Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree129Likes

கிருஷ்ணா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!


Discussions on "கிருஷ்ணா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!" in "Festivals & Special Days" forum.


  1. #21
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: கிருஷ்ணா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!




    Sponsored Links
    datchu, thenuraj, sumitra and 1 others like this.
    Jayanthy





  2. #22
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: கிருஷ்ணா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

    கண்ணா இங்கே வா...வா..

    கிருஷ்ண ஜெயந்தியன்று தன்னை அழைக்கும் பக்தர்களின் வீட்டிற்கு கண்ணன் வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை, எனவே கிருஷ்ண ஜெயந்தியன்று, வீட்டைச் சுத்தப்படுத்தி, அலங்கரித்து, குழந்தை கண்ணனை வர வேற்கும் விதத்தில், வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரையில், சின்னக்கண்ணன் நடந்து வருவது போல், அவனது பாதச்சுவடுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீ கிருஷ்ணபாதம் கூறிக்கொண்டே மாக்கோலமிட்டு வரவேற்கலாம். இதனால், கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம். ஆயர்பாடியில் கண்ணனை வரவேற்க சித்திரகோலம் (ரங்கோலி), மலர் அலங்காரம், பூக்கோலம் இடுவர். அதை நமது இல்லங்களிலும் செய்து கிருஷ்ணரை வரவேற்க வேண்டும். இதனால் கண்ணனே தன் திருப்பாதங்களைப் பதித்து நடந்து வந்து, பூஜை அறையில் நாம் வைத்துள்ள நைவேத்திய பட்சணங்களை ஏற்றுக்கொள்கிறார் என்பதாகும்.

    கிருஷ்ணா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!-krishna-baby-2.gif


    Dinamalar


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #23
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: கிருஷ்ணா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

    ஸ்ரீ கிருஷ்ண பாதம்

    உலகினை அளந்திட்ட பாதம்!
    உயிர்களுள் இழைந்திட்ட பாதம்!
    அலர்மேலு அணைத்திட்ட பாதம்!
    அணைத்துயிர் பிணைத்திட்ட பாதம்! புலர் காலை துயில் எழுப்ப புவியுயிர் மலரிட்ட பாதம்!
    மலர் மங்கை ஆண்டா ளுமே மகிழ்வுடன் மனம் தொட்ட பாதம்!

    கற்பகத் தருமலர் பாதம்!
    கண்ணனின் சிறுமலர் பாதம்!
    வற்றிடா அருள்மலர் பாதம்!
    வண்ணனின் வளர் நிறை பாதம்!
    பற்றிடும் பதமலர் பாதம்! பார்த்தனுக் கருளிய பாதம்!
    சுற்றிடும் காந்தனின் பாதம்! சுகம் தரும் சாந்தனின் பாதம்!

    தரையினிற் நடந்திட்ட பாதம்!
    தமையுடன் கடந்திட்ட பாதம்!
    மறையொலி உரைத்திட்டோன் பாதம்!
    மனமொழி நிறைத்திட்டோன் பாதம்! இறைமொழி சுமந்திட்ட பாதம்!
    இருவிழி அருளிட்டோன் பாதம்!
    உரை சொல்லும் உன்னத பாதம்!
    உயர்ந்திட்ட மன்னவ பாதம்!

    ஆழிரேகை உயர்த்திட்ட பாதம்!
    அகலிகையை உயிர்த்திட்ட பாதம்!
    ஆலிலையும் அணைத்திடட்ட பாதம்!
    ஆயர் குலம் பிணைத்திட்ட பாதம்! காளிங்க நர்த்தன பாதம்!
    காத்தருளும் வித்தக பாதம்!
    மாலெனும் உயர்ந்தவன் பாதம்!
    மாதுடை கவர்ந்தவன் பாதம்!

    கண்ணனாய் ஓடிய பாதம்!
    கால்விரல் தேடிய பாதம்!
    வண்ணமாய் மாறிய பாதம்!
    வனக்குகன் நாடிய பாதம்!
    மண்ணினுள் ஆடிய பாதம்! மணிப் பொன்னும் சூடிய பாதம்!
    வெண்ணுறி விரும்பியோன் பாதம்!
    வெள்ளத்தை அருந்தியோன் பாதம்!

    உலகினைப் படைத்தவன் பாதம்!
    உயிர்களைக் காப்பவன் பாதம்!
    அழகினிற் கவர்ந்தவன் பாதம்!
    அனைத்திற்கும் பகிர்ந்தவன் பாதம்! துலங்கிடும் துணைவனின் பாதம்!
    துணைவரும் இறைவனின் பாதம்!
    வழங்கிடும் வள்ளலின் பாதம்!
    வாமன வல்லவன் பாதம்!

    ஆயருடன் ஆடிய பாதம்!
    ஆழ்கடல் தேடிய பாதம்!
    மாயனாம் மன்னவன் பாதம்!
    மயக்கிடும் என்னவன் பாதம்!
    தாயென நிற்பவன் பாதம்! தரணியின் கற்பக பாதம்!
    தூயனாய் ஆள்பவன் பாதம்!
    துளசியுடன் வாழ்பவன் பாதம்!

    அறவழி காட்டிடும் பாதம்!
    அருள்நெறி ஊட்டிடும் பாதம்!
    உறவென உணர்த்திடும் பாதம்!
    உதவிடும் உத்தமன் பாதம்!
    சுரங்கனின் நாயகன் பாதம்!
    சூட்சும தென்றலின் பாதம்!
    வரங்களை வழங்குவோன் பாதம்!
    வசந்தமாய் துலங்குவோன் பாதம்!

    பரமபத பனிமலர் பாதம்!
    பக்தர்கள் அணிமலர் பாதம்!
    கரம்தரும் கண்ணனின் பாதம்!
    கலியுக மன்னனின் பாதம்!
    அரசனாய் ஆள்பவன் பாதம்!
    அகத்தினுள் வாழ்பவன் பாதம்!
    பரம்பொருள் வேந்தனின் பாதம்!
    பரவசம் ஈந்தவன் பாதம்!

    பொற்கழல் அணிந்தவன் பாதம்!
    பொல்கஜன் அழித்தவன் பாதம்!
    வற்றிடா செல்வனின் பாதம்!
    வழியுரை சொல்பவன் பாதம்!
    முற்றிலா முகுந்தனின் பாதம்!
    முழுமதி வதனனின் பாதம்!
    ஒற்றுமை விமலனின் பாதம்!
    ஒளிர்ந்திடும் நிமலனின் பாதம்!

    கீதையைப் பகிர்ந்தவன் பாதம்!
    கிளிமலர் குழலவன் பாதம்!
    பாதையை உரைத்தவன் பாதம்!
    பார்த்திப சாரதி பாதம்!
    மாதுடை கொடுத்தவன் பாதம்!
    மடிதுயர் தடுத்தவன் பாதம்!
    பாதுகை வழங்கிய பாதம்!
    பரதனும் வணங்கிய பாதம்!

    கூடல் அழகரின் சுந்தர பாதம்!
    மதுர வல்லியின் மனமகிழ் பாதம்!
    ஆடல் மயில் சோலை அழகரின் பாதம்!
    அமுத கள்ளழக காந்தனின் பாதம்!
    ஈடிலா சீனிவாச வேங்கடன் பாதம்!
    வெங்கடாஜலபதியின் பிரஸன்ன பாதம்!
    காடு கஜனருள் காளமேக பாதம்!
    மோகன வல்லியின் மோகூரான் பாதம்!

    கருடவாகன ஸ்ரீவத்ஸ பாதம்!
    கமலக் கண்ணனின் ஸ்ரீஹரி பாதம்!
    தருவென வரம் தரும் ஸ்ரீராமர் பாதம்!
    தாமோதரனாம் ஸ்ரீதரன் பாதம்!
    புரு÷ஷாத்தமனின் புண்ணிய பாதம்!
    பீதாம்பரனின் வைகுந்த பாதம்!
    பெருவினை தீர்க்கும் கிருஷ்ணரின் பாதம்!
    விதிதனை மாற்றும் விஸ்வரூப பாதம்!

    குவலயம் முறித்திட்ட சதுர்புஜ பாதம்!
    குவியலாய் வரமிடும் குருவாயூர் பாதம்!
    தவமென கிடைத்திட்ட தயாபரன் பாதம்!
    தானென துணைவரும் தசாவதாரன் பாதம்!
    நவமணி யொளிதரும் நர்த்தன பாதம்!
    நம்பினோர்க் கருளிடும் நாரண பாதம்!
    உவகையின் மொழியுடை உச்சித பாதம்!
    உண்மையின் தத்துவ அச்சுத பாதம்!

    பிரளய வெள்ளத்தில் ஆடிய பாதம்!
    பிரகலாதன் வாய் சூடிய பாதம்!
    இரணியனை வதம் செய்த வீரத்தின் பாதம்!
    இலையினிற் இழைந்திட்ட கோகுல பாதம்!
    மரண பயம் மாய்த்திடும் மாதவன் பாதம்!
    மதுசூதனனின் மலரிதழ் பாதம்!
    பரமதயாளனின் பத்மநற் பாதம்!
    பாண்டவ தூதனின் பூரண பாதம்!

    சங்கு சக்கரனின் சகஸ்ரம பாதம்!
    சத்ய நாராயணனின் திவ்ய பாதம்!
    ரங்க நாதனின் சயன பொற் பாதம்!
    ராதா கேசவ ராகவ பாதம்!
    பொங்கு கடலுண்ட முகுந்தனின் பாதம்!
    பொன்னிற வடிவுடை நந்தனின் பாதம்!
    எங்கும் நிறைந்திட்ட விஷ்ணுவின் பாதம்!
    எண்ணிய தளத்திடும் வேங்கடன் பாதம்!

    அழகிய மணவாளனின் ஆராவதன் பாதம்!
    அப்பக் குடத்தானின் அப்பலரெங்க பாதம்!
    அழகிய சிங்கரின் குந்தநாயக பாதம்!
    ஆதிகேசவ சியாமள மேனியர் பாதம்!
    உலகளந்த பெருமானின் திரிவிக்கிரம பாதம்!
    உய்ய வந்தானின் அபயப்பிரத பாதம்!
    மலர்மகள் பூமகள் வணங்கிடும் பாதம்!
    காய்சின வேந்தனின் கனிமலர் பாதம்!

    மீனாள் உமையாள் அண்ணன் பெருமாள் பாதம்!
    சுந்தரர்க்கு தாரை வார்த்த சுந்தரராஜ பாதம்!
    தேனாய் வரமிடும் ஹரசாப விமோசனர் பாதம்!
    மிதிலை வில்முறித்த சீதா மணவாளர் பாதம்!
    மானான மாரீசனை வதைத்திட்ட பாதம்!
    மாயச் சகடத்தினை உடைத்திட்ட பாதம்!
    தேன்துயிலோன் திருவரங்க ரெங்கநாதர் பாதம்!
    ஆண்டளக்கும் ஐயன் மணிக்குன்றன் பாதம்!

    விஜயராகவ பிரகதவரத பாதம்!
    வீரராகவ மரகத மதுர பாதம்!
    கஜேந்திர வரத ரமாமணி நயன பாதம்!
    சுகந்தவன நாத வீர சயன பாதம்!
    வசந்த வல்வில் வாசுதேவ பாதம்!
    வையங் காத்திட்ட புஷ்பூரண பாதம்!
    திசையெலாம் நிறைந்திட்ட திருநறையான் பாதம்!
    தீபப் பிரகாச யோக நரசிம்மர் பாதம்!

    பக்தவச்சலனின் பரமபத பாதம்!
    பத்தராவிப் பெருமாள் திவ்யப் பிரகாச பாதம்!
    சக்ரதர சந்திர சூடப் பெருமாள் பாதம்!
    சௌந்தர ராஜனின் ஜகதீஸ்வர பாதம்!
    அக்கரை வண்ண ஆதிவராஹன் பாதம்!
    அம்ருத நாராயண கோலப் பிரான் பாதம்!
    அகோபில நரசின் அரவிந்த லோசன பாதம்!
    அனந்த பத்மநாப ஆதிகேசவ பாதம்!

    திருவாழ் மார்பன் ஒப்பிலியப்ப பாதம்!
    தேவாதிராஜன் செங்கண் மால் பாதம்!
    திருமூழிக் களத்தான் நின்ற நம்பி பாதம்!
    காட்கரையப்பன் கமலநாத பாதம்!
    திருக்குறளப்பன் தேவப்பிரான் பாதம்!
    யதோத்காரி கருணாகர கண்ணபிரான் பாதம்!
    உரக மெல்லணையான் ஸ்ரீவல்லப பாதம்!
    இமய வரப்பனாம் மாயப்பிரான் பாதம்!

    மகர நெடுங்குழை ராஜகோபால் பாதம்!
    வடிவழகிநம்பி ஜகத்ரட்சக பாதம்!
    சகல நலந்தரும் சத்யகிரியான் பாதம்!
    பத்ரி நாராயண பாலாஜியின் பாதம்!
    பகலவ ஒளிதரும் பாம்பணையப்ப பாதம்!
    விஜயாசனை சாரங்கபாணி பாதம்!
    சுகநலம் அருளிடும் சாரநாதன் பாதம்!
    குடமாடு கூத்தனருள் பவளகனிவாய் பாதம்!

    பவள வண்ணன் பரிமள ரங்க பாதம்!
    பாண்டவ தூதனின் கல்யாண நாரயண பாதம்!
    தவமென வரம் தரும் வேங்கட கிருஷ்ண பாதம்!
    தர்மத்தின் வழி நின்ற நாராயணர் பாதம்!
    நவமணி ஒளி தரும் லட்சுமி வராஹ பாதம்!
    சயனப் பெருமாள் சாந்த நரசிம்ம பாதம்!
    கவலைகள் களைந்திடும் தெய்வநாயகன் பாதம்!
    வெண்சுடர்ப் பெருமாள் பேரருளாளன் பாதம்!

    சத்திய மூர்த்தியின் ஜகந் நாத பாதம்!
    நீலமுகில் வண்ணன் ஆதிப்பிரான் பாதம்!
    நித்திரை அழகுடை வைகுந்த பாதம்!
    நீர் வண்ண நாயக கள்வரின் பாதம்!
    வைத்த மாநிதி வடபத்ர சாயீ பாதம்!
    கோலவில் ராமனின் புண்டரீ காட்சன் பாதம்!
    வித்தக பெரிய பெருமாள் சௌரிராஜ பாதம்!
    சொன்ன வண்ணம் செய்த நம்பெருமாள் பாதம்!

    தாமரைக் கண்ணுடையன் தேவிப் பெருமாள் பாதம்!
    தானென துனணவரும் நந்தா விளக்கு பாதம்!
    தாமரையாள் கேள்வன் வேதராஜ பாதம்!
    வயலாளி மணவாள கோபால கிருஷ்ண பாதம்!
    ராமஜெனகை நாராயண சலசயனர் பாதம்!
    நம்பிக்கை ஒளியூட்டும் நான் மதியர் பாதம்!
    வாமனனாய் உருவெடுத்த உலகளந்தோன் பாதம்!
    வளங்கள் பெற வரங்கள் தரும் ஸ்ரீவாரி பாதம்!

    கருடாழ்வார் அன்பாய் சுமந்திட்ட பாதம்!
    ஹனுமந்தன் நெஞ்சுள் நிறைந்திட்ட பாதம்!
    நறுவாழ்வு நலமளிக்கும் நாவாய்குந்தன் பாதம்!
    பெண்மையினால் அமுதுகாத்த மோகினியின் பாதம்!
    தரணியெலாம் போற்றுகின்ற தாமரைக் கண்ணன் பாதம்!
    தசரதனின் செல்வனான ராமசுப பாதம்!
    நரசிங்க வல்லியார்க்கு நெகிழ்வு தந்த பாதம்!
    நம்பிக்கை நலன் கொடுக்கும் லட்சுமிபதி பாதம்!

    விராதனை புவியுள் அமிழ்த்திட்ட பாதம்!
    ஜடாயு அன்புள் அமிழ்த்திட்ட பாதம்!
    மராமர மரத்தினை சிதைத்திட்ட பாதம்!
    வாலியை போரினில் வதைத்திட்ட பாதம்!
    இராவண கர்வத்தினை கருக்கிட்ட பாதம்!
    விபீடணர், சுக்ரீவரை உருக்கிட்ட பாதம்!
    பராபரம் தானென உணர்த்திட்ட பாதம்!
    குவிகரங்கள் அத்தனைக்கும் உயர்விட்ட பாதம்!

    நாவடி யமர்ந்தோன் நாயக பாதம்!
    நலவளம் பகிர்வோன் நற்றுணை பாதம்!
    மூவடி யளந்தோன் சேவடி பாதம்!
    பாற்கடல் செல்வ பரமபத பாதம்!
    கோவடி இசைத்தோன் கோவிந்த பாதம்!
    கோசலை மைந்தனின் கோதண்ட பாதம்!
    பாவழி நுழைந்தோன் பரந்தாம பாதம்!
    திவ்யப் பிரபந்த தீபத்தின் பாதம்!

    முதலாழ்வார் மூவர் பற்றிட்ட பாதம்!
    மழிசையர் மங்கையர் சுற்றிட்ட பாதம்!
    பதமலர் ஆண்டாள் தொட்டிட்ட பாதம்!
    பெரியாழ்வார் நம்மாழ்வார் கற்றிட்ட பாதம்!
    மதுரகவி பாணாழ்வார் மகிழ்ந்திட்ட பாதம்!
    குலசேகரர் பொடியாழ்வார் நெகிழ்ந்திட்ட பாதம்!
    மதிமா முனிகளிருவர் மயங்கிட்ட பாதம்!
    மகிழ்கூரர் ராமானுஜர் வியந்திட்ட பாதம்!

    மூவடி யளந்தோனின் பாதத்தைப் பற்றிடுவோம்!
    பரமபத வைகுந்த பேரின்பம் பெற்றிடுவோம்!
    சேவடி யழகினையே செவிகுளிர உரைத்திடுவோம்!
    செவ்விதழ் செல்வனையே செந்தமிழில் நனைத்திடுவோம்!
    காவலாய் இருக்கும் வேந்தன் காலடியில் கற்றிடுவோம்!
    கருணையினால் கவரும் கண்ணன் திருவடியை சுற்றிடுவோம்!
    பூவடி நற்பாதத்தை நாவினிக்க நாமுரைக்க புண்ணியம் கோடி தரும் பூரணன் ஹரியின் பதமே!

    ஸ்ரீராமர் தெய்வத் திருவடிகள் சரணம்!

    ஸ்ரீ நாச்சியார் திருவடி

    கமல வல்லி கனகவல்லி கற்பக வல்லி பாதம்!
    அமுத வல்லி அம்ருதவல்லி அழகியவல்லி பாதம்!

    குமுதவல்லி குருகூர்வல்லி குழைக்காத வல்லி பாதம்!
    புஷ்பவல்லி பூர்ணவல்லி பவளவல்லி பாதம்!

    அபிஷேக வல்லி அம்புஜவல்லி அஞ்சிலைவல்லி பாதம்!
    செண்பகவல்லி செங்கமலவல்லி கோமளவல்லி பாதம்!

    ஆதிநாதவல்லி அம்ருதகடவல்லி அரவிந்தவல்லி பாதம்!
    குறுங்குடிவல்லி கோளுர்வல்லி குளந்தைவல்லி பாதம்!

    வஞ்ஜுளவல்லி வாத்ஸல்யவல்லி வரகுணவல்லி பாதம்!
    வேதவல்லி வேளுக்கைவல்லி வைகுந்தவல்லி பாதம்!

    மதுரவல்லி மரகதவல்லி மோகூர்வல்லி பாதம்!
    சுதாவல்லி சுந்தரவல்லி புண்டர்கவல்லி பாதம்!

    கல்யாணவல்லி செங்கமலவல்லி சௌந்தர்யவல்லி பாதம்!
    ரமாமணி வல்லி வித்துவகோட்டுவல்லி நேர்ஒருவரில்லா வல்லி பாதம்!

    தஞ்தைநாயகி ரங்கநாயகி பரிமளரங்கநாயகி பாதம்!
    சார நாயகி லோகநாயகி புரு÷ஷாத்தம நாயகி பாதம்!

    பூமி தேவி பூர்வா தேவி சிறுதேவி பாதம்!
    மகாதேவி இந்திராதேவி வாத்ஸல்ய தேவி பாதம்!

    செண்பகச் செல்வி பங்கயச் செல்வி பொற்றாமரையாள் பாதம்!
    மலர்மகள் பூமகள் கடல் மகள் பாதம்!

    செங்கமலநாச்சியார் மதுரவேணி நாச்சியார் பூங்கோவல் நாச்சியார் பாதம்!
    தலைச் சங்கநாச்சியார் திருப்பேரை நாச்சியார் உய்யவந்த நாச்சியார் பாதம்!

    கல்யாண நாச்சியார் உபயநாச்சியார் பாமா ருக்மணி பாதம்!
    அல்லிமாமலர் திருமாமகள் தாமரை நாயகி பாதம்!

    மலர்மங்கை நிலமங்கை மடவரல் மங்கை பாதம்!
    கிரீவரமங்கை அலர்மேல் மங்கை அணிமாமலர் மங்கை பாதம்!

    பொற்கொடி ஆண்டாள் செல்வத்திருக் கொழுந்து பாதம்!
    பத்மாசனி பத்மாமணி பெருஞ்செல்வ நாயகி பாதம்!

    பெருந்தேவி கண்ணபுர நாயகி நரசிங்கவல்லி பாதம்!
    லட்சுமி ஹரிலட்சுமி கருந்தடக்கண்ணி பாதம்

    செல்வநாயகி செம்மலர் பாதங்களை மனம் குளிர நினைந்திடுவோம்!
    றதாயார் திருவடியை தினமும் நாம் தொழுது தனமழையில் நனைந்திடுவோம்!

    ஸ்ரீமகாலட்சுமி மலர்ப் பாதம் போற்றி!

    கிருஷ்ணா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!-krishna-baby.gif

    -மதுரை மீனு / Dinamalar


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #24
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: கிருஷ்ணா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

    கண்ணனின் லீலை!

    கண்ணனின் லீலைகளை தேவர்களும் செய்ய முடியாது. கிருஷ்ணன் தேவர்களுக்கும் தேவன். ஒரு கோபி தயிர், பால், வெண்ணெய் விற்கப் புறப் பட்டாள். கண்ணன் மீதுள்ள அன்பில் தன் உணர்ச்சி யையும் இழந்துவிட்டாள். அதனால், வாங்கலையோ தயிரு என்று சொல்ல மறந்துவிட்டாள். அவள் புத்தியில் மாதவன் குடிகொண்டிருந்ததால், வேண்டுமா? கோவிந்தன் வேண்டுமா? என்று முழங்கிவிட்டாள். சூதுவாது தெரியாத கோபி பதினான்கு உலகிற்கும் நாதனாகிய கண்ணனைப் பானையில் எடுத்து வந்து, கண்ணன் அன்பில் தன்னையும் மறந்து, அவ்வளவு ஆழ்ந்திருந்தாள்! என்ன சொல்லுகிறோம் என்ற உணர்ச்சியே அவளுக்கு இல்லை. கண்ணன் காதில் இது விழுந்தது. உடனே அவன், இவள் பொல்லாதவள். என்னையே விற்கப் புறப்பட்டுவிட்டாளே! என்று நகைத்தான். அந்தக் கோபி சென்ற வழியில் கண்ணன் தோன்றி னான். அவளிடம், நான் கோகுல அரசன். எனக்கு வெண்ணெய் தா என்றான். அன்பு மிகுதியால் சில சமயங்களில் குறும்பு செய்யத் தோன்றும். கோபியின் இருதயத்தில் அன்பு ததும்பியிருந்தது. அவள் கண்ணனைக் கோபமூட்டுகிறாள். நீ எப்படி கோகுலத்தின் ராஜா? கோகுலத்தின் அரசன் பலராமனல்லவா? நான் அவனுக்குத்தான் வெண்ணெய் கொடுப்பேன். உனக்குக் கிடையாது. நந்தகோபன் இந்தக் கரிக்கண்ணனை எங்கிருந்துதான் தூக்கி வந்தாரோ! நந்தபாபா எவ்வளவு சிவப்பு? நீ வெறும் கரி! என்று வேண்டுமென்றே சீண்டினாள். கண்ணன் கோபியின் புடைவையைப் பிடித்துக் கொண்டிருக்கிறான். அவள், என்னை விடுடா, நான் போகணுமடா. என் பால், தயிர் எல்லாம் சிந்திக் கொட்டிப் போகும். என் மாமியார் என்னைக் கோபிப்பாள் என்றாள். கண்ணன் விடவில்லை. கோபி ஒரு மோதுமோதி புடைவையை விடுவித்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள். சற்று தூரம் போய்த் திரும்பிப் பார்த்தாள். கண்ணன் கோபம் கொண்டு நிற்கிறான். அவளுக்குத் தாங்கவில்லை. ஓடிவந்து, உனக்கு வெண்ணெய் கொடுக்கிறேண்டா, கற்கண்டு கொடுக்கிறேன். என் தவறை மன்னித்துவிடப்பா என்கிறாள். கண்ணன், ஒன்றுமே வேண்டாம், போ என்றதும், திரும்பி அவள் புறப்பட்டுச் செல்கிறாள். சற்று தூரம் சென்றதும் கண்ணன் ஒரு கல்லைத் தயிர்ப் பானை மீது எறிந்தான். பானை உடைந்துவிட்டது.

    இந்த மாதிரி லீலை வேறு எந்தத் தெய்வமாவது செய்ய முடியுமா? ஸ்ரீகிருஷ்ணன், எல்லோ ருடைய கணவன் என்றும் சொல்லுகிறான். கண்ணன் உடனே வீடு திரும்பி, ரொம்ப அமைதியுடன் யசோதையின் மடியில் ஒளிந்து கொண்டான். சற்று நேரத்தில் அந்த கோபியும் வந்து சேர்ந்தாள். அவள் பாலகிருஷ்ணனைப் பற்றிக் குற்றம் சொன்னாள். குழந்தைக்கு ரொம்பவும் செல்லம் தருகிறீர்கள். அதனால்தான் அவன் இத்தனை வம்பு செய்கிறான். இன்று அவன் என் தயிர்ப் பானையை உடைத்து, என் துணிகளைப் பாழாக்கிவிட்டான். தயிர் கொட்டி வீணாகப் போயிற்று என்றாள். பாலன், அவளைப் போகச் சொல்லு. எனக்குப் பயமாக இருக்கிறது. அவள் போகட்டும், பிறகு நான் உன்னிடம் உண்மையைச் சொல்கிறேன் என்றான். பிறகு, அந்த கோபி ஒரு பெரும் லோபி. இரண்டு மூன்று நாளாகப் புளித்து, கெட்டுப் போன பழைய தயிரை விற்க எடுத்து வந்திருந்தாள். அவள் இவ்வளவு மோச மான தயிரை விற்கக் கொண்டு போவது நல்லதா, சொல்லு. யாராவது ஏழை எளியவர் அதை வாங்கிச் சாப்பிட்டு நோய் வந்தால்...? அதற்கா கவே நான் அவள் தயிர்ப் பானையை உடைத் தேன். நான் ஆரோக்கிய பிரசார மண்டலத்தின் தலைவன் அல்லவா....? என்கிறான். யசோதை அந்த கோபியை அழைத்து, இம்மாதிரி கெட்டுப் போன தயிரை விற்கலாமா? என்று கடிந்து அதட்டினாள். கோபி உடனே சிரித்தாள். கிருஷ்ணன் பேச்சில் கை தேர்ந்தவன்தான்! என்றாள். தயிர்ப் பானையை உடைத்தாலும் கிருஷ்ணன் மீது அவள் குறைப்படவில்லை. வழியே போய்க் கொண்டிருக்கும் பெண்ணைப் பிடித்து இழுத்து, தயிர்ப் பானையையும் உடைக்கக்கூடிய வேறு தெய்வம் ஏதேனும் உண்டா? மற்றவர்கள், இம்மாதிரி செய்தால் நமக்கு அடி கிடைக்கும் என்று அஞ்சுவார்கள். யாரும் பூஜை செய்து உபசாரம் செய்ய மாட்டார்கள் என்றும் சொல்வார்கள். ஸ்ரீகிருஷ்ணனுடைய இனிமையான லீலைகள் தெய்விகமானவை. மிக அற்புதமானவை.மற்ற தெய்வங்கள் தங்கள் கையில் அஸ்திர, சஸ்திர, ஆயுதங்கள் ஏந்திக் காட்சி தருகிறார்கள். ஒருவர் கையில் சுதர்சனம் இருக்கிறது. இன்னொருவர் கையில் அம்பும் வில்லும் இருக்கின்றன. மற்றொருவர் கையில் திரிசூலம். கண்ணன் கையில் ஆயுதமே கிடையாது. அவன் ஒரு கையில் புல்லாங்குழலும், ஒரு கையில் வெண்ணையும், கற்கண்டும்தான் வைத் திருக்கிறான். அந்த தெய்வம் நம் அனைவரையும் காக்கட்டும்.

    பாம்பா... பயமில்லை: கம்சனால் ஏவப்பட்ட பூதனை என்னும் அரக்கி, பகாசுரன் என்ற அரக்கனை கொன்றான் குழந்தை கண்ணன். இதை கேள்விப்பட்ட பூதனையின் சகோதரன் அகாசுரன் என்பவன் கண்ணனையும், அவனது அண்ணன் பலராமனையும், ஆயர்பாடி சிறுவர்களையும் கொல்லப் புறப்பட்டான். மகிமா என்னும் யோகசித்தி பெற்ற அவன், விரும்பிய வடிவம் எடுக்கும் திறன் படைத்தவன். ஆயர்பாடி வந்த அவன், எட்டு மைல் நீளமுள்ள பாம்பாக உருவெடுத்து நின்றான். அவனுடைய வாய் குகை போல காட்சியளித்தது. ஆனால், சிறுவர்கள் சிறிதும் பயமில்லாமல்,கண்ணன் இருக்க நமக்கென்ன பயம்?என்று அகாசுரனைப் பார்த்து கைகொட்டி சிரித்தனர். அகாசுரனின் வாய்க்குள் நுழைந்த கண்ணன் தன் தோற்றத்தை விரிவுபடுத்தினார். மூச்சுத்திணறிய அசுரனின் தலை சுக்குநூறாக வெடித்து சிதறியது.

    ஆயிரம் தாமரை மொட்டுக்களே: யமுனைநதிக்கரையில் கிருஷ்ணன் பசுமேய்க்கச் செல்வான். நதிக்கரையைக் கண்டதும் நீராடும் எண்ணம் கண்ணனுக்கு வந்துவிடும். மதியம் கிருஷ்ணனும், நண்பர்களும் பசியோடு மதிய உணவு சாப்பிட வட்டமாக உட்காருவர். கிருஷ்ண@ணாடு நண்பர்கள் வெண்ணெய், பால், தயிர், பழங்களால் ஆன உணவுகளை இலைகளில் பரப்பி உண்ணத் தொடங்குவர். கேலியும் கிண்டலுமாக விளையாடிக் களிக்கும் அவர்களைக் கண்டு, தேவர்கள் தங்களுக்கு இந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என ஏங்குவர். ஆயிரம் இதழ் கொண்ட தாமரை போல கிருஷ்ணரும், நண்பர்களும் அமர்ந்த காட்சி அழகாக இருக்கும். ஆண்டாளும் திருப்பாவையில்,கறவை பின்சென்று கானம்(உணவு) சேர்ந்துண்போம் என்று இந்தக் காட்சியைப் பாடி மகிழ்கிறாள்.

    கிருஷ்ணா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!-6666.gif

    (Dinamalar)


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #25
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: கிருஷ்ணா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

    Hi Sudha

    Azhakaana krishnan padangal pottu asathittinga....
    Neenga poduvinganu expect panninen, ennoda ethirpaarppu veenakalai..
    Thanks

    Sriramajayam likes this.

  6. #26
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  7. #27
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: கிருஷ்ணா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

    Hi Vichu Anna

    Krishanar paatham & Krishna Leelai kathai sonnathukku nandri.....
    Nan antha paattu muzhuthum padichikitte irukken.....(more than one time)
    Thanks for sharing....

    Sriramajayam likes this.

  8. #28
    vennila chandra's Avatar
    vennila chandra is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Vennila
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    coimbatore
    Posts
    2,862

    Re: கிருஷ்ணா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

    அனைவருக்கும் எனது கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்....

    விச்சு அண்ணா.... நீங்க கொடுத்த கிருஷ்ணர் லீலைகள் நல்ல இருந்தது...

    thenuraj and Sriramajayam like this.
    With Lots of Luv,
    Vennila.

    Download My Stories Here!


  9. #29
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: கிருஷ்ணா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

    Thx u Thenu!





    Quote Originally Posted by thenuraj View Post
    Hi Vichu Anna

    Krishanar paatham & Krishna Leelai kathai sonnathukku nandri.....
    Nan antha paattu muzhuthum padichikitte irukken.....(more than one time)
    Thanks for sharing....


    thenuraj likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #30
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: கிருஷ்ணா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

    நன்றி வெண்ணிலா சந்திரா!




    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter