ஏற்படாமல் தடுக்கிறதோ அந்த ஆடையை அவர்கள் அணிகிறார்கள். இன்று உலகம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை குளோபல் வாமிங். வெயிலும் மழையும் குளிரும் பருவங்கள் மாறி தாறுமாறாக பூமியைத் தாக்குகின்றன. எனவே அதற்கு ஏற்ப தங்கள் உடலை காப்பாற்றிக் கொள்ள பெண்கள் ஆடைகளை தேர்ந்தெடுக்கிறார்கள்.

    அரைகுறை ஆடை அணியும் ஆண்கள்

    நியாயமாகப் பார்த்தால் ஆண்கள் அரைகுறை ஆடை அணிவதை எதிர்த்து பெண்கள் போராட வேண்டும். முட்டிக்கால் வரை ஷார்ட்ஸ், திறந்த மார்பு, தொந்தியை வெளிப்படுத்தும் டி ஷர்ட்... என பொது இடங்களில் அதிகமாக சுற்றுவது ஆண்கள்தான். எனவே எங்கள் இச்சையை தூண்டுகிறார்கள்... அறுவறுப்பாக உடல் பாகங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்று பெண்கள் சொன்னால் எப்படி இருக்கும்? அப்படித்தான் கண்ணியமான ஆடை குறித்து பெண்களுக்கு வகுப்பு எடுக்கும் ஆண்களின் தரப்பு அபத்தமாக பல்லிளிக்கிறது. உச்சி முதல் உள்ளங்கால் வரை பெண்கள் உடை அணிந்தாலும், தழையத் தழைய சேலை கட்டினாலும் அதையும் ஆபாசமாக பார்க்கும் ஆண்கள் இருக்கவே செய்கிறார்கள். கட்டுப்படுத்தி நேர்வழிப்படுத்த வேண்டியவர்கள் இந்த வக்கிரம் பிடித்தவர்களே தவிர பெண்கள் அல்ல.

    எதிர்ப்பின் அவசியம்

    இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ஆடை கட்டுப்பாட்டை எதிர்க்க வேண்டும். ஏனெனில் உடை என்பது வெறும் நிர்வாணத்தை மறைக்கும் சாதனம் மட்டுமல்ல. அது அரசியல் பொருளாதார சுதந்திரத்தின் வெளிப்பாடு. சாதி அடக்குமுறைக்கு எதிரான கவசம். இதில் சமரசம் செய்து கொண்டால் நாகரீக உலகில் நாம் வாழ்கிறோம் என்பதற்கே பொருளில்லாமல் போய்விடும்.

    தினகரன்

    Vimalthegreat, gkarti and nesamp like this.

  9. #99
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    Quote Originally Posted by naanathithi View Post
    exactly dear!!!!

    athe thaan.. summa athaiyum ithaiyum reason solla venaam! yaar enn dress pottaa unakkenna? avanga un dress ai eduthu podatha varai!

    intha oru sinna vishayaththula ippadi unga thoughts ivlo mature illaama irukuthe neenga eppadi transgender intha mathiri inime nanga santhikka pora pirachchanaigalai eppadi eduthukka poreenga enrathu than ennoda kelvi!

    dress podalaama venaama enra kelviye thappu! dresscode irukkara idangalai thavira maththa idangalla pottukarathu antha person oda problem! urrrrrrr aano penno ithula comment panna mudiyathu. koodathu!

    aano penno kanniyamaa irunthukkanumaam.. sarithaan ..aanaa ippo pb ithu illai.. intha mentality ai valara vittaa avanavan camera oda suththa poraan...
    சிஸ்,
    நீங்க இங்க உங்கள் தரப்பு நியாயத்த பேசுறது , கேக்குற கேள்வி... அப்பப்ப என் பொண்ணு என்கிட்டே கேக்குறது தான். (அவ வயசுக்கு தகுந்த மாதிரி). அப்பப்பா போராட்டம் தான். ஏன் , எதுக்கு, மத்தவங்க மாதிரி நான் ஏன் டிரஸ் பண்ணக்கூடாது, இதவிட மோசமா டிரஸ் பன்றவங்கெல்லாம் இருக்காங்க, எனக்கு எது சரின்னு தெரியும் , இப்படி பல வாக்கு வாதங்கள். சில சமயம் பொறுமையா புரிய வைப்பேன். சில சமயம் இது தான் இங்க நியதின்னு ஹிட்லர் அவதாரம் எடுப்பேன்.... நான் கொஞ்சம் conservative தான், அதுவும் எங்க அம்மாவ விட... அவகிட்ட என் நிலைய நான் புரிய வைக்க முயற்சி பண்ணுவேன். ஆனா அவ என் நிலைய எனக்கு உணர வச்சா. நான் எவ்வளோ பின்தங்கி இருக்கேன்னு எனக்கு நல்லாவே புரிஞ்சது. என் தரப்பு நியாங்கள் இருந்தாலும், நானும் அவள நோக்கி கொஞ்சம் முன்னேறனும்ன்னு தெளிவா புரிஞ்சது.


    நான் வளர்ந்த சூழ்நிலை கண்டிப்பா இதற்கு காரணம் இல்ல. ஆனா எப்படியோ நான் குறிகிய மனப்பான்மையோட தான் வளர்ந்திருக்கேன். இங்கே இந்தியப் பெண்கள் கவர்ச்சியாக உடை அணிந்தால், என்னால் விமர்சனம் பண்ணாமலோ , தவறாக நினைக்காமலோ இருக்க முடியல. ஒரு பெண் உடுத்தும் உடை அவள் உரிமை. அதை வைத்து நான் அவளை ஜட்ஜ் பண்ணக்கூடாதுன்னு, இன்னும் பக்குவம் வரல. ஆனா கொஞ்சம் மாற முயற்சி செய்றேன். இது என் பெண்ணிற்காக மட்டு மில்ல. இன்னொரு சுயநலமான காரணமும் இருக்கு. என் பெண் உடுத்தும் உடையை நான் விமர்சனம் செய்யலாம், அவளை மாற நிர்பந்திக்கலாம், உருட்டலாம், மிரட்டலாம், சரண்டர் ஆகலாம்.... ஆனால் எனக்கு வரப்போகும் மருமகளை நான் இப்படி செய்ய இயலுமா? கண்டிப்பாக மேற்க்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்த பெண்ணாக தான் இருக்கும். நான் இப்படி குறுகிய சிந்தனையோடு இருந்தால் எங்களுக்குள் நல்ல உறவு வருமா? உடையை தாண்டி ஒருவரை பார்க்கும் / கணிக்கும் பக்குவம் தேவை என்பதை உணர்ந்துவிட்டேன். நல்ல வேளை மனம் மாற கால அவகாசம் கைவசம் நிறைய உள்ளது. அதனால் தப்பித்தேன்.


    நான் என் மகளை நோக்கி அடி எடுத்து வைக்கும் அதே நேரத்தில் என்னுடைய வரையறையையும் தெளிவாக உணர்த்தி அவளையும் என்னை நோக்கி அடி எடுத்து வைக்க வைக்கிறேன். சான் ஏறுனா முழம் சறுக்கும்ங்கற மாதிரி இரண்டு பக்கமும் நடக்கும். ஆனாலும் திரும்ப தொடருவோம். எங்கள் முன்னேற்றம் ரொம்ப ரொம்ப மெதுவா இருந்தாலும், ஒரு நாள் இருவரும் அவரவர் எல்லைக்குள் இருந்துகொண்டே மரியாதையோடு மற்றவர் நிலையை புரிஞ்சி விட்டு கொடுக்குற அளவுக்கு வந்துருவோம்ன்னு நம்பிக்கை இருக்கு.


    இதெல்லாம் ஏன் இங்க சொல்றன்னா, அவங்கவங்க தன்னோட டிரஸ் கோட செக் பண்ற அதே சமயம் , மத்தவங்களும், பொண்ணுன்னா இப்படி தான் இருக்கணும்ங்கற வரையறைலிருந்து கொஞ்சம் வெளிவந்து மரியாதை தந்து பார்வையை விசாலமாக்கணும். அப்படி நடந்தாலே வக்கிரங்கள வியாபாரம் ஆக்க மாட்டாங்க.


  10. #100
    Yaazhini15 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Kovai
    Posts
    219

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    just like to share with this hot discussion..

    லெக்கின்ஸ் அணிந்து பெண்கள் பொது இடங்களில் நடக்கும் போது கலாச்சாரம் நாசாமாகி போனது என்றும்....ஜீன்ஸ், T ஷர்ட் அணிந்து பெண்கள் நடமாடுவது தான் உலகத்தில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்றும் கூறி, அறிவுரைகள் கொடுக்கிறோமென்ற சாக்கில், பெண்களை பின் தொடர்ந்து சென்று அவர்களுக்குத் தெரியாமல், அனிச்சையாக ஆடைவிலகும் நேரத்தில் படமெடுத்து அதை பத்திரிகையில் அச்சடித்து விநியோகம் செய்து கல்லா கட்டும், அலப்பரைகளுக்காகவும் அதை வாங்கிப் படித்துவிட்டு கலாச்சாரம்...கலாச்சாரம்...என்று தலைகீழாகக் குதிக்கும் அந்த பத்திரிக்கைகளின் அல்லக்கை ரசிகர்களுக்கும்....இதோ இந்தப் படம் சமர்ப்பணம்...
    அவனவன் வேலை என்னவோ அதை செய்யுறதவிட்டுட்டு அடுத்தவன் வீட்டு படுக்கையறையில் உற்று பாக்குறவங்களுக்கு தான் இந்தக் கலாச்சாரப் பிரச்சனை எல்லாம்...
    வெனிசூலாவின் முன்னாள் அதிபர் தோழர். ஹியுகோ சாவேஸ் ஜானதிபதியாக இருந்தபோது மக்கள் சந்திப்பின் ஒரு பகுதியாக ஒரு கிராமத்திலுள்ள பெண்ணுடன் உரையாடும் காட்சி...
    அந்தப் பெண்மணி வெகு இயல்பாக குழந்தைக்கு பாலூட்டிகொண்டே தோழர் சாவேசுடன் உரையாடுகிறார்...
    இதனால் தோழர். சவேசுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை...அந்தப் பெண்மணிக்கு, தன்னுடைய பெண்மை அவமானப்படுத்தப்பட்டதாக எந்த அவமான உணர்வும் இல்லை...!
    ஆடை அணிவதால் ஏற்படும் பிரச்சனை என்பது பார்க்கும் பார்வையிலேயே உள்ளது...!
    தோழர். சாவேசின் செயல்பாடு, ஒருவர் தன்னுடைய இளைய சகோதரியிடம் பாசத்துடன் காண்பிக்கும் செயல்பாடு...இதுவே கலாச்சாரம்...!
    அதன்றி ஆடை எப்போது விலகுமென்று காத்திருப்பதும் அல்லது ஏதாவது மறைந்து புகைப்படமெடுக்க வாய்ப்பிருக்கிறதா என்று கண்கொத்திப் பாம்பாக அலைவதுமோ அல்ல கலாச்சாரம்...!





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter