Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree181Likes

How to Make Maa Kolam?!


Discussions on "How to Make Maa Kolam?!" in "Festivals & Traditions" forum.


  1. #1
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,472

    How to Make Maa Kolam?!



    Pongal is around the Corner. On these Special Occasions, We'd like to Draw Big Maa Kolams, Right? Ready Made Kolam powders are easily available in stores these Days. But Home Made Arisi/Rice Maa Kolam is always Special to light Up the Festival Season.


    Giving you here the Easiest Method to Prepare Maa Kolam :

    Soak Raw Rice in water for an Hour or Overnight. Grind it in Mixie & make a Smooth paste. Take some paste in a bowl & add some water to Make a paste like batter, now The Maa Kolam, Ie Kolam Maavu is Ready!

    Use Small thin Piece of Cloth or a Small Painting Brush to Draw Maa Kolam. Make it wet, then put it in the paste, and draw Kolam.

    You can even store the Paste. Allow the Paste to dry Well & Store in a Box. When needed, take Some & Mix it with little Water to make a Paste. Then try Maa Kolam

    The Maa kolams are Stated an additional shade by using Semman or Kaavi Powder. This dark brown color powder[Available in Stores] which is made with Red sand adds beauty to these Kolams.


    Note : Some tried to use little Ulundhu to the rice to Make the Maa Kolam more Striking.

    Any Other Methods? If Yes, Share here Friends..


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails How to Make Maa Kolam?!-how-make-maa-kolam-copy.jpg  

  2. #2
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,401
    Blog Entries
    19

    Re: How to Make Maa Kolam?!

    TFT me கார்த்தி @gkarti

    மாக்கோலம்
    என்றால் அரிசி மாவில் போடும் கோலம்தான்.

    கோலமாவு use பண்ணுவதுதான் traditional method என்பதாக இப்போது தோணுகிறது. இது சுண்ணாம்போ ஏதோ ஒரு கல்லைப் பொடித்துதான் செய்யப்படுகிறது. ஆனால் அரிசி மாவில் போடும் கோலம் இழை சரியாக வராமல் போனாலும் பார்க்க வெளுப்பாக இருக்கும். மண் தரை கொண்ட வாசல் என்றால் கண்டிப்பா மாலைக்குள் எறும்பு, பறவைகள் கொஞ்சம் காலி பண்ணிடும், (கோலம் போடுவதே அதுக்குத்தானே?) கோலமாவில் போட்ட கோலம் என்றால் ஈ எறும்பு சீந்தாது. நாமதான் நடந்து நடந்து அழிக்கனும்.

    மாவு அரிசி என்கிற அரிசியை (ரேஷன் அரிசியை முதலில் எல்லாம் எங்கள் வீட்டில் வடாம் போடவும், கோலமாவுக்கும்தான் பயன்படுத்துவோம்) களைந்து உலர்த்தி மாவாக அரைத்து வைப்போம். மிசினில் கோலமாவு பதம் என்றால் கொஞ்சம் கொரகொர வென்று அரைத்துத் தருவார்கள். சலித்துக் காய வைத்துக்கொண்டால் அழகா கோலம் போடலாம். இதை வீட்டுக்குள்ளும் வெளியிலும் போடலாம்.

    இதையே பண்டிகை நாள் கிழமைகளில், கல்யாண வீட்டில் இன்ஸ்டன்ட்டா அரைத்தும் போடுவதுண்டு. அதற்கு இழைக்கோலம் என்று பெயர். நீங்க போட்டது இழை கோலம்தான்.

    ஒரு ஆழாக்கு அரிசியை ஊறவைத்து மிக்சியில் நைசா அரைத்தால் கோலத்துக்கு மாவு ரெடி. இதை வீட்டினுள்ளும் concrete தரை கொண்ட வாசலிலும் போடலாம். காயக் காய பளிச்சென்று இருக்கும்.
    ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தியின்போது கிருஷ்ணர் கால் வரைவது இதைக்கொண்டுதான். ஒரு சின்ன ரிப்பன் போல வெட்டின துணியை மாவில் போட்டு கையில் நனைத்து சுருட்டி வைத்துக்கொண்டு மோதிர விரல் வழியாக வழிய விடுவதே இழைக்கோலம். மாவில் கோலம் போட வராதவர்களுக்கும் சொன்ன பேச்சு கேக்கும் இந்த இழைக்கோலம்.

    நாம் இட்லிக்கு மாவு அரைக்கும்போது முதலில் அரிசியை அரைப்போம் என்றால் அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து வைத்துக்கொண்டால் ரெண்டு மூணு நாள் வரை வரும். பிரிட்ஜில் வைத்து தேவைப்படும் நேரம் கொஞ்சம் நீர் விட்டு கரைக்கலாம். தினமும் சிலர் வீட்டில் இழைக்கோலம் போடுவதுதான் வழக்கமாயிருக்கும். அவர்களுக்கு இந்த method use ஆகும். இட்லிக்கு நனைக்கும்போது கொஞ்சம் அதிகப்படி அரிசியை நனைத்து அரைக்கலாம்.

    மொசைக் மார்பிள் flooring இருக்கும் வீட்டில் தரை வெளுத்த நிறம் என்றால் இந்தக் கோலம் எடுபடாது, அதோடு உடனே அழிந்தும் போகும். அப்போது இந்த மாவுடன் ஒரு ஸ்பூன் அளவு மைதா சேர்த்து போட, இழை நடுவில் விட்டுப்போகாமலும் அழியாமலும் வரும். ஆனால் கிளீன் பண்ணும்போது சேர்த்துவைத்துப் பழிவாங்கும்.

    தரை வெளுத்த நிறம் என்றால் இந்த அரிசி மாவில் கொஞ்சமாக மஞ்சள் தூள் கலந்து போடலாம்.

    செம்மண் காவி என்றால் படிக்கோலம் (இது ஒவ்வொருவர் வீட்டில் ஒரு டிசைன் இருக்கும்) போட்டு சுற்றிலும் காவியில் பார்டர் போடுவது. இதையும் துணியில் போடுவதே நல்லது (கை கறை ஆனாலும்) பெயிண்ட் பிரஷ் கொண்டு போடுவது எல்லாம் இப்போதுதான். இழைக்கோலம் போட்டு காவியும் போடும்போது துணி use பண்ணினால் அங்கங்கே மாவு, காவி சொட்டி திருஷ்டி பொட்டு வைத்தது போல் தெரிவதும் ஒரு அழகு. பழகியவர்களுக்கு இப்படி பொட்டு விழாது.

    எனக்குத் தெரிந்ததை சொல்லிட்டேன்.

    - Chitra

  3. #3
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,472

    Re: How to Make Maa Kolam?!

    Brief Explanation.. Nandri Jii.. Nandri Jii


  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    32,008

    Re: How to Make Maa Kolam?!

    கார்த்தி , சித்ரா ரெண்டு பேர் சொன்ன முறையில் தான் பொதுவாக மாக்கோலம் அல்லது இழைக்கோலம் போடுவது .

    ஆனால் என் மாமியார் எனக்கு வேறொரு எளிதான முறையும் சொல்லிக் கொடுத்தார் . பொதுவாக நான் இப்படித்தான் இழைக்கோலம் போடுகிறேன் , கிருஷ்ணஜெயந்தி , கார்த்திகை இரண்டு நாட்களுக்கும் .

    சிறிய அளவில் மட்டுமே கோலம் போட , இந்த முறை அவசரத்திற்கு கைகொடுக்கும் .

    அதை இங்கே சொல்கிறேன் .

    பொதுவாக அரிசி மாவு எல்லார் வீட்டிலும் கையிருப்பு இருக்கும் . இதில் 1 பங்கு எடுத்துக் கொண்டு , மைதா மாவில் 1 அல்லது 2 டீஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டால் சரியாக இருக்கும் .

    இதை நீர் விட்டுக் கலக்கி , கொஞ்சம் திக்காக கலந்து வைத்துக் கொண்டு (நீர் அதிகமாகி , கோலம் தெளிவாக வராமல் இருந்தால் , மேற்கொண்டு சிறிதளவு அரிசிமாவைப் போட்டுக் கலக்கவும் ) , அதில் ஒரு சிறு துணியை நனைத்து , விரல்களில் எடுத்து, வழிய விட்டு , கோல இழைகள் போட்டு , இழை கோலத்தினை அழகாக , உடனடியாகப் போட்டு விடலாம் .

    இதையே , வெறும் அரிசி மாவை நீரில் கலந்தும் கோலம் போடலாம் . ஆனால் இது அவ்வளவு வெளுப்பாக இருக்காது .

    மைதாமாவை உபயோகித்தால் , போட்ட கோலம் காய்ந்தவுடன் ,நல்ல வெள்ளை வெளேரென்று கோலம் காணப்படும் .

    ஆனால், பெரிய அளவில் , கல்யாணம் போன்ற சடங்குகளுக்கு கோலம் போடும்போது , அரிசியை அரைத்து கோலம் போட்டால்தான், காணும் . ரெடிமேட் மாவு உபயோகித்தால் , ரொம்ப இழுத்து விடும் . கட்டுபடியாகாது.

    இந்த மைதா மாவினால் கோலம் போட்டால் , சில சமயம் , எந்த மாவில் போட்டாலும் , அதை சுத்தம் செய்யும்போது , வெறுமே ஈரத் துணியால் துடைத்தால், அறை முழுவதும் பரவி விட வாய்ப்புண்டு .

    அதனால் , மைதா மாவோ , அல்லது எந்த வித மாவுகளை கொண்டு மாக்கோலம்/இழைக்கோலம் போட்டாலும் , முதலில் ஒரு stainless steel spoon கொண்டு அந்தக் கோலங்களை கீறி எடுத்து விட்டு விடவும் . இப்போது இதை நன்றாக பெருக்கி அள்ளி விடவும் . அதற்குப் பிறகு , ஈரத் துணி கொண்டு துடைத்தால், அறை முழுவதும் , வெள்ளையாக மாறாமல் , சுத்தமாக மாறி விடும் .

    Jayanthy





  5. #5
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,401
    Blog Entries
    19

    Re: How to Make Maa Kolam?!

    ஆமாம் ஜெயந்தி @jv_66

    நானும் அதை தான் follow பண்ணுவேன், இங்கே சொல்ல விட்டுப் போனது. ரெடிமேட் மாவில் இழைகோலம் போடுவதானால் மைதா தான் பைன்டிங்க்கு. நீங்கள் சொன்னது போல ஸ்பூன் வைத்து சுரண்டுவது இங்கே impossible, காரணம் நிறைய வீடுகளில் மேலே wooden tiles போட்டு வைத்திருப்பார்கள். நம் ஊரிலும் gloosy finish கொண்ட தரைகள் இருந்தால் கீறல் விழுந்துவிடும். அப்போது கட்டைத் துடைப்பம், ie., தென்னந்துடப்பம் வைத்து அந்த கோலம் முழுக்க பெருக்கி ஒரு முறத்தில் அள்ளிவிடவேண்டும். பெருக்கின இடம் மட்டும் ரெண்டு மூணு முறை ஈரத்துணி கொண்டு துடைக்கவேண்டும். அல்லது சொரசொரப்பான காய்ந்த துணி கொண்டு ரெண்டு மூணு முறை துடைத்தாலும் போகும். அப்புறம் ஒரேயொரு முறை ஈரம் வைத்து துடைக்கலாம்.

    - Chitra

  6. #6
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,472

    Re: How to Make Maa Kolam?!

    Superb Like Aunty THanks Much for your Details


  7. #7
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,568

    Re: How to Make Maa Kolam?!

    கோலம் போடுவதற்கு என்னை tag செய்ததை ,எனக்கு தெரிந்தவர்கள் அறிந்தால் சிரிப்பாய் சிரிப்பார்கள்.அந்த அளவுக்கு எனக்கும் கோலத்திற்கும் தூரம்.நான் என் பிறந்த வீட்டில் இருந்த வரை எங்கள் அப்பா எங்களை வீட்டு வாசலில் நிற்பதற்கு கூட அனுமதித்தது இல்லை.எந்த வேலையும் செய்ய விட்டதில்லை.நம்ம வீட்டில் இருக்கும் வரை வீட்டில் சொகுசாக பிள்ளைகள் இருக்க வேண்டும்.கல்யாணத்திற்கு பின் காலம் முழுவதும் வேலை செய்து தானே ஆக வேண்டும்.பிறந்த வீட்டிலே அதிக வேலை வாங்கி சக்கையாக பிழிந்து அனுப்பக்கூடாது என்பது எங்கள் வீட்டு கொள்கை.

    என் கணவர் வீட்டு ஊர் பக்கம் பெண் குழந்தைகள் திருமணதிற்கு முன் நன்றாக வேலை செய்ய பழக்கி .நல்ல விபரமாக அனுப்புவார்கள்.
    அவர்கள் நன்றாக விபரமாக இருப்பார்கள்.

    நாங்கள் இன்னும் எங்கள் பெற்றோர்கள் இடம் சண்டை போடுகிறோம் .நீங்கள் எங்களுக்கு உலகம் தெரியாமல் வளர்த்து இருக்கிர்கள் என்று.

    திருமணத்திற்கு பின் தான் நான் வீட்டு வேலை செய்ய ஆரம்பித்தது.திருமணம் முடித்த உடன் நான் பாம்பே சென்று விட்டேன்.நாங்கள் அப்போது அபார்ட்மெண்ட்டில் இருந்தோம்.என் மாமியார் டெய்லி வாசலில் சிறிய கோலம் போட வேண்டும் என்றதால் நான் தட்டு தடுமாறி கோடு இழுக்க கற்று கொண்டு சிறிய கோலம் போடுவேன்.

    அது அங்கு இருக்கும் வெளி மாநிலத்தவர்கள் பார்த்து டெய்லி சூப்பராக கோலம் போடுவதாக கூறுவார்கள்.நல்ல வேலை அங்கு தமிழர்கள் யாரும் இல்லை.பிழைத்தேன் இல்லாவிடில் காரி துப்பி இருப்பார்கள்.அந்த அழகில் இருக்கும் நான் போடும் கோலம்.

    ஊருக்கு வரும்போது நம்ம ஊர் பக்கம் காலை ,மாலை இரு வேலை கோலம் போட வேண்டும் .அதை என் மாமியார் தான் செய்வார்கள்.அவர்கள் செய்தாலும் நம்ம மக்கள் சும்மா இருபர்களா “என்ன மருமகள் வந்து இருக்கு போல ? என்று ஒரு ? போட்டு விட்டு போய் விடுவார்கள்(அவ வந்து இருக்கும்போது நீ ஏன் கோலம் போடுற என்று குட்டையை குழப்பி விடுவார்கள்).

    நான் ஏன் இந்த தொந்தரவு என்று காலை 6 மணிக்கும் மாலை 5 மணிக்கும் அடித்து பிடித்து வந்து வாசல் கூட்டி கோலம் போடுவேன்.ஆரம்பத்தில் எனக்கு சரியாக கூட்ட தெரியவில்லை.விதியில் போகும் ஆட்கள் எல்லாம்
    ஏம்மா சந்திரமதி போல் நிமிர்த்த வாக்கில் கூட்டுகிறாய் குனிந்து துடைப்பத்தை விரித்து வைத்து கூட்டு என்று அறிவுரை வேறு.

    எனக்கு ஐயோ என்று இருக்கும்(இப்போது யாரும் கூட்டும் போது ஒன்றும் கூறுவதில்லை.பாஸ் ஆகி விட்டேனோ or இதுக்கு சொல்லி ஒரு புரோஜனம் இல்லை என்று அவர்கள் விட்டு விட்டார்களா என்று எனக்கு தெரிய வில்லை)

    ஒரு வழியாக வீட்டு கூட்டி வாசல் தெளித்து கோலம் போட்டால் தெருவில் சொல்வவர்கள் என்ன உங்கள் மருமகள் வந்து இருக்கா ?என்று கேட்பார்கள்.
    அந்த அளவிற்கு என் கோலம் காட்டி விடும் எங்கள் வருகையை.எங்கள் தெருவிற்கே என் கோலம் திருஷ்டி பரிகாரம் போல் இருக்கும்.மற்றவர்கள் எல்லோரும் சுப்பர் ஆக போடுவார்கள் எங்க ஆரம்பித்தார்கள் எங்கு முடித்தார்கள் என்று தெரியாது அசில் வார்த்தது போல் இருக்கும்.

    இரு வருடங்களுக்கு முன் நானும் ரோசப்பட்டு நாமலும் நன்றாக கோடு இழுக்க வேண்டும் என்று எங்கள் பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் என் வயதை ஒத்தவர்கள் இடம் எப்படி அழகாக கோடு இழுப்பது என்று பயிற்சி எடுத்து பார்த்தேன்.அப்போதும் சிம்பு சிம்பாக தான் கோடு வருகிறது.நான் என்ன செய்வது..எங்கள் பக்கத்துக்கு வீட்டு பொடிசுகள் எல்லாம் வந்து அத்தை இப்படிகோடு போடுங்கள் என்று எனக்கு பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

    நான் எங்கள் பக்கத்துக்கு வீட்டுகார்கள் இடம் நோட்டு குடுத்து நீங்கள் நல்லா கோலம் போடுகிர்கள் எனக்கு நோட்டில் போட்டு தாருங்கள் என்று தந்தேன் .அவர்கள் மாதகணக்கில் வைத்திருந்து ஒரு இரு கோலங்கள் தான் போட்டு தந்தார்கள்.இவர்கள் இடம் கெஞ்சுவதற்கு பதில் கோலப்புத்தகம் வாங்கி விடலாம் என்று 2 வருடங்களுக்கு முன் ஆகஸ்ட் மாதம் ஊருக்கு வந்த போது தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைப்பெற்றது.அதில் நிறைய கோலப்புத்தகம் வாங்கினேன்.என்ன வாங்கி என்ன புண்ணியம் ஒழுங்காக கோடு வராமல் நமக்கு சதி செய்கிறதே.

    நான் போட்ட கோலம் பம்பாயில் எல்லோருக்கும் சூப்பராக தெரிந்தது.என் கணவர் ஊரில் எல்லோர் கண்களுக்கு சுமாராக கூட தெரியாதது பெரிய கொடுமை தான்.

    என் வாழ்நாள் லட்சியத்தில் ஒன்று நான் போடும் கோலத்தை பார்த்து சூப்பராக இருக்கு என்று கூட சொல்ல வேண்டாம் .என் கோலத்தை பார்த்து மருமக வந்து இருக்கு? என்று யாரும் கண்டுபிடிக்காமல் இருந்தால் சரி.

    இப்போது சொல் கார்த்தி கோலம் போடுவதற்கு என்னை நீங்கள் tag செய்ததை என் சொந்தங்கள் பார்த்தால் சிரிப்பார்களா ?மாட்டார்களா?

    Last edited by chan; 12th Jan 2016 at 01:02 PM.

  8. #8
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,472

    Re: How to Make Maa Kolam?!

    Hahahahahhaahhahahaha... Your Post made me Laugh Out Loud Lakshmi.. haha Cant control! Excuse me..

    இப்படியொரு History இருக்கும்ன்னு நான் நினைக்கவே இல்லை..


    ///என் வாழ்நாள் லட்சியத்தில் ஒன்று நான் போடும் கோலத்தை பார்த்து சூப்பராக இருக்கு என்று கூட சொல்ல வேண்டாம் .என் கோலத்தை பார்த்து மருமக வந்து இருக்கு? என்று யாரும் கண்டுபிடிக்காமல் இருந்தால் சரி.///

    ஹஹஹா விட முயற்சி விஸ்வரூப வெற்றி கண்டிப்பா கலக்குவீங்க லக்ஷ்மி... Cheers


  9. #9
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,401
    Blog Entries
    19

    Re: How to Make Maa Kolam?!

    Quote Originally Posted by chan View Post
    கோலம் போடுவதற்கு என்னை tag செய்ததை ,எனக்கு தெரிந்தவர்கள் அறிந்தால் சிரிப்பாய் சிரிப்பார்கள்.அந்த அளவுக்கு எனக்கும் கோலத்திற்கும் தூரம்.நான் என் பிறந்த வீட்டில் இருந்த வரை எங்கள் அப்பா எங்களை வீட்டு வாசலில் நிற்பதற்கு கூட அனுமதித்தது இல்லை.எந்த வேலையும் செய்ய விட்டதில்லை.நம்ம வீட்டில் இருக்கும் வரை வீட்டில் சொகுசாக பிள்ளைகள் இருக்க வேண்டும்.கல்யாணத்திற்கு பின் காலம் முழுவதும் வேலை செய்து தானே ஆக வேண்டும்.பிறந்த வீட்டிலே அதிக வேலை வாங்கி சக்கையாக பிழிந்து அனுப்பக்கூடாது என்பது எங்கள் வீட்டு கொள்கை.

    என் கணவர் வீட்டு ஊர் பக்கம் பெண் குழந்தைகள் திருமணதிற்கு முன் நன்றாக வேலை செய்ய பழக்கி .நல்ல விபரமாக அனுப்புவார்கள்.
    அவர்கள் நன்றாக விபரமாக இருப்பார்கள்.

    நாங்கள் இன்னும் எங்கள் பெற்றோர்கள் இடம் சண்டை போடுகிறோம் .நீங்கள் எங்களுக்கு உலகம் தெரியாமல் வளர்த்து இருக்கிர்கள் என்று.

    திருமணத்திற்கு பின் தான் நான் வீட்டு வேலை செய்ய ஆரம்பித்தது.திருமணம் முடித்த உடன் நான் பாம்பே சென்று விட்டேன்.நாங்கள் அப்போது அபார்ட்மெண்ட்டில் இருந்தோம்.என் மாமியார் டெய்லி வாசலில் சிறிய கோலம் போட வேண்டும் என்றதால் நான் தட்டு தடுமாறி கோடு இழுக்க கற்று கொண்டு சிறிய கோலம் போடுவேன்.

    அது அங்கு இருக்கும் வெளி மாநிலத்தவர்கள் பார்த்து டெய்லி சூப்பராக கோலம் போடுவதாக கூறுவார்கள்.நல்ல வேலை அங்கு தமிழர்கள் யாரும் இல்லை.பிழைத்தேன் இல்லாவிடில் காரி துப்பி இருப்பார்கள்.அந்த அழகில் இருக்கும் நான் போடும் கோலம்.

    ஊருக்கு வரும்போது நம்ம ஊர் பக்கம் காலை ,மாலை இரு வேலை கோலம் போட வேண்டும் .அதை என் மாமியார் தான் செய்வார்கள்.அவர்கள் செய்தாலும் நம்ம மக்கள் சும்மா இருபர்களா “என்ன மருமகள் வந்து இருக்கு போல ? என்று ஒரு ? போட்டு விட்டு போய் விடுவார்கள்(அவ வந்து இருக்கும்போது நீ ஏன் கோலம் போடுற என்று குட்டையை குழப்பி விடுவார்கள்).

    நான் ஏன் இந்த தொந்தரவு என்று காலை 6 மணிக்கும் மாலை 5 மணிக்கும் அடித்து பிடித்து வந்து வாசல் கூட்டி கோலம் போடுவேன்.ஆரம்பத்தில் எனக்கு சரியாக கூட்ட தெரியவில்லை.விதியில் போகும் ஆட்கள் எல்லாம்
    ஏம்மா சந்திரமதி போல் நிமிர்த்த வாக்கில் கூட்டுகிறாய் குனிந்து துடைப்பத்தை விரித்து வைத்து கூட்டு என்று அறிவுரை வேறு.

    எனக்கு ஐயோ என்று இருக்கும்(இப்போது யாரும் கூட்டும் போது ஒன்றும் கூறுவதில்லை.பாஸ் ஆகி விட்டேனோ or இதுக்கு சொல்லி ஒரு புரோஜனம் இல்லை என்று அவர்கள் விட்டு விட்டார்களா என்று எனக்கு தெரிய வில்லை)

    ஒரு வழியாக வீட்டு கூட்டி வாசல் தெளித்து கோலம் போட்டால் தெருவில் சொல்வவர்கள் என்ன உங்கள் மருமகள் வந்து இருக்கா ?என்று கேட்பார்கள்.
    அந்த அளவிற்கு என் கோலம் காட்டி விடும் எங்கள் வருகையை.எங்கள் தெருவிற்கே என் கோலம் திருஷ்டி பரிகாரம் போல் இருக்கும்.மற்றவர்கள் எல்லோரும் சுப்பர் ஆக போடுவார்கள் எங்க ஆரம்பித்தார்கள் எங்கு முடித்தார்கள் என்று தெரியாது அசில் வார்த்தது போல் இருக்கும்.

    இரு வருடங்களுக்கு முன் நானும் ரோசப்பட்டு நாமலும் நன்றாக கோடு இழுக்க வேண்டும் என்று எங்கள் பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் என் வயதை ஒத்தவர்கள் இடம் எப்படி அழகாக கோடு இழுப்பது என்று பயிற்சி எடுத்து பார்த்தேன்.அப்போதும் சிம்பு சிம்பாக தான் கோடு வருகிறது.நான் என்ன செய்வது..எங்கள் பக்கத்துக்கு வீட்டு பொடிசுகள் எல்லாம் வந்து அத்தை இப்படிகோடு போடுங்கள் என்று எனக்கு பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

    நான் எங்கள் பக்கத்துக்கு வீட்டுகார்கள் இடம் நோட்டு குடுத்து நீங்கள் நல்லா கோலம் போடுகிர்கள் எனக்கு நோட்டில் போட்டு தாருங்கள் என்று தந்தேன் .அவர்கள் மாதகணக்கில் வைத்திருந்து ஒரு இரு கோலங்கள் தான் போட்டு தந்தார்கள்.இவர்கள் இடம் கெஞ்சுவதற்கு பதில் கோலப்புத்தகம் வாங்கி விடலாம் என்று 2 வருடங்களுக்கு முன் ஆகஸ்ட் மாதம் ஊருக்கு வந்த போது தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைப்பெற்றது.அதில் நிறைய கோலப்புத்தகம் வாங்கினேன்.என்ன வாங்கி என்ன புண்ணியம் ஒழுங்காக கோடு வராமல் நமக்கு சதி செய்கிறதே.

    நான் போட்ட கோலம் பம்பாயில் எல்லோருக்கும் சூப்பராக தெரிந்தது.என் கணவர் ஊரில் எல்லோர் கண்களுக்கு சுமாராக கூட தெரியாதது பெரிய கொடுமை தான்.

    என் வாழ்நாள் லட்சியத்தில் ஒன்று நான் போடும் கோலத்தை பார்த்து சூப்பராக இருக்கு என்று கூட சொல்ல வேண்டாம் .என் கோலத்தை பார்த்து மருமக வந்து இருக்கு? என்று யாரும் கண்டுபிடிக்காமல் இருந்தால் சரி.

    இப்போது சொல் கார்த்தி கோலம் போடுவதற்கு என்னை நீங்கள் tag செய்ததை என் சொந்தங்கள் பார்த்தால் சிரிப்பார்களா ?மாட்டார்களா?
    லக்ஷ்மி @chan


    உங்கள் விரிவான கோல புராணம் படித்து வாய் விட்டு சிரித்தேன். நீங்கள் கார்த்தியிடம் கேட்டுட்டீங்க, நான் மனசுக்குள் நினைத்தேன் அவ்ளோதான் வித்யாசம். எப்படி tag பண்ண ஆளை செலக்ட் பண்றாங்கன்னு கார்த்தி வந்து விளக்கம் சொல்லுவாங்க.

    உங்க கோலத்தை ஒரு போட்டோ எடுத்துப் போடுங்க... நாங்க சொல்றோம், சூப்பரா இல்லை என்ன மருமக வந்திருக்காப்லையான்னு....

    எனக்கும் கோலம் என்றால் சின்ன வயசுலேர்ந்து ரொம்ப பிடிக்கும். அம்மா ஒரு கோலப் பைத்தியம். தினம் வாசலை அடைச்சு பெரிய கோலம் போடுவாங்க. அதைப் பார்த்து நானும் அடம் பிடிச்சு ஒரு இடம் வாங்கி திருஷ்டி கோலம் போடுவேன். ஒரு முறை அம்மாக்கு உடம்பு முடியாதப்போ, தினம் கோலம் போடுவேன்னு அடம் பிடிப்பையே இப்போ போடு பார்க்கலாம்னு கொண்டு வாசலில் விட்டாங்க. நானும் தூக்கக் கலக்கத்தில் ஆசையா எனக்குத் தெரிஞ்ச ஐஞ்சு புள்ளி மூணு வரிசை கோலத்தை கோணலாக புள்ளி வைத்து ஆரம்பித்தேன். எதிர் வீட்டு நாய்க்கு அந்தக் கோலம் பிடிக்காதோ என்னமோ, பாய்ஞ்சு வந்து ஒரே பிடுங்கு பிடிங்கிடுச்சு, நல்ல வேளை என் பாவாடையை தான் கடிச்சது, ஆனா பயத்தில் உயிர் போய் திரும்பி வந்துவிட்டது. அது முதல் கோலம் போட போவதானா, கூட எஸ்கார்ட் இல்லாம போகவேமாட்டேன்.

    ஆனா கோல ஆசை மட்டும் நோட்டில் வரைவதோட நிறுத்திக்கிட்டேன். கல்யாணம் ஆனதும் சென்னையில் மாமியார் வீட்டில் பெரிய platform உண்டு, வாசலில். சரி, நமக்கு கேட் உள்ளே ங்கரதால் safety உண்டுன்னு பெரிசா கோலம் போட்டுப் பார்ப்பேன். அப்புறம் எங்கேயும் இப்படி சான்ஸ் அமையல. இப்போ அங்கேயும் வாசல் சின்னதாய் போச்சு. கோலப் போட்டியில் கலந்து மொட்டைமாடியை கோலமா போட்டுத்தள்ளின அனுபவமும் இருக்கு.

    எப்படி இருந்தாலும் கோலம் போட்டுப் பார்த்தா நல்ல mind relaxation கிடைக்கும்ன்னு என் அனுபவம்.

    - Chitra

  10. #10
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: How to Make Maa Kolam?!

    Quote Originally Posted by chan View Post
    கோலம் போடுவதற்கு என்னை tag செய்ததை ,எனக்கு தெரிந்தவர்கள் அறிந்தால் சிரிப்பாய் சிரிப்பார்கள்.அந்த அளவுக்கு எனக்கும் கோலத்திற்கும் தூரம்.நான் என் பிறந்த வீட்டில் இருந்த வரை எங்கள் அப்பா எங்களை வீட்டு வாசலில் நிற்பதற்கு கூட அனுமதித்தது இல்லை.எந்த வேலையும் செய்ய விட்டதில்லை.நம்ம வீட்டில் இருக்கும் வரை வீட்டில் சொகுசாக பிள்ளைகள் இருக்க வேண்டும்.கல்யாணத்திற்கு பின் காலம் முழுவதும் வேலை செய்து தானே ஆக வேண்டும்.பிறந்த வீட்டிலே அதிக வேலை வாங்கி சக்கையாக பிழிந்து அனுப்பக்கூடாது என்பது எங்கள் வீட்டு கொள்கை.

    என் கணவர் வீட்டு ஊர் பக்கம் பெண் குழந்தைகள் திருமணதிற்கு முன் நன்றாக வேலை செய்ய பழக்கி .நல்ல விபரமாக அனுப்புவார்கள்.
    அவர்கள் நன்றாக விபரமாக இருப்பார்கள்.

    நாங்கள் இன்னும் எங்கள் பெற்றோர்கள் இடம் சண்டை போடுகிறோம் .நீங்கள் எங்களுக்கு உலகம் தெரியாமல் வளர்த்து இருக்கிர்கள் என்று.

    திருமணத்திற்கு பின் தான் நான் வீட்டு வேலை செய்ய ஆரம்பித்தது.திருமணம் முடித்த உடன் நான் பாம்பே சென்று விட்டேன்.நாங்கள் அப்போது அபார்ட்மெண்ட்டில் இருந்தோம்.என் மாமியார் டெய்லி வாசலில் சிறிய கோலம் போட வேண்டும் என்றதால் நான் தட்டு தடுமாறி கோடு இழுக்க கற்று கொண்டு சிறிய கோலம் போடுவேன்.

    அது அங்கு இருக்கும் வெளி மாநிலத்தவர்கள் பார்த்து டெய்லி சூப்பராக கோலம் போடுவதாக கூறுவார்கள்.நல்ல வேலை அங்கு தமிழர்கள் யாரும் இல்லை.பிழைத்தேன் இல்லாவிடில் காரி துப்பி இருப்பார்கள்.அந்த அழகில் இருக்கும் நான் போடும் கோலம்.

    ஊருக்கு வரும்போது நம்ம ஊர் பக்கம் காலை ,மாலை இரு வேலை கோலம் போட வேண்டும் .அதை என் மாமியார் தான் செய்வார்கள்.அவர்கள் செய்தாலும் நம்ம மக்கள் சும்மா இருபர்களா “என்ன மருமகள் வந்து இருக்கு போல ? என்று ஒரு ? போட்டு விட்டு போய் விடுவார்கள்(அவ வந்து இருக்கும்போது நீ ஏன் கோலம் போடுற என்று குட்டையை குழப்பி விடுவார்கள்).

    நான் ஏன் இந்த தொந்தரவு என்று காலை 6 மணிக்கும் மாலை 5 மணிக்கும் அடித்து பிடித்து வந்து வாசல் கூட்டி கோலம் போடுவேன்.ஆரம்பத்தில் எனக்கு சரியாக கூட்ட தெரியவில்லை.விதியில் போகும் ஆட்கள் எல்லாம்
    ஏம்மா சந்திரமதி போல் நிமிர்த்த வாக்கில் கூட்டுகிறாய் குனிந்து துடைப்பத்தை விரித்து வைத்து கூட்டு என்று அறிவுரை வேறு.

    எனக்கு ஐயோ என்று இருக்கும்(இப்போது யாரும் கூட்டும் போது ஒன்றும் கூறுவதில்லை.பாஸ் ஆகி விட்டேனோ or இதுக்கு சொல்லி ஒரு புரோஜனம் இல்லை என்று அவர்கள் விட்டு விட்டார்களா என்று எனக்கு தெரிய வில்லை)

    ஒரு வழியாக வீட்டு கூட்டி வாசல் தெளித்து கோலம் போட்டால் தெருவில் சொல்வவர்கள் என்ன உங்கள் மருமகள் வந்து இருக்கா ?என்று கேட்பார்கள்.
    அந்த அளவிற்கு என் கோலம் காட்டி விடும் எங்கள் வருகையை.எங்கள் தெருவிற்கே என் கோலம் திருஷ்டி பரிகாரம் போல் இருக்கும்.மற்றவர்கள் எல்லோரும் சுப்பர் ஆக போடுவார்கள் எங்க ஆரம்பித்தார்கள் எங்கு முடித்தார்கள் என்று தெரியாது அசில் வார்த்தது போல் இருக்கும்.

    இரு வருடங்களுக்கு முன் நானும் ரோசப்பட்டு நாமலும் நன்றாக கோடு இழுக்க வேண்டும் என்று எங்கள் பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் என் வயதை ஒத்தவர்கள் இடம் எப்படி அழகாக கோடு இழுப்பது என்று பயிற்சி எடுத்து பார்த்தேன்.அப்போதும் சிம்பு சிம்பாக தான் கோடு வருகிறது.நான் என்ன செய்வது..எங்கள் பக்கத்துக்கு வீட்டு பொடிசுகள் எல்லாம் வந்து அத்தை இப்படிகோடு போடுங்கள் என்று எனக்கு பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

    நான் எங்கள் பக்கத்துக்கு வீட்டுகார்கள் இடம் நோட்டு குடுத்து நீங்கள் நல்லா கோலம் போடுகிர்கள் எனக்கு நோட்டில் போட்டு தாருங்கள் என்று தந்தேன் .அவர்கள் மாதகணக்கில் வைத்திருந்து ஒரு இரு கோலங்கள் தான் போட்டு தந்தார்கள்.இவர்கள் இடம் கெஞ்சுவதற்கு பதில் கோலப்புத்தகம் வாங்கி விடலாம் என்று 2 வருடங்களுக்கு முன் ஆகஸ்ட் மாதம் ஊருக்கு வந்த போது தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைப்பெற்றது.அதில் நிறைய கோலப்புத்தகம் வாங்கினேன்.என்ன வாங்கி என்ன புண்ணியம் ஒழுங்காக கோடு வராமல் நமக்கு சதி செய்கிறதே.

    நான் போட்ட கோலம் பம்பாயில் எல்லோருக்கும் சூப்பராக தெரிந்தது.என் கணவர் ஊரில் எல்லோர் கண்களுக்கு சுமாராக கூட தெரியாதது பெரிய கொடுமை தான்.

    என் வாழ்நாள் லட்சியத்தில் ஒன்று நான் போடும் கோலத்தை பார்த்து சூப்பராக இருக்கு என்று கூட சொல்ல வேண்டாம் .என் கோலத்தை பார்த்து மருமக வந்து இருக்கு? என்று யாரும் கண்டுபிடிக்காமல் இருந்தால் சரி.

    இப்போது சொல் கார்த்தி கோலம் போடுவதற்கு என்னை நீங்கள் tag செய்ததை என் சொந்தங்கள் பார்த்தால் சிரிப்பார்களா ?மாட்டார்களா?
    லக்ஷ்மி நீங்க சொன்னது கேட்க ரொம்ப சுவாரசியமா இருந்தது. என்னோடதும் அப்படியே உங்க கதை தான். நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவள் கோலம் எல்லாம் பண்டிகைக்கு மட்டுமே போட்டு பழக்கம். அதுவும் என் தங்கை போடுவா... நான் கலர் கொடுப்பேன்.

    திருமணம் ஆனதும் என் கணவர் ஊருக்கு சென்ற போது... உங்க அனுபவமே எனக்கும். ஆனா மாமியார் வீட்டில் எல்லோரும் பாசக்கார பயபுள்ளைங்க... நான் எப்படி போட்டாலும் நல்லா இருக்குன்னு தான் சொல்வாங்க.

    என் மாமியார் மத்தவங்க பார்க்கும் முன்னாடி கோலம் போட்டுட்டு போய்டுவாங்க... நான் பிறகு அதுல கலர் அடிப்பேன். அதுக்கே எனக்கு நிறைய பாராட்டு.

    என் வீட்டிலேயே ரொம்ப சுமாரா கோலம் போடுவது நான் தான். ஆனா எனக்கு கோலம் போட ரொம்ப பிடிக்கும்.... இப்ப பெண்மையில போடனும்ன்னே தினமும் கோலம் போடுவேன். ஆனா அதுக்குள்ள நான் படுறபாடு....

    என் கணவர் சொல்வார்.... ரப்பர் இல்லாம உனக்கு கோலம் போட வராதான்னு... அத்தனை தடவை அழிச்சு போடுவேன்.

    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

loading...
Like It?
Share It!







Follow Penmai on Twitter