Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine May! | All Issues

User Tag List

Like Tree149Likes

பொங்கல் திருநாள் - Pongal festival


Discussions on "பொங்கல் திருநாள் - Pongal festival" in "Festivals & Traditions" forum.


  1. #1
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,177
    Blog Entries
    19

    பொங்கல் திருநாள் - Pongal festival

    @girija chandru @smahi @dhivyasathi @Deepika mahesh @RathideviDeva @durgasakthi @Eswarisiva @malbha @Vaisri02 @spv @sarayu_frnds @kurinji @ramyaraj @selvipandiyan @Subhasreemurali @Sriramajayam @Penmai @narayani80 @Vaisri02 @premabarani @shrimathivenkat @Chill Queen @M.Muthulakshmi @sriju @malathimari @kanihema @kvsuresh

    பொங்கல் திருநாள்


    பொங்கல் பண்டிகை 2016 தொடங்கி வரும் முதல் பெரிய பண்டிகை, தமிழர்களின் பண்டிகை, இயற்கைக்கு மரியாதை கொடுக்கும் பண்டிகை.

    அறுவடை முடிந்து போகியுடன் பழையன கழித்து புது அரிசி, புதுப் பானை என்று எல்லாம் புதுசாக உபயோகிக்கத் தொடங்கும் பண்டிகை பொங்கல் திருநாள். உழவில் தங்களுக்கு உபகாரம் செய்த சூரியன், காளை, பசு மாடுகளுக்கும் நன்றி நவிலும் பண்டிகை.

    என்னைப் பொறுத்தவரை தொடர்ந்து மூன்று நாட்கள் விதவிதமாக சமைக்க வேண்டிய பண்டிகை. அடுத்த தலைமுறையினர் விரும்புகிறார்களோ இல்லையோ இந்த நாளில் இந்த உணவுகளை வருடாவருடம் செய்கிறோம். கொஞ்ச கொஞ்சமாக இதுவும் வழக்கொழிந்து விடுமோ என்னமோ, எதற்கும் ஒரு பாரம்பரிய உணவுப் பட்டியலுடன் ஒரு திரியை போடுவோம் என்று தோன்றியதால் இந்தத் திரி.

    இங்கே தந்துள்ளது எங்கள் வீட்டு வழக்கம் மட்டுமே. வீட்டுக்கு வீடு செய்யும் முறைகள் மாறுமோ என்னவோ, ஆனால் இதே உணவுகள்தான் பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் சமைக்கப்படும் என்று நினைக்கிறேன். அவரவர் வீட்டில் வேறு என்ன செய்வீர்களோ, அதையும் கொடுக்கலாம்.

    முதலில் போகிப்பண்டிகை.

    மார்கழி மாதம் என்றாலே தினமும் பொங்கல்தான். அதிகாலை எழுந்து குளித்து திருப்பாவை பாசுரம் சொல்லி வாசலில் பெரிய கோலமிட்டு நடுவில் பசுஞ்சாணத்தில் பூசணிப் பூவை வைத்து அலங்கரித்து ரெண்டு விளக்கையும் ஏற்றி வைத்து கோவிலுக்குப் போய் மார்கழித்திங்கள் மடி நிறைய பொங்கல் என்று பொங்கலும் சாப்பிட்டு வந்தது இன்றோடு முடியும்.

    ஊரில் இருந்தால் பழைய முறம், கூடை போன்றவைகளை எரித்து புதியவைகளை உபயோகிப்போம். வீட்டுக்கு வெள்ளை அடிப்பது எல்லாம் இன்றுதான். (எங்கள் ஊரில் இருந்தால் காப்புக் கட்டு என்று வாசலில் ஒரு Traditional Bouquet ஐ செருகி வைப்போம். சென்னையில் இது யாரும் செய்வதாகத் தெரியவில்லை). மாவிலைத் தோரணத்துடன் நிறுத்தி விடுவோம். தெலங்கானாவில் கூட பதுகம்மா என்று பூக்களால் கோலம் போட்டு கொண்டாடுவார்கள்.

    போகியன்று சுமங்கலிகள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்போம். பிறகு பெண்டு நிமிரும் வரை ஓயாத வேலைகள் இருக்கும். போகியன்று செய்யப்படும் உணவுகள்....

    மோர்குழம்பு, இலைக்கு பருப்பு, பூசணிக்காய் புளிப்புக் கூட்டு, வெண் பொங்கல், பாயசம், வெல்ல போளி, உளுத்தம்பருப்பு மெது வடை, தயிர் வடை, அப்பளம் மற்றும் எண்ணெய் வாழைக்காய். இதுவும் தவிர வீட்டில் சாப்பிட ஆள் இருந்தால் ரசமும் உண்டு. இதில் வேடிக்கை என்னவென்றால் காலை அவசரத்தில் இத்தனையும் செய்து முடிக்க வேண்டும். இனி ஒவ்வொரு பதார்த்தமாக செய்முறை சுருக்கமாக பார்க்கலாம்.

    மோர்குழம்பு, இலைப் பருப்பு, பொங்கல், பாயசம் (இது வெல்லம் போட்டு அரிசியில் செய்யப்படும் பாயசம்), எல்லாம் எல்லாருக்கும் தெரிந்தவைகளே.

    போளி (இதற்க்கு தனி த்ரெட் ஏற்கனவே கொடுத்துவிட்டேன்), வடை எல்லோரும் செய்வதுதான், அப்பளம் எல்லாம் ஜுஜுபி, இங்கே நான் சொல்லப்போவது பூசணிக்காய் புளிப்புக் கூட்டு மற்றும் எண்ணெய் வாழைக்காய் மட்டுமே.

    பூசணிக்காய் புளிப்புக் கூட்டு:

    வெள்ளை பூசணியை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொண்டு துவரம்பருப்பு மற்றும் கடலைப் பருப்புடன் குக்கரில் வேக வைக்கவும். கூடவே கொஞ்சம் மஞ்சள் தூள் போட்டு வைக்கலாம். வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, அரை ஸ்பூன் உளுத்தம்பருப்பு, காரத்துக்கு வேண்டிய வர மிளகாய் பெருங்காயம் வறுத்து தேங்காயுடன் சட்னி போல் அரைக்கவும்.

    ஒரு உருண்டைப் புளியைக்கரைத்து அதில் வெந்த பூசணி+ பருப்புக் கலவையை போட்டு வாசனை போக கொதிக்க விடவும். உப்பும் போடவும். நன்றாக கொதிக்கும்போது அரைத்த விழுதை சேர்த்து இறக்கி நல்லெண்ணெயில் கடுகு, மிளகாய் கறிவேப்பிலை தாளிக்கவும். மேலே ஒரு பிடி வேர்க்கடலை, ஒரு ஸ்பூன் முந்திரி துண்டுகள், பூசணிக்காய் வற்றல் இருந்தால் அது நாலைந்து வறுத்துப் போடலாம். இது கூட்டு போல் கெட்டியாகவும் இல்லாமல் குழம்பு போல் நீர்க்கவும் இல்லாமல் ரெண்டுங்கெட்டான் consistancyல் இருக்கும். முதலில் இந்த கூட்டை சாப்பிட்டுவிட்டால் வயிறு நிறைந்துபோகும். தொட்டுக்க அப்பளம், வடை.

    எண்ணெய் வாழைக்காய்:

    பேரைப் பார்த்து எண்ணையில் செய்யும் காய் என்று நினைக்கவேண்டாம். பெரிய வில்லைகளாக நறுக்கின வாழைக்காயை புளி நீரில் சிட்டிகை உப்பும் மஞ்சள் தூளும் போட்டு வேக விடவும். சீக்கிரம் வெந்து குழையும். கையில் நசுங்கும் பதம் வந்ததும் வடிகட்டி வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, மிளகாய், உளுத்தம்பருப்பு தாளித்து வடிகட்டின காயை போட்டு வதக்கி மேலும் கொஞ்சம் உப்பு போட்டு இறக்கவும். தேங்காய் சேர்ப்பது அவரவர் விருப்பம்.


    அடுத்தநாள் பொங்கல்.

    இன்று மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறக்கும் நேரம் பொங்கல் பானையை அடுப்பில் ஏற்றுவோம். பித்ருக்களை (இறந்தவர்களை) வழிபடும் தினம் என்பதால் வெறும் தலைகுளிதான் இன்று. வெங்காயம், மற்றும் இங்க்லீஷ் காய்கறிகள் இன்றி நாட்டுக் காய்கறிகளை மட்டுமே இன்று உபோயோகிப்பது வழக்கம். அதிலும் கத்தரிக்காய் இன்று கிடையாது. சிலர் வீட்டில் ஐந்து காய்கள், சிலர் வீட்டில் ஏழு என்று வழக்கம் உண்டு. அந்த காய்களையும் கதம்பக் கூட்டுபோலவோ தனித்தனியேயோ சமைக்கவேண்டும். எங்கள் வீட்டில் ஐந்து காய்கள் தனியாகத்தான் என்பதால் அதையே இங்கும் சொல்கிறேன்.

    ஐந்து வகை காய்கறிகளை தவிர வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், ரசம் மற்றும் மொச்சைகொட்டை குழம்புதான் இன்றைய மெனு. நல்ல வேளை இன்று அம்மி ஆடக்கூடாது என்று சாஸ்திரமாம். அதனால் வடை பிழைத்தது இன்று. குழம்பும் கூட பொடி போட்டுதான் செய்யவேண்டும். (மிக்சிக்கு இன்னிக்கு லீவு...yay...)

    மண் பானைகளை எங்கள் வீடுகளில் உபயோகிப்பதில்லை. மாறாக வெண்கலப் பானையை வருடத்தில் ஒரு நாள் புளி போட்டு கை வலிக்கத்ட் தேய்த்து polish பண்ணி அதற்கு ஒரு நூலில் வாழைபழம் மற்றும் கரும்புத் துண்டு கொண்டு ஒரு மாலை கட்டுவோம். அதுவும் தவிர மஞ்சள் கொத்து இளம் மஞ்சள் கிழங்குடன் சேர்த்து வெண்கலப்பானையின் கழுத்தில் கட்டுவோம். நாம் நெற்றிக்கு இடுவது போலவே இதற்கும் மேக் அப் உண்டு.

    எல்லாம் செய்து பானையை அடுப்பில் ஏற்றி பாலும் தண்ணீருமாக வைத்து அரிசி பாசிப்பருப்பை கழுவிக் களைந்து வைத்து மாதம் பிறக்கும் நேரம் அடுப்பில் ஏற்றி காத்திருப்போம். பால் பொங்கி வரும் நேரம் அதில் ஒருவர் அரிசியை போட, இன்னொருவர் கற்பூரம் காட்ட, குழந்தைகள் உடுக்கை அடித்து (இன்று உடுக்கைக்கு பதில் தட்டில் கரண்டியை வைத்து தட்டுகிறோம்) “பொங்கலோ பொங்கல்” என்று கூவிவிட்டு பானையை குக்கருக்குள் இறக்கி விடுவோம். அப்புறம் வெளியில் எடுத்து பொங்கல், சர்க்கரைப் பொங்கல் ரெண்டும் செய்வது வழக்கம்.

    வாழைக்காய் fry, சேப்பங்கிழங்கு புளிஉடன் மசியல், பரங்கிக்காய் (மஞ்சள் பூசணி) தேங்காய் வெல்லம் போட்ட காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு வெல்லம் அல்லது சர்க்கரை போட்டு காய் வதக்கல், பிடிகரணைகிழங்கும் மொச்சையும் போட்ட பொரிச்ச குழம்பு. இவைதான் இன்றைய மெனு. எல்லாரும் செய்யும் method தான் என்பதால் குழம்பு மட்டும் எப்படி செய்வோம் என்று சொல்கிறேன்.

    பிடிகரணைக்கிழங்கு பொரித்த குழம்பு:


    கிழங்கை குக்கரில் வேக விட்டுத் தோல் உரித்து மசித்து வைக்கவும்.

    புளியைக் கரைத்து அதில் வெந்த கிழங்கு, பச்சை மொச்சை, குழம்பு பொடி, பச்சை பெருங்காயம், உப்பு எல்லாம் சேர்த்து கொதிக்கவிட்டு மாவு கரைத்துக்கொட்டி இறக்கவும். மேலே எண்ணையில் தாளித்த கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாயை கொட்டி வைக்கவும். சாப்பிட்டு உருளவேண்டியதுதான்....

    சர்க்கரைப் பொங்கல் செய்த பானையைக் கூட கழுவக் கூடாது. நாள் கிழமை பார்த்துதான் அதுவும் செய்யவேண்டும்.

    மூன்றாம் நாள் கணுப்பண்டிகை அல்லது மாட்டுப் பொங்கல். பொங்கலன்று செய்த சாதமும் சர்க்கரைப் பொங்கலும் ஒரு பிடி எடுத்து வைக்கவேண்டும். வெறும் சாதத்தை மூன்று பங்காக்கி ஒன்று அப்படியே, மற்றொன்றில் கொஞ்சம் மஞ்சள் பொடி கலந்து, மூன்றாவதில் மஞ்சள் தூளுடன் துளி சுண்ணாம்பும் கலந்து வைக்கவும். பொங்கல் பானையின் கழுத்தில் உள்ள மஞ்சள் கொத்தில் உள்ள மஞ்சளை வெற்றிலையுடன் வைத்து கரும்புத்துண்டும் வைத்து வெற்றிலை பாக்குடன் இஞ்சிக்கொத்து, மஞ்சள் கொத்தில் உள்ள இலைகளை பக்கம் பக்கமாக மொட்டை மாடியில் பரத்தி முதல் நாள் எடுத்த பொங்கல், கலர் கலர் சாதத்தை “காக்கா பிடி வைச்சேன், கணுப்பிடி வைச்சேன், காக்காகும் குருவிக்கும் கல்யாணம்” என்று பாடிக்கொண்டே மூன்று முறை கிள்ளி வைத்துவிட்டு கற்பூரம் காட்டி வந்துவிடவேண்டும்.

    இது நம் உடன்பிறந்தோரின் நலனுக்காக செய்வது. நம் வீட்டில் செய்தாலும் பக்கத்தில் பிறந்த வீடு இருக்குமேயானால் அங்கும் போய் செய்யவேண்டும். புதுத் துணி உடுத்திக்கொண்டு சாப்பிடலாம். சகோதரர்கள் சகோதரிகளுக்கு கனுச்சீர் வழங்குவது இன்றுதான். (நம் ஊரு ராக்கி/ரக்ஷாபந்தன் இதுதான்)

    இன்றைய மெனுவை சொல்ல மறந்துவிட்டேனே... எல்லாம் கலந்த சாத வகைகள்தான்....
    புளியோதரை அல்லது லெமன் ரைஸ், தேங்காய் சாதம், அப்பளம் அல்லது வடாம் அல்லது சிப்ஸ், தயிர் சாதம், பாயசம் அல்லது தேங்காய் வெல்ல சாதம், அவியல் அல்லது எல்லாக் காயும் போட்ட கதம்பக்குழம்புதான் இன்றைய மெனு.

    வீட்டில் கூழ் வடாம் போட்டிருப்பது எல்லாம் இன்று காலி செய்துவிட்டு அடுத்து புதுசாக வடாம் போட ஏற்பாடு இனிதான் சூடு பிடிக்கும் என்பதோடு பண்டிகை சீசன் முடிந்துவிடும்.

    ஆடி அழைத்து வரும், தை கொண்டு போகும் என்று சொல்வது போல் ஆடி மாதத்தில் தொடங்கும் பண்டிகைகள் இன்றோடு ரெஸ்ட் வாங்கும். நாமும் மூன்று நாளும் மூக்குப் பிடிக்க சாப்பிட்டுவிட்டு இனி ஆடிமாதம் வரை ஆசுவாசமாக இளைப்பாறலாம்.

    எங்கள் வீட்டில் பொங்கல் பண்டிகை செய்யும் முறையை சொல்லிவிட்டேன், தோழிகளே! இனி உங்கள் டர்ன்.... யார் யார் எப்படி செய்வீர்கள் என்று வந்து கொட்டுங்கள் பார்க்கலாம்.

    Happy Pongal to all Penmaites!

    Similar Threads:

    Sponsored Links
    - Chitra

  2. #2
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,177
    Blog Entries
    19

    re: பொங்கல் திருநாள் - Pongal festival

    @jv_66 @sumathisrini @gkarti @Angu Aparna @repplyuma @Uma manoj @thenuraj @gloria @PriyagauthamH @stulip0110 @saveetha1982 @kkmathy @chan @ponschellam

    சாரி friends, உங்கள் பேர் எல்லாம் இந்த த்ரெடில் tag பண்ணியிருந்தேன். எப்படியோ காபி பண்ணும் பொது மிஸ் ஆகியிருக்கு.... உடனே வந்து attendance போடும் கார்த்தியைக் காணோமேன்னு பார்த்ததில்தான் தெரிஞ்சுது. சாரி, once again

    - Chitra

  3. #3
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    47,051

    Re: பொங்கல் திருநாள் - Pongal festival

    பெண்மைல பொங்கல் களைகட்டிடுச்சு டோய்.. சூப்பர் சூப்பர் ஜி கிட்டத்தட்ட எங்க வீட்லயும் இப்படித்தான். எங்க தாத்தா இருந்த வரை எங்களுக்கு மாட்டுப்பொங்கல் செம Special.. தோட்டத்துக்குப் போய் அங்க பொங்கல் வைப்போம் அப்போலாம் ஒரே ஆட்டம் தான்.. பெரியவங்க பொங்கல் வைக்கறதுல busyன்னா, நாங்க மாடுகளுக்கு Make Up போட நீ நான் ன்னு அடிச்சுப்போம். நாங்க கேட்கற கேள்விக்கு தோட்டத்துல வேலை செய்யறவங்க நொந்துடுவங்க.. Hmm அதெல்லாம் ஒரு காலம்..

    இப்போ வீட்டோட முடிச்சாச்சு..


  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,846

    Re: பொங்கல் திருநாள் - Pongal festival

    Quote Originally Posted by kasri66 View Post
    @jv_66 @sumathisrini @gkarti @Angu Aparna @repplyuma @Uma manoj @thenuraj @gloria @PriyagauthamH @stulip0110 @saveetha1982 @kkmathy @chan @ponschellam

    சாரி friends, உங்கள் பேர் எல்லாம் இந்த த்ரெடில் tag பண்ணியிருந்தேன். எப்படியோ காபி பண்ணும் பொது மிஸ் ஆகியிருக்கு.... உடனே வந்து attendance போடும் கார்த்தியைக் காணோமேன்னு பார்த்ததில்தான் தெரிஞ்சுது. சாரி, once again

    அந்த மென்ஷன்ஸ் எல்லாம் வேற எங்கயாவது அதே பேர்களை மென்ஷன் பண்ணிட்டு அதையே இங்கே copy - paste செய்ததா சித்ரா @kasri66 ?

    அப்படி copy செய்தா, அந்த நபர்களுக்கு அது சரியா மென்ஷன் ஆக மாட்டேங்குது .

    ஒண்ணு, திரும்ப எல்லார் பேரையும் மென்ஷன் பண்ணனும் , இல்லைனா , அந்த பேர்களை வேற போச்ட்லேர்ந்து copy செய்து ஒரு notepad (computer la ulladhu) ல பேஸ்ட் செய்துட்டு அதுலேர்ந்து திரும்ப copy செய்து , இங்கே பேஸ்ட் செய்தா அப்போ சரியா வருது .




    Jayanthy





  5. #5
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,846

    Re: பொங்கல் திருநாள் - Pongal festival

    Nice thread Chitra. Nice to know about your way of celebrating the Pongal festival.

    இப்போது , எங்கள் வீடுகளில் கொண்டாடப் படும் முறைகளை , நான் சொல்கிறேன் .......

    நாங்கள்
    போகி, பொங்கல் , மற்றும் மறுநாள் ,இந்த நாட்களைத்தான் கொண்டாடுவோம் ......

    போகி அன்று , தலைக்கு எண்ணை தேய்த்துக் கொண்டு , போளி செய்வோம்

    பொங்கலன்று காலையில் , வாசலில் , பெரிய கோலம் போட்டு , மாவிலைத் தோரணம் கட்டுவோம் .

    புத்தாடை உடுத்திக் கொள்வோம் .

    பொங்கல் அன்று ,சரியாகத் தை மாதம் பிறக்கும் நேரத்தில் தான் பொங்கல் வைப்போம் .....அது எந்த நேரமாக இருந்தாலும் .....

    ஒரு வெண்கலப் பானையை நன்றாகச் சுத்தப் படுத்தி , அதற்கு நான்கு பக்கமும் , நாமம் இட்டு , ஒரு கயிற்றில் , சிறிது இடைவெளி விட்டு ,ஒரு மஞ்சள் கொத்து , ஒரு இஞ்சிக் கொத்து , ஒரு கரும்பு , ஒரு தேங்காய் மூடி , ஒரு வாழைப்பழம் , இவற்றை இறுகக் கட்டிக் கொண்டு , அதை இப்போது , அந்த நாமம் இட்ட வெண்கலப் பானையின் கழுத்தில் சுற்றிக் கட்டி விடுவோம் .

    அதை இப்போது அடுப்பில் வைத்து , ஒரு டம்ப்ளர் அளவு பால் மற்றும் தண்ணீர் விட்டு , அதில் சிறிதளவு பயத்தம் பருப்பைப் போட்டு விடுவோம் ....

    அது இப்போது பொங்கி வரும்போது , வீட்டில் உள்ள அனைவரும் அங்கு கூடி , "பொங்கலோ பொங்கல் " என்று கத்துவோம் .....சிறுவர்கள் இருந்தால் , அவர்கள் , தோலால் செய்யப்பட்ட தப்பட்டையை வைத்துக் கொண்டு அடித்துக் கொண்டே பாடுவார்கள் ....இல்லாவிட்டால் , எதாவது ஒரு தட்டில் , ஒரு குச்சியை வைத்து அடித்துக் கொண்டே பாடுவார்கள் .....

    பால் , வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் பொங்கி வழிந்தால் , நலம் என்றும் , மேற்கு திசை கூட நலமே என்றும் கொள்ளுவோம் .....

    பிறகு , அதில் அரிசியைப் போட்டு , நன்றாக வெந்தவுடன் , வெல்லப்பாகை , தனியாகச் செய்து , அதனுடன் கலந்து , வாசனை பொருட்களையும் சேர்ப்போம் .....

    வெற்றிலைப் பாக்கு , பழம் , இவற்றுடன் , செய்து வைத்த சர்க்கரைப் பொங்கலையும் , கடவுளுக்குப் படைத்து , தெரிந்தவர்களுக்குக் கொடுத்துவிட்டு , உண்போம் ......

    இதில் சிறிதளவு , சர்க்கரைப் பொங்கலை அப்படியே வைத்து விடுவோம் .

    அன்று , தந்தை இல்லாதவர்கள் , முன்னோர்களுக்குத் திதி கொடுக்க வேண்டும் .

    மறுநாள் , கனுப்பண்டிகை என்று கொண்டாடுவோம் ....இது சகோதரர்களின் நலனுக்காக , சகோதரிகள் கொண்டாடும் பண்டிகை .
    காலையில் ,பெண்கள் , அந்த வெண்கலப் பானையில் இருக்கும் , மஞ்சள் கொத்தில் இருந்து ஒரு மஞ்சள் கிழங்கை எடுத்து , பெரியவர்களை விட்டு , நம் நெற்றியில் கீறிக்கொண்டு , பின்னர்தான் குளிப்போம் .

    பிறகு , அந்த , மஞ்சள் கொத்து , இஞ்சிக்கொத்து இலைகளைக் கொண்டு , வீட்டின் பின்புறத்திலோ , அல்லது , மொட்டை மாடியிலோ , பரத்தி வைத்து , அதில் ,
    பல வகை சாதங்களை உருண்டை பிடித்து - வெள்ளை சாதம் , மஞ்சள் சாதம் ,சர்க்கரைப்பொங்கல் , சிவப்பு சாதம்,

    இவற்றை உருண்டை பிடித்து வைத்துக் கொண்டு , வீட்டில் உள்ள பெண்கள் எல்லாரும் , "கன்னுப்பிடி வச்சேன் , காக்காப்பிடி வச்சேன் , காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணம் " என்று ஒவ்வொருவரும் மூன்று உருண்டைகளை வைப்போம் .

    இதில் பெண்கள் , தங்கள் பிறந்த வீடுகளுக்குச் சென்று வைப்பார்கள் , இல்லாவிட்டால் , அன்று பிறந்த வீட்டுக்குச் சென்று ஆசி வாங்குவார்கள் .....

    சகோதரர்கள் , தங்கள் சகோதரிகளுக்கு , அவர்கள் எங்கிருந்தாலும் , பணம் அனுப்புவார்கள் , தங்கள் நன்றிக் கடனாக ......

    இவைதான் , எங்கள் வீடுகளில் பொங்கலின் 3 நாட்களைக் கொண்டாடும் முறை .

    பொதுவாக நாங்கள் புது ஆடைகள் வாங்குவதில்லை . வீட்டில் ஏற்கனவே இருக்கும் புது உடைகளை அணிவதே வழக்கம் .


    Read more: Your Pongal Purchases and Pongal Celebrations


    Jayanthy





  6. #6
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: பொங்கல் திருநாள் - Pongal festival

    ஹாய் சித்ரா,

    அதெப்படி நீங்க என்னை மிஸ் பண்ணலாம்...

    ஆஹா எனக்கு இன்னைக்கே பொங்கல் ஆரம்பிச்சுட்ட மாதிரி இருக்கே... எங்கம்மா வைக்கிற மஞ்ச பூசணி பச்சடியை ஞாபகப்படுத்திட்டீங்க போங்க... எங்க வீட்டில பொங்கல் அன்னைக்கு அவியல், சாம்பார், பூசணிக்காய் பச்சடின்னு களைகட்டும்... மறுநாள் அந்த மீதமிருக்க சாம்பார்ல மீதமிருக்க காய்கறிகள் எல்லாம் சேர்த்து சூடு பண்ணி மறுநாள் காலையில பழைய சாதத்துக்கு சுண்ட வைச்ச அந்த குழம்பை ஊத்தி சாப்பிட்டா தேவாமிர்தம்... இந்த முறை உங்க மெனுவை நான் ட்ரை பண்ணப் போறேன்... வெள்ளை பூசணி கூட்டு... வாழைக்காய் எல்லாம் செய்யறேன்... செய்து பார்த்திட்டு வந்து சொல்றேன்பா...


    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  7. #7
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,269

    Re: பொங்கல் திருநாள் - Pongal festival

    எங்கள் வீடு விவசாய குடும்பத்தை சேர்ந்தது என்பதால் நாங்கள் மாட்டுபொங்கல் தான் சிறப்பாக கொண்டாடுவோம்.

    காலையில் மாட்டுக்கு குளுப்பாட்டி கொம்புக்கு வண்ண பெயிண்ட் அடித்து உடல் முழுதும் கலர் கலராக பொட்டு வைத்து கொம்பை சுற்றி பூ வைத்து ,மாலை போட்டு நன்றாக அலங்காரம் செய்து

    மாட்டின் முன் பொங்கல் வைத்து ,வைத்து முடித்த உடன் மாட்டிற்கு பொங்கல் ,வாழைபழம் ஊட்டி விட்டபின்தான்,நாங்கள் சாப்பிடுவோம்.எங்கள் சொந்தகாரர்கள் அன்னைவர் வீட்டில் மாடுகள் இருந்ததால் யார் வீட்டு மாடுகளுக்கு நன்றாக அலங்காரம்
    செய்து இருக்கிறது என்று போட்டி போட்டு கொண்டு அலங்காரம் செய்வோம்

    என் கணவர் வீட்டு பக்கம் எப்படி கொண்டடுவார்கள் என்று எனக்கு தெரியாது.நான் பொங்கல் சமயத்தில் அங்கு சென்றது இல்லை.


  8. #8
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    31,709

    Re: பொங்கல் திருநாள் - Pongal festival

    ஹாய் சித்ரா,

    நம் பாரம்பரிய வழக்கத்தை பகிர்ந்து கொள்ள ஏதுவான திரி. நன்றி!


    உங்களின் பொங்கல் கொண்டாடும் முறைக்கும், என் வீட்டு முறைக்கும் பெரிய வேறுபாடு ஏதும் இல்லை.

    வழக்கமாக எங்கள் வீட்டில் ஒவ்வொரு பொங்கல் அன்றும் வெண்கலப் பானையை பளிச்சென்று தேய்த்து, அதற்கு ஸ்ரீசூர்ணம், நாமம் இட்டு, மஞ்சள் கொத்து, பூச்சரம், வாழைப் பழம், கரும்பு ஒரு சிறிய துண்டு, தேங்காய் (சிறியது) இவை அனைத்தையும் ஒரு கயிற்றில் கட்டி அதை வெண்கலப் பானையின் கழுத்துப் பகுதியில் கட்டுவோம்.

    பிறகு அந்தப் பானையில் பாலை விட்டு அது பொங்கும்போது ‘பொங்கலோ... பொங்கல்...’ என்று சொல்லி, பிறகு களைந்து வைத்துள்ள பாசிப்பயிருடன் சேர்ந்த அரிசியை பானையில் போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அரிசி வெந்ததும், அதில் ஒரு பாகத்தை தனியாக வெண்பொங்கலுக்கென்று வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து விட்டு, பானையில் இருக்கும் பாகத்துடன் வெல்லத்தைச் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் செய்வோம். பின் வெண்பொங்கலையும், சர்க்கரைப் பொங்கலையும் பஞ்சாமிர்தத்துடன் சுவாமி சந்நிதியில் வைத்து நைவேத்யம் செய்து விட்டு கடவுளை வணங்குவோம்.

    பொங்கல் பானையை காலி செய்யும்போது சுத்தமாக அதில் உள்ளதை எடுக்க மாட்டோம். அதில் ஒரு பெரிய உருண்டை அளவுக்கு வைத்து விடுவோம். இது எதற்கு என்றால், மறுநாள் கணுப்பொங்கலுக்கு. அதாவது பொங்கலுக்கு மறுநாள் காலை நீராடுவதற்கு முன்னதாக பெண்கள் ‘கணுப்பிடி’ வைப்பார்கள். சில குடும்பங்களில் நீராடி விட்டு ‘கணுப்பிடி’ வைக்கும் வழக்கமும் உண்டு (எங்கள் வீட்டில் நீராடி விட்டு வைக்கும் வழக்கம் தான் கடைபிடிக்கப்படுகிறது).

    வீட்டு முற்றத்திலோ, மொட்டை மாடியிலோ மஞ்சள் இலை (மஞ்சள் கொத்துடன் சேர்ந்து இருக்கும் இலை) பரப்பி, அதில் முந்தின நாள் செய்த வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கலுடன், சிவப்பு, மஞ்சள் வண்ணங்களில் சாதம் சிறு சிறு உருண்டைகளாக்கப்பட்டு அவற்றையும் வைப்பார். கரும்புத் துண்டுகள், மஞ்சள் கிழங்கு, வெற்றிலைப் பாக்கு, வாழைப் பழம் போன்றவையும் பரிமாறப்படுகின்றன. அப்படி வைக்கும்போது, ‘காக்காக்கு கண்ணுபிடி வெச்சேன்... காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம்... உட(ன்)ப் பிறந்தான் உறவு கருப்பஞ்சாறு போல இனிக்கனும்’ என்று சொல்லிக் கொண்டே வைப்போம். இந்த சடங்கை பெண்கள் எதற்கு செய்கிறார்கள் என்றால், தங்கள் சகோதர்களும், அவர்கள் குடும்பங்களும் நன்றாக வாழ வேண்டும் என்று வாழ்த்தி வணங்குகிறார்கள். பிறகு மஞ்சள் நீரால் ஆரத்தி எடுப்போம். கிராமங்களில் மக்கள் பலவிதமான உணவுப் பொருட்கள் செய்து எடுத்துக் கொண்டு, ஆற்றங்கரைக்கோ, குளத்தங்கரைக்கோச் சென்று சேர்ந்து உணவு உண்டு மகிழ்வார்கள். நாங்கள் அன்று புளியோதரை (அல்லது எலுமிச்சை சாதம்), சர்க்கரைப் பொங்கல், தேங்காய் சாதம், தயிர்சாதம் செய்து, தொட்டுக் கொள்ள அவியல், வற்றல், அப்பளம் செய்து அதையும் பகவானுக்கு நைவேத்யம் செய்து விட்டு உண்போம்.

    இந்த வகையில் தான் என் வீட்டில் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப் படுகிறது.





    கனுப்பிடி




  9. #9
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    78,325
    Blog Entries
    1731

    Re: பொங்கல் திருநாள் - Pongal festival

    Arumai nanbarey.



    Thx u for tagging.


    Attached Thumbnails Attached Thumbnails பொங்கல் திருநாள் - Pongal festival-101.gif  
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #10
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,177
    Blog Entries
    19

    Re: பொங்கல் திருநாள் - Pongal festival

    Quote Originally Posted by gkarti View Post
    பெண்மைல பொங்கல் களைகட்டிடுச்சு டோய்.. சூப்பர் சூப்பர் ஜி கிட்டத்தட்ட எங்க வீட்லயும் இப்படித்தான். எங்க தாத்தா இருந்த வரை எங்களுக்கு மாட்டுப்பொங்கல் செம Special.. தோட்டத்துக்குப் போய் அங்க பொங்கல் வைப்போம் அப்போலாம் ஒரே ஆட்டம் தான்.. பெரியவங்க பொங்கல் வைக்கறதுல busyன்னா, நாங்க மாடுகளுக்கு Make Up போட நீ நான் ன்னு அடிச்சுப்போம். நாங்க கேட்கற கேள்விக்கு தோட்டத்துல வேலை செய்யறவங்க நொந்துடுவங்க.. Hmm அதெல்லாம் ஒரு காலம்..

    இப்போ வீட்டோட முடிச்சாச்சு..
    ஓ மலரும் நினைவுகளா கார்த்தி? @gkarti

    ஆமாம் பண்டிகைகளை சின்ன வயதில் நாம் பார்த்த பார்வையும் இப்போ பார்க்கும் பார்வையும் மாறு பட்டுதான் இருக்கு. திருமணத்துக்கு முன் என்றால் கோலமும் கரும்பும் ரொம்ப ஆசையா இருந்தது. வீட்டின் பின்புறம் உள்ள தோய்க்கும் கல்லில் கரும்பை ஓங்கித் தட்டி பல்லாலேயே கடிச்சு கரும்பு சாப்பிடுவோம். இதில் யார் அந்த ஒரு துண்டை முதலில் முடிக்கறதுன்னு போட்டி வேற... நான் வேகமா கடிச்சு சரியா சாப்டாம ஏமாத்துவேன்... உடனே வாய் கொப்பளிக்ககூடாது புண் வரும்பாங்க.... கேட்டாத்தானே? வாய் ஓரம் புண் வந்தால் ஸ்பூனில் சாப்பிடலாம்னு வேணும்னே வாய் கொப்பளிக்கறது... இப்போ என் மகள்கள் கரும்பை வாங்கி வந்தா இது காஞ்சு கட்டையான பின்னாடி தூக்கிப் போடறதும் ஒரு சாஸ்திரமான்னு கேக்கும் அளவுக்கு போச்சு....

    - Chitra

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter