Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 4 Post By UPPILI SRINIVAS

navarathri invitation


Discussions on "navarathri invitation" in "Festivals & Special Days" forum.


  1. #1
    UPPILI SRINIVAS's Avatar
    UPPILI SRINIVAS is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jul 2013
    Location
    thanjavur
    Posts
    285

    navarathri invitation

    நண்பர்கள் அனைவர்க்கும் வணக்கம் நவராத்திரி விழாவை முன்னிட்டு எங்கள் இல்லத்தில் கொலு வைக்கப்பட்டுள்ளது . தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்து மஞ்சள், குங்குமம் வெத்திலை பாக்கு பெற்று விழாவினை சிறப்பித்து செல்லுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.


    என்னுடைய நவராத்திரி பாமாலை உங்களின் பார்வைக்காக

    சரஸ்வதி

    முப்பெருந் தேவியுள் முதலானவள்
    மூஉலகின் கலைகளுக்கும் தாயானவள்
    நான்முகன் பிரம்மனின் துணைவியானவள்
    கானம் மீட்டும் நாரதனின் தாயானவள்
    செல்வத்தில் சிறந்த செல்வம் கல்வியாம்
    அதை கனிவோடு அருள்வாளாம் வாணியாம்
    முப்பெருங்கடவுளும் முப்பதுகோடி தேவர்களும்
    உன் அருளைத் தேடி ஓடி வரம் வாங்க வர
    பக்திகண்டு அவர்களின் அன்பு கண்டு நீ
    உள்ளம் உருகி வரம் கொடுக்க நீயே முன்வர
    பெற்றோம் பேற்றினை என எல்லோரும் நினைக்க
    கண்ணினை மூடி நினைத்தால் நீயோ வந்து நிற்க
    வணங்கினோம் உன்னை கல்வி அருள் பெற
    வரம் பல தந்தாய் வாழ்வில் உயர உயர


    லக்ஷ்மி துதி

    அலைமகளே திருமகளே மகாலக்ஷ்மியே
    நாடி வருபவர்க்கு நல்லதை நல்கி
    ஆசையுடன் வருபவர்க்கு ஆசி அளித்து
    வாழ்வு வேண்டுவோருக்கு வரங்கள் வழங்கி
    வரலக்ஷ்மியாய் காட்சி அளிப்பாய் தேவியே

    மாட்சிமை பொருந்திய மாங்கல்யம் நிலைத்திட
    மங்கையர் செய்யும் பூஜைக்கும் அனுஷ்டிக்கும்
    விரதத்திற்கும் மனம் இறங்கி, அருள் வழங்கி
    காத்திடும் கனகத்தாளே, நாளொரு மேனியும்
    பொழுதொரு வண்ணமுமாய் வணங்குவோரை
    காத்திடு காலம் முழுதும் கனகவல்லியே

    நன்மையும் செல்வமும் நாளும் நல்குவாய்
    இன்பமும் இகபரமும் இன்முகத்துடன் தந்திடுவாய்
    விரதம் காப்போற்கு விண்ணளவு வரம் தந்திடுவாய்
    லக்ஷ்மியே, கனகலக்ஷ்மியே, கஜலக்ஷ்மியே, தைரிய
    லக்ஷ்மியே, வரலக்ஷ்மியே

    துர்கை

    அகிலமும் அடங்கிடுமாம் உன் அழகில்
    அகிலமும் நாணுமாம் உன் அழகு இல்
    சிம்மமும் சிறு குழந்தையாகும் உன் அருகில்
    சிரிக்கும் சிரிப்பில் முத்துகள் உதிருமாம்
    கோபசிரிப்பில் வன் உயிர் உதிரம் உதிருமாம்
    பார்க்கும் பார்வையில் பாரையே ஆட்டுவிப்பாய்
    கோபப் பார்வையில் கோனையே ஆட்டும்விப்பாய்
    தேடி வந்தவர்க்கு நல்வரம் அளிப்பாய்
    நாடி வந்தவர்க்கு நல்லறம் நல்குவாய்
    நாலிரண்டு கண்ணுடையான் நல்வரம் நல்கிட
    அரவணை தங்கிடும் கார்வண்ணனோ ஆயுதம் அளித்திடஅரிவயம்பாகத்தான் பார்வையை
    உனக்கு தந்திட பாவை நீயும் பாங்குடன் பெற்றிட வெற்றி அத்தனையும்உந்தன் சொத்தாம் பக்தர்கள் எங்களுக்கோ நீயே சொத்தாம் நின்றாய் நின்றாய் நிர்மலமாய், வென்றாய் வென்றாய்
    வெண் கொற்ற கொடையாளே
    அழகு அழகு நீ அழகு அழகு
    அழகு நீ இருக்கும் இடமும் அழகு
    வர்ணிக்கவார்த்தைகள் இல்லையம்மா
    அனுதினமும் உன்னை தொழுகிறேன்
    உலகில் எனை உய்விக்க என்னுடன்
    இரு தாயே என் இருதயத்தாயே
    அங்கனனுக்கும் கண்கள் போதா
    உன்னை வணங்கிட நானும் எம்மாத்திரம்
    தாயே என்னையும் என் பக்தியையும்





    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails navarathri invitation-100_0466.jpg   navarathri invitation-100_0468.jpg   navarathri invitation-100_0475-2-.jpg  
    Last edited by sumathisrini; 6th Oct 2013 at 11:35 AM. Reason: Pl. don't share personal details in public forum

  2. #2
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    Re: navarathri invitation

    Thanks for Inviting US.....

    With Love,
    Priya

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter