Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine Jan 2018! | All Issues

User Tag List

Like Tree29Likes

பொங்கல் பண்டிகை - Pongal Festival


Discussions on "பொங்கல் பண்டிகை - Pongal Festival" in "Festivals & Traditions" forum.


 1. #1
  sumathisrini's Avatar
  sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,805

  பொங்கல் பண்டிகை - Pongal Festival


  ஆண்டு முழுதும் எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் அனைத்தையும் விட உயர்வானதாகச் சொல்லப்படுவது, பொங்கல் பண்டிகை.

  ஆயுளும் ஆரோக்யமும் அளித்து ஆனந்த வாழ்வு பெற அருளும் ஆதித்யனை வழிபடும் நாளே தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை.

  இது தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. எனினும் கிராமங்களில்தான் இந்தப் பண்டிகையில் கொண்டாட்டங்கள் அதிகம்.

  போகிப் பண்டிகை:

  தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப் படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இதுநாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.

  பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் ‘போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி ‘போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த வருடத்திற்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகை.

  இந்திரனுக்கு ‘போகி’ என்றொரு பெயர் உண்டு. எனவே இந்நாள், ‘இந்திர விழா’ வாகவும் இருந்திருக்கக்கூடும். மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனைப் பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன. மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை ‘போகி’ யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழம்பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர்.

  ஆனால் இப்போதெல்லாம் போகியன்று டயர்களைக் கொளுத்தும் மூடத்தனம் பரவலாக நடக்கின்றது. இதனால் வளி மண்டலம் மாசுபடுவதோடு, மனிதர்களுக்கு நோயும் உண்டாகின்றன. ஏற்கெனவே சுவாசக் கோளாறு உள்ளவர்கள், டயர்கள் வெளியிடும் நச்சுப் புகையால் மேலும் பாதிப்புக்குள்ளாவார்கள்.

  எனவே நாம் சமுதாயக் கட்டுப்பாட்டோடும், அறிவியல் விழிப்புணர்வோடும் இருந்து, நோய்கள் தரும் டயர் கொளுத்தும் வழக்கத்தினை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

  பொங்கல் பண்டிகை:

  ஆண்டு முழுவதும் நிலத்தில் பாடுபட்ட விவசாயி, தன் நிலத்திற்கும், உழைப்புக்கும் துணை நின்ற மாட்டிற்கும், சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் விதம் கொண்டாடும் பண்டிகை பொங்கல். அந்த போகத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த பச்சரியை, புதுப்பானையில் பொங்கலிட்டு, தோட்டத்தில் விளைந்த இஞ்சி, மஞ்சள், கிழங்கு வகைகளை கரும்புடன் படைத்து, நன்றி தெரிவிக்கும் கிராமத்து விவசாயின் விசுவாசமே பொங்கல். எளிமையும், உயிரோட்டமும் நிறைந்த இந்த பண்டிகை ஒவ்வொரு கிராமங்களிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. பொங்கலிடுவது என்று பொதுவாக நாம் நினைத்தாலும், கொண்டாடப்படும் முறைகள் வேறுபடுகிறது

  புதிய பானை அல்லது வழக்கமாகப் பொங்கல் வைக்கும் பானையில் அவரவர் வழக்கப்படி பொட்டு வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கொத்தினைக் கட்டி, பின்னர் சுபமான நேரத்தில் பொங்கல் பானையை அடுப்பில் ஏற்றி பொங்கல் செய்வார்கள்.

  பானையிலிருந்து பால் பொங்கிடும்போது வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து `பொங்கலோ பொங்கல்' என்று உரக்கச் சொல்வார்கள். இது ஆண்டு முழுதும் உங்கள் வீட்டில் ஆனந்தம் பொங்கச் செய்யும் வழிபாடு என்பதால் கூச்சப்படாமல் குரல் எழுப்பலாம்.

  பொங்கல் தயார் ஆனதும் அவரவர் வழக்கப்படி குலதெய்வத்தின் முன்போ, இஷ்ட தெய்வத்தின் முன்போ அல்லது சூரியனின் ஒளிவிழும் இடத்திலோ வைத்து, விளக்கேற்றி, பொட்டிட்டு, பூப்போட்டு, தூப, தீபம் காட்டிப் பிறகு பொங்கலை நிவேதனம் செய்வார்கள்.

  இது நன்றி தெரிவிக்கும் திருநாள் என்பதால், உங்கள் வாழ்வில் உங்களின் முன்னேற்றத்திற்கு உதவிய உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ளலாம்.

  மாட்டுப் பொங்கல்:


  கால்நடைகளே நமது நாட்டில் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன. ‘ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்' என்ற பட்டப் பெயர்களெல்லாம் புழக்கத்தில் இருந்தன. ‘ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கின்றது' என்றார் திருவள்ளுவர். அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளே! இதன் மூலம் மாடுகளே உலகை உயிர்ப்போடு வைத்துள்ளன எனக் கூறின் மிகையில்லை.

  அந்த மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன.

  மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர். அதன் பசிக்குத் தேவையான உணவையும் படைப்பர்.

  காணும் பொங்கல்:


  பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது கனுப் பொங்கல். அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு அர்ப்பணிப்பார்கள். காணும் பொங்கலும் இந்த நன்னாளே! அன்று புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்து அளாவி மகிழ்வது வழக்கம். சிலர் இன்பச் சுற்றுலாவும் சென்று களிப்பர். ஒரு காலத்தில் எல்லாச் சந்தர்ப்பங்களிலுமே சொந்தமும், நட்பும் அடிக்கடி சந்தித்து மகிழும் பண்பாடிருந்தது.

  இன்றைய ‘சீரியல்’ உலகில், வீட்டுக்கு வரும் சிநேகங்களைப் பார்த்துச் சிரிப்பதுகூட அரிதாகிவிட்டது. இந்த அவல நிலையை மாற்ற இந்தக் காணும் பொங்கல் நாளில் சபதமேற்போம்! வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாக மலரட்டும்! ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகள், சூரியனை கண்ட பனிபோல விலகட்டும்! நன்மைகள் நாளும் சூழ்ந்திருக்க சூரியனை வேண்டுங்கள்!

  மனம் இனிக்கப் பொங்கல், மனை சிறக்க மஞ்சள், நலம் சிறக்க கரும்பு, நாளும் கோளும் நன்மைகள் செய்ய நல்வாழ்த்துக்கள் என எல்லாமே இனிமையாய் அமைந்த பொங்கல் திருநாளில் இல்லாதவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். எந்நாளும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும் அது நீங்காது தங்கும்.

  Moderator Note:

  This Article has been published in Penmai eMagazine Jan 2017. You Can download & Read the magazines HERE.

  Similar Threads:

  Sponsored Links
  Attached Thumbnails Attached Thumbnails பொங்கல் பண்டிகை - Pongal Festival-thai_pongal.jpg  
  Last edited by sumathisrini; 19th Mar 2017 at 01:25 PM.
  kvsuresh, jv_66, chan and 3 others like this.

 2. #2
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,483

  Re: பொங்கல் பண்டிகை - Pongal Festival

  Pongal Fever Starts ah Kaa... Superb! As Usual, Good Write up..


 3. #3
  deepti priya is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Jan 2017
  Location
  chennai
  Posts
  21

  Re: பொங்கல் பண்டிகை - Pongal Festival

  Nice information. Advance Happy pongal to all..!!


 4. #4
  diyaa's Avatar
  diyaa is offline Citizen's of Penmai
  Real Name
  Diya
  Gender
  Female
  Join Date
  Oct 2014
  Location
  Secunderabad
  Posts
  620

  Re: பொங்கல் பண்டிகை - Pongal Festival

  ஹை பொங்கல் வருது


  பொங்கலை பத்தி சூப்பரா எழுதி இருக்கீங்க


  உங்களுக்கு என்னோட இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்


  இதுல ஒரு விஷயம்

  கனு பொங்கலுக்கு காலைல எழுந்தவுடனே குளிக்காம நெத்தில பச்சை மஞ்சளால திலகம் வச்சிண்டு நீங்க சொன்ன மாறி கனு பொடி வைப்போம் வச்சிட்டு வரும்போது ஆரத்தி சுத்தி வீட்டுக்குள்ள விடுவாங்க உடனே போய் குளிச்சிறணும் ப்ரதர்ஸ் பணம் தருவாங்க


  இப்போ எங்க வீட்டு பொங்கல் பத்தி சொல்லறேன்

  போகி


  போகி அன்னைக்கு ஸ்வாமிக்கு பருப்பு வடையும் போளியும் நிவேதனம் செய்வாங்க


  பொங்கல்


  புது பானை எல்லாம் இல்லை வெண்கல பானைலதான்
  வெளில கல்லு கூட்டி பாலும் அரிசி பருப்பு கலைந்த தண்ணீர் விட்டு பொங்கியதும் தேங்காய் உடைத்து பழம் தாம்பூலம் நிவேதம் செஞ்சு சங்கு நாதம் பிடிச்சு வீடு எல்லாம் பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கலுனு ஒரு தட்டுல கரண்டியால தட்டிட்டே சொல்லுவோம் அந்த வேலை எல்லாம் நானும் நீ தங்கையும் தான் பாப்போம் அப்புறம் அரிசி போட்டு பொங்கல் வைப்பாங்க


  எல்லா கறி காயும் போட்டு பொங்கல் கூட்டு பண்ணுவாங்க செம டேஸ்ட்டா இருக்கும்


  கனு பொங்கல்
  கனு பொங்கலுக்கு 5 வித கலவை சாதம் பண்ணி வடை பாயசம் மோர் குழம்பு அப்பளம் பொரியல்னு பண்ணி ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணிட்டு செம எடுப்பு எடுத்திருவோம்


  3 நாளும் செம வேட்டை தான் நமக்கு சோறு ரெம்ப முக்கியம் அமைச்சரே ஹிஹிஹிஹி

  ரெம்ப பெரிய பிளேடு போட்டுடேனா ஹிஹிஹி

  ஆர்வம் கொஞ்சம் ஜாஸ்தி ஆகிடுச்சு

  கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க ப்ளீஸ்

  with luv

  Diya

  Last edited by diyaa; 9th Jan 2017 at 07:14 PM.
  sumathisrini and Sriramajayam like this.

 5. #5
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  89,423
  Blog Entries
  1795

  Re: பொங்கல் பண்டிகை - Pongal Festival

  Super SS & Diya.  sumathisrini and diyaa like this.
  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.


  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!


  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 6. #6
  sumathisrini's Avatar
  sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,805

  Re: பொங்கல் பண்டிகை - Pongal Festival

  Quote Originally Posted by diyaa View Post
  ஹை பொங்கல் வருது


  பொங்கலை பத்தி சூப்பரா எழுதி இருக்கீங்க


  உங்களுக்கு என்னோட இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்


  இதுல ஒரு விஷயம்

  கனு பொங்கலுக்கு காலைல எழுந்தவுடனே குளிக்காம நெத்தில பச்சை மஞ்சளால திலகம் வச்சிண்டு நீங்க சொன்ன மாறி கனு பொடி வைப்போம் வச்சிட்டு வரும்போது ஆரத்தி சுத்தி வீட்டுக்குள்ள விடுவாங்க உடனே போய் குளிச்சிறணும் ப்ரதர்ஸ் பணம் தருவாங்க


  இப்போ எங்க வீட்டு பொங்கல் பத்தி சொல்லறேன்

  போகி


  போகி அன்னைக்கு ஸ்வாமிக்கு பருப்பு வடையும் போளியும் நிவேதனம் செய்வாங்க


  பொங்கல்


  புது பானை எல்லாம் இல்லை வெண்கல பானைலதான்
  வெளில கல்லு கூட்டி பாலும் அரிசி பருப்பு கலைந்த தண்ணீர் விட்டு பொங்கியதும் தேங்காய் உடைத்து பழம் தாம்பூலம் நிவேதம் செஞ்சு சங்கு நாதம் பிடிச்சு வீடு எல்லாம் பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கலுனு ஒரு தட்டுல கரண்டியால தட்டிட்டே சொல்லுவோம் அந்த வேலை எல்லாம் நானும் நீ தங்கையும் தான் பாப்போம் அப்புறம் அரிசி போட்டு பொங்கல் வைப்பாங்க


  எல்லா கறி காயும் போட்டு பொங்கல் கூட்டு பண்ணுவாங்க செம டேஸ்ட்டா இருக்கும்


  கனு பொங்கல்
  கனு பொங்கலுக்கு 5 வித கலவை சாதம் பண்ணி வடை பாயசம் மோர் குழம்பு அப்பளம் பொரியல்னு பண்ணி ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணிட்டு செம எடுப்பு எடுத்திருவோம்


  3 நாளும் செம வேட்டை தான் நமக்கு சோறு ரெம்ப முக்கியம் அமைச்சரே ஹிஹிஹிஹி

  ரெம்ப பெரிய பிளேடு போட்டுடேனா ஹிஹிஹி

  ஆர்வம் கொஞ்சம் ஜாஸ்தி ஆகிடுச்சு

  கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க ப்ளீஸ்

  with luv

  Diya

  ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க @diyaa, நன்றிமா.


  diyaa likes this.

 7. #7
  diyaa's Avatar
  diyaa is offline Citizen's of Penmai
  Real Name
  Diya
  Gender
  Female
  Join Date
  Oct 2014
  Location
  Secunderabad
  Posts
  620

  Re: பொங்கல் பண்டிகை - Pongal Festival

  Quote Originally Posted by sumathisrini View Post

  ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க @diyaa, நன்றிமா.
  நான் ரெம்ப பயந்திட்டே இருந்தேன்

  எங்க என்னோடத்தில வந்து பெரிய பருப்பு மாறி இவ

  தேவை இல்லாம எழுதி இருக்காளேன்னு

  திட்டுவீங்களோனு திக் திக்குனு இருந்துச்சு

  நல்லவேளை கோபம் இல்லையே மேம்


  தேங்க் யு சோ மச்

  With luv

  Diya

  sumathisrini likes this.

 8. #8
  sumathisrini's Avatar
  sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,805

  Re: பொங்கல் பண்டிகை - Pongal Festival

  Quote Originally Posted by diyaa View Post
  நான் ரெம்ப பயந்திட்டே இருந்தேன்

  எங்க என்னோடத்தில வந்து பெரிய பருப்பு மாறி இவ

  தேவை இல்லாம எழுதி இருக்காளேன்னு

  திட்டுவீங்களோனு திக் திக்குனு இருந்துச்சு

  நல்லவேளை கோபம் இல்லையே மேம்


  தேங்க் யு சோ மச்

  With luv

  Diya

  ஹா... ஹா... ஹா... அது என்ன @diyaa, என்னோட இடம்... உங்களோட இடம்னு சொல்றீங்க... பெண்மை நம் எல்லோருக்கும் பொதுவானது தான்... அதனால இப்படியெல்லாம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை .


  gkarti and diyaa like this.

 9. #9
  diyaa's Avatar
  diyaa is offline Citizen's of Penmai
  Real Name
  Diya
  Gender
  Female
  Join Date
  Oct 2014
  Location
  Secunderabad
  Posts
  620

  Re: பொங்கல் பண்டிகை - Pongal Festival

  Quote Originally Posted by sumathisrini View Post

  ஹா... ஹா... ஹா... அது என்ன @diyaa, என்னோட இடம்... உங்களோட இடம்னு சொல்றீங்க... பெண்மை நம் எல்லோருக்கும் பொதுவானது தான்... அதனால இப்படியெல்லாம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை .
  ம்க்கும்..

  இப்ப கூட நீங்க கோபம் இல்லைனு சொல்லவே இல்லையே மேம்


  sumathisrini likes this.

 10. #10
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,483

  Re: பொங்கல் பண்டிகை - Pongal Festival

  FYI Diyaa.. My Dear most Sumii Kaa kku Kovame Pada theriyathu.. #Krizzz ye Moththa Kuththagai kku Eduthu Vachuruppan..

  So No More Worries!


  Quote Originally Posted by diyaa View Post
  ம்க்கும்..

  இப்ப கூட நீங்க கோபம் இல்லைனு சொல்லவே இல்லையே மேம்


  sumathisrini likes this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter