Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine September! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 5 Post By sumathisrini
  • 1 Post By jv_66
  • 1 Post By gkarti
  • 1 Post By sumathisrini

பங்குனி உத்திரம் - Panguni Uthiram


Discussions on "பங்குனி உத்திரம் - Panguni Uthiram" in "Festivals & Traditions" forum.


  1. #1
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,078

    பங்குனி உத்திரம் - Panguni Uthiram


    மாதங்களில் கடைசி மாதமாக பங்குனி மாதம் வந்தாலும் அதில் பிறப்பவர்கள் முதலிடத்தை பெற்றவர்களாக விளங்குவர். காரணம் சிவனின் மைந்தனுக்கு தேசமெங்கும் கொண்டாடும் உத்திரப் பெரு விழா நடைபெறும் மாதமாக இம்மாதம் விளங்குகிறது.

    பிறந்தவுடன் குழந்தை பாலுக்காக அழுகிறது. கொஞ்சம் வளர்ந்தவுடன் படிக்கும் நூலுக்காக அழுகிறது. படித்து முடித்துவிட்டால், வேலை வாய்ப்புக்காக ஏங்குகிறது. வேலை வாய்ப்பு கிடைத்தவுடன், நாளும் பொழுதும் கனவுலகில் சஞ்சரித்து, நல்ல வாழ்க்கைத்துணை அமைய கோவில்களை நாடிச் செல்ல வைக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கும், பிரிந்த தம்பதியர் இணையவும், பிரச்சினைக்கு மத்தியில் உழலும் குடும்பத்தில் அமைதி கிடைக்கவும் வழிகாட்டும் நாள் தான் பங்குனி உத்திர திருநாள்.

    பங்குனி மாதத்திற்கு உண்டான தனிச்சிறப்பு நம்மை ஒன்று படவைப்பதாக அமைகின்றது. பங்குனி உத்திரம் பல குடும்பங்களின் குல தெய்வங்களை தேடிச் சென்று வழிபடும் நன்நாளாக அமைகின்றது. பங்குனி உத்திரம் அன்று நாம் நம் குலதெய்வங்களை வழிபட உகந்த நாளாக அமைகின்றது.

    இந்நாளில் நமது குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது நம் குலம் சிறக்க உதவுகின்றது. நாம் நம் குல தெய்வங்களை இந்த நாளில் சென்று வழிபாடு செய்தால் நமது மூதாதையரின் பரிபூரண ஆசிகள் நமக்கு கிடைக்கின்றது. அது மட்டுமா இன்று இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் நாம் யார் எதற்காக பிறந்திருக்கின்றோம் என்றே நமக்கு புரிவதில்லை என புலம்புகின்றோம்.

    நம் குலதெய்வக் கோவிலுக்கு செல்வதன் மூலம் நமது சொந்தங்கள் எத்தனை லட்சம் பேர், அவர்கள் வாழ்ந்து வரும் சூழ்நிலைகள், அவர்கள் செய்து வரும் சமூக, ஆன்மீக பணிகளை தெரிந்து கொள்வதன் மூலம், நமது குல மக்களின் சிறப்புகளையும் சொந்தங்களையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைப்பதால் வேலை வாய்ப்பில் உதவி, திருமண பந்தங்களை விபரங்கள் தெரிந்து நம் சமூகத்துடன் இணைய என குல தெய்வ வழிபாடு நமக்கு நம் குல சிறப்பையும், பெருமையையும் உணர்த்தும் நல்ல நாளாக பங்குனி உத்திரம் அமைகின்றது.

    இந்நாளில்தான் தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள்ளது என்று நமது புராணங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன. எனவேதான் பங்குனி மாதத்தில் நம் குடும்பங்களில் திருமண சடங்குகளை நாம் நடத்துவதில்லை.

    அதாவது பார்வதி - பரமேஸ்வரன், தெய்வயானை - முருகன், ஆண்டாள் - ரங்க மன்னார், மீனாட்சி - சுந்தரேஸ்வரர் என் பல தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் தான் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

    இதைவிடச் சிறப்பான மற்றொரு விஷயம், ராமாயணத்தில் வரும் தசரதச் சக்ரவர்த்தியின் நான்கு புதல்வர்களும் பங்குனி உத்திரத்தில்தான் தங்களது திருமண வாழ்க்கையில் நுழைந்துள்ளனர்.

    தெய்வங்களின் திருமணம் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது.

    வள்ளியின் அவதாரமும், ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும், அர்ஜுனன் தோன்றியதும் இந்த நந்நாளில்தான்.

    தெய்வங்களெல்லாம் தேர்ந்தெடுத்து சிறப்பித்த இந்த பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று விரதம் இருப்பதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் உகந்த நாள் என்று கருதப்படுகிறது.

    இந்த நந்நாளில் பல கோயில்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    பழனியில் காவடி உற்சவம், மயிலாப்பூரில் அறுபத்து மூவர் உற்சவம், சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம், மதுரையில் மீனாட்சி திருமணம் என அன்று பல முக்கியக் கோயில்களிலும் திருவிழாக்கள் களை கட்டும்.

    இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடுவோம். பக்தர்கள், எளியோருக்கு அன்னதானம் செய்து அவர்களது ஆசியைப் பெறுவோம்.

    Moderator's Note:This Article has been published in Penmai eMagazine March 2016. You Can download & Read the magazines HERE.




    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails பங்குனி உத்திரம் - Panguni Uthiram-panguni-utharam.jpg  
    Last edited by sumathisrini; 26th Apr 2016 at 02:10 PM.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,950

    Re: பங்குனி உத்திரம் - Panguni Uthiram

    அனைத்து விவரங்களுக்கும் மிக்க நன்றி சுமதி .

    sumathisrini likes this.
    Jayanthy





  3. #3
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    48,533

    Re: பங்குனி உத்திரம் - Panguni Uthiram

    Akka, Nicely Written! Many Thanks for Sharing Kkow

    sumathisrini likes this.

  4. #4
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,078

    Re: பங்குனி உத்திரம் - Panguni Uthiram

    Thanks & welcome friends .

    gkarti likes this.

  5. #5
    kavidhav's Avatar
    kavidhav is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hong Kong
    Posts
    72

    Re: பங்குனி உத்திரம் - Panguni Uthiram

    Thanks for the god info

    Kavi

  6. #6
    ravimalar3 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2014
    Location
    tuticorin
    Posts
    132

    Re: பங்குனி உத்திரம் - Panguni Uthiram

    tks......................


  7. #7
    SUGAN93's Avatar
    SUGAN93 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2016
    Location
    Virudhunagar
    Posts
    177

    Re: பங்குனி உத்திரம் - Panguni Uthiram

    Thank You Sis.........Very Nice Sharing........


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter