Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine May! | All Issues

User Tag List

Like Tree103Likes

Share your Pongal celebrations - உங்கள் வீட்டுப் பொங்கல் பண்டிகை

Discussions on "Share your Pongal celebrations - உங்கள் வீட்டுப் பொங்கல் பண்டிகை" in "Festivals & Traditions" forum.

  1. #1
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,846

    Share your Pongal celebrations - உங்கள் வீட்டுப் பொங்கல் பண்டிகை

    ஹாய் friends,

    இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை பீடு நடை போட்டு வரப் போகிறது ......

    இதை நம் ஒவ்வொருவர் வீட்டிலும் விதம் விதமாகக் கொண்டாடுவோம் .....

    ஒவ்வொன்றும் வித்தியாசப் படலாம் .....

    3 நாட்களும் , மூன்று விதமாகக் கொண்டாடப் படும்

    ஆகவே, உங்கள் வீடுகளில் பொங்கல் பண்டிகைகள் கொண்டாடப் படும் முறைகளை , இங்கே எடுத்துச் சொல்லி , மற்றவர்களுக்கும் அதை அறியப் படுத்தி சந்தோஷப் படுத்தலாமே

    Similar Threads:

    Sponsored Links
    Jayanthy

  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    47,044

    re: Share your Pongal celebrations - உங்கள் வீட்டுப் பொங்கல் பண்டிகை

    Paduththalaame... Last time ye Ezhuthanum nnu ninachen Miss aagiduchu.. Seekram Soldren Aunty!!

    Festivals vanthaale namma veedu Kalai kattutho illaiyo Inga super ah Kalai kattuthu Cheers Aunty!!

  3. #3
    sbsudha's Avatar
    sbsudha is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sudha Sivadas
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    3,896
    Blog Entries
    6

    Quote Originally Posted by gkarti View Post
    Paduththalaame... Last time ye Ezhuthanum nnu ninachen Miss aagiduchu.. Seekram Soldren Aunty!!

    Festivals vanthaale namma veedu Kalai kattutho illaiyo Inga super ah Kalai kattuthu Cheers Aunty!!
    adha sollu kaarthi. miga sariyaa sonne

  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,846

    re: Share your Pongal celebrations - உங்கள் வீட்டுப் பொங்கல் பண்டிகை

    இப்போது , எங்கள் வீடுகளில் கொண்டாடப் படும் முறைகளை , நான் சொல்கிறேன் .......

    நாங்கள்
    போகி, பொங்கல் , மற்றும் மறுநாள் ,இந்த நாட்களைத்தான் கொண்டாடுவோம் ......

    போகி அன்று , தலைக்கு எண்ணை தேய்த்துக் கொண்டு , போளி செய்வோம்

    பொங்கலன்று காலையில் , வாசலில் , பெரிய கோலம் போட்டு , மாவிலைத் தோரணம் கட்டுவோம் .

    புத்தாடை உடுத்திக் கொள்வோம் .

    பொங்கல் அன்று ,சரியாகத் தை மாதம் பிறக்கும் நேரத்தில் தான் பொங்கல் வைப்போம் .....அது எந்த நேரமாக இருந்தாலும் .....

    ஒரு வெண்கலப் பானையை நன்றாகச் சுத்தப் படுத்தி , அதற்கு நான்கு பக்கமும் , நாமம் இட்டு , ஒரு கயிற்றில் , சிறிது இடைவெளி விட்டு ,ஒரு மஞ்சள் கொத்து , ஒரு இஞ்சிக் கொத்து , ஒரு கரும்பு , ஒரு தேங்காய் மூடி , ஒரு வாழைப்பழம் , இவற்றை இறுகக் கட்டிக் கொண்டு , அதை இப்போது , அந்த நாமம் இட்ட வெண்கலப் பானையின் கழுத்தில் சுற்றிக் கட்டி விடுவோம் .

    அதை இப்போது அடுப்பில் வைத்து , ஒரு டம்ப்ளர் அளவு பால் மற்றும் தண்ணீர் விட்டு , அதில் சிறிதளவு பயத்தம் பருப்பைப் போட்டு விடுவோம் ....

    அது இப்போது பொங்கி வரும்போது , வீட்டில் உள்ள அனைவரும் அங்கு கூடி , "பொங்கலோ பொங்கல் " என்று கத்துவோம் .....சிறுவர்கள் இருந்தால் , அவர்கள் , தோலால் செய்யப்பட்ட தப்பட்டையை வைத்துக் கொண்டு அடித்துக் கொண்டே பாடுவார்கள் ....இல்லாவிட்டால் , எதாவது ஒரு தட்டில் , ஒரு குச்சியை வைத்து அடித்துக் கொண்டே பாடுவார்கள் .....

    பால் , வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் பொங்கி வழிந்தால் , நலம் என்றும் , மேற்கு திசை கூட நலமே என்றும் கொள்ளுவோம் .....

    பிறகு , அதில் அரிசியைப் போட்டு , நன்றாக வெந்தவுடன் , வெல்லப்பாகை , தனியாகச் செய்து , அதனுடன் கலந்து , வாசனை பொருட்களையும் சேர்ப்போம் .....

    வெற்றிலைப் பாக்கு , பழம் , இவற்றுடன் , செய்து வைத்த சர்க்கரைப் பொங்கலையும் , கடவுளுக்குப் படைத்து , தெரிந்தவர்களுக்குக் கொடுத்துவிட்டு , உண்போம் ......

    இதில் சிறிதளவு , சர்க்கரைப் பொங்கலை அப்படியே வைத்து விடுவோம் .

    அன்று , தந்தை இல்லாதவர்கள் , முன்னோர்களுக்குத் திதி கொடுக்க வேண்டும் .

    மறுநாள் , கனுப்பண்டிகை என்று கொண்டாடுவோம் ....இது சகோதரர்களின் நலனுக்காக , சகோதரிகள் கொண்டாடும் பண்டிகை .
    காலையில் ,பெண்கள் , அந்த வெண்கலப் பானையில் இருக்கும் , மஞ்சள் கொத்தில் இருந்து ஒரு மஞ்சள் கிழங்கை எடுத்து , பெரியவர்களை விட்டு , நம் நெற்றியில் கீறிக்கொண்டு , பின்னர்தான் குளிப்போம் .

    பிறகு , அந்த , மஞ்சள் கொத்து , இஞ்சிக்கொத்து இலைகளைக் கொண்டு , வீட்டின் பின்புறத்திலோ , அல்லது , மொட்டை மாடியிலோ , பரத்தி வைத்து , அதில் ,
    பல வகை சாதங்களை உருண்டை பிடித்து - வெள்ளை சாதம் , மஞ்சள் சாதம் ,சர்க்கரைப்பொங்கல் , சிவப்பு சாதம்,

    இவற்றை உருண்டை பிடித்து வைத்துக் கொண்டு , வீட்டில் உள்ள பெண்கள் எல்லாரும் , "கன்னுப்பிடி வச்சேன் , காக்காப்பிடி வச்சேன் , காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணம் " என்று ஒவ்வொருவரும் மூன்று உருண்டைகளை வைப்போம் .

    இதில் பெண்கள் , தங்கள் பிறந்த வீடுகளுக்குச் சென்று வைப்பார்கள் , இல்லாவிட்டால் , அன்று பிறந்த வீட்டுக்குச் சென்று ஆசி வாங்குவார்கள் .....

    சகோதரர்கள் , தங்கள் சகோதரிகளுக்கு , அவர்கள் எங்கிருந்தாலும் , பணம் அனுப்புவார்கள் , தங்கள் நன்றிக் கடனாக ......

    இவைதான் , எங்கள் வீடுகளில் பொங்கலின் இரண்டு நாட்களைக் கொண்டாடும் முறை .

    Last edited by jv_66; 8th Jan 2014 at 01:22 PM.
    Jayanthy

  5. #5
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    31,687

    re: Share your Pongal celebrations - உங்கள் வீட்டுப் பொங்கல் பண்டிகை

    எங்கள் வீட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த தோழி ஜெயந்திக்கு நன்றி!

    வழக்கமாக எங்கள் வீட்டில் ஒவ்வொரு பொங்கல் அன்றும் வெண்கலப் பானையை பளிச்சென்று தேய்த்து, அதற்கு ஸ்ரீசூர்ணம், நாமம் இட்டு, மஞ்சள் கொத்து, பூச்சரம், வாழைப் பழம், கரும்பு ஒரு சிறிய துண்டு, தேங்காய் (சிறியது) இவை அனைத்தையும் ஒரு கயிற்றில் கட்டி அதை வெண்கலப் பானையின் கழுத்துப் பகுதியில் கட்டுவோம்.

    பிறகு அந்தப் பானையில் பாலை விட்டு அது பொங்கும்போது ‘பொங்கலோ... பொங்கல்...’ என்று சொல்லி, பிறகு களைந்து வைத்துள்ள பாசிப்பயிருடன் சேர்ந்த அரிசியை பானையில் போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அரிசி வெந்ததும், அதில் ஒரு பாகத்தை தனியாக வெண்பொங்கலுக்கென்று வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து விட்டு, பானையில் இருக்கும் பாகத்துடன் வெல்லத்தைச் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் செய்வோம். பின் வெண்பொங்கலையும், சர்க்கரைப் பொங்கலையும் பஞ்சாமிர்தத்துடன் சுவாமி சந்நிதியில் வைத்து நைவேத்யம் செய்து விட்டு கடவுளை வணங்குவோம்.

    பொங்கல் பானையை காலி செய்யும்போது சுத்தமாக அதில் உள்ளதை எடுக்க மாட்டோம். அதில் ஒரு பெரிய உருண்டை அளவுக்கு வைத்து விடுவோம். இது எதற்கு என்றால், மறுநாள் கணுப்பொங்கலுக்கு. அதாவது பொங்கலுக்கு மறுநாள் காலை நீராடுவதற்கு முன்னதாக பெண்கள் ‘கணுப்பிடி’ வைப்பார்கள். சில குடும்பங்களில் நீராடி விட்டு ‘கணுப்பிடி’ வைக்கும் வழக்கமும் உண்டு (எங்கள் வீட்டில் நீராடி விட்டு வைக்கும் வழக்கம் தான் கடைபிடிக்கப் படுகிறது).

    வீட்டு முற்றத்திலோ, மொட்டை மாடியிலோ மஞ்சள் இலை (மஞ்சள் கொத்துடன் சேர்ந்து இருக்கும் இலை) பரப்பி, அதில் முந்தின நாள் செய்த வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கலுடன், சிவப்பு, மஞ்சள் வண்ணங்களில் சாதம் சிறு சிறு உருண்டைகளாக்கப்பட்டு அவற்றையும் வைப்பார். கரும்புத் துண்டுகள், மஞ்சள் கிழங்கு, வெற்றிலைப் பாக்கு, வாழைப் பழம் போன்றவையும் பரிமாறப்படுகின்றன. அப்படி வைக்கும்போது, ‘காக்காக்கு கண்ணுபிடி வெச்சேன்... காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம்... உட(ன்)ப் பிறந்தான் உறவு கருப்பஞ்சாறு போல இனிக்கனும்’ என்று சொல்லிக் கொண்டே வைப்போம். இந்த சடங்கை பெண்கள் எதற்கு செய்கிறார்கள் என்றால், தங்கள் சகோதர்களும், அவர்கள் குடும்பங்களும் நன்றாக வாழ வேண்டும் என்று வாழ்த்தி வணங்குகிறார்கள். பிறகு மஞ்சள் நீரால் ஆரத்தி எடுப்போம். கிராமங்களில் மக்கள் பலவிதமான உணவுப் பொருட்கள் செய்து எடுத்துக் கொண்டு, ஆற்றங்கரைக்கோ, குளத்தங்கரைக்கோச் சென்று சேர்ந்து உணவு உண்டு மகிழ்வார்கள். நாங்கள் அன்று புளியோதரை (அல்லது எலுமிச்சை சாதம்), சர்க்கரைப் பொங்கல், தேங்காய் சாதம், தயிர்சாதம் செய்து, தொட்டுக் கொள்ள அவியல், வற்றல், அப்பளம் செய்து அதையும் பகவானுக்கு நைவேத்யம் செய்து விட்டு உண்போம்.

    இந்த வகையில் தான் என் வீட்டில் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப் படுகிறது.

    கனுப்பிடி

    Parasakthi, sbsudha, jv_66 and 4 others like this.

  6. #6
    sbsudha's Avatar
    sbsudha is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sudha Sivadas
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    3,896
    Blog Entries
    6

    re: Share your Pongal celebrations - உங்கள் வீட்டுப் பொங்கல் பண்டிகை

    பெண்மை குடும்பத்தில் அனைவருக்கும் பொங்கலோ பொங்கல். அனைதில்லத்திலும் இந்த உழவர் திருநாளில் இன்பம் பொங்கிட நல்வாழ்த்துக்கள்.

    நாங்க கேரளா நாட்டை சேர்ந்த தமிழர்கள் அதனால பொங்கல் பெரிய பண்டிகை கிடையாது. ஆனாலும் பொங்கல் வைப்பதுண்டு.

    போகி அன்னிக்கி விசேஷமா எதுவும் இல்லை. தனி வீடாக இருந்தபோது பழையதை குப்பை கொளுத்தி இருக்கோம் அவ்வளவே.

    பொங்கல் அன்று மார்கழி முடியும், அம்மா கோதா தேவி பாவை நோன்பு செய்வாங்க அதனால் அன்று வெண்
    பொங்கலும் பிரசாதமாக செய்யப்படும். நானும் இப்போ அதையே கடைபிடிக்கறேன்.

    வாசலில் கோலமிட்டு தோரணம் கட்டி குளித்து குக்கரிலேயே மஞ்சள் கொத்தை கயிறிட்டு கட்டி மஞ்சள் கும்குமம் வைத்து, காஸ் ஸ்டவிற்கும் பொட்டு வைத்து சாதமும் கொஞ்சம் கடலை பருப்புமாக பொங்க பானை ஏற்றிடுவோம்.

    அது வெந்து முடிந்ததும் வெல்லத்தில் கெட்டி பாகெடுத்து அன்னத்தை சேர்த்து குழைய வேக விட்டு முந்திரி நெய்யில் போட்டு இறக்குவது.

    வெண் பொங்கலும் தாளித்து இறக்கி, கூடவே, முடிந்தபோது மெது வடையும் செய்வதுண்டு.

    7 காய்கறிகள் போட்டு கெட்டியான சாம்பார் போல சமைப்பது வழக்கம். இது அடுத்த நாள் கனி வைக்க தேவைப்படும் என்பதால்.
    கடவுளுக்கு இவற்றை பிரசாதமாக வைத்து பின் குடும்பத்துடன் உண்பது. அத்துடன் முடிந்தது பொங்கல் தினம்

    அடுத்த நாள் கனு பொங்கல். முந்திய போகி தினத்தன்று அண்ணன் தம்பிகளாக இருப்போர் சகோதரிகளுக்கு வெற்றிலை பழ தாம்பூல தட்டுடன் மஞ்சள், கரும்பு புதிய உடையோ பணமோ வைத்து சீராக எடுத்து வந்து தர வேண்டும். அதையே பூஜைக்கு உபயோக படுத்துவோம்.

    அந்த சகோதரர்களின் நல்வாழ்விற்காகவும் ஒற்றுமையுடன் எல்லோரும் கூடி வாழ வேண்டும் என வேண்டி கனு வைப்பது வழக்கம்.

    முதல் நாள் இரவே குழைய சாதத்தை தயிர் விட்டு பிசைந்து அதில் கொஞ்சம் எடுத்து மஞ்சள் தூளும் கொஞ்சத்தில் கும்குமமும் கலந்து மிச்சம் உள்ளதை அப்படியே வைப்போம்.

    அடுத்த நாள் அதி காலை எழுந்து சுத்தம் செய்துகொண்டு வீட்டு பெரியவர்களிடம் மஞ்சள் கிழங்கில் பொட்டு தீற்றிக்கொண்டு பின் கட்டில் மஞ்சள் கிழங்கின் இலைகளை பத்திரபடுத்தி அதன் மீது மிகச் சிறிய உருண்டைகளாக சாதத்தை பிடி பிடியாக வைப்பது.

    நாங்கள் கேரளா என்று சொன்னேன் இல்லையா அதனால் கனு வைப்பது புழக்கடையில் இருக்கும் என்பதால் கனு வைத்துவிட்டு வீட்டிற்குள் வரக்கூடாது. அந்த காலத்தில் ஏற்படுத்திய வழக்கம் போலும். அதனால் கனு வைத்தபின் குளித்து விட்டு வந்துதான் சமைக்க வேண்டும்.

    வெள்ளை, மஞ்சள் சிவப்பு என கலந்த சாத உருண்டைகளுடன் கூட சர்க்கரை பொங்கல் 7 காய்கறி கூட்டும் கூட 7 உருண்டைகள் வைப்பது.
    ஜெயந்தி கூறியதை போல கனுப்பிடி வைக்கறேன், காக்கா பிடி வைக்கறேன்.... என கூறிக்கொண்டே வைக்க வேண்டும்.

    காக்கை கூட்டம் ஒன்றுகொன்று விட்டு குடுக்காமல் கை குடுப்பது போல கூடி வாழ்வது போல நானும் என் சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமையாக கூடி வாழ வேண்டும் என வேண்டிக்கொண்டு நமஸ்கரிப்போம்.

    அன்று பல சித்ரான்னங்களும் வடகமும் என இருக்கும் சமையல்.
    பொங்கலோ பொங்கல் அவ்வளவே.

    Last edited by sbsudha; 8th Jan 2014 at 01:02 PM.

  7. #7
    sbsudha's Avatar
    sbsudha is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sudha Sivadas
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    3,896
    Blog Entries
    6

    re: Share your Pongal celebrations - உங்கள் வீட்டுப் பொங்கல் பண்டிகை

    Quote Originally Posted by jv_66 View Post
    இப்போது , எங்கள் வீடுகளில் கொண்டாடப் படும் முறைகளை , நான் சொல்கிறேன் .......

    நாங்கள் பொங்கல் , மற்றும் மறுநாள் , இரண்டு நாட்களைத்தான் கொண்டாடுவோம் ......

    பொங்கலன்று காலையில் , வாசலில் , பெரிய கோலம் போட்டு , மாவிலைத் தோரணம் கட்டுவோம் .

    புத்தாடை உடுத்திக் கொள்வோம் .

    பொங்கல் அன்று ,சரியாகத் தை மாதம் பிறக்கும் நேரத்தில் தான் பொங்கல் வைப்போம் .....அது எந்த நேரமாக இருந்தாலும் .....

    ஒரு வெண்கலப் பானையை நன்றாகச் சுத்தப் படுத்தி , அதற்கு நான்கு பக்கமும் , நாமம் இட்டு , ஒரு கயிற்றில் , சிறிது இடைவெளி விட்டு ,ஒரு மஞ்சள் கொத்து , ஒரு இஞ்சிக் கொத்து , ஒரு கரும்பு , ஒரு தேங்காய் மூடி , ஒரு வாழைப்பழம் , இவற்றை இறுகக் கட்டிக் கொண்டு , அதை இப்போது , அந்த நாமம் இட்ட வெண்கலப் பானையின் கழுத்தில் சுற்றிக் கட்டி விடுவோம் .

    அதை இப்போது அடுப்பில் வைத்து , ஒரு டம்ப்ளர் அளவு பால் மற்றும் தண்ணீர் விட்டு , அதில் சிறிதளவு பயத்தம் பருப்பைப் போட்டு விடுவோம் ....

    அது இப்போது பொங்கி வரும்போது , வீட்டில் உள்ள அனைவரும் அங்கு கூடி , "பொங்கலோ பொங்கல் " என்று கத்துவோம் .....சிறுவர்கள் இருந்தால் , அவர்கள் , தோலால் செய்யப்பட்ட தப்பட்டையை வைத்துக் கொண்டு அடித்துக் கொண்டே பாடுவார்கள் ....இல்லாவிட்டால் , எதாவது ஒரு தட்டில் , ஒரு குச்சியை வைத்து அடித்துக் கொண்டே பாடுவார்கள் .....

    பால் , வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் பொங்கி வழிந்தால் , நலம் என்றும் , மேற்கு திசை கூட நலமே என்றும் கொள்ளுவோம் .....

    பிறகு , அதில் அரிசியைப் போட்டு , நன்றாக வெந்தவுடன் , வெல்லப்பாகை , தனியாகச் செய்து , அதனுடன் கலந்து , வாசனை பொருட்களையும் சேர்ப்போம் .....

    வெற்றிலைப் பாக்கு , பழம் , இவற்றுடன் , செய்து வைத்த சர்க்கரைப் பொங்கலையும் , கடவுளுக்குப் படைத்து , தெரிந்தவர்களுக்குக் கொடுத்துவிட்டு , உண்போம் ......

    இதில் சிறிதளவு , சர்க்கரைப் பொங்கலை அப்படியே வைத்து விடுவோம் .

    அன்று , தந்தை இல்லாதவர்கள் , முன்னோர்களுக்குத் திதி கொடுக்க வேண்டும் .

    மறுநாள் , கனுப்பண்டிகை என்று கொண்டாடுவோம் ....இது சகோதரர்களின் நலனுக்காக , சகோதரிகள் கொண்டாடும் பண்டிகை .
    காலையில் ,பெண்கள் , அந்த வெண்கலப் பானையில் இருக்கும் , மஞ்சள் கொத்தில் இருந்து ஒரு மஞ்சள் கிழங்கை எடுத்து , பெரியவர்களை விட்டு , நம் நெற்றியில் கீறிக்கொண்டு , பின்னர்தான் குளிப்போம் .

    பிறகு , அந்த , மஞ்சள் கொத்து , இஞ்சிக்கொத்து இலைகளைக் கொண்டு , வீட்டின் பின்புறத்திலோ , அல்லது , மொட்டை மாடியிலோ , பரத்தி வைத்து , அதில் , 3 வகை சாதங்களை உருண்டை பிடித்து - வெள்ளை சாதம் , மஞ்சள் சாதம் (சர்க்கரைப்பொங்கல் ) , சிவப்பு சாதம்,

    இவற்றை உருண்டை பிடித்து வைத்துக் கொண்டு , வீட்டில் உள்ள பெண்கள் எல்லாரும் , "கன்னுப்பிடி வச்சேன் , காக்காப்பிடி வச்சேன் , காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணம் " என்று ஒவ்வொருவரும் மூன்று உருண்டைகளை வைப்போம் .

    இதில் பெண்கள் , தங்கள் பிறந்த வீடுகளுக்குச் சென்று வைப்பார்கள் , இல்லாவிட்டால் , அன்று பிறந்த வீட்டுக்குச் சென்று ஆசி வாங்குவார்கள் .....

    சகோதரர்கள் , தங்கள் சகோதரிகளுக்கு , அவர்கள் எங்கிருந்தாலும் , பணம் அனுப்புவார்கள் , தங்கள் நன்றிக் கடனாக ......

    இவைதான் , எங்கள் வீடுகளில் பொங்கலின் இரண்டு நாட்களைக் கொண்டாடும் முறை .
    azhaga solleeteenga Jayanthi. Very nice.

    Parasakthi, sumathisrini and jv_66 like this.

  8. #8
    sbsudha's Avatar
    sbsudha is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sudha Sivadas
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    3,896
    Blog Entries
    6

    re: Share your Pongal celebrations - உங்கள் வீட்டுப் பொங்கல் பண்டிகை

    ஹி சுமி,
    வெரி நைஸ். அழகா படங்களோட பொங்கல கண் முன்னே நிருத்திட்டீங்க.

    Parasakthi, sumathisrini and jv_66 like this.

  9. #9
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,846

    re: Share your Pongal celebrations - உங்கள் வீட்டுப் பொங்கல் பண்டிகை

    Quote Originally Posted by sumathisrini View Post
    எங்கள் வீட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த தோழி ஜெயந்திக்கு நன்றி!

    வழக்கமாக எங்கள் வீட்டில் ஒவ்வொரு பொங்கல் அன்றும் வெண்கலப் பானையை பளிச்சென்று தேய்த்து, அதற்கு ஸ்ரீசூர்ணம், நாமம் இட்டு, மஞ்சள் கொத்து, பூச்சரம், வாழைப் பழம், கரும்பு ஒரு சிறிய துண்டு, தேங்காய் (சிறியது) இவை அனைத்தையும் ஒரு கயிற்றில் கட்டி அதை வெண்கலப் பானையின் கழுத்துப் பகுதியில் கட்டுவோம்.

    பிறகு அந்தப் பானையில் பாலை விட்டு அது பொங்கும்போது ‘பொங்கலோ... பொங்கல்...’ என்று சொல்லி, பிறகு களைந்து வைத்துள்ள பாசிப்பயிருடன் சேர்ந்த அரிசியை பானையில் போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அரிசி வெந்ததும், அதில் ஒரு பாகத்தை தனியாக வெண்பொங்கலுக்கென்று வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து விட்டு, பானையில் இருக்கும் பாகத்துடன் வெல்லத்தைச் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் செய்வோம். பின் வெண்பொங்கலையும், சர்க்கரைப் பொங்கலையும் பஞ்சாமிர்தத்துடன் சுவாமி சந்நிதியில் வைத்து நைவேத்யம் செய்து விட்டு கடவுளை வணங்குவோம்.

    பொங்கல் பானையை காலி செய்யும்போது சுத்தமாக அதில் உள்ளதை எடுக்க மாட்டோம். அதில் ஒரு பெரிய உருண்டை அளவுக்கு வைத்து விடுவோம். இது எதற்கு என்றால், மறுநாள் கணுப்பொங்கலுக்கு. அதாவது பொங்கலுக்கு மறுநாள் காலை நீராடுவதற்கு முன்னதாக பெண்கள் ‘கணுப்பிடி’ வைப்பார்கள். சில குடும்பங்களில் நீராடி விட்டு ‘கணுப்பிடி’ வைக்கும் வழக்கமும் உண்டு (எங்கள் வீட்டில் நீராடி விட்டு வைக்கும் வழக்கம் தான் கடைபிடிக்கப் படுகிறது).

    வீட்டு முற்றத்திலோ, மொட்டை மாடியிலோ மஞ்சள் இலை (மஞ்சள் கொத்துடன் சேர்ந்து இருக்கும் இலை) பரப்பி, அதில் முந்தின நாள் செய்த வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கலுடன், சிவப்பு, மஞ்சள் வண்ணங்களில் சாதம் சிறு சிறு உருண்டைகளாக்கப்பட்டு அவற்றையும் வைப்பார். கரும்புத் துண்டுகள், மஞ்சள் கிழங்கு, வெற்றிலைப் பாக்கு, வாழைப் பழம் போன்றவையும் பரிமாறப்படுகின்றன. அப்படி வைக்கும்போது, ‘காக்காக்கு கண்ணுபிடி வெச்சேன்... காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம்... உட(ன்)ப் பிறந்தான் உறவு கருப்பஞ்சாறு போல இனிக்கனும்’ என்று சொல்லிக் கொண்டே வைப்போம். இந்த சடங்கை பெண்கள் எதற்கு செய்கிறார்கள் என்றால், தங்கள் சகோதர்களும், அவர்கள் குடும்பங்களும் நன்றாக வாழ வேண்டும் என்று வாழ்த்தி வணங்குகிறார்கள். பிறகு மஞ்சள் நீரால் ஆரத்தி எடுப்போம். கிராமங்களில் மக்கள் பலவிதமான உணவுப் பொருட்கள் செய்து எடுத்துக் கொண்டு, ஆற்றங்கரைக்கோ, குளத்தங்கரைக்கோச் சென்று சேர்ந்து உணவு உண்டு மகிழ்வார்கள். நாங்கள் அன்று புளியோதரை (அல்லது எலுமிச்சை சாதம்), சர்க்கரைப் பொங்கல், தேங்காய் சாதம், தயிர்சாதம் செய்து, தொட்டுக் கொள்ள அவியல், வற்றல், அப்பளம் செய்து அதையும் பகவானுக்கு நைவேத்யம் செய்து விட்டு உண்போம்.

    இந்த வகையில் தான் என் வீட்டில் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப் படுகிறது.

    கனுப்பிடி

    ரொம்ப அழகா சொல்லிட்டீங்க சுமதி ....படங்களும் அருமை , மிக்க நன்றி

    Parasakthi and sumathisrini like this.
    Jayanthy

  10. #10
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,846

    re: Share your Pongal celebrations - உங்கள் வீட்டுப் பொங்கல் பண்டிகை

    Quote Originally Posted by sbsudha View Post
    பெண்மை குடும்பத்தில் அனைவருக்கும் பொங்கலோ பொங்கல். அனைதில்லத்திலும் இந்த உழவர் திருநாளில் இன்பம் பொங்கிட நல்வாழ்த்துக்கள்.

    நாங்க கேரளா நாட்டை சேர்ந்த தமிழர்கள் அதனால பொங்கல் பெரிய பண்டிகை கிடையாது. ஆனாலும் பொங்கல் வைப்பதுண்டு.

    போகி அன்னிக்கி விசேஷமா எதுவும் இல்லை. தனி வீடாக இருந்தபோது பழையதை குப்பை கொளுத்தி இருக்கோம் அவ்வளவே.

    பொங்கல் அன்று மார்கழி முடியும், அம்மா கோதா தேவி பாவை நோன்பு செய்வாங்க அதனால் அன்று வெண்
    பொங்கலும் பிரசாதமாக செய்யப்படும். நானும் இப்போ அதையே கடைபிடிக்கறேன்.

    வாசலில் கோலமிட்டு தோரணம் கட்டி குளித்து குக்கரிலேயே மஞ்சள் கொத்தை கயிறிட்டு கட்டி மஞ்சள் கும்குமம் வைத்து, காஸ் ஸ்டவிற்கும் பொட்டு வைத்து சாதமும் கொஞ்சம் கடலை பருப்புமாக பொங்க பானை ஏற்றிடுவோம்.

    அது வெந்து முடிந்ததும் வெல்லத்தில் கெட்டி பாகெடுத்து அன்னத்தை சேர்த்து குழைய வேக விட்டு முந்திரி நெய்யில் போட்டு இறக்குவது.

    வெண் பொங்கலும் தாளித்து இறக்கி, கூடவே, முடிந்தபோது மெது வடையும் செய்வதுண்டு.

    7 காய்கறிகள் போட்டு கெட்டியான சாம்பார் போல சமைப்பது வழக்கம். இது அடுத்த நாள் கனி வைக்க தேவைப்படும் என்பதால்.
    கடவுளுக்கு இவற்றை பிரசாதமாக வைத்து பின் குடும்பத்துடன் உண்பது. அத்துடன் முடிந்தது பொங்கல் தினம்

    அடுத்த நாள் கனு பொங்கல். முந்திய போகி தினத்தன்று அண்ணன் தம்பிகளாக இருப்போர் சகோதரிகளுக்கு வெற்றிலை பழ தாம்பூல தட்டுடன் மஞ்சள், கரும்பு புதிய உடையோ பணமோ வைத்து சீராக எடுத்து வந்து தர வேண்டும். அதையே பூஜைக்கு உபயோக படுத்துவோம்.

    அந்த சகோதரர்களின் நல்வாழ்விற்காகவும் ஒற்றுமையுடன் எல்லோரும் கூடி வாழ வேண்டும் என வேண்டி கனு வைப்பது வழக்கம்.

    முதல் நாள் இரவே குழைய சாதத்தை தயிர் விட்டு பிசைந்து அதில் கொஞ்சம் எடுத்து மஞ்சள் தூளும் கொஞ்சத்தில் கும்குமமும் கலந்து மிச்சம் உள்ளதை அப்படியே வைப்போம்.

    அடுத்த நாள் அதி காலை எழுந்து சுத்தம் செய்துகொண்டு வீட்டு பெரியவர்களிடம் மஞ்சள் கிழங்கில் பொட்டு தீற்றிக்கொண்டு பின் கட்டில் மஞ்சள் கிழங்கின் இலைகளை பத்திரபடுத்தி அதன் மீது மிகச் சிறிய உருண்டைகளாக சாதத்தை பிடி பிடியாக வைப்பது.

    நாங்கள் கேரளா என்று சொன்னேன் இல்லையா அதனால் கனு வைப்பது புழக்கடையில் இருக்கும் என்பதால் கனு வைத்துவிட்டு வீட்டிற்குள் வரக்கூடாது. அந்த காலத்தில் ஏற்படுத்திய வழக்கம் போலும். அதனால் கனு வைத்தபின் குளித்து விட்டு வந்துதான் சமைக்க வேண்டும்.

    வெள்ளை, மஞ்சள் சிவப்பு என கலந்த சாத உருண்டைகளுடன் கூட சர்க்கரை பொங்கல் 7 காய்கறி கூட்டும் கூட 7 உருண்டைகள் வைப்பது.
    ஜெயந்தி கூறியதை போல கனுப்பிடி வைக்கறேன், காக்கா பிடி வைக்கறேன்.... என கூறிக்கொண்டே வைக்க வேண்டும்.

    காக்கை கூட்டம் ஒன்றுகொன்று விட்டு குடுக்காமல் கை குடுப்பது போல கூடி வாழ்வது போல நானும் என் சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமையாக கூடி வாழ வேண்டும் என வேண்டிக்கொண்டு நமஸ்கரிப்போம்.

    அன்று பல சித்ரான்னங்களும் வடகமும் என இருக்கும் சமையல்.
    பொங்கலோ பொங்கல் அவ்வளவே.

    அருமையா சொல்லி இருக்கீங்க சுதா .....மிக்க நன்றி

    Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter