Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree13Likes

Lakshmi Kubera Poojai Procedure - லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறை

Discussions on "Lakshmi Kubera Poojai Procedure - லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறை" in "Festivals & Traditions" forum.

  1. #1
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Lakshmi Kubera Poojai Procedure - லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறை

    ருணைக் கடலான திருமகள், திருமாலை மணந்த தினமாக, தீபாவளித் திருநாள் கருதப்படுகின்றது. அன்றைய தினம், திருமகளையும், செல்வத்துக்கு அதிபதியும், சிறந்த சிவபக்தனுமான குபேரனையும் வழிபடுவது, சிறப்புகள் பல தர வல்லது.

    ஸ்ரீலக்ஷ்மி, பொருட்செல்வம் மட்டுமல்லாது நம் வாழ்விற்குத் தேவையான சகல நலன்களையும் அள்ளி வழங்கும் அன்னை. அஷ்டலக்ஷ்மியாக அருள் மழை பொழியும் அவளே, தீப ஒளித் திருநாளில், குத்து விளக்கின் முத்தொளியில் தீப லக்ஷ்மியாகப் பிரகாசிக்கின்றாள்.

    எண்ணற்ற தீபங்கள், பொன்னொளி வீசும் நன்னாளில், ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜையைச் செய்வது மிக நல்லது. எளிய முறையில், இந்தப் பூஜையைச் செய்யும் முறையை இப்போது காணலாம்.

    பூஜை விதிகள்:

    1.பூஜையை காலை அல்லது மாலை வேளையில் செய்யலாம். பூஜை செய்யும் போது, வெளியில் இருக்கும் இறைத்திருவுருவங்களுக்கு மட்டுமல்லாமல், நம்முள் உறைந்திருக்கும் இறைவனுக்கும் சேர்த்தே பூஜை
    செய்கிறோம். ஆகவே, பூஜை செய்யும் போது, நல்ல முறையில் அலங்கரித்துக் கொண்டு பூஜையில் அமர வேண்டும்.

    2.ஸ்ரீலக்ஷ்மி, விநாயகர் திருவுருவங்கள் அல்லது படங்களை, சுத்தமாகத் துடைத்து, சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்கவும். குபேர யந்திரத்தையும் துடைத்து, அலங்கரிக்கவும்.

    ஒரு பலகையில், கோலமிட்டு, சிவப்பு/மஞ்சள்/பச்சை நிறத் துணியை விரித்து, அதில் லக்ஷ்மி தேவி, விநாயகர் திருவுருவங்களை வைக்கவும். விநாயகருக்கு வலப்புறமாக லக்ஷ்மி தேவி இருக்க வேண்டும். திருவுருவங்கள், கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருக்க வேண்டும். வெள்ளி, தங்க நாணயங்கள் இல்லத்தில் இருக்குமாயின் அவற்றையும் தனித் தட்டில் பூஜைக்கு வைக்கலாம்.

    குபேரரின் படம்

    குபேர யந்திரம்

    வடக்குப் பார்த்தாற்போல் ஒரு கோலமிட்ட சிறு பலகை/ ஒரு தாம்பாளம் வைத்து அதில் குபேர யந்திரம் வைக்கவும். யந்திரம் இல்லாவிட்டால், ஸ்ரீலக்ஷ்மி குபேரரின் படம் வாங்கி வைத்து, யந்திரத்தை, அரிசி மாவினால் கோலமாக வரையலாம்.எண்களை வெள்ளை அரிசிமாவினாலும் , கட்டங்கள்சிவப்புகுங்குமத்தாலும்,வார்தையைமஞ்சள்பொடியினாலும்வரையவேண்டும்..

    ல*க்ஷ்மி தேவியின் முன்பாக, ஒரு சிறு தட்டில், அரிசி,பருப்பு, மங்கலப் பொருட்கள் நிரம்பிய பித்தளை/தாமிரச் செம்பை வைத்து, அதை, மாவிலை, மஞ்சள் பூசிய தேங்காய் முதலியவற்றால் அலங்கரிக்கவும். படங்களுக்கும் கலசத்துக்கும் பூமாலைகள் அல்லது சரங்கள் சாற்றவும்.

    ல*க்ஷ்மி தேவி, விநாயகர் திருமுன்பாக, இரு உயரமான குத்து விளக்குகளை வைத்து, நெய்யால் தீபமேற்றவும். குபேரருக்கு அருகிலும் ஒரு சிறு காமாட்சி விளக்கு வைத்து, நெய் தீபம் ஏற்றவும்.

    பூஜை துவக்கும் முன்பாக, ஊதுபத்தி ஏற்றி வைத்து, நறுமணம் கமழும் சூழலை உருவாக்க வேண்டும்.

    3. பூஜைக்கு, சிவந்த நிற மலர்கள், காசுகள் பயன்படுத்துவது நல்லது. நாணயங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். புதிய நாணயங்கள் பயன்படுத்த இயலுமாயின் செய்யலாம்.

    பூஜைக்குத் தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு பூஜைக்கு அமரவும். கரங்களை சுத்தம் செய்து கொண்டு, திருவிளக்கு ஏற்றவும். விளக்கு ஏற்றும் போது மனதுள் லக்ஷ்மி தேவியைத் தியானித்து, 'ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி' என்று சொல்லி ஏற்றவும்.

    குபேரனின் திருவுரு முன்பாக, பதினோரு விளக்குகள் ஏற்றுவது சிறப்பு.

    முதலில் விநாயகர் துதியைச் சொல்லி, விநாயகருக்கு, மலர்/அருகம்புல் தூவி வழிபாடு செய்யவும். பின்பு, ஸ்ரீலக்ஷ்மி தேவியை மனதுள் உருவகித்து, தியானித்து, விக்ரகத்தில் எழுந்தருளப் பிரார்த்திக்கவும்.

    வெள்ளி தங்க நாணயங்களுக்கு, ( ஒரே மாதிரியான நாணயங்கள் உதாரணமாக ஒரு ரூபாய் நாணயம்) பாலால் அபிஷேகம் செய்து, அதன் பின் நீரால் அபிஷேகம் செய்து, துடைத்து பொட்டு வைத்து, மலர்கள் சமர்ப்பிக்கலாம்.

    ஸ்ரீலக்ஷ்மி தேவிக்கு உபசார பூஜைகள் செய்யவும்.

    ஸ்ரீலக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி, சிவந்த நிற மலர்கள் அல்லது காசுகளால் அர்ச்சனை செய்யவும்.

    அதன் பின், ஸ்ரீகுபேரனுக்குப் பூஜை செய்ய வேண்டும். குபேர யந்திரத்தின் மீது, படத்தில் காட்டியபடி நாணயங்கள் வைக்க வேண்டும். ஒவ்வொரு முறை வைக்கும் போதும் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வைக்கவும். ஒவ்வொரு கட்டத்திற்கும், புஷ்பம், அக்ஷதை சமர்ப்பிக்கவும்.

    "ஓம் யக்ஷாய குபேராய வைஸ்ரவணாய
    தனம் தான்யாதி பதயே தனதான்ய ஸம்ருத்திம் மே
    தேஹி தேஹி தாபய ஸ்வாஹா"

    அதன் பின் குபேர அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யவும்.

    தூப, தீப ஆராதனைகள் செய்து, நிவேதனம், தாம்பூலம் சமர்ப்பிக்கவும். நிவேதனமாக இனிப்புகள் சமர்ப்பிப்பது நல்லது. பாலினால் செய்யப்பட்ட இனிப்புகள் அல்லது பாயசம் விசேஷமாகக் கருதப்படுகின்றது.

    கையில் பூ, அக்ஷதை எடுத்துக் கொண்டு, மும்முறை ஆத்மபிரதக்ஷிணம் செய்து நமஸ்கரிக்கவும். தேவியிடம் மனம் உருகப் பிரார்த்திக்கவும்.

    மங்கலமான பாடல்களைப் பாடிக் கொண்டு ஆரத்தி எடுக்கவும்.

    பூஜையில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைகளுக்காக, தேவியிடம், மன்னிப்புக் கோரி, பூஜையை நிறைவு செய்யவும்.

    புனர் பூஜை;

    மறு நாள், திருவுருவங்களுக்கு, தூப தீபம் காட்டி, இயன்றவற்றை நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி காண்பித்து வணங்கி நமஸ்கரித்து, புஷ்பம் அக்ஷதை போட்டு, இருப்பிடம் எழுந்தருளப் பிரார்த்தித்து, சிறிது வடக்காக நகர்த்தி வைக்கவும்.

    மனம் ஒன்றி, இம்மாதிரி பூஜைகள் செய்வது, நிச்சயம், குடும்ப ஒற்றுமை, மன அமைதி முதலியவற்றைத் தரும். ஒற்றுமையான, சச்சரவுகளற்ற குடும்பத்தில், திருமகள் நித்தமும் வாசம் செய்கிறாள். நமக்குத் தேவை என்பதே ஏற்படாத வண்ணம் நல்லருள் புரிகின்றாள்.

    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Lakshmi Kubera Poojai Procedure - லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறை-image.jpg   Lakshmi Kubera Poojai Procedure - லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறை-image.jpg   Lakshmi Kubera Poojai Procedure - லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறை-image.jpg   Lakshmi Kubera Poojai Procedure - லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறை-image.jpg   Lakshmi Kubera Poojai Procedure - லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறை-image.jpg  

    Last edited by jayakalaiselvi; 13th Oct 2014 at 03:04 AM.
    Parasakthi, sucharitha and jv_66 like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #2
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    re: Lakshmi Kubera Poojai Procedure - லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறை

    லக்ஷ்மி பூஜை அமைப்பு

    Attached Thumbnails Attached Thumbnails Lakshmi Kubera Poojai Procedure - லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறை-image.jpg  
    sucharitha likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  3. #3

    sucharitha and jv_66 like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  4. #4

  5. #5

  6. #6

  7. #7
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    re: Lakshmi Kubera Poojai Procedure - லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறை

    Attached Thumbnails Attached Thumbnails Lakshmi Kubera Poojai Procedure - லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறை-image.jpg   Lakshmi Kubera Poojai Procedure - லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறை-image.jpg  
    sucharitha likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  8. #8
    sucharitha is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    pune
    Posts
    758

    re: Lakshmi Kubera Poojai Procedure - லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறை

    hi jaya
    thank u so much for the kubera pooja information

    jayakalaiselvi likes this.

  9. #9
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    re: Lakshmi Kubera Poojai Procedure - லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறை

    Quote Originally Posted by sucharitha View Post
    hi jaya
    thank u so much for the kubera pooja information
    u r most welcome sis.....

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  10. #10
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Lakshmi Kubera Poojai Procedure - லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறை

    Thanks Jaya for the procedure of the pooja.

    jayakalaiselvi likes this.
    Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter