சிறிய விஷயம்...பெரிய பலன்!


குழந்தையின்மைக்கு இன்னவெல்லாம் காரணங்கள் என்று சொல்லப்பட்ட காலம் மாறி, இன்று காரணங்களே இல்லாமல் குழந்தையின்றித் தவிக்கிறார்கள் பல தம்பதியர்.எல்லா சோதனைகளும் நார்மல் எனக் காட்டினாலும், குழந்தை உருவாவதில் பிரச்னையை சந்திக்கிறவர்களே அதிகம்.


``தாயாகத் தவிக்கிற உங்களுக்கு அதை சாத்தியப்படுத்தாமல் தடுக்கும் விஷயங்களில், நீங்கள் நினைத்துப் பார்க்காத சின்னச் சின்ன காரணங்கள்கூட இருக்கலாம். அவற்றை சரி செய்தாலே உங்கள் குழந்தைக் கனவு நனவாகும்’’ என்கிறார் மருத்துவர் நிவேதிதா. அப்படி அவர் பட்டியலிடுகிற விஷயங்கள்...

உடல் எடையைக் கவனியுங்கள்சராசரிக்கும் குறைவாகவோ, அதிகமாகவோ எடை இருந்தால், அது கருத்தரிப்பைப் பாதிக்கும். கருத்தரிப்பதற்கு முன்பான பி.எம்.ஐ. அளவானது அதிக எடை அல்லது பருமன் எனக் காட்டக்கூடாது. அதே போல எடைக்குறைவு என்றும் காட்டக்கூடாது. இந்த இரண்டுமே கருத்தரிப்பில் தாமதத்தை உண்டாக்கும்.காபி, மது குடிப்பதைக் குறையுங்கள்ஒரு நாளைக்கு 5 கப்புக்கும் அதிகமாக காபி குடிப்பது 500 மி.கி. கஃபைன் எடுத்துக் கொள்வதற்கு சமமானது என்பதால், அது கருத்தரிப்பைப் பாதிக்கும். அதற்காக காபி வாசனையே கூடாது என அர்த்தம் கொள்ள வேண்டாம்.

ஒரு நாளைக்கு 2 கப் அளவைத் தாண்டாமல் இருப்பது போதும். ஆல்கஹால் குடிக்கிற பழக்கம் உள்ளவர்கள் குழந்தைக்காக அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவதுதான் ஒரே வழி. கருத்தரித்த பிறகு குடிப்பது, குழந்தையை ஊனமாகப் பிறக்கச் செய்யும்.காலண்டரை கவனியுங்கள் காலண்டர் என்று இங்கே சொல்வது உங்கள் வீட்டில் மாட்டியிருக்கிற காலண்டரை அல்ல. உங்கள் மாதவிலக்கு காலண்டரை.

மாதவிலக்கான பத்தாம் நாள் முதல் 20ம் நாள் வரையிலான காலம்தான் கருத்தரிக்க ஏதுவானவை. இந்த நாட்களில் உறவு கொள்வது கருத்தரிப்பு வாய்ப்பை அதிகப்படுத்தும். இந்தக் கணக்கு சரியாக வராது என நினைப்பவர்கள், மருந்துக் கடைகளில் கிடைக்கிற ஓவுலேஷன் ப்ரெடிக்டார் கருவியை வாங்கிப் பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் பொருட்களில் கவனம் அவசியம்உறவின் போது உபயோகிக்கிற lubricants, உயிரணுக்களைக் கொல்லக் கூடியவையாக இருந்தால் ஆபத்து. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கெமிக்கல் பாதிப்பில்லாத வழுவழுப்புத் திரவங்களைப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது.அதே போல கணவரை லேப்டாப்பையும் செல்போனையும் அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் சொல்ல வேண்டியது அவசியம்.

இவை இரண்டிலிருந்தும் கிளம்புகிற அதிகப்படியான வெப்பமானது உயிரணுக்களை செயலிழக்கச் செய்வதாக சமீப கால ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.கணவரை லேப்டாப்பையும் செல்போனையும் அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் சொல்ல வேண்டியது அவசியம்.


Similar Threads: